
Fakir Mohamed Lebbai
@fakirmohamedlebbai
நிமிர்ந்து நில் !
மண்டியிடாதே!!
அரசியலமைப்பின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்!
SDPI மாநில தலைவரின் 77வது இந்திய குடியரசுதின வாழ்த்துச் செய்தி!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நாட்டு மக்கள் அனைவருக்கும் 77வது இந்திய குடியரசு தினத்தின் சிறப்பு நிகழ்வில், உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நமது இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறப்பு நாளே குடியரசு தினமாகும். டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு சபை உருவாக்கிய இந்தப் புனிதமான ஆவணம், ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை ஆகிய உன்னதக் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு, நமது நாட்டின் ஆன்மாவாக விளங்குகிறது.
சாதி, மதம், மொழி, பிராந்தியம், பால், பொருளாதார நிலை ஆகிய எதனாலும் பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்யும் இந்த அரசியலமைப்பு, ஒரு முற்போக்கான, நியாயமான, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதையே தன் இலட்சியமாகக் கொண்டுள்ளது. "சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்" என்ற மூன்று பெருங் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு, அனைத்து இந்தியர்களும் ஒரே குடிமக்களாக இணக்கமாக வாழும் சமூகத்தை கனவு காண்கிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைய சூழலில் இந்த அடிப்படை மதிப்புகள் பல்வேறு வகையில் சவால் விடப்படுகின்றன. பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான போக்குகள் வலுப்பெறுகின்றன. கூட்டாட்சி தத்துவம் சீரழிக்கப்பட்டு வருகின்றது. அரசியலமைப்பால் உத்தரவாதம் செய்யப்பட்ட மத சுதந்திரம், கல்வி உரிமை, சம உரிமை, பாதுகாப்பு உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் பல்வேறு கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் பாதிக்கப்படுகின்றன. இது நமது ஜனநாயக அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கிறது.
அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரான ஜனநாயக விரோத, மதவாத, பாகுபாடான நடவடிக்கைகளை நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. குடிமக்கள் ஒன்றிணைந்து இந்த அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய காலம் இது.
ஆகவே, இந்த 77வது குடியரசு தினத்தில், நமது முன்னோர்கள் நம்மிடம் ஒப்படைத்த இந்த அரசியலமைப்பின் புனிதமான விழுமியங்களைப் பாதுகாக்கவும், அதன் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்! ஜெய்ஹிந்த்!
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP
வெறுப்பு நடவடிக்கைகளை தடுக்கும் சிறப்புச் சட்ட மசோதாவை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு இயற்ற வேண்டும்! - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரில், வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்பு நடவடிக்கைகளைத் தடுக்கும் சிறப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
நாடு முழுவதும் மதவாத சக்திகளால் வெறுப்புப் பேச்சு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு, அது சமூகத்தில் இயல்பானதாக மாற்றப்பட்டு வரும் ஆபத்து அதிகரித்து வருகிறது. இதனால் மதம், சாதி, மொழி, இனம் ஆகியவற்றின் பெயரால் பிளவு, வன்முறை, பதற்றம் அதிகரித்து வருகின்றன. தமிழகம் சமூக நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற மாநிலமாக இருந்தாலும், அதிகரித்துவரும் வெறுப்பு நடவடிக்கைகளை ஆரம்ப நிலையிலேயே தடுப்பது மிக அவசியம் என்பதால் தமிழக அரசு இந்த சட்டத்தை இயற்ற வேண்டும்.
அண்மையில் கர்நாடக மாநில அரசு நிறைவேற்றிய “கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு மசோதா 2025” போன்ற வலுவான சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழக அரசு உடனடியாக “தமிழ்நாடு வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்பு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்” என்ற பெயரில் சட்டமசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்.
இச்சட்டத்தில், வெறுப்புப் பேச்சு பரப்புபவர்களுக்கும், வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் கடுமையான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வேண்டும். மேலும், வெறுப்பை ஊக்குவிக்கும் அமைப்புகளுக்கு கூட்டுப் பொறுப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அதோடு வெறுப்பைக் கடத்தும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெறுப்புப் பேச்சு உள்ளடக்கத்தையும் இச்சட்டத்தின் கீழ் உட்படுத்தி, அதனை பரப்புபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை ஆகியவை பேணப்பட வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் இது. வெறுப்பு பரவ விரும்புபவர்களுக்கு எதிராக, சமூக நல்லிணக்கத்திற்காக அனைத்து முற்போக்கு சக்திகளும், அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.
எனவே, தமிழக அரசு இந்த மிக முக்கியமான கோரிக்கையை ஏற்று, நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சிறப்புச் சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மீது வெறுப்பை உமிழும் செயல் கண்டிக்கத்தக்கது! - எஸ்டிபிஐ
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் ஆஸ்கர் விருதாளருமான ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் பிபிசி ஏசியன் நெட்வொர்க்கிற்கு அளித்த நேர்காணலில், பாலிவுட் திரைத்துறையில் கடந்த எட்டு ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகார மாற்றம் காரணமாக தனக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும், சில படங்கள் பிரிவினை உணர்வுகளைத் தூண்டும் வகையில் உருவாக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த யதார்த்தமான கருத்து, திரைத்துறையிலும் வெறுப்பு அரசியல் நுழைந்துள்ளதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.
இத்தகைய கருத்தை வெளியிட்டதற்காக, வலதுசாரி அமைப்புகளும், வட இந்திய ஊடகங்களும், கங்கனா ரணாவத் போன்ற வலதுசாரி திரைத்துறையினரும் அவருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். நாட்டை அவமதித்துவிட்டதாகக் கூறி, வன்மத்தோடு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது.
ஏ.ஆர். ரஹ்மான் இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, உலக இசைக்கான ஒரு அடையாளம். அவரது இசை எல்லைகளைத் தாண்டியது; அரசியல் சுவர்களுக்குள் அடங்காதது. தனது படைப்புகள் மூலம் உலக அளவில் இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையைப் பரப்பியவர் அவர். இத்தகைய மகத்தான கலைஞர் மீது அரசியல் நோக்கங்களால் அழுத்தம் கொடுப்பதும், கருத்து வெளிப்பாட்டில் கட்டுப்படுத்த முயல்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.
நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்துத் துறைகளிலும் வெறுப்பு அரசியல் வளர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கள ஆய்வுகளும், புள்ளிவிவரங்களும் அதனை உறுதிப்படுத்துகின்றன. சர்வதேச சமூகமும் இதனை கவலையுடன் வெளிப்படுத்தி வருகிறது. அதனை வெளிப்படுத்தியதற்காக ஏ.ஆர். ரஹ்மான் அவர்களை மதச்சார்பு அடிப்படையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரது இசை இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது; அன்பையும் ஒற்றுமையையும் பரப்புகிறது. இசைத்துறையில் அவரது பங்களிப்புகள் அழியாதவை.
ஒரு கலைஞனின் சுதந்திரத்தைப் பாதிப்பது என்பது நாட்டின் கலாச்சார சுதந்திரத்தையே பாதிப்பதற்குச் சமம். ஏ.ஆர். ரஹ்மான் எந்த ஒரு மதம், இனம் அல்லது மொழிக்கு சொந்தமானவர் அல்ல; அவர் இந்திய மக்களுக்குச் சொந்தமானவர். அவரது மௌனமும் இசையும் கூட நேர்மையான, ஒற்றுமையை வலியுறுத்தும் குரலாக இருந்து வருகிறது.
ஜனநாயகத்தை விரும்பும் இத்தகைய கலைஞர்களை பயமுறுத்தி அடக்க முயலும் மனப்பான்மையை உடனடியாக நிறுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் கலைஞர்களுக்கு முழு கருத்து சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். ஆகவே, ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் மீதான வன்மங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாகத் தமிழ் திரை உலகத்தினர் மட்டுமின்றி, அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
சங்ப்பரிவார சங்கிகளின் நெருக்கடிகளுக்கு அஞ்சாது அயராது சமரசம் செய்யாமல் அரசியல் செய்யும் தலைமையின் வடிவமே வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride
#SDPIForIndia
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #📷வாட்ஸப் DP #📺வைரல் தகவல்🤩 #🌼 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌄
இந்திய ராணுவ தின வாழ்த்துக்கள்! #🌼 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌄 #📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴
இந்திய ராணுவ தினத்தில், எஸ்டிபிஐ கட்சி நமது ராணுவ வீரர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும், நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பாதுகாப்பை காத்து நிற்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கும் மரியாதை செலுத்துகிறது.
தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த தியாகிகளையும், ஷஹீத்களையும், தொடர்ந்து உத்வேகம் அளித்து வரும் முன்னாள் படை வீரர்களையும், மிகக் கடினமான சூழ்நிலைகளில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தற்போதைய ராணுவ வீரர்களையும் நாங்கள் பாராட்டுகிறோம். இந்திய ராணுவம் ஒழுக்கம், தன்னலமற்ற சேவை மற்றும் தேசிய பெருமையின் அடையாளமாக திகழ்கிறது.
இந்த நாள் அமைதியைப் பேணுவது, அரசியலமைப்பு மதிப்புகளை உயர்த்திப் பிடிப்பது, சீருடையில் இருப்பவர்களுக்கு மரியாதை செலுத்துவது ஆகியவற்றில் நமது கூட்டு கடமையை நினைவூட்டட்டும்.
-முகமது ஷஃபி,
தேசியத் துணைத் தலைவர், SDPI
#NellaiMubarak #SDPI
#HappyPongal #Pongal
#Pongal2026
#PongalFestival #PongalCelebrations #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP
#NellaiMubarak #SDPI
#HappyPongal #Pongal
#Pongal2026
#PongalFestival #PongalCelebrations #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
அமலாக்கத்துறை (ED) பாஜகவின் தேர்தல் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது!
சுயாதீன விசாரணை அமைப்பாகச் செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) மோடி தலைமையிலான ஒன்றிய அரசால் தேர்தல் மேலாண்மை கருவியாக வெளிப்படையாக மாற்றப்பட்டுள்ளது. இதை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
எங்கு தேர்தல் நடைபெறுகிறதோ, அங்கு அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் திடீரென அதிகரிப்பது ஒரு ஆபத்தான மற்றும் நன்கு நிறுவப்பட்ட போக்காக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, தற்போது மேற்கு வங்காளத்தில் இதே முறை தொடர்கிறது. இதன்மூலம் பாஜகவின் தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை மாற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஒவ்வொரு தேர்தல் சுழற்சிக்கு முன்பும், அமலாக்கத்துறையின் திடீர் சோதனைகள், வழக்குகள் மற்றும் கைதுகள் அதிகரிக்கின்றன. மேற்கு வங்கத்தில், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணை, வாக்குப்பதிவுக்கு சில மாதங்களுக்கு முன்பு திடீரென மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தேர்தல் நோக்கங்களால் உந்தப்பட்ட அரசியல் நடவடிக்கை என்பதை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
இத்தகைய தேர்ந்தெடுக்கப்பட்ட, அரசியல் ரீதியாக நேரம் குறிக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசியலமைப்பின் 14வது பிரிவால் உத்தரவாதப்படுத்தப்பட்ட சட்டத்தின் முன் சமத்துவத்தை மீறுகின்றன. தேர்தல் நோக்கங்களால் உந்தப்பட்ட விசாரணைகள் தீய நோக்கமாக கருதப்படுகின்றன; இது அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பளித்துள்ளன.
அமலாக்கத்துறையின் இந்தத் தவறான பயன்பாடு, எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவது, தேர்தலுக்கு முன்பு தவறான ஊழல் கதைகளை உருவாக்குவது, பணவீக்கம், வேலையின்மை, விலைவாசி உயர்வு, நிர்வாகத் தோல்வி போன்ற உண்மையான மக்கள் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சட்ட அமலாக்கம் அல்ல; அரசால் ஆதரிக்கப்படும் அரசியல் பழிவாங்கல் மற்றும் தேர்தல் தலையீடு ஆகும்.
இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் அடிப்படை, கூட்டாட்சி தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மையத்தையே தாக்குகின்றன. விசாரணை அமைப்புகள் அரசியலமைப்பிற்கும் நாட்டு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும்; ஆளும் கட்சியின் பிரச்சார இயந்திரத்தின் நீட்சியாகச் செயல்படக் கூடாது.
*எஸ்டிபிஐ கட்சியின் கோரிக்கைகள்:*
-அமலாக்கத்துறையின் அரசியல் தவறான பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.
-மத்திய விசாரணை அமைப்புகளுக்கு சுதந்திரமான நிறுவன மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
-அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் அச்சுறுத்தல்கள், தேர்தல் தந்திரங்கள் ஆகியவற்றுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
-பயமுறுத்தல் மூலம் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடைபெறாத ஒரு ஜனநாயகமாக இந்தியா சுருங்கிவிடக் கூடாது.
அமலாக்கத்துறை பாஜகவின் தேர்தல் துறை அல்ல; அது அரசமைப்புக்கு உட்பட்ட உண்மையான சுயாதீன நீதி அமைப்பின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்.
-முகமது ஷஃபி,
தேசியத் துணைத் தலைவர், SDPI கட்சி. #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
காலனித்துவ உறவுகள்!
புத்தாண்டுப் பிறப்பை உலகம் உற்சாகமாகக் கொண்டாடி முடித்த கையோடு, ஒரு பேரதிர்ச்சியான செய்தி வெளிவந்தது. உலகின் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளத்தில் 18 சதவீதத்தைத் தன்வசம் வைத்துள்ள வெனிசுலா மீது, அமெரிக்கா தனது அதிகாரத்தைப் பிரயோகித்தது.
அமெரிக்காவிலிருந்து 5,000 கி.மீ தொலைவில் உள்ள அந்த நாட்டுக்குள் ராணுவத்தை அனுப்பி, அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடத்திச் சென்றது.
முன்பெல்லாம் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்தியபோது, 'பயங்கரவாதம்' என்ற காரணத்தைச் சொல்லி உலக நாடுகளை அமெரிக்கா தன்னுடன் சேர்த்துக் கொண்டது. ஆனால் இந்த முறை அது யாரையும் மதிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இருப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல், அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் வீரர்கள் வெனிசுலா தலைநகர் கராகஸில் தரை இறங்கி, அந்நாட்டு ஆட்சியாளரைச் சிறைப்பிடித்தனர்.
இது உலக அரசியலில் 'நவீன காலனித்துவம்' அப்பட்டமான ஆக்கிரமிப்பு வடிவத்தை எடுத்திருப்பதன் சான்றாகும்.
விரிவடையும் ஆக்கிரமிப்புப் படலம்!
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா தொடங்கிய உக்ரைன் போர், அந்நாட்டின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இன்றும் தொடர்ந்து வருகிறது. மற்றொருபுறம், தனித்துவமான ஜனநாயக ஆட்சி நடக்கும் தைவான் மீது சீனா தனது பிடியை இறுக்கத் தயாராகி வருகிறது. உலகம் மீண்டும் பழைய ஏகாதிபத்திய காலத்திற்கே செல்கிறதா? 'சூரியன் அஸ்தமிக்காத பேரரசாக' மாற அமெரிக்கா இன்னும் எத்தகைய எல்லைகளுக்குச் செல்லும்? என்ற கேள்விகள் இன்று உலக அரங்கில் எழுந்துள்ளன.
அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு வெனிசுலாவுடன் நின்றுவிடப் போவதில்லை. டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதே ட்ரம்ப்பின் அடுத்த இலக்காக இருக்கிறது. அங்குள்ள அரிய தாதுக்கள் மட்டுமன்றி, புவியியல் ரீதியாக ஐரோப்பாவின் மீது ஆதிக்கம் செலுத்த கிரீன்லாந்து ஒரு சிறந்த தளமாக அமையும் என்பதே அமெரிக்காவின் கணக்கு.
எண்ணெய்க்காக ஒரு யுத்தம்!
வெனிசுலா மீதான அமெரிக்காவின் கோபத்திற்குப் பின்னால் இருப்பது அந்த நாட்டின் கருப்புத் தங்கம் - எண்ணெய் ஆகும். 1998-ல் அதிபர் ஹியூகோ சாவேஸ் எண்ணெய் வளத்தைத் தேசியமயமாக்கியது முதலே அமெரிக்க நிறுவனங்களுக்கு அதன் மீது கண் இருந்தது. இன்று வெனிசுலாவிடம் 30,300 கோடி பேரல் எண்ணெய் இருப்பு உள்ளது. சவுதி அரேபியா, ஈரான், கனடா போன்ற நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்குத் தாராளமாக எண்ணெய் கிடைத்தாலும், மிக அருகில் இருக்கும் வெனிசுலா மட்டும் தன் பிடிக்குள் வரவில்லையே என்பதுதான் அமெரிக்காவின் ஆதங்கம்.
வழக்கமான பயங்கரவாத முத்திரைக்குப் பதிலாக, வெனிசுலா மீது 'போதைப்பொருள் பயங்கரவாதம்' என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்தியது. இதைக் காரணம் காட்டி அந்நாட்டுக் கப்பல்களைச் சிறைபிடித்தும், வான்வழித் தாக்குதல் நடத்தியும் தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முயல்கிறது.
உலக நாடுகளின் நிலையும் சவால்களும்!
அமெரிக்காவின் இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பைத் தட்டிக் கேட்க வேண்டிய அண்டை நாடுகளில் அர்ஜென்டினா, ஈக்வடார், பனாமா போன்றவை அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்தது வேதனையானது. மெக்ஸிகோ, பிரேசில், கியூபா போன்ற நாடுகள் மட்டுமே துணிச்சலாக எதிர்த்தன.
இருப்பினும், அமெரிக்காவிற்கும் சில சவால்கள் காத்திருக்கின்றன:
* சீனாவின் எழுச்சி: லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அபரிமிதமாக வளர்ந்துள்ளது.
* பொருளாதார நெருக்கடி: அமெரிக்காவின் கருவூலப் பத்திரங்களைச் சீனா பெருமளவில் வாங்கியிருப்பதும், டாலரின் மதிப்பு சரிந்து வருவதும் அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியாகும்.
முடிவாக...
அமெரிக்கச் சட்டப்படி நாடாளுமன்ற அனுமதியின்றி ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க முடியாது. சர்வதேச விதிப்படி ஐ.நா பாதுகாப்புச் சபையின் அனுமதி அவசியம். ஆனால், இந்த ஆக்கிரமிப்பில் எந்த விதிகளும் பின்பற்றப்படவில்லை.
ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தன்னிச்சையாகக் கைப்பற்றியபோதும் உலகம் மௌனமாகவே இருந்தது.
எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்படும் இந்தக் காலத்தில், வரும் நாட்கள் மிக மோசமான ஆக்கிரமிப்புகளின் காலங்களாக இருக்கப்போகின்றன. சர்வதேசக் கூட்டமைப்புகள் பலவீனமடைவதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, சீனா போன்ற நாடுகளும் தைவான் போன்ற பகுதிகள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டன.
K.P. Manzoor Ali
Courtesy: madhyamam #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📷வாட்ஸப் DP #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴












