mariappan kumaravel
ShareChat
click to see wallet page
@mariappan0462
mariappan0462
mariappan kumaravel
@mariappan0462
நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்பதே என் மூலதனம்.
பிரதமர் மோடியை அழைத்துவந்து கோவை குருடம்பாளையத்தை காண்பியுங்கள். நாடு முழுவதும் கொண்டு செல்ல பிரதமரால் மட்டுமே முடியும். அனைத்து மாநிலங்களின் முதல்வர்களையும் அழைத்துவந்து காண்பியுங்கள். தமிழ்நாட்டுக்கே எடுத்துக்காட்டாக திகழும் கோவை குருடம்பாளையம் கிராமம்!!! “வேலை பார்த்தா ஒரு மாசம் கழிச்சுத்தான் சம்பளம். இங்க அப்படியில்லீங்க, இதோ இன்னைக்கு காலையில 8 மணிக்கு காய்கறி கழிவுகளை மாடுகளுக்குக் கொடுக்கிறோம். சாயங்காலம் சாணம் கிடைச்சிடும்." கோவை மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் கிராமத்தின் கடைக்கோடி பகுதி அது. வானுயர்ந்து வளர்ந்திருக்கிறது குருடிமலை. ‘ம்ம்மா...’ என்று குரல் கொடுக்கின்றன தொழுவத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகள். சீருடை அணிந்த பெண்மணி மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் சாணம் அள்ளிக்கொண்டிருக்கிறார். மாட்டு சாணம் கொட்டப்பட்டிருக்கும் பகுதியில் மேய்ந்துக்கொண்டிருக்கின்றன ஏராளமான வாத்துக்கள், நாட்டுக் கோழிகள், புறாக்கள்! குப்பை அல்ல; மாற்று ஆதாரப் பொருள்! அருகே ஒரு கிட்டங்கி இருக்கிறது. அதன் அருகில் மிகப் பெரிய கூடம். ஆங் காங்கே கையாலும் மின்சாரத்தாலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன விதவிதமான இயந்திரங்கள். பெண்கள் சுறுசுறுப்பாக வேலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கிட்டங்கியின் உள்ளே சென்று பார்த்தோம். ஊரின் மொத்தக் குப்பையும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ‘அட, குப்பைக் கிடங்கு’ என்றோம். உடனே, ‘குப்பைன்னு சொல்லக் கூடாதுங்க, தெனம் 100 பேருக்கு சோறு போடுது. மறுபயன்பாட்டுப் பொருள் அல்லது மாற்று ஆதாரப் பொருள்னு சொல்லுங்க’ என்கிறார் திடக்கழிவு மேலாண்மை திட்ட உதவியாளர் கோபி. அருகில் இருக்கும் கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சீருடை மற்றும் கையுறை அணிந்த பெண்கள் கழிவுகளை தரம் பிரிக் கிறார்கள். பச்சைக் காய்கறி கழிவுகள், தேங்காய் ஓடுகள், தென்னை நார், காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்திய நாப்கின்கள்... இன்ன பிற பொருட்கள் பிரிக்கப் படுகின்றன. “மொத்தம் 230 பொருட்களுங்க. அவற்றில் 215 பொருட்களை மறுசுழற்றி செய் யலாம். 15 பொருட்களை மறுசுழற்சி செய்யவே முடியாதுங்க. இங்க மட்டுமில்லை, உலகம் பூராவும் இதுதான்” என்கிறார். உண்மைதான், தெர்மோக்கோல், சூயிங்கம், கார்பன் பேப்பர், செராமிக் டைல்ஸ், சில்வர் சாக்லேட் பேப்பர், உட்பகுதியில் பளீர் வெண்மையில் இருக்கும் கோதுமை, ஆட்டா மாவு உறைகள், ஆம்பர் சிரப் புட்டிகள் உட்பட 15 பொருட்களை மறு சுழற்சி செய்ய முடியாது. அபாயக் குப்பைகள் அவை. மாலையில் சாணம்... காலையில் பணம்! “வேலை பார்த்தா ஒரு மாசம் கழிச்சுத்தான் சம்பளம். இங்க அப்படியில்லீங்க, இதோ இன்னைக்கு காலையில 8 மணிக்கு காய்கறி கழிவுகளை மாடுகளுக்குக் கொடுக்கிறோம். சாயங்காலம் சாணம் கிடைச்சிடும். ராத்திரி அதில் இருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி யாகிடுமுங்க. அதோ அந்த கேட்டரிங் சென்டர்ல மறுநாள் காலையில் 8 மணிக்கு சமையல் முடிச்சு டிபன் சப்ளை செய்யறோம். கையோடு பணம் கிடைச்சிடுமுங்க.” இயற்கை அறிவியலுடன் கூடிய கிராமப் பொருளாதாரத்தை எளிமையாக விளக்குகிறார் இளைஞர் கோபி. இதுமட்டுமல்ல, இங்கே குப்பை என்கிற மாற்று ஆதார பொருட்களில் இருந்து பல கிளைகளாக விரிகின்றன மக்களுக்கான வாழ்வாதாரங்கள். நிலத்தடியில் ஆறு கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு இயற்கை எரிவாயு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து தினசரி 20 கிலோ இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் மூலம் நவீன சமையல் கூடம் இயங்குகிறது. திருமணம், அலுவலகக் கூட்டங்கள், உணவகங்கள் என தினசரி உணவுக்கான ஆர்டர் குவிகிறது. காலையில் இட்லி, தோசை, கிச்சடி, பொங்கல் டிபன் தயாராகிறது. மதியம் சாப்பாடு தயாராகிறது. சராசரியாக ஆயிரம் பேருக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது. சோலார் குப்பை வண்டி மணக்குது மண்புழு குளியல் நீர்! இயற்கை எரிவாயு உற்பத்திக் கூடத்தில் இருந்து மிஞ்சும் மக்கிய சாணத்தை காயவைத்து மண்புழுக்களுக்கு உணவாக போடுகிறார்கள். மண்புழுக்கள் செழித்து வளர்ந்துப் பெருகுகின்றன. ஒரு கிலோ மண்புழுக்களை ரு.500-க்கு விற்பனை செய்கிறார்கள். மண்புழுக்கள் இடும் கழிவில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 கிலோ மண்புழு உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அன்றைய தினமே விவசாயிகள் வந்து கிலோவுக்கு 20 ரூபாய் கொடுத்து அள்ளிச் செல்கிறார்கள். இன்னொரு பக்கம் மண்புழுக்கள் குவிந்துள்ள தொட்டியின் அடியே துளித்துளியாக சேகரமாகிறது மண்புழு குளியல் தண்ணீர். பயிர் வளர்ச்சி ஊக்கி திரவம் இது. தண்ணீரில் கலந்து ஸ்பிரே மூலம் பயிர்களுக்கு தெளிக்கிறார்கள். பயிர்கள் பலமடங்கு செழித்து வளர்க்கின்றன. இதையும் போட்டி போட்டு வாங்கிச் செல்கிறார்கள் விவசாயிகள். மாதத்துக்கு மண்புழு உரம் மற்றும் மக்கிய உரம் தலா 3 டன்கள் விற்பனையாகின்றன. குப்பைகள் கொட்டப்பட்டிருக்கும் இரண்டு ஏக்கர் வளாகத்தில் கொசுவைப் பார்க்க முடியவில்லை. துர்நாற்றம் துளியும் இல்லை. மீன்கள், வாத்துக்கள், கோழிகள் கொசுக்களை அழித்துவிடுகின்றன. தென்னை நாரிலிருந்து உரம் குருடம்பாளையம் படுசுத்தமாக இருக்கிறது. தினசரி 27 நவீன சோலார் வாகனங்கள் 7 ஆயிரம் வீடுகளில் 2500 கிலோ குப்பைகளைச் சேகரிக்கின்றன. இவை தவிர மாநகராட்சி பகுதியான கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நகரத்து மக்கள் போடும் குப்பைகளை தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று பேட்டரி வாகனத்தில் சேகரித்துத் தருகிறது. தரம் பிரிக்கப்பட்ட காகிதம், தென்னை நார், தேங்காய் ஓடு உள்ளிட்ட குப்பையில் இருந்து தினசரி 100 கிலோ மக்கும் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை கிலோவுக்கு 10 ரூபாய் கொடுத்து விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள். இன்னொரு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் நாற்றங்கால் பசுங்குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சந்தனம், பெருஞ்சந்தனம், வேங்கை, மூங்கில், கொன்றை, அரசு, நாவல், புங்கன், கருகமணி, பூச்சக்காய் மற்றும் பழ வகை மரக் கன்றுகள், மலர்ச் செடிகள், அலங்காரச் செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். கிராமப் பஞ்சாயத்து நடத்தும் நர்சரி கார்டன் இது. அவ்வளவும் பணம். குப்பையில் இருந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது பணம்! ஆனா, இன்னைக்கு தமிழகத்தின் அரசு துறைகள்ல இவ்வளவு அலைச்சல் தேவையில் லீங்க. நிறைய கணினிமயமாக்கிட்டாங்க. பெரும்பாலும் நேரில் செல்ல வேண்டாம். ரொம்ப அவசியமுன்னா ரெண்டு தடவை போலாம். மத்தது எல்லாம் இணைய சேவையிலேயே வாங்கலாம். ஆதார் அட்டை வாங்கலாம். திருத்தம் செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம். பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்கலாம். இதை எல்லாம் எங்க கிராமத்து ஜனங்களுக்கு கத்துத் தர்றதுதான் இந்த வை-ஃபை திட்டத் தின் நோக்கமுங்க. அதுவுமில்லாம எங்க பஞ்சாயத்துக்குள்ள மட்டும் 7 ஆயிரம் மாண வர்கள் பள்ளி, கல்லூரிகள்ல படிக்கிறாங்க. புராஜெக்ட் வேலை, பொது அறிவுன்னு இணைய வசதி அவங்களுக்குத் தேவைப் படுது” கொங்குத் தமிழில் கணினி கற்பிக்கிறார் பஞ்சாயத்து தலைவர் ரவி. கலக்கப் போகுது காபி ஷாப்! இணையம் மட்டுமல்ல... கிராமப் பஞ் சாயத்து சார்பில் அழகான காபி ஷாப் அமைக்கப் பட்டுள்ளது. பசுமையான தோட்டத்தில் குடில்கள் அமைக்கப்பட்டு அழகிய மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை அமைத்து முடித்தபோது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால் நாம் சென்ற நேரம் காபி அருந்த முடியவில்லை. “அதனால என்னங்க நம்ம வீட்டுல ஜம்முன்னு காப்பித் தண்ணி குடிக்கலாமுங்க. நம்ம கிராமத்துல இந்தத் தலைமுறை இளைஞர்கள் கோயமுத்தூர் நகரத்துக்குள்ள போய் மால்கள்ல ஐஸ் காபி, பீட்ஸா, பர்கர் சாப்பிட்டு வர்றாங்க. ஏன் நகரத்துலதான் காபி ஷாப் இருக்குணுமா? அதான் இங்கேயே கொண்டாந்துட்டோம். இங்கேயும் காபி கிடைக்கும். பனை வெல்லம் ஐஸ் காபி, பனை வெல்லம் சுக்குக் காப்பி, அதிமதுரம் காபி, திப்பிலி காப்பி, சித்தரத்தைக் காபின்னு விதவிதமா திட்டமிட்டுருக்கோமுங்க. சிறுதானியங்கள்ல செய்யப்பட்ட பீட்ஸா, பர்கரு கிடைக்குமுங்க. தேர்தல் முடிஞ்சு வந்துப் பாருங்க ஜோரா இருக்குமுங்க” உற்சாகமாகப் பேசுகிறார் ரவி. கிராமத்தின் மொத்த வாக்காளர்கள் 33 ஆயிரம் பேர். அனைவரின் அலைபேசி எண்க ளும் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தின் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் அதிகாலை அந்த எண்களுக்கு அழகுத் தமிழில் குறுந்தகவலாக வந்து விழுகின்றன காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்களின் பொன்மொழிகள். கிராம சபைக் கூட்டம், போலியோ சொட்டு மருந்து முகாம், மருத்துவ முகாம், ஆதார் அட்டை சிறப்பு முகாம், வாக்காளர் அட்டை சிறப்பு முகாம், கோயில் திருவிழா, குப்பை வண்டி வரும் நேரம், கோவை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலைத் தகவல்கள் ஆகியவை குறுந்தகவல்களாக அனுப்பப்படுகின்றன. குறிப்பாக யானைகள் வரும் தகவல். குருடி மலை அடிவாரத்தில் அமைந்திருப்பதால் வனத்தில் இருந்து யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்துவிடும். அப்படி வராமல் இருக்க மலை மீது வனத்துக்குள்ளேயே மூன்று இடங்களில் பஞ்சாயத்து சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அப்படியும் மீறி யானைகள் ஊர் எல்லையை நெருங்கினால் உடனடியாக மக்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. கிராமத்துக்குள் ஒரு நடுநிலைப் பள்ளி மற்றும் நான்கு ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன. அத்தனையும் அசத்தல் ரகம். குறிப்பாக, தொப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி சுகாதாரத்தில் ஜொலிக்கிறது. பஞ்சாயத்து சார்பில் அழகிய வண்ணங்களில் பள்ளிக்கு பெயிண்ட் அடித்து சுத்தமாக வைத்திருக்கிறார்கள். உயரமான சுற்றுச்சுவரை கட்டி அதன் மீது வேலி போடப்பட்டுள்ளது. கணனிகள் வாங்கித் தரப்பட்டுள்ளது. கழிப்பறைகள் டைல்ஸ் போடப்பட்டு பளிச் என்று இருக்கின்றன. பள்ளியின் மேல் நிலைத் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குறைந்தால் அல்லது நிறைந்தால் தானாக இயங்குகிறது தானியங்கி மோட்டார். ஏழை மாணவர்களுக்கு தனியாரிடம் ஸ்பான்சர் வாங்கி விளையாட்டுத் துறைகளில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதோ இன்னும் இரண்டொரு நாட்களில் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துக்கொள்ள தாய்லாந்து செல்லவிருக்கிறார் இந்த ஊர் மாணவர் நித்திரன். ஜொலிக்குது சோலார்! இன்று தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகள் மின் வாரியத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மின் கட்டணம் நிலுவை வைத்திருக்கின்றன. மின்வாரியத்துக்கு பெரும் சுமை இது. ஆனால், பைசா பாக்கியில்லாமல் மின் கட்டணம் கட்டியதுடன், கோவை மாநகராட்சிக்கு சாலை விளக்குகள் அமைத்துக் கொடுத்திருக்கிறது குருடம்பாளையம் பஞ்சாயத்து. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 128 சோலார் மின் விளக்குகள் பொன்மொழி வாசகங்களுடன் ஜொலிக்கின்றன. கிராமத்துக்குள் 200 சோலார் தெருவிளக்குகள் ஒளிர்கின்றன. இதன் மூலம் மாதம் மூன்று லட்சம் ரூபாய் சேமிக்கிறார்கள். கிராமத்துக்குள் திறந்தவெளி சாக்கடை கிடையாது. அதனால் கொசுக்களும் கிடையாது. பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நகரங்களே திணறும்போது பஞ்சாயத்துக்குள் மினி பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இயற்கை சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை அமைத்து மலத் தொட்டி நீங்கலான கழிவு நீர் அதில் வெளியேற்றப்படுகிறது. அவை நிலத்தடி குழாய்கள் மூலம் ஐந்து இடங்களில் வந்துச் சேர்கிறது. அங்கு மணல், கரித்துண்டுகள், கூழாங்கற்கள் உள்ளிட்ட ஐந்து அடுக்கு சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு மிகப் பெரிய குழாய்கள் வழியாக நிலத்தடியில் செலுத்தப்படுகிறது. பாதாள சாக்கடைத் திட்டத்துடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம் இது! குருடம்பாளையம் அதி நவீன கிராமம் மட்டுமல்ல... ஒரு எடுத்துக்காட்டு. இச்செய்தி பலதரப்பினருக்கும் சென்றடையவேண்டும் என்கின்ற வேட்கையில் பகிர்ந்துக் கொள்வதில் இந்த மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் இளங்கோ ஆகிய நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தேவையற்ற வேலைகளிலும், உபயோகமற்ற செயல்களிலும், ஆரப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றைத தவிர்த்து ஒரு அற்புதமான மௌனப் புரட்சியே செய்து வெற்றியும் கண்ட கோவை மாவட்டம், குருடம்பாளைய கிராம சபைத் தலைவர் இரவி அவர்கள், திடக்கழிவு மேலாண்மைத் திட்ட வல்லுநர் வேலூர் சீனிவாசன், குருடம்பாளையம் ஊராட்சி திடக்கழிவு மேலாண்மை இயக்குனர் இளைஞர் கோபி ஆகிய உதாரண புருசர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல. இதுவன்றோ வளர்ச்சி! இதுவன்றோ புரட்சி! மகாகவி பாரதி இன்று இருந்திருந்தால் அற்புதமாகப் பாடியிருந்திருப்பார். இதுவே ஒரு திரைப்படத்தில் வந்திருப்பின் வரிவிலக்கு அவார்டு, விழா என்று ஆரவாரம் விண்ணை முட்டும். போலிக்குத் தரும் அங்கீகாரம் முற்றிலும் ஒழிந்து, உண்மைக்கும் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் மரியாதை கொடுக்கும் சமுதாயமாக நாம் மாற பிள்ளையார் சுழி போட்ட குருடம்பாளையம் மக்களுக்கும், பெண்களுக்கும் கோடானுகோடி நன்றிகள். இந்த ஊர் உண்மையில் உலகிற்கே ஒரு வழிகாட்டும்பாளையம்! குருடம்பாளையமன்று. இக்கிராம மக்களைப் பார்த்தும் முயற்சி எடுக்காத நாமே குருடர்கள். "நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேடபது எதற்கு? நீயென்ன செய்தாய் அதற்கு என்று கேட்டால் நன்மை உனக்கு! நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்." பழைய எம். ஜி. ஆர். பாடல் மனதில் இழையோடுகின்றது! நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்கும் இந்த ஊர்மக்களே மகாத்மா காந்தி கண்ட கிராம இராஜ்ஜியம் நடத்துபவர்கள். எந்த ஊடகமும் வேண்டாம். நமக்கு நாமே ஊடகமாவோம். கதிரவன் போல எங்கும் பரவுவோம் செயல்படுவோம். இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில்தான் இருக்கிறது என்றார் மகாதமா. பிளாஸ்டிக் கழிவுகளால் சாலைகள் அமைத்த இக்கிராமத்தினரே உண்மையில் நமது நாட்டின் உயிர்நாடி. கர்மவீரர் காமராஜர் இன்று இருந்திருப்பாரேயானால் இந்நேரம் தமிழகமெங்கும் இந்தத திட்டத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்திருந்திருப்பார்.. பகிர்வு #🌹நம்ம ஊரு நாயகன்🌹 #நம்ம ஊரு #நம்ம ஊரு
🌹நம்ம ஊரு நாயகன்🌹 - மத்தியஅரசின் தேசிய விருதை பெற்ற ஊராட்சி 1e மத்தியஅரசின் தேசிய விருதை பெற்ற ஊராட்சி 1e - ShareChat
#மக்கள் தலைவர்கள் கர்மவீரர் காமராஜரின் நினைவுநாள் இன்று! காந்தி பிறந்தநாளில் மறைந்தார், தென்னாட்டுக் "காலா காந்தி"! ​கிங் மேக்கராக திகழ்ந்த “கர்மவீரர்” காமராசரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு! தன்னுடைய உழைப்பால், தொண்டால் படிப்படியாக உயர்ந்தவர் காமராசர்.. பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை என்றெல்லாம் அழைக்கப்பட்ட அவர், இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர். இன்றைய நாட்குறிப்பில் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரை பற்றி தற்போது பார்க்கலாம். காமராசரின் வாழ்க்கை வரலாறு: ● 1903-ம் ஆண்டு விருதுநகரில் குமாரசாமி மற்றும் சிவகாமியம்மாளுக்கு மகனாக பிறந்தவர் பெருந்தலைவர் காமராசர். ● 1908ம் ஆண்டு ஏனாதி நாராயண வித்யா சாலையில், ஆரம்பக்கல்வியை தொடங்கினார். 6 வயதில், தனது தந்தை இறந்ததால், பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆளான காமராசர், சிறு வயதிலேயே துணிக்கடைக்கு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். ● 1920ம் ஆண்டு தனது 16 வயதில், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினரான காமராசர், ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று 6 முறை சிறைக்கு சென்று 9 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். ● காங்கிரஸ் தலைவர் தீரர் சத்திய மூர்த்தியை அரசியல் குருவாக மதித்த காமராசர், 1953-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார். ● ராஜாஜியால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6,000 பள்ளிகளை திறந்தார். மேலும், 17 ஆயிரம் பள்ளிகளை திறந்ததோடு, பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை, எளிய மக்களின் கல்விக்கு அடித்தளமிட்டார். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்வி கற்போரின் எண்ணிக்கை, காமராசர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது. ● கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார் காமராஜர். ● 1963ம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். ● 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரியையும் அவரது மரணத்திற்கு பின், இந்திராகாந்தியையும் பிரதமராக்கி கிங் மேக்கராக விளங்கினார். ● தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு ஆற்றுவதிலேயே அர்ப்பணித்துக்கொண்ட காமராஜர், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தனது 72 வது வயதில் காலமானார். ● அவரது இறப்புக்கு பின் இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி காமராசரை கவுரவித்தது. ● சமூகத் தொண்டையே பெரிதாக கருதிய காமராசர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ● முதலமைச்சராக இருந்தபோதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டும் தான் அவர் சேர்த்து வைத்த சொத்து. வணங்குவதற்குத் தகுந்த மகான் இவரே!
மக்கள் தலைவர்கள் - lipui 02 திங்கள்கிழமை @Pushpa Raj இன்று  வரலாற்றில் ೦ தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த தினம் கல்வித்தந்தை காமராஜர் நினைவு தினம் ZM_SMusl ' இந்திய குடியரசின் 20151 பிரதமர் லால் பகதூர்  சாஸ்திரி பிறந்த தினம் ன்றைய வரலாற்று பதிவுடன் னிய காலை வணக்கம் lipui 02 திங்கள்கிழமை @Pushpa Raj இன்று  வரலாற்றில் ೦ தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த தினம் கல்வித்தந்தை காமராஜர் நினைவு தினம் ZM_SMusl ' இந்திய குடியரசின் 20151 பிரதமர் லால் பகதூர்  சாஸ்திரி பிறந்த தினம் ன்றைய வரலாற்று பதிவுடன் னிய காலை வணக்கம் - ShareChat
#மக்கள் தலைவர்கள் திரு.லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் இன்று.! திரு.லால்பகதூர் சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பகுதியில் இருந்து 7 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள முகல்சராய் சிறிய ரயில்வே நகரத்தில் 1904, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அவர் தந்தை திரு.லால்பகதூர் சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது மறைந்தார். அப்போது இருபது வயதே ஆன அவருடைய தாயார் தனது 3 குழந்தைகளுடன் அவரது தந்தை வீட்டிற்குச் சென்று குடியேறினார். லால்பகதூரின் பள்ளிக்கல்வி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. வறுமையையும் மீறி அவருடைய குழந்தை பருவம் மகிழ்ச்சியாகவே அமைந்தது. மேல்நிலை பள்ளிப்படிப்புக்காக வாரணாசியில் உள்ள மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டில் நானா (சின்ன குழந்தை) என்றே அவர் அழைக்கப்பட்டார். கோடை வெயிலில் பள்ளிக்கு செல்வதற்காக காலணி கூட இல்லாமல் பல மைல் தூரம் நடந்து சென்றார். அவர் வளர வளர அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் போராட்டத்தில் அவர் நாட்டம் கொண்டார். இந்தியாவின் ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவு அளித்த இந்திய இளவரசர்களுக்கு கண்டனம் தெரிவித்த மகாத்மா காந்தியின் செயல் இவரை மிகவும் கவர்ந்தது. அப்போது அவரின் வயது 11 ஆகும். ஆனால், அந்த செயல் தேசிய அளவில் செயல்பட அவர் மனதிற்கு உந்து சக்தியை அளித்தது. ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்த போது லால்பகதூருக்கு வயது 16. காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார். இந்த முடிவு அவர் தாயாரின் நம்பிக்கையைத் தகர்த்தது. இதை ஒரு அழிக்கும் செயலாகக் கருதிய அவரது குடும்பத்தார் அவருக்கு அறிவுறுத்த முடியவில்லை. ஆனால், லால்பகதூர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவருக்கு நெருக்கமான அனைவருக்கும் இது தெரியும். ஒருமுறை அவர் முடிவு செய்தால் பிறகு மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும் அவருடைய சாதுவான தோற்றத்திற்குள் ஒரு உறுதியான பாறை இருக்கிறது என்றும் தெரியும். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள காசி வித்யாபத்திரில் அவர் இணைந்தார். அப்போது நாட்டின் சிறந்த அறிவாளிகள் மற்றும் தேசியவாதிகளின் தாக்கத்தில் அவர் பயின்றார். சாஸ்திரி என்ற இளநிலை பட்டத்தை வித்யா பீடம் அவருக்கு அளித்தது. ஆனால் மக்கள் மனதில் அதுவே அவருடைய பெயராகப் பதிவாகியது. 1927-ல் அவர் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவி லலிதா தேவி, மிர்சாபூர் நகரத்தைச் சார்ந்தவர். அவருடைய திருமணம் முழு பாரம்பரியத்துடன் நடைபெற்றாலும் ஒரு விசயத்தில் மட்டும் வித்தியாசமாகவே இருந்தது. சுழல் சக்கரமும், கையால் நெய்யப்பட்ட துணி மட்டுமே சீதனமாக கொடுக்கப்பட்டது. மாப்பிள்ளையாக அவர் வேறு எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டியில் உள்ள கடற்கரை வரை யாத்திரை செய்து ஏகாதிபத்திய உப்பு சட்டத்தை தகர்த்தார். திரு.லால்பகதூர் சாஸ்திரி விடுதலை போராட்டத்திற்காக தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டார். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல கருத்தொளி நிகழ்ச்சிகளை நடத்தி மொத்தமாக 7 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். இந்த போராட்ட சமயத்தில்தான் அவர் இன்னும் வலுவாகவும், பக்குவமாகவும் தன்னை மாற்றிக் கொண்டார். சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது லால்பகதூர் சாஸ்திரியின் சாதுவான தற்பெருமையற்ற குணத்தின் அருமையை தேசிய போராட்டத்தின் தலைவர் உணர்ந்திருந்தார். 1946-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது நாட்டின் ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க திரு லால் பஹதூர் சாஸ்திரி அழைக்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார். உத்தரபிரதேசத்தில் கடின உழைப்புக்கும், திறமைக்கும் லால்பகதூர் சாஸ்திரி என்பது ஒரு மறுபெயராக இருந்தது. 1951-ல் டெல்லிக்கு சென்ற அவர் மத்திய அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தார். ரயில்வே அமைச்சராக, உள்துறை அமைச்சராக, நேருவின் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் இலாகா ஒதுக்கப்படாத அமைச்சராகவும் பணிபுரிந்தார். அவருடைய வளர்ச்சி திடமானதாக இருந்தது. தமிழகத்தின் விழுப்புரம் அருகே நடந்தஒரு ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததற்காக தான் பொறுப்பேற்று அதற்கு பொறுப்பானவராக கருதி ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். இதுபோன்று முன் எப்போதும் நடைபெறாதச் சம்பவத்தை நாடாளுமன்றமும், நாடும் அவரை வெகுவாக புகழந்தது. அப்போது பிரதமராக இருந்த பண்டிட் நேரு நாடாளுமன்றத்தில் இச்சம்பவம் குறித்து பேசுகையில், லால்பகதூர் சாஸ்திரியின் நேர்மையும் உயர்ந்த லட்சியங்களையும் புகழ்ந்து பேசினார். இந்த சம்பவத்திற்கு லால்பகதூர் சாஸ்திரி எந்தவகையிலும் பொறுப்பில்லை என்றாலும் அரசியல் சட்ட அமைப்பில் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதற்காக நான் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார். ரயில்வே விபத்து குறித்த நீண்ட விவாதத்திற்கு பதில் அளித்த லால்பகதூர் சாஸ்திரி, என்னுடைய சிறிய உருவத்தைப்பார்த்தும், அமைதியாக பேசுவதை வைத்தும் மக்கள் என்னால் உறுதியாக செயல்பட முடியாது என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். உருவ அமைப்பில் நான் வலிமையானவனாக இல்லாதபோதும், நான் மனதளவில் உறுதியானவன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். அவருடைய அமைச்சரவை செயல்பாடுகளுக்கிடையில் காங்கிரஸ் செயல்பாடுகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். பொதுத்தேர்தல்கள் 1952, 1957 மற்றும் 1962-ல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றதற்கு இவருடைய திறமையும், நிர்வாக செயல்பாடும் பெரிதும் உதவியது. லால் பகதூர் சாஸ்திரி முப்பது ஆண்டுகள் தன்னை பொது சேவையில் அற்பணித்துக் கொண்டார். லால் பகதூர் சாஸ்திரி வீடு அரசியல், சட்டம் & அரசு உலகத் தலைவர்கள் பிரதமர்கள் லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமர் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் ஆசிரியர்களால் • கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: செப்டம்பர் 28, 2022 • வரலாற்றைத் திருத்தவும் லால் பகதூர் சாஸ்திரி , (பிறப்பு அக்டோபர் 2, 1904, முகல்சராய், இந்தியா - ஜனவரி 11, 1966, தாஷ்கண்ட் , உஸ்பெகிஸ்தான் , USSR இல் இறந்தார்), ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய அரசியல்வாதி, இந்தியாவின் பிரதமர் ( 1964-66) . லால் பகதூர் சாஸ்திரி. லால் பகதூர் சாஸ்திரி அனைத்து ஊடகங்களையும் பார்க்கவும் பிறந்தவர்: அக்டோபர் 2, 1904 இந்தியா (நாளை பிறந்த நாள்) இறந்தவர்: ஜனவரி 11, 1966 (வயது 61) தாஷ்கண்ட் உஸ்பெகிஸ்தான் தலைப்பு / அலுவலகம்: பிரதமர் (1964-1966) , இந்தியா அரசியல் தொடர்பு: இந்திய தேசிய காங்கிரஸ் பங்கு: தாஷ்கண்ட் ஒப்பந்தம் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் உறுப்பினரான அவர் குறுகிய காலம் (1921) சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையானதும் அவர் தேசியவாத பல்கலைக்கழகமான காசி வித்யாபிதாவில் பயின்றார், அங்கு அவர் சாஸ்திரி பட்டத்துடன் பட்டம் பெற்றார் ("வேதங்களில் கற்றார்"). பின்னர் அவர் காந்தியின் சீடராக அரசியலுக்குத் திரும்பினார், மேலும் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் தற்போது உத்தரபிரதேச மாநிலமான ஐக்கிய மாகாணங்களின் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குமிக்க பதவிகளைப் பெற்றார் . அகழிகளில் டெரகோட்டா சிப்பாய்களின் நெருக்கமான காட்சி, பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் சமாதி, சியான், ஷான்சி மாகாணம், சீனா பிரிட்டானிகா வினாடி வினா வரலாறு: உண்மையா அல்லது கற்பனையா? இந்த வினாடி வினா கடந்த காலத்தை வரிசைப்படுத்துவதால், வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அசையும் வகையை உண்மையில் கண்டுபிடித்தவர் யார், வின்ஸ்டன் சர்ச்சில் "மம்" என்று அழைத்தவர் மற்றும் முதல் ஒலி ஏற்றம் எப்போது கேட்டது என்பதைக் கண்டறியவும். சாஸ்திரி 1937 மற்றும் 1946 இல் ஐக்கிய மாகாணங்களின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக அனுபவம் பெற்றார். அவர் 1952 இல் மத்திய இந்திய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ரயில்வே மற்றும் போக்குவரத்துக்கான மத்திய அமைச்சரானார். 1961 இல் உள்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் ஒரு திறமையான மத்தியஸ்தராக நற்பெயரைப் பெற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,ஜவஹர்லால் நேருவின் உடல்நலக்குறைவால், சாஸ்திரி இலாகா இல்லாமல் அமைச்சராக நியமிக்கப்பட்டார், நேருவின் மரணத்திற்குப் பிறகு அவர் ஜூன் 1964 இல் பிரதமரானார். . இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சனைகளை திறம்பட கையாளத் தவறியதற்காக சாஸ்திரி விமர்சிக்கப்பட்டார், ஆனால் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதி தொடர்பாக அண்டை நாடான பாகிஸ்தானுடன் (1965) பகைமை வெடித்ததில் அவர் உறுதியாக இருந்ததால் பெரும் புகழ் பெற்றார் . ரஷ்யாவின் முன்னிலையில், பாக்.உடன் "போர் இல்லாத" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அன்றிரவே அவர் மாரடைப்பால் இறந்தார் . இந்த காலக்கட்டத்தில் நேர்மைக்காகவும் சிறந்த ஆற்றலுக்காகவும் மக்களால் அவர் நன்கு அறியப்பட்டார். எளிமை, பொறுமை, சிறந்த உள் வலிமை, திடமான ஆற்றல் ஆகிய குணங்களை கொண்ட அவர் மக்களின் மொழியை அறிந்து நடந்தார். தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவர், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். மகாத்மா காந்தியின் அரசியல் பாடம் இவரை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஆசிரியரை நினைவு கூறும் வகையில் ‘கடின உழைப்பு பிராத்தனைக்கு சமம்’ என்று அவர் ஒரு முறை தெரிவித்தார். மகாத்மா காந்தி வழியில், லால் பகதூர் சாஸ்திரியும் இந்திய கலாச்சாரத்தைச் சிறப்பாக பிரதிபலித்தார்.
மக்கள் தலைவர்கள் - தேசி பக்தாரள்விசை நூற்றாண்டு வளியடு அன்் அீதமாமனிதம் லல்கதூர்சாஸ்திரி தேசி பக்தாரள்விசை நூற்றாண்டு வளியடு அன்் அீதமாமனிதம் லல்கதூர்சாஸ்திரி - ShareChat
#மக்கள் தலைவர்கள் மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்களல்ல! “ஒரு கிராமப் பஞ்சாயத்தில் உள்ள பெரிய குளத்தில், மீன்பிடிக்கும் உரிமையை யாருக்கு கொடுப்பது என்று முடிவு செய்வதற்க்கு உரிய கோப்பு ஒன்னு, முதல்வர் காமராஜர் பார்வைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலரிடம் இது குறித்து பேசிய காமராஜர், “இந்த குளத்தில் மீன் பிடிக்கும் உரிமையை தனிபட்ட நபருக்கு கொடுத்தால், அதில் வரக்கூடிய லாபம் முழுவதும் அவருக்கே போய்ச் சேரும். அதேபோல் 10 பேருக்குச் சேர்த்துக் கொடுத்தால், லாபம் முழுவதும் அந்த 10 பேருக்குத்தான் போகும். ஒரு கூட்டுறவு சங்கத்துக்கு அந்த உரிமையை வழங்கினால், அந்த லாபம் அனைத்தும் அந்த கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே போய் சேரும். இப்படியெல்லாம் செய்யாமல், அந்த கிராம பஞ்சாயத்து ஏற்று நடத்தினால், அதில் வரக்கூடிய லாபம் முழுவதும் அந்தக் கிராமத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும். இதில் எது நல்லது” என்று கேட்டார். “தாங்கள் சொன்னபடி, கிராம பஞ்சாயத்து ஏற்று நடத்துவதுதான் நல்லது. ஆனால், அதற்க்கு சட்டத்தில் இடமில்லையே” என்று அந்த அதிகாரி கூறினார். உடனே முதல்வருக்கு கோபம் வந்து விட்டது. “எது நல்லது என்று நீங்களே கூறினீர்கள். அதை நிறைவேற்றச் சட்டவிதிகள் இடம் தரவில்லையெனில், அதை உடனே மாற்றி உத்தரவு போடுங்கள். மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்களல்ல” என்று உறுதியுடன் தெளிவாக கூறினார் காமராஜர் ! அப்பெருந்தலைவரின் நினைவுநாள் இன்று!
மக்கள் தலைவர்கள் - ShareChat
00:41
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 இன்று காந்தி ஜெயந்தி ..! மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தென்னாப்பிரிக்க முகம்; 💐💐💐💐💐💐💐💐 மகாத்மா என்ற மரியாதைச் சொல், 1914 இல் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் அவருக்குப் பயன்படுத்தப்பட்டது, இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. "உண்மையுடன் என் பரிசோதனைகளின் கதை" என்ற நூல் அவரின் சுயசரிதை ஆகும். அவரது தந்தை கரம்சந்த் உத்தமசந்த் காந்தி (1822-1885), போர்பந்தர் மாநிலத்தின் திவானாக (முதல்வர்) பணியாற்றினார் . அவர் ஒரு தொடக்கக் கல்வியை மட்டுமே பெற்றிருந்தாலும், முன்பு மாநில நிர்வாகத்தில் எழுத்தராக இருந்த போதிலும், கரம்சந்த் ஒரு திறமையான முதலமைச்சராக இருந்தார். அவரது காலத்தில், கரம்சந்த் நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் இளம் வயதிலேயே இறந்தனர், ஒவ்வொருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகு, அவருடைய மூன்றாவது திருமணம் குழந்தை இல்லாமல் இருந்தது. 1857 ஆம் ஆண்டில், கரம்சந்த் தனது மூன்றாவது மனைவியிடம் மறுமணம் செய்ய அனுமதி கோரினார்; அந்த ஆண்டு, அவர் புத்லிபாயை (1844-1891) மணந்தார், அவரும் ஜுனாகத்தில் இருந்து வந்தவர், மற்றும் ஒரு பிரணாமி வைஷ்ணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அடுத்த தசாப்தத்தில் கரம்சந்த் மற்றும் புத்லிபாய்க்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்: அக்டோபர் 2, 1869 அன்று, புட்லிபாய் தனது கடைசி(4) குழந்தை மோகன்தாஸை போர்பந்தர் நகரில் உள்ள காந்தி குடும்ப குடியிருப்பின் இருண்ட, ஜன்னல்கள் இல்லாத தரை தள அறையில் பெற்றெடுத்தார். குழந்தையாக இருந்தபோது, ​​காந்தியை அவரது சகோதரி ரலியட் "பாதரசம் போல ஓய்வில்லாமல் விளையாடுகிறார் அல்லது சுற்றித் திரிகிறார். அவருக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று "நாய்களின் காதுகளை முறுக்குவது"--! இந்திய கிளாசிக்ஸ், குறிப்பாக ஷ்ரவணன் மற்றும் மன்னர் ஹரிச்சந்திராவின் கதைகள், அவரது குழந்தை பருவத்தில் காந்தி மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது சுயசரிதையில், அவர்கள் மனதில் ஒரு அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியதை அவர் ஒப்புக்கொள்கிறார். அவர் எழுதுகிறார்: "இது என்னை வேட்டையாடியது, நான் ஹரிச்சந்திராவை எண்ணில்லாமல் பலமுறை நடித்திருக்க வேண்டும்." காந்தியின் ஆரம்பகால சுய-அடையாளம் உண்மை மற்றும் அன்பை உயர்ந்த மதிப்புகளாகக் கொண்டது --இந்த காவிய கதாபாத்திரங்களில் காணப்படுகிறது. காந்தி தனது தாயால் ஆழ்ந்த தாக்கத்திற்கு ஆளானார், மிகவும் பக்தியுள்ள பெண்மணி, "தினசரி பிரார்த்தனை இல்லாமல் தனது உணவை எடுத்துக்கொள்ள நினைக்க மாட்டார் ... கடினமான சபதங்களை எடுத்து, சளைக்காமல் வைத்திருப்பார். 1883 மே மாதத்தில், 13 வயதான மோகன்தாஸை 14 வயதான கஸ்தூரிபாய் திருமணம் செய்து கொண்டார் . 1885 இன் பிற்பகுதியில், காந்தியின் தந்தை கரம்சந்த் இறந்தார். அப்போது 16 வயதாக இருந்த காந்தி மற்றும் 17 வயதில் அவரது மனைவிக்கு முதல் குழந்தை பிறந்தது, அவர் சில நாட்கள் மட்டுமே உயிர் பிழைத்தது. இரண்டு மரணங்களும் காந்தியை வேதனைப்படுத்தின.காந்தி தம்பதிக்கு மேலும் நான்கு குழந்தைகள், அனைத்து மகன்களும் இருந்தனர்: ஹரிலால் , 1888 இல் பிறந்தார்; மணிலால் , 1892 இல் பிறந்தார்; ராமதாஸ் , 1897 இல் பிறந்தார்; மற்றும் தேவதாஸ் , 1900 இல் பிறந்தார். மேற்படிப்புக்கு லண்டனை தேர்ந்தெடுத்தார் காந்தி. காந்தியின் சகோதரர் லக்ஷ்மிதாஸ், ஏற்கனவே வழக்கறிஞராக இருந்தவர், காந்தியின் லண்டன் ஆய்வுத் திட்டத்தை உற்சாகப்படுத்தி அவருக்கு ஆதரவளிக்க முன்வந்தார். தனது மனைவியையும் தாயையும் சமாதானப்படுத்த, காந்தி தனது தாயின் முன் இறைச்சி, மது மற்றும் பெண்களைத் தவிர்ப்பதாக சபதம் செய்தார். புத்லிபாய், காந்திக்கு அனுமதி மற்றும் ஆசீர்வாதம் கொடுத்தார். காந்தி தனது தாய்க்கு அளித்த வாக்குறுதி மற்றும் அவளுடைய ஆசீர்வாதங்களை அவர்களுக்கு அறிவித்த போதிலும், அவர் தனது சாதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஏப்ரல் 1893 இல், காந்தி 23 வயதில், கத்தியாவரில் தாதா அப்துல்லா என்ற ஒரு முஸ்லிம் வணிகர் காந்தியைத் தொடர்பு கொண்டார். அப்துல்லா தென்னாப்பிரிக்காவில் ஒரு பெரிய வெற்றிகரமான கப்பல் வணிகத்தை வைத்திருந்தார். ஜோகன்னஸ்பர்க்கில் அவரது தொலைதூர உறவினர் ஒரு வழக்கறிஞர் தேவை, அவர்கள் கத்தியவாரி பாரம்பரியம் கொண்ட ஒருவரை விரும்பினர். காந்தி வேலைக்கான அவரது ஊதியம் பற்றி விசாரித்தார். அவர்கள் மொத்த சம்பளம் £ 105 (2021 பணத்தில் ~ $ 20,200) மற்றும் பயணச் செலவுகளை வழங்கினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியான தென்னாப்பிரிக்காவின் நடால் காலனியில் குறைந்தபட்சம் ஒரு வருட கடமை என்று தெரிந்தும் அவர் அதை ஏற்றுக்கொண்டார் . அவர் தென்னாப்பிரிக்காவில் 21 ஆண்டுகள் வாழ்ந்தார். தென்னாப்பிரிக்காவில் தான் காந்தி ஒரு குடும்பத்தை வளர்த்தார். மற்றும் சிவில் உரிமைகளுக்கான பிரச்சாரத்தில் முதலில் வன்முறையற்ற எதிர்ப்பைப் பயன்படுத்தினார். அங்கு அவர் தனது அரசியல் பார்வைகள், நெறிமுறைகள் மற்றும் அரசியலை வளர்த்துக் கொண்டார். தென்னாப்பிரிக்காவுக்கு வந்த உடனேயே, காந்தியின் தோல் நிறம் மற்றும் பாரம்பரியத்தின் காரணமாக பாகுபாட்டை எதிர்கொண்டார். ஸ்டேக் கோச்சில் ஐரோப்பிய பயணிகளுடன் உட்கார அவருக்கு அனுமதி இல்லை, மற்றும் டிரைவர் அருகே தரையில் உட்கார சொன்னார், பின்னர் அவர் மறுத்தபோது அடித்தனர்; வேறொரு இடத்தில் அவர் ஒரு வீட்டின் அருகே நடக்கத் துணிந்ததற்காக ஒரு சாக்கடையில் தள்ளப்பட்டார், மற்றொரு நிகழ்வில் முதல் வகுப்பை விட்டு வெளியேற மறுத்த பிறகு பீட்டர்மாரிட்ஸ்பர்க்கில் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார் . அவர் ரயில் நிலையத்தில் அமர்ந்து, இரவு முழுவதும் நடுங்கி, இந்தியாவுக்குத் திரும்ப வேண்டுமா அல்லது தனது உரிமைகளுக்காக போராட்டம் நடத்தலாமா என்று யோசித்தார். அவர் எதிர்ப்பைத் தேர்ந்தெடுத்தார், அடுத்த நாள் ரயிலில் ஏற அனுமதிக்கப்பட்டார். மற்றொரு சம்பவத்தில், டர்பன் மாஜிஸ்திரேட், காந்தியின் தலைப்பாகையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது, அவர் அதை செய்ய மறுத்துவிட்டார். இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் பொது நடைபாதையில் நடக்க அனுமதிக்கப்படவில்லை. காந்தியை ஒரு போலீஸ்காரர் எச்சரிக்கையின்றி நடைபாதையில் இருந்து தெருவில் தள்ளி உதைத்தார். காந்தி அனுபவித்த மற்றும் அவதானித்த பிரிட்டிஷ் மக்களிடமிருந்து அவருக்கும் அவரது சக இந்தியர்களுக்கும் எதிரான பாரபட்சம் அவரை மிகவும் தொந்தரவு செய்தது. அவர் அவமானமாக உணர்ந்தார். காந்தி பிரிட்டிஷ் பேரரசில் தனது மக்கள் நிலைப்பாட்டை கேள்வி கேட்கத் தொடங்கினார். அவரை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்து வந்த அப்துல்லா வழக்கு மே 1894 இல் முடிவடைந்தது, மேலும் அவர் இந்தியா திரும்ப காந்திஜிக்கு இந்திய சமூகம் பிரியாவிடை விருந்து ஏற்பாடு செய்தது. இருப்பினும், ஒரு புதிய நேட்டல் அரசாங்கத்தின் பாரபட்சமான திட்டம், தென்னாப்பிரிக்காவில் காந்தி தங்கியிருந்த காலத்தை நீட்டிக்க வழிவகுத்தது. இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுக்கும் மசோதாவை எதிர்ப்பதற்கு உதவ அவர் திட்டமிட்டார், பின்னர் ஒரு பிரத்தியேக ஐரோப்பிய உரிமை என்று முன்மொழியப்பட்டது. இந்த மசோதாவில் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் பிரிட்டிஷ் காலனித்துவ செயலாளரான ஜோசப் சேம்பர்லைனிடம் கேட்டார் . மசோதா நிறைவேற்றுவதை நிறுத்த முடியவில்லை என்றாலும், தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் குறைகளை கவனத்தில் கொண்டு அவரது பிரச்சாரம் வெற்றி பெற்றது. அவர் "நேட்டல் இந்திய காங்கிரஸை"க் கண்டுபிடிக்க உதவினார். (1894, ) இந்த அமைப்பின் மூலம், அவர் தென்னாப்பிரிக்காவின் இந்திய சமூகத்தை ஒரு ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக வடிவமைத்தார். ஜனவரி 1897 இல், காந்தி டர்பனில் இறங்கியபோது, ​​வெள்ளைக் குடியேறிய ஒரு கும்பல் அவரைத் தாக்கியது . அவர் காவல் கண்காணிப்பாளரின் மனைவியின் முயற்சியால் மட்டுமே தப்பினார். எனினும், அவர் அந்த கும்பலின் எந்த உறுப்பினருக்கும் குற்றச்சாட்டுகளை சுமத்த மறுத்துவிட்டார். 1906 ஆம் ஆண்டில், டிரான்ஸ்வால் அரசாங்கம் காலனியின் இந்திய மற்றும் சீன மக்களைப் பதிவு செய்ய கட்டாயப்படுத்தும் புதிய சட்டத்தை அறிவித்தது. அந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஒரு மாபெரும் கண்டனக் கூட்டத்தில், காந்தி சத்தியாகிரகம் (சத்தியத்தின் மீது பக்தி) அல்லது வன்முறையற்ற போராட்டத்தை முதல் முறையாக ஏற்றுக்கொண்டார். அந்தோணி பரேல் படி, காந்தி பாதிப்பினைக் கொண்டிருந்தது "தமிழ் தார்மீக உரை திருக்குறள்" பிறகு "லியோ டால்ஸ்டாய்". காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது இந்தியர்கள் மீது கவனம் செலுத்தினார். அவர் ஆரம்பத்தில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. எவ்வாறாயினும், அவர் பாகுபாடு மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட பிறகு, வெள்ளை ரெயில் அதிகாரியால் அவரது தோலின் நிறம் காரணமாக ஒரு ரயில் பெட்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களுடனான இதுபோன்ற பல சம்பவங்களுக்குப் பிறகு , காந்தியின் சிந்தனையும் கவனமும் மாறியது, இதை அவர் எதிர்க்க வேண்டும் மற்றும் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்று அவர் உணர்ந்தார். அவர் நேட்டல் இந்திய காங்கிரஸை உருவாக்கி அரசியலில் நுழைந்தார். அஷ்வின் தேசாய் மற்றும் கூலம் வாஹெட் ஆகியோரின் கருத்துப்படி, இனவெறி குறித்த காந்தியின் கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை, சில சமயங்களில், அவரைப் போற்றுபவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. தென்னாப்பிரிக்காவில் காந்தி ஆரம்பத்தில் இருந்தே துன்புறுத்தப்பட்டார். மற்ற நிறமுடையவர்களைப் போலவே, வெள்ளை அதிகாரிகளும் அவரது உரிமைகளை மறுத்தனர், மேலும் பத்திரிகைகளும் தெருக்களில் இருந்தவர்களும் அவரை "ஒட்டுண்ணி", "அரை காட்டுமிராண்டி", "கேன்சர்", "குள்ள கூலி", "மஞ்சள் மனிதன்" என்று அழைத்தனர். மற்றும் பிற அடைமொழிகள். இன வெறுப்பின் வெளிப்பாடாக மக்கள் அவரை உமிழ்வார்கள். ​​காந்தி தென்னாப்பிரிக்காவின் பிரிட்டிஷ் காலனியில் உள்ள வெள்ளையர்கள் இந்திய இந்துக்களையும் முஸ்லீம்களையும் " காஃபிரின் நிலைக்கு" தாழ்த்துவதாக புகார் கூறினார் . காந்தி, 24 வயதில், இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கோரி, 1895 இல் நடால் சட்டசபைக்கு ஒரு சட்ட சுருக்கத்தை தயார் செய்தார். "ஆங்கிலோ-சாக்சன்கள் மற்றும் இந்தியர்கள் ஒரே ஆரியப் பங்கு அல்லது இந்தோ-ஐரோப்பிய மக்களிடமிருந்து தோன்றியவர்கள்" என்று இனத்தின் வரலாறு மற்றும் ஐரோப்பிய ஓரியண்டலிஸ்டுகளின் கருத்துக்களை காந்தி மேற்கோள் காட்டி, இந்தியர்களை ஆப்பிரிக்கர்களுடன் இணைக்கக்கூடாது என்று வாதிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, "காந்தியும் அவரது சகாக்களும் ஆப்பிரிக்கர்களுக்கு செவிலியர்களாகவும், இனவெறியை எதிர்ப்பதற்காகவும் சேவை செய்து உதவினார்கள்" என்று அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நெல்சன் மண்டேலா கூறுகிறார் . "காந்தி, ஸ்டேட் தேசாய் மற்றும் வாஹெட் ஆகியோரின் பொதுவான உருவம் அவரது படுகொலைக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது, அவர் எப்போதுமே ஒரு துறவி போல் இருந்தார், உண்மையில் அவரது வாழ்க்கை மிகவும் சிக்கலானது, சிரமமான உண்மைகளை உள்ளடக்கியது மற்றும் காலப்போக்கில் உருவானது." 1906 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் நடாலில் ஜூலு இராச்சியத்திற்கு எதிராக போரை அறிவித்தபோது , காந்தி தனது 36 வது வயதில் ஜூலஸ் மீது அனுதாபம் காட்டினார் மற்றும் ஆம்புலன்ஸ் பிரிவாக உதவ இந்தியத் தொண்டர்களை ஊக்குவித்தார். காந்தி, தென்னாப்பிரிக்காவின் 20 இந்தியர்கள் மற்றும் கறுப்பின மக்களைக் கொண்ட ஒரு குழு, காயமடைந்த பிரிட்டிஷ் வீரர்கள் மற்றும் ஜூலு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஸ்ட்ரெச்சர்-தாங்கிப் படையாக முன்வந்தது. காயமடைந்த ஜூலுவுக்கு காந்தியும் குழுவும் சிகிச்சை அளிப்பதை வெள்ளை வீரர்கள் தடுத்தனர், காந்தியுடன் சில ஆப்பிரிக்க ஸ்ட்ரெச்சர் தாங்கியவர்கள் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். காந்தி கட்டளையிட்ட மருத்துவக் குழு இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே செயல்பட்டது. ஜூலு மற்றும் பிற போர்களின் போது "தீவிர விசுவாசியாக" உதவி செய்ய காந்தி முன்வந்தார், ஆனால் பிரிட்டிஷ் அணுகுமுறையில் எந்த வித்தியாசமும் இல்லை . தென்னாப்பிரிக்காவில் (1994) கறுப்பு தென்னாப்பிரிக்கர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்ற சில ஆண்டுகளில், காந்தி பல நினைவுச்சின்னங்களுடன் ஒரு தேசிய நாயகனாக அறிவிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவில் அவரது செயல்கள் மூலமாக, அவர் ஒரு முன்னணி இந்திய தேசியவாதி, கோட்பாட்டாளர் மற்றும் சமூக அமைப்பாளர் என சர்வதேச நற்பெயரை கொண்டு வந்தார். 1915 இல், 45 வயதில், அவர் இந்தியா . அதிகப்படியான நில வரி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக விவசாயிகள், விவசாயிகள் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களை ஏற்பாடு செய்ய அவர் திட்டமிட்டார். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்றார். 1921 ஆம் ஆண்டில், காந்தி வறுமையை ஒழித்தல், பெண்களின் உரிமைகளை விரிவுபடுத்துதல், மத மற்றும் இன ஒற்றுமையை உருவாக்குதல், தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருதல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக "ஸ்வராஜ்" அல்லது சுயராஜ்யத்தை அடைவதற்காக நாடு தழுவிய பிரச்சாரங்களை நடத்தினார் . 1921 ஆம் ஆண்டில், காந்தி இந்தியாவின் கிராமப்புற ஏழைகளை அடையாளம் காண்பதற்கான அடையாளமாக ஒரு பாரம்பரிய இந்திய சுழல் சக்கரத்தில் ( சர்கா ) நூல் கையால் நெய்யப்பட்ட ஒரு இந்திய "அரைக்கோவணம்" மற்றும் ஒரு சால்வை (குளிர்காலத்தில்) பயன்படுத்தினார் . அவர் ஒரு தன்னிறைவுள்ள குடியிருப்பு சமூகத்தில் அடக்கமாக வாழத் தொடங்கினார் , எளிய சைவ உணவை உட்கொண்டார் , சுய சுத்திகரிப்பு மற்றும் அரசியல் எதிர்ப்பின் வழிமுறையாக நீண்ட விரதங்களை மேற்கொண்டார் . பொதுவான இந்தியர்களுக்கு காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதத்தை கொண்டு, காந்தி அவர்களை பிரிட்டிஷ் திணித்த உப்பு வரியை 400 கிமீ (250 மைல்) "தண்டி சால்ட் மார்ச்" 1930 ல் சவால் விடுத்தார் . மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அழைத்தார் 1942 இல். அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இரண்டிலும் பல முறை மற்றும் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். மதப் பன்மைத்துவத்தின் அடிப்படையில் காந்தியின் சுதந்திர இந்தியா பற்றிய பார்வை 1940 களின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்து செதுக்கப்பட்ட தனி முஸ்லீம் தாயகத்தைக் கோரிய ஒரு புதிய முஸ்லீம் அமைப்பால் ("முஸ்லீம் லீக்" ) சவால் செய்யப்பட்டது. அதன் தலைவர் முகமது அலி ஜின்னா. ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு, பிரிட்டன் சுதந்திரத்தை வழங்கியது, ஆனால் பிரிட்டிஷ் இந்தியப் பேரரசி ல் இருந்தது பிரிக்கப்பட்டு, இரண்டு ஆட்சிப்பிரதேசங்களில் , இந்து மதம் பெரும்பான்மை இந்தியா மற்றும் முஸ்லீம் பெரும்பான்மை பாகிஸ்தான் . இடம்பெயர்ந்த இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் தங்கள் புதிய நிலங்களுக்குச் சென்றபோது , மத வன்முறை வெடித்தது, குறிப்பாக பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் . டெல்லியில் அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் கொண்டாடிய காந்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆறுதல் கூறினார். அடுத்த மாதங்களில், மதவன்முறைகளை நிறுத்த அவர் பல உண்ணாவிரப் போராட்டங்ளை மேற்கொண்டடார், இவற்றில் கடைசியாக, 12 ஜனவரி 1948 இல் அவருக்கு 78 வயதாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு செலுத்த வேண்டிய சில பணச் சொத்துகளைச் செலுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற மறைமுக குறிக்கோள் இருந்தது. சில இந்தியர்கள், காந்தி முஸ்லீம்களுக்கு மிகவும் இடமளிப்பதாக நினைத்தார்கள். இவர்களில் இருந்த நாதுராம் கோட்சே , ஒரு இந்து மத தீவிரவாதி,1948 ஜனவரி 30 ஆம் தேதி காந்தியைஅவரது மார்பில் மூன்று குண்டுகளை சுட்டு படுகொலை செய்தான். காந்தியின் பிறந்த நாள், அக்டோபர் 2, இந்தியாவில் காந்தி ஜெயந்தி , தேசிய விடுமுறை தினமாகவும், சர்வதேச அளவில் அகிம்சை தினமாகவும் கொண்டாடப்படுகிறது . காந்தி "இந்தியாவின் தேசத் தந்தை " என்று பொதுவாக போற்றப்படுகிறார். ரத்தம் சிந்தாத அஹிம்ஸை ப் போரில் வெற்றி பெற்று நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தர உதவிய காந்தி ஒரு "இந்திய இந்து"வால் ரத்தம் சிந்தி உயிர்விட்டதே வரலாற்று சோகம்--! .
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:19
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 இளைஞர்களுக்கு வழிகாட்டிய இரு இணையற்ற தலைவர்கள்:- 💐🌸🌷🍀🌹🌻🌺🍁🌴💐🌸🌷🍀 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இருக்கும் வரை இருமிவிட்டு, இறந்தபின்னே இடுகாட்டுக் கரையான்களுக்கு இரையாகி மறையும் மனிதர்களுக்கு மத்தியில் வரலாறாகவே வாழ்ந்துவிட்டுப் போகிற மனிதர்கள் உன்னதமானவர்களாய் உலகத்தாரால் மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் விழிகள் வழிகாட்டும் மொழிகளாய் மற்றவர்களுக்கு அனுதினமும் அறிவுரைகளைத் தந்துகொண்டே இருக்கின்றன. சங்கடங்கள் சாமரம் வீசினாலும் அவர்கள் எதிர்க்கும் அஞ்சுவதில்லை, யாருக்கும் அடிபணிந்து துஞ்சுவதில்லை. இந்த அக்டோபர் இரண்டாம் நாளில் மகாத்மா பிறந்தநாளும் கர்மவீரர் காமராஜர் நினைவுதினமும் வருகிறது. இருவரும் சிரமத்தின் மீதேறி சிகரத்தை அடைந்த மகத்தான வாழ்ந்துகாட்டிகள். காலம் எனும் கலத்தில் ஏறி இருவரும் நம்மை விட்டுச் சென்றுவிட்டாலும் எளிமையான,பயன்மிகுந்த வாழ்க்கையால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள். தும்பிக்கையால் சுவாசிக்கிற யானையைப் போல் நம்பிக்கையைச் சுவாசித்து நேர்மையாய், வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவர்கள் இருவரும். இருவரும் காலத்திற்காகக் காத்திருந்தவர்கள் இல்லை,காலத்தையே கலமாகக் கொண்டு சாதனை வானில் பறந்து வரலாறு படைத்தவர்கள்.தண்ணீரில் மிதக்கும் வெண்ணைக்கட்டி மாதிரி கண்ணீரில் மிதந்த ஏழைகளுக்காக இருவரும் இரங்கியவர்கள். பெரிய பெரிய பதவிகள் தங்களைத் தேடிவந்தபோதும் பதவிக்குப் பின்னே ஓடாமல் அதை மக்களுக்கு உதவிக்கான நல்வாய்ப்பாக மாற்றிக்கொண்டவர்கள் இருவரும். இருவரையும் ஒப்பிட்டுக் கட்டுரைக்குள் அடக்குவது அருவித் தண்ணீரை அண்டாவுக்குள் அடைப்பதைப் போன்றது. கற்பூரசோதி:- 💛💙💜💗💚❤ காரிருள் நீக்கிய கற்பூரசோதியாய் சமுதாயத்தின் பேரிருள் நீக்கிய பெருந்தலைவர்கள் இருவரும். தேங்கிப்போவதோ சோர்ந்தயர்ந்து தூங்கிப்போவதோ இல்லை வாழ்க்கை,தேசத்தின் மீது நேசம் கொண்டு பாசத்தோடு மக்களுக்கு உதவுவதே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டிய வள்ளல்கள் இருவர். இணையற்ற வாழ்ந்துகாட்டிகள்: 💐🌸🌷🍀🌹🌺🍁🌴🍁🌺🍀💐 உலகப் போர்களால் உருக்குலைந்துபோன உலகிற்கு அஹிம்சை என்கிற அமுதத்தை அள்ளித்தந்த வள்ளல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஜியும், காந்திய நெறியில் வாழ்ந்து,காந்தியாகவே வாழ்ந்து காந்தி ஜெயந்தி அன்றே கண்ணயர்ந்த கர்மவீரர் காமராஜரும் இன்றைய இளையோரின் இணையற்ற வாழ்ந்துகாட்டிகள். மனித ஆத்மாக்களுக்கு மத்தியிலே மகாத்மாவாக மாற அவர் என்ன செய்தார்? கர்மமே கண் என்று லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் இன்றும் தூயஆட்சியாளராய் நினைத்துப் பார்க்கப்படுகிறாரென்றால் காரணம் என்ன? கைதவறி கீழே விழுந்த பாதரசம் எப்படி எந்த அழுக்கோடும் ஒட்டாமல் உருண்டோடுமோ அதுபோல் இந்த இரு தலைவர்களும் உலகியல் வாழ்க்கையோடு ஒட்டிஒட்டாமல் வாழ்ந்தவர்கள்.மனத்துக்கண் மாசுஇல்லாமல் வாழ்தலையே அனைத்து அறமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். இருவரும் அனுபவங்களால்,வாழ்வை ஆராதனை செய்தவர்கள். இந்திய நாட்டின் விடுத்தலைக்காகப் பல நாட்கள் சிறையிலேயே கழித்தவர்கள் இருவரும்.தன்னலமில்லாத் தியாகதீபங்கள் இருவரும். எளிமையான தலைவர்கள்: 💙💛💜💗❤💚💔💗💜💙💙 விளம்பரத்திற்கு ஆசைப்படாத எளிமையான தலைவர்களாக இருவரும் திகழ்ந்தார்கள்.1901 ஆம் ஆண்டு ஒரு மாநாட்டிற்காக மகாத்மா காந்திஜி,கல்கத்தா வந்தருந்தார். மாலையில் மாநாடு தொடங்கயிருந்த இடத்தைக் காலையில் பார்வையிடச் சென்றார்.அந்த மைதானம் குப்பையும் கூளமுமாயிருந்தது. ஒன்றும் பேசாமல் காந்திஜி துடைப்பத்தைக் கையில் ஏந்தி மைதானத்தைத் தூய்மைசெய்யத்தொடங்கினார். ஓடோடி வந்த தொண்டர்கள் “ பாபுஜி..நீங்கள் எங்கள் தலைவர்,இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டனர். நம் வீடு குப்பையாகக் கிடந்தால் நாம் செய்யமாட்டோமா? என்று மறுகேள்வி கேட்டார். தஞ்சை மாவட்டச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காமராஜர் ஒரு பழைய கோவிலுக்குள் சென்றார், உடன் இருந்தவர்களிடம் “ இதை யார் கட்டுனான்னு கேட்டேன்” என்றார். யாருக்கும் தெரியவில்லை,சட்டென்று மேலே எரிந்துகொண்டிருந்த குழல்விளக்கைக் காட்டி, ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி இந்தக்கோயிலே கட்டுன மவராசன் யாருன்னு தெரியல..அதுல டியுப் லைட்போட்ட மவராசன் பேரு பெயிண்டுல எழுதியிருக்குன்னேன்” என்று சிரித்தபடிச் சொல்லியவாறே காமராஜர் வெளியே வந்துவிட்டார். பதவியை விரும்பாப் பண்பாளர்கள்:- 💐🌸🌷🌷🍀🌹🌻🌻🌺🍁🍁🌺🌻🍁 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஜவஹர்லால் நேருவும், சர்தார் வல்லபாய் படேலும் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் கூட எந்த ஆட்சிப் பொறுப்பையும் ஏற்க மறுத்தார் அண்ணல் காந்தியடிகள். இரண்டு முறை பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தபோதும் ஏற்காமல் திரு.லால்பகதூர் சாஸ்திரியையும் திருமதி. இந்திராகாந்தியையும் பிரதமராக்கி அழகுபார்த்த ஒப்பற்ற தலைவர் கர்மவீரர் காமராஜர். “பதவியைத் தேடி நாம் போனால் பதவிக்குப் பெருமை, பதவி நம்மைத் தேடிவந்தால் நமக்குப்பெருமை” என்று அடிக்கடிக் கூறியவர் கர்மவீரர் காமராஜர். கொள்கை வீரர்கள்: 💐🌸🌷🍀🌹🌻🌺🍁🍁 பாரிஸ்டர் பட்டம் பெற்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கறுப்பர் என்ற காரணத்தால் டர்பன் நீதிமன்றத்தில் தலைப்பாகையோடு வாதாட அனுமதி மறுக்கப்பட்டது.அதைக் கடுமையாக எதிர்த்த காந்திஜி உடனே அந்த நீதிமன்றத்தை விட்டுவெளியேறினார்.முதல் வகுப்புப் பயணச் சீட்டோடு பிரிட்டோரியாவுக்குப் பயணித்தவரை நிறவெறியோடு வெள்ளையர்கள் தூக்கி எறிந்தபோது பட்ட ரணத்தை இந்தியநாட்டின் சுதந்திரத்திற்காகப் பயன்படுத்தினார். ராட்டையையே சாட்டையாக்கி அந்நியரை நாட்டைவிட்டு ஓட்டச்செய்த மகாத்மா காந்திஜி மதுரையில் தன் ஆடைகளை மாற்றித் தமிழ்நாட்டு விவசாயிகள் உடுத்தும் மிக எளிய உடைக்கு மாறினார். மகாத்மாவின் கொள்கைகளில் கவரப்பட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்நாள் முழுக்க கதராடையையே உடுத்தினார். மனிதநேயச் செல்வர்கள்: 💙💛💜💗❤💚❤💚💙💛 “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் மனிதநேயநெறியை இருவரும் தம் வாழ்வின் அறமாகக் கொண்டவர்கள். பள்ளிக்குச் செல்லும் வயதில் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், கர்மவீரர் காமராஜரைப் பெரிதும் பாதித்தன் விளைவாக மகாகவி பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில், கர்மவீரர் காமராஜர் உலகம் போற்றும் மதியஉணவுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்” என்று மகாகவி பாரதியார் சொன்னதைச் செய்துகாட்டியவர் கர்மவீரர் காமராஜர். சம்பரானில் கஸ்தூரிபாவோடு பயணித்துக்கொண்டிருத்தபோது அழுக்கு உடையோடு குழந்தைகள் பிச்சைஎடுத்துக் கொண்டிருப்பதை காந்திஜி பார்க்கிறார். “ கஸ்தூரிபா..இவர்கள் அழுக்கோடு மாற்று உடை இல்லாமல் இருப்பது உனக்கு உறுத்தவில்லையா? நீ ஏன் இவர்களை நீராடவைத்து தூய்மையான உடையணிவித்து பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது?” என்று கேட்டார். காந்திஜி சொன்னபடி வாழ்க்கை முழுக்க கஸ்தூரிபா செய்தார்.காந்திஜி எந்த கிராமத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் கஸ்தூரிபா, அழுக்கோடு திரிந்துகொண்டிருக்கும் குழந்தைகளை நீராடச்செய்து நல்ல உடைகள் அணிவித்து பாடம் கற்றுத்தருவதை பழக்கமாகக் கொண்டார். நேரம்தவறாமை: 💐🌸🌷🍀🌹🌹🌺🌺🌺🌹🌹 மகாத்மாவிடமும் கர்மவீரர் காமராஜரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய உயர்பண்பு நேரம்தவறாமை. காந்திஜி எப்போதும் இடுப்பில் கடிகாரத்தைத் தொங்கவிட்டிருப்பார். ஒருவினாடி கூடப் பிந்தாமல் குறித்த நேரத்தில் எதையும் செய்வார். கர்மவீரரும் அப்படியே வாழ்ந்தார். குறித்த நேரத்தில் கூட்டத்தைத் தொடங்காத அமைப்பாளர்களை “ஒருவருக்காகப் பத்துப்பேர் பத்துநிமிடம் காத்திருந்து ஒரேநேரத்தில் நூறுநிமிடத்தை நாம் இழந்துகொண்டிருக்கிறோம்” என்று கடிந்துகொண்டு கர்மவீரர் திருத்தமுயன்றிருக்கிறார். சத்தியசோதனை மேற்கொண்ட தலைவர்கள்: 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝🙏🙏 மகாத்மாவுக்கு முகஸ்துதி பிடிக்காது. “நாம் சேவை செய்யத்தானே பிறந்திருக்கிறோம் இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?” என்று அடிக்கடி சபர்மதி ஆஸ்ரமதிற்கு வருவோரிடம் கூறுவார். காமராஜரும் அப்படியே வாழ்ந்தார். யாரேனும் தன்னைப் பாராட்டிப் பேசினால், “ நிறுத்துனேன்..என்னைப் புகழ்ந்து பேசும் நேரத்திலே நல்ல காரியம் எதையாவது செய்யலாமேனேன்” என்பார். முதலமைச்சரானதும் அவர் பாதுகாப்புக்கு தன்காருக்கு முன் சைரன் வைத்த கார் சென்றதை விரும்பாதவர். பல்கலைக்கழகம் அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் தரவிரும்பியபோது “ நான் அப்படி என்ன பண்ணிட்டேன்னு டாக்டர் பட்டம் தரவாரிக..அதெல்லாம் வேணாம்னேன்” என்று மறுத்தவர் காமராஜர். இணையற்ற இரு தலைவர்கள்: 💐🌸🌸🍀🍀🌹🌹🌻🌺🌺🍁🍁🍁🌴 மகாத்மாவும் கர்மவீரரும் தூய்மையின் அடையாளமாய் திகழ்ந்த ஈடு இணையற்ற, அப்பழுக்கற்ற தலைவர்கள். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்த மனிதநேயத் தலைவர்கள். சிறுவயதில் தந்தையை இழந்துதாயாரின் அன்பில் வளர்ந்தவர்கள்.இருவரும் சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறைசென்றவர்கள்.அந்நிய ஆடைகளை மறுத்து காலம்முழுக்க கதராடை அணிந்தவர்கள். எளிமையானவர்கள், பழகுவதற்கு இனிமையானவர்கள், நேர்மையானவர்கள். தாழ்வுற்று, வறுமைமிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு,தன் அன்னை தேசம் பாழ்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தங்களையே சுதந்திரவேள்வியில் உருக்கிஊற்றியவர்கள். அவர்கள் வழியை நம் விழிகள் நோக்கட்டும்.இந்த தேசத்தை நேசித்த அவர்கள் வழியில் நம் இளையோர் பயணம் நடக்கட்டும்.
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:09
காந்தி ஜெயந்தி லால் பகதூர் சாஸ்திரிபிறந்தநாள் கர்மவீரர் காமராஜர் நினைவு நாள்💐🌷🍀🌺🌸🙏🙏🙏🙏🙏🙏🙏 #மக்கள் தலைவர்கள்
மக்கள் தலைவர்கள் - ShareChat
01:34
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 எளியோரை நேசித்து ஏழ்மையுடன்வாழ்ந்த ஷீரடி சாயியே போற்றி போற்றி நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:43
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்💐🙏 நற்காலை வணக்கம் 🌹🍀🌺🌸🙏🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:16
#என்றும் mgr அந்த உலக புகழ் பெற்ற மருத்துவமனை அதன் வரவேற்பு மற்றும் விசாரணை பகுதிக்கு வந்த அவர்... நீங்க அவருடன் ஜோடியா நடிகையா இருங்க கேட்டு சொல்றேன் என்று அனுமதி கேட்க... அன்னை ஜானகி எம்ஜிஆர் ஆமாம் அவரு நடிகை இப்போ இங்கே அமெரிக்கநாட்டில் வசிக்கிறார்... அவரை மேலே 5 வது மாடிக்கு என் கணவர் பார்க்க வர அனுமதியுங்க.... அந்த உலக புகழ் பெற்ற அவர் உடன் இந்த இளம் பெண் ஜோடியா என்றே யோசித்து மேலே போக அனுமதிக்க... தலைவர் சிகிச்சை பெற்று வந்து கொஞ்சம் மீண்டு வந்த நேரம் யார் வருகிறார் போகிறார் என்று நினைவு வராத கொடும் கால கட்டம் அது. வந்தவரை அம்மா ஜானகி எம்ஜிஆர் உள்ளே அழைத்து பார்க்க அனுமதிக்க அவர் அங்கே படுத்து இருந்த நிலை பார்த்து கலங்கி என்னை யாரு தெரியுதா... இல்ல என்கிறார் அந்த மகான்.. சற்று நேரம் இருந்து அம்மா பத்திரம் அவர் மீண்டு வருவார் என்று சொல்லி கிளம்பி அறை வாசலில் போகும் போது தலைவர் அன்னை ஜானகி அம்மா அவரிடம் சைகை காட்டி அவங்க இடம் கொடு என்று.. தன் பணம் அமெரிக்க டாலர்கள் வைத்து இருக்கும் இடம் காட்டி அள்ளி கொடு என்று சைகை காட்ட..... நடிகை மஞ்சுளா விம்மி விம்மி சுயநினைவு சரியா வராம யார் என்று தெரியாத போதும் அவரின் உள் உணர்வு யாரோ தன்னிடம் உதவி கேட்டு வந்தவர் போல என்று அவர் நடந்து கொண்ட விதம் குறித்து கண்ணீர் விட்டார். அழகிய தமிழ் மகள் என்று தலைவருடன் நடித்த நடிகை மஞ்சுளா அவர்கள் என்ன ஒரு கொடுக்கும் குணம் இல்ல...இவை எல்லாம் உண்மை சம்பவங்கள்.... அதே மஞ்சுளா அவர்கள் தலைவர் நலம் பெற்று சென்னை திரும்பிய சில நாட்களில் அவர் போன் பண்ணிய போது சாரி நீங்க வந்தது அப்போ தெரியாது என்கிறார் எட்டாம் வள்ளல் எம்ஜிஆர். பின் குறிப்பு... கொடும் கடும் கொரோனா காலத்தில் நாம் யாருக்கு போன் செய்தாலும் கொரோனா விழிப்புணர்வு வாசகம் வந்த பின்னே லைன் கிடைக்கும்.. அதே போல அமெரிக்க நாட்டின் ப்ரூக்லீன் மருத்துமனை அதற்கு எப்படி இருக்கிறார் எங்கள் எம்ஜிஆர் என்று தொடர்ந்து இரவுல பகலில் போன்கள் வர துவங்க எம்ஜிஆர் சார் நலமுடன் தேறி வருகிறார் உங்கள் அழைப்புக்கு நன்றி என்று ப்ரூக்லீன் மருத்துமனை அது சிறப்பு ஏற்பாடு செய்த விந்தை இதுவரை உலகம் காணாதது.. வண்டு துளைக்க முடியாத இதயக்கனி அவரை குண்டு துளைத்து அவர் மீண்டும் சிகிச்சை பெற்று மீண்டு வந்த ராயபேட்டை அரசு மருத்துமனை அந்த வார்டு இன்றும் எம்ஜிஆர் வார்டு என்றே அழைக்க படுவது இன்னும் பலர் அறியாத உண்மை தகவல் வாழ்க தலைவர் புகழ் உங்களில் ஒருவன் நெல்லை மணி... தொடரும்... நன்றி
என்றும் mgr - சாமானியனின் காதல் காவியம் RICKSHAWKAAAN OCTOPER TII AM 63 9 சாமானியனின் காதல் காவியம் RICKSHAWKAAAN OCTOPER TII AM 63 9 - ShareChat