🛕 திருச்சி திருத்தலங்கள் –
*திருவெள்ளறை பெருமாள் திருக்கோயில்*
(பஞ்சரங்க தலம் – நிலையான முன்னேற்றம் தரும் பெருமாள்)
🛕 *கோயிலின் வரலாறு*
திருவெள்ளறை பெருமாள் திருக்கோயில்
தமிழகத்தின் மிகப் பழமையான பெருமாள் கோயில்களில் ஒன்று.
🙏 பிரம்மதேவன் இத்தலத்தில்
பெருமாளை வழிபட்டு
தன் படைப்புத் தொழிலை
முழுமையாகச் செய்ய சக்தி பெற்றதாக
தல புராணம் கூறுகிறது.
🙏 வெண்மை நிறைந்த பாறையின் மேல்
கோயில் அமைந்ததால்
“வெள்ளறை” என பெயர் பெற்றது.
📍 *கோயிலின் அமைவிடம்*
• இடம்: திருவெள்ளறை, திருச்சி மாவட்டம்
• திருச்சி நகரத்திலிருந்து சுமார் 20 கி.மீ
• சாலை வசதி உள்ளது
• அமைதியான கிராமச் சூழல்
🌺 *கோயிலின் சிறப்பு*
🌟 பஞ்சரங்க தலங்களில் ஒன்று
(ஸ்ரீரங்கம், திருவெள்ளறை, கோவிலடி, சாரங்கபாணி, வைகுண்டம்)
🌟 இங்கு பெருமாள்
புண்டரீகாட்சன் என்ற பெயரில்
அருள்பாலிக்கிறார்.
🌟 தாயார்
செங்கமலவல்லி தாயார்
கருணையின் வடிவம்.
🌟 இக்கோயில்
பூமி தேவியின் பெருமை விளங்கும் தலம்
என்றும் கூறப்படுகிறது.
🎉 விசேஷ நாட்கள்
• பங்குனி உத்திரம்
• வைகுண்ட ஏகாதசி
• பிரம்மோற்சவம்
• ஏகாதசி தினங்கள்
🌟 *சுவாமியின் பலன்கள்*
• வாழ்க்கைத் தடைகள் அகலும்
• நிலையான முன்னேற்றம்
• மன தெளிவு
• குடும்ப ஒற்றுமை
• திடீர் தடுமாற்றங்கள் குறைவு
🛕 *சுவாமியின் தோற்ற அமைப்பு*
🌺 மூலவர்: புண்டரீகாட்சன்
🌺 நின்ற திருக்கோலம்
🌺 சங்கு – சக்கரம் தரித்த கரங்கள்
🌺 சாந்தமான முகபாவம்
➡️ இங்கு பெருமாள்
அமைதியும் நிலைத்தன்மையும்
அருள்பாலிப்பவராக விளங்குகிறார்.
🕉️ சுவாமிக்கு உகந்த விரதம்
• ஏகாதசி விரதம்
• சனிக்கிழமை விரதம்
👉 விரதத்துடன் வழிபட்டால்
மனமும் வாழ்க்கையும்
நிலையாகும் என்பது நம்பிக்கை.
🎗️ சுவாமிக்கு நேத்திக்கடன்
• துளசி மாலை சாற்றுதல்
• நெய் தீபம் ஏற்றுதல்
• அன்னதானம்
• சங்கு – சக்கரம் அர்ச்சனை
⏰ தரிசன நேரம்
🕉️ காலை: 7.00 – 12.00
🕉️ மாலை: 4.00 – 7.00
(விசேஷ நாட்களில் மாற்றம் உண்டு)
🌙 சிறந்த நாள் | உகந்த மாதம்
*சிறந்த நாள்:*
• ஏகாதசி
• சனிக்கிழமை
*உகந்த மாதம்:*
• பங்குனி
• மார்கழி
🖼️ *மூலவர் தரிசன அனுபவம்*
🙏 திருவெள்ளறை பெருமாள் தரிசனம்
மனம் அலைபாயாமல்
நிலையாக இருக்க உதவும்
ஒரு ஆன்மீக அனுபவம்.
🙏 *பிரார்த்தனை*
“பஞ்சரங்க நாதா,
என் வாழ்க்கையில் ஏற்படும்
தடுமாற்றங்களையும் குழப்பங்களையும்
நீக்கி
நிலையான முன்னேற்றப் பாதையில்
எல்லோரையும் நடத்துவாயாக. #🙏ஆன்மீகம்
*தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குவது நல்லது...*
நாம் பகல் முழுவதும் ஓடி ஓடி உழைத்துவிட்டு இரவில் தூங்க செல்லும் போது, பல்வேறு திசைகளில் தூங்குவது வழக்கம். அப்படி உறங்கும் போது, சில நேரம் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதற்கான காரணம் என்ன என்று நீங்கள் என்றாவது சிந்தித்து பார்த்தது உண்டா..? எனவே ஒருவர் தூங்கும் திசையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக, நீங்கள் குப்புற படுத்து, அண்ணார்ந்து அல்லது மல்லார்ந்து தூங்குவதை வலது புறம் படுத்து தூங்குவதை காட்டிலும் இடது புறம் தூங்குவதால் பல்வேறு நன்மைகள் வந்து சேருபற்றிய விரிவான தகவலை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
ஏன் ஒருவர் இடது புறமான படுத்து தூங்க வேண்டும்:
இடது பக்கமாக தூங்குவது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிப்பதாக இருக்கும்.
இடது பக்கத்தில் தூங்கும் போது, இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய்க்கு செல்லும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.
நீங்கள் இடது புறமாகத் தூங்குவது கழிவுகளை சிறுங்குடலிலிருந்து பெருங்குடலுக்கு எளிமையாக நகர அனுமதிக்கிறது. இது சிறந்த செரிமானவிளைக்கிறது.
நீங்கள் மல்லாந்து படுக்கும் போது, குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். அதுவே நீங்கள் இடது பக்கத்தில் தூங்குவதன் மூலம் உங்களின் குறட்டையை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
இடதுபுறமாக படுத்திருப்பது மார்பு குழாய்கள் உடலுக்கு நச்சுகள், கழிவுகள் மற்றும் நினநீர் திரவத்தை வடிகட்ட கழிவுகள்போதுமான நேரம் அளிக்கிறது.
பெரும்பாலும், இரவு நேரங்களில் நெஞ்செரிச்சல் பிரச்சனையை நம்மில் பலர் எதிர்கொண்டு வருகிறோம். எனவே, இடது பக்கத்தில் தூங்கும் ஒருவருக்கு, நெஞ்சு எரிச்சல் உணர்வு குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இடதுபுறமாக படுத்திருப்பது கர்ப்பிணி பெண்களுக்கு கருவுக்கு உகந்த ரத்த ஓட்டம், இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு ஆகியவற்றிக்கு பயனளிக்கிறது.
உங்கள் இடது பக்கமாக தூங்குவது உங்கள் இதய ஆரோக்கியம், மண்ணீரல் ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்தும், முதுகு மற்றும் கழுத்து வலியை தடுக்கிறது மற்றும் உங்கள் முதுகுத் தண்டு அழுத்தத்தையும் நிவாரணம் செய்கிறது.
எனவே, இடது பக்கமாக தலையை சற்று உயரமாக வைத்து தூங்குங்கள். ஏனென்றால் இந்த நிலை ஈர்ப்பு விசை வேலை செய்ய அனுமதிக்கும். எனவே, இனிமேல் எப்போதும் தூங்கும் போது இடது பக்கமாக திரும்பி தூங்க வேண்டும். #🙏ஆன்மீகம்
ரத சப்தமி..25.1.2026 ஞாயிறு சூரிய ஜெயந்தி
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியதானது ரத சப்தமி .
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது .
தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரத சப்தமி தினத்தன்று வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்கிறது . அதாவது தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது.
ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும்.
சூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்கிறது சாஸ்திரம் .
ரத சப்தமி வழிபாடு எப்படி செய்வது..?
சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.
நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும்.
வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம்.
சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது உகந்த நாள்.
இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
ஜோதிட ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.
ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த
விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.உத்யோக காரகன் வருமான காரகன் சூரியனே...எனவே உத்யோக உயர்வு ,அரசுபணி ,வருமான உயர்வுக்கு இந்த வழிபாட்டை செய்யலாம்
ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலம் தேர்க்கோலம் போடுவது வழக்கம். இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு.
நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.
சூரியனின் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்டதால், திருமலை-திருப்ப
தியில் ‘ரத சப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருவேங்கடமுடையான் 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும்.
திருமலையில் இந்த காட்சிகளை காண கண்கோடி வேண்டும் .
ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு.
ரதசப்தமி தினத்தில் சூரியனை வழிபடும்போது , சூரியனை நோக்கி,
"ஓம் நமோ ஆதித்யாய... ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!'
என்று சொல்லி வணங்க வேண்டும்..!
ஓம் சூர்யதேவாய நம..!
#🙏ஆன்மீகம்
அபிராமி ஆலயங்கள் 01 : திருமலைராயன் பட்டணம் அபிராமி ஆலயம்
அபிராமி அன்னை ஆலயங்களில் முதல் தலம் இது , சோழநாட்டின் மிக முக்கிய ஆலயமான இவ்வாலயம் நாகபட்டினம் காரைக்கால் இடையே அமைந்துள்ளது, யுகங்களை கடந்த இந்த ஆலயம் வேத காலம் எனும் ரிஷிகள் மாபெரும் சக்தியுடன் வலம் வந்த காலத்தில் இருந்து துவங்குகின்றது
சோழவளநாட்டின் அன்றைய வனப்பகுதியில் இந்த ஆலயம் லிங்க வழிபாடாக துவங்கிற்று, அகத்தியர் போன்ற மாமுனிகளால் ஸ்தாபிக்கபட்டு வணங்கபட்ட ஆலயம் இது
அகத்தியர் இங்கு முதலில் தவமிருந்து இந்த லிங்கத்தையும் அம்மை அபிராமியினையும் ஸ்தாபித்து வணங்கினார், அப்படியே அவர் நவகிரகங்களையும் இங்கு ஸ்தாபித்து கிரக பலன்களை மாற்றும் சக்தியினை நிறுத்தினார், இங்கு எல்லா கிரக தோஷ்மும் மாறும்
மிருகண்ட முனிவர் மானஸ்வி தம்பதியர் வழிபட்ட சிவாலயத்தில் இதுவும் ஒன்று
தான் 16 வயதில் எமமால் பிடிக்கபடுவோம் சிவனை சரணடைந்தால் அதிலிருந்து தப்பலாம் என்பதை முழுக்க அறிந்த மிருகண்ட முனிவரின். மகன் மார்கண்டேயன் வழிபட்ட முக்கிய தலம் இது, முதல் தலமும் இதுதான்
இங்கு தொழுது இதர அபிராமி தேவி ஆலயங்களை தொழுதே அவன் திருகடையூரை அடைந்து எமனை வென்றான், மார்கண்டேயனின் துவக்க வழிபாடு இங்கேதான் நடந்தது
சோழி என்றால் காவல் என பொருள், காப்பு என்றும் கேடயம் என்றும், காக்கும் கவசம் என்றும் பொருள், அப்படி தன்னை நம்பும் பக்தர்களை காக்கும் சிவன் சோழீஸ்வரர் என்றானார்
இந்த ஆலயம் மெல்ல மெல்ல வளர்ந்தது அப்பக்கம் அபிராமிக்கு முக்கிய ஆலயமுமானது ஆனால் பின்னாளைய சமண பவுத்த காலங்களில் முழுக்க அடையாளமின்றி போனது என்றாலும் சோழவம்சத்தின் எழுச்சிக்கு பின் அந்த சிவன் சோளீஸ்வரர் அதுவும் ராஜசோழீஸ்வரர் என்றும் அன்னை அபிராமி தேவி என்றும் மீண்டது சோழர்கள் இந்த ஆலயத்துக்கு செய்த திருபப்ணிகள் ஏராளம்
இந்த ஆலயத்தின் மிக முக்கிய அடையாளம் சொர்ண பைரவர் சொர்ண தேவி விக்ரகம் , இது காசியில் இருந்து வந்தது. ராமதேவர் எனும் மகா சித்தர் காசியில் இதனை வைத்து வழிபட்டு வந்தார், அவரிடம் முக்தி தேடி வந்த சீடருக்கு இந்த விக்ரஹங்களை கொடுத்தார் அந்த சீடர் சோழநாட்டுக்காரர்
அவரின் கனவில் வந்த சிவன் இதனை தான் சொல்லும் கோவிலில் ஸ்தாபனம் செய்யும்படி தெற்கு நோக்கி அனுப்பினார், அந்த விக்ரஹங்களுடன் அவர் இப்பக்கம் வரும்போது சிவன் அவரை இக்கோவில் பக்கம் இழுத்து கொண்டு அந்த காசி சொர்ணபரைவரையும் சொர்ன தேவியினையும் இங்கே ஸ்தாபிக்க வைத்தார் அந்த சம்பவம் சிலிர்ப்பானது
அக்காலகட்டத்தில் அந்த 14ம் நூற்றாண்டில் இங்கு நாயக்க மன்னர்கள் பிரதிநிதியாக திருமலைராயன் என்பவன் இருந்தான், நாயக்கர்கள் தீவிர வைஷ்ணவர்கள் என்பதால் திருமலை எனும் பெயர் அவர்களிடம் நிறைய உண்டு, அப்படி ஒரு திருமலைராயன் இப்பக்கம் ஆண்டு வந்தான்
அவனுக்கு ஒரு மகள் இருந்தாள் அவளுக்கு தகப்பனுக்குரிய பிரம்மஹத்தி ஒட்டிகொண்டு பெரும் தொல்லை கொடுத்தது, எந்த வழிபாட்டிலும் எந்த பூஜையிலும் அது சரியாகவில்லை
ராம்தேவரின் சீடர் சொர்ன பைரவ விக்ரஹங்களுடன் அப்பக்கம் வந்தபோது இந்த மன்னரின் துயரத்தை அறிந்து அவர் மகளின் சாபத்தை சிவனருளால் நீக்கினார், மன்னன் திருமலைராயன் மிக மகிழ்ந்து அவருக்கு என்ன செய்யவெண்டும் என நெகிழ்ந்து கேட்டான்
அந்த சிவனடியார் தனக்காக ஏதும் கேட்காமல் சிவனை நோக்கி "எம்பெருமானே, இம்மன்னன் மூலம் உம்பெருமை பெருகட்டும்" என சிவனிடமே பொறுப்பை கொடுத்தார், சிவனோ "அம்மன்னனை சோழீஸ்வரர் கோவிலுக்கு திருப்பணி செய்ய சொல்" என உத்தரவிட்டார்
அடியார் அவ்வண்ணமே சொல்ல, மன்னன் திருமலைராயன் உடனே அங்கு விரைந்தான் அங்கே முகாமிட்டு திருப்பணிகளை துவக்கினான், காசியில் இருந்து வந்த சொர்ணபைரவர் அங்கு ஸ்தாபனம் செய்யபட்டார்
அந்த தலம் காவேரியில் இருந்து தள்ளியிருந்தது , மன்னன் திருலைராயன் இந்த கோவிலுக்காக இரு ஆறுகளையே காவேரியின் கிளைகளாக உருவாக்கினான் ஒரு ஆற்றுக்கு திருமலையாராயன் என தன் பெயரையும் இன்னொரு ஆற்றுக்கு பிறையுடையாள் என தன் மனைவி பெயரையும் இட்டான்
இந்த இரு ஆறுகளும் இன்றும் திருமலைராயன் ஆறு பிறையுடயாள் ஆறு எனும் பெயரில் ஓடிகொண்டிருக்க நடுவில் இந்த தலம் உள்ளது, மன்னன் இக்கோவிலுக்கு பெரும் திருப்ப்பணி செய்து சோளீங்கேஸ்வரம் என இந்த ஊரை கொண்டாடினான், அதைவிட பெரிதாக குளம் தீர்த்தம் என வெட்டியவன் 108 கோவில்களை அப்பக்கம் இதன் துணை கோவிலாக கட்டி வைத்தான்
இவனிடம்தான் அதிசிறந்த புலவர் காளமேகம் வந்து சேர்ந்தார், அவர் அவனை தன் அரண்மனை புலவனாக வைத்து கொண்டான், காளமேக புலவரின் எல்லா படைப்புக்களும் இம்மன்னனால் வந்தவை
இம்மன்னன் அபிராமி அன்னையின் முதல் தலமான இத்தலத்தை விரும்பி வழிபட்டான், அபிராமி அவனின் விருப்ப தெய்வமானாள், அம்பிகைக்கு நகையும் சொத்தும் எழுதிவைத்து எல்லா விழாக்களும் பெரிதாக நடக்க அவன் ஏற்பாடு செய்தான்
அபிராமி எனுமு ராஜ சியாமளை அரசனை உருவாக்குபவள், அரனால் வணங்கி கொண்டாடபடுபவள் தன்னை அண்டியோர்க்கு ராஜயோகம் தருபவள் என்பது அங்கே தெளிவாயிற்று
அன்னை அந்த திருமலை ராயனை முழுக்க ஆட்கொண்டாள் அவன் அவளின் முழு பக்தனாகவே மாறிபோனான், அவன் தலைநகரமான தஞ்சையினை விட்டு இந்த கோவில் இருக்கும் இடத்தையே திருமலைராயன் பட்டணம் என மாற்றி இதனை தேசத்தின் தலைநகராக்கி அமர்ந்து கொண்டு ஆட்சி செலுத்தினான்
இப்படி தன்னையே கதி என வந்த அந்த பக்தனுக்கு இன்னொரு அதிசயத்தை செய்தாள் அபிராமி அது ஆயிரங்காளியாக அவள் அங்கு வந்த வரலாறாயிற்று
வங்கபகுதியினை ஆண்ட மன்னன் ஒருவன் பெரும் காளி பக்தனாய் இருந்தான், அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எனும் எண்ணிக்கையிலே படைத்தான், வெற்றிலை பாக்கு முதல் பழம் வரை எது என்றாலும் ஆயிரம் எண்ணிக்கை வைத்து வணங்கினான், அவன் பக்தி அப்படி இருந்தது
இந்துக்கள் மரபில் ஆயிரம் என்பது ஒரு முழுமையினை குறிப்பது, இதனால் எல்லாமே அன்னைக்கு ஆயிரம் என படைத்து வந்த மனன்ன் பெரும் நிறைவினை கொண்டிருந்தான், அன்னையும் அவனையும் அவன் தேசத்தையும் நிரம்ப ஆசீர்வதித்தாள்
அவன் தன் இறுதிகாலம் நெருங்கியபோது தனக்கு பின் அன்னைக்கு யார் பூஜை செய்வது என அவளிடமே கேட்டான் , எப்போதும் தெய்வங்கள்தான் பக்தர்களை தேர்ந்து கொள்ளும் என்பதால் , "மன்னா அதைபற்றி நீ கவலை கொள்ள வேண்டாம், நான் சொன்னபடி ஒரு ஓலை எழுடி நீர் புகாத பேழையில் என்னை வைத்து கடலில் இடு, நான் எனக்கான இடத்தை அடைகின்றேன்" என்றாள்
அவள் உத்தரவுக்கு பணிந்த மன்னன் அப்படியே அந்த காளியினை அவல் சொன்னபடி எழுதிய ஓலையுடன் பேழையில் வைத்து வங்க கடலில் இட்டான்
அந்த பேழையும், மூழ்காமல் மிதந்து கொண்டே யார் கையிலும் அகப்படாமல் திருமலைராயன்பட்டினம் வந்தது ஆனால் யாராலும் பேழையினை எடுக்கவும் முடியவில்லை திறக்கவும் முடியவில்லை, எல்லோருக்கும் பெரும் அச்சம் ஆட்கொண்டது
அங்கு வசித்தசெங்குந்த முதலியார் மரபான சிவநேசர் ஒருவரின் கனவில் அன்னை தோன்றி. தான் பெட்டியில் மிதந்து வந்திருப்பதாகவும். தன்னை எடுத்து ஒரு இடத்தில் நிலையாக வைத்து பூசிக்குமாறும் அன்னை கூறினாள்.
அந்த சிவநேசர் கனவினை கண்டு மனன்னிடம் சொன்னார், மன்னன் திருமலைராயனும் மகளோடும் மனைவியோடும் விரைந்து வந்தான், ஆற்றோரம் மிதந்த அப்பெட்டி சிவநேசர் கைகளில் குழந்தையாக ஒட்டி கொண்டது
அவர் அந்த பெட்டியினை எடுத்து மெல்ல திறக்கும் போது உள்ளே அன்னையின் விக்ரஹம் இருந்தது, எல்லோரும் மெய்சிலிர்த்து பணிந்தார்கள் மன்னன் குடும்பத்தோடு வ்ழ்ந்து பணிந்தான் அந்த சிலை அருகே ஒரு ஓலை இருந்தது
"அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்
இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள்,
அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்
எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்
ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை
திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!"
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை அவளுக்கு ஆயிரம் எண்ணிக்கையில் காணிக்கை வைத்து வணங்கினால் எல்லா வளமும் ஆயிரம் மடங்கு திரும்பி வரும் என அதற்கு பொருளும் உரைத்தார்கள்
மன்னன் பெரும் பூஜை செய்து மேள தாளங்களுடன் அன்னையினை இந்த அபிராமி ஆலயம் கொண்டு சென்றான், ஆனால் அன்னை தனக்கு தனியே ஒரு ஆல்யம எழுப்ப மன்னனிடம் நேரடியாக சொல்ல திருமலைராயன் ஆயிரம் காளி ஆலயம் என தனியே ஒன்றை நிர்மானித்தான்,
அவள் சொன்னபடியே ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை எல்லாமே ஆயிரம் எனும்படி அங்கு காணிக்கையாக்கபட்டது, எல்லாமே ஆயிரம் எனும்படி மன்னன் பார்த்து கொண்டான்
ஒருமுறை ஆயிரம் அடியார்களை அன்னைக்கு நிமமிக்கின்றேன் என அவன் அறிவித்தான் 999 அடியார்கள் கிடைத்தார்கள், எங்கு தேடியும் ஒரு அடியார் கிடைக்கவே இல்லை, கடைசியாக மன்னன் தானே அங்கு ஒரு அடியாகார இருக்கும்படி முடி இறக்கி வைத்து சென்று கலந்து கொண்டான், அன்னை பெரும் சிரிப்புடன் அவனுக்கு தரிசனமாகி ஆசிகொடுத்து மறைந்தாள்
அந்த திருமலை ராயனுக்கும் அபிராமி அன்னைக்குமான பந்தம் அப்படி இருந்தது, எல்லா விழாக்களையும் அவன் அவளுக்கு கொண்டாடினாலும் பெரும் விழா ஐந்து வருடத்துக்கு ஒருமுறை நடக்க தொடங்கிற்று
அன்றிலிருந்து ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள். அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில்தான் படைக்கப்படுகிறது. எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் கொண்டாள்.
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வைகாசி மாதம் வளர்பிறை பட்சத்தில் திங்கட்கிழமை இரவில் அம்மன் இருக்கும் பெட்டியை திறப்பார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் நேரத்தில் பேழையில் இருந்து கொலுசு சத்தம் ஜல் ஜல் என்று கேட்கும்.
அதன் பின்பே பேழை திறக்கப்படும்.
ஐந்தாண்டுகளாக பெட்டியினுள் சாற்றப்பட்ட மாலை, எழுமிச்சை, மஞ்சள் எதுவும் வாடாமல் அன்று அணிவித்தது போலவே புதிதாக இருக்கும். மலர்ப் பாதங்களில் சிலம்பும், வளைக்கரங்களும், பட்டாடையும் நெற்றியில் திலகமோடு அழகுத் திருமுகத்துடன் காளியன்னை வீர வடிவம் கொள்கிறாள்.
மாதுளம்பூ மேனி கொண்ட அம்மனின் கம்பீரமான தோற்றத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். வீரகோலம் பூணுவதாலேயே வீரமாகாளி என்று அழைக்கப்படுகிறாள்.
மறுநாள் செவ்வாய்கிழமையன்று ஒவ்வொரு செங்குந்த குடும்பப் பெண்டிரும் காளியம்மன் மடத்திலிருந்து புதுப்பானையைப் பெற்று தங்கள் இல்லத்திலிருந்து பொங்கல் பொங்குவதற்கு உண்டான பொருள் யாவும் கொண்டு வந்து மடத்தினில் பொங்கல் வைப்பார்கள். இதனிடையே அன்று மாலை ஆறு மணிக்கு அபிராமி உடனுறை ராஜசோளீஸ்வரர் திருக்கோயிலிலிருந்து காளியம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருவார்கள். மாலைகள் ஆயிரம், கனிகள் ஆயிரம், தின்பண்டங்கள் ஆயிரம், இளநீர் ஆயிரம், மஞ்சள் ஆயிரம் என எல்லாமும் ஆயிரம், திரளும் மக்களும் ஆயிரமாயிரம்
அடுத்து புதன், வியாழக் கிழமை இரண்டு நாட்கள், இரவு பகலாக தொடர்ந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் அன்னையை தரிசித்தபடி இருப்பர். அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்க்கும் விதம் பார்த்து பக்தர்கள் ஆச்சரியமடைந்தபடி இருப்பார்கள்.
வெள்ளிக்கிழமை விடிவதற்குள் அன்னையை மீண்டும் பெட்டிக்குள் வைத்து விடுவார்கள். அடுத்த ஐந்து ஆண்டு கழித்து அன்னை வெளிவருந்து நான்கு நாட்கள் இதே அற்புதத்தை கொலுசு ஒலியுடன் துவங்குவாள்
இவ்வாறு அன்னை இன்றும் அங்கு ராஜசியாமளவாக அருள் பாலிக்கின்றாள், அங்கு வேண்டும் பக்தர்களின் வேண்டுதலை அவள் நிறைவேற்றுவதால் பக்தர்கள் அதே ஆயிரம் காணிக்கைகளை வைத்து அவளுக்கு நன்றிகடன் செலுத்துகின்றார்கள்
அபிராமி ஆலயத்தின் துணை ஆலயம் இந்த ஆயிரம் காளி ஆலயம்
திருமலைராயன் பட்டணத்தின் இவ்வாலயம் மூலாதார சக்கரத்தினை துலக்கும் , இந்த மூலாதாரத்தில் உறங்கி சுருண்டு கிடக்கும் சக்தியினை மூச்சுபயிற்சி மூலமும், ஒம் எனும் ஓரெழுத்து மந்திரம் மூலமும் துலக்கி மேலேற்றலாம்.
மூலாதாரம் என்பது என்ன என்பதை யோக சாஸ்திரம் சொல்கின்றது
"நாபிக்கு கீழே பன்னிரெண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டீசன் குடி இருந்தானே
மூலத்திரு விரல் மேலுக்கு முன்னின்ற
பாலித்த யோனிக் கிருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலியுள்லெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே"
என உட்லைல் மூலாதார சக்கரம் இருக்கும் இடத்தை தெளிவாக சொல்கின்றார் திருமூலர்
தொப்புளுக்கு நாள் விரல்கடை உள்ளேயும் அங்கு இருந்து 12 விரல் கடை பருமன் கீழேயும் உள்ள இடத்தில் மூலாதாரம் உள்ளது.
இந்த மூலாதாரத்தில் உறங்கி சுருண்டு கிடக்கும் சக்தியினை மூச்சுபயிற்சி மூலமும், ஒம் எனும் ஓரெழுத்து மந்திரம் மூலமும் துலக்கி மேலேற்றலாம்.இந்த சக்கரம் யோகம், தியானம், முச்சுபயிற்சி என துலங்க கூடியது, அப்படி கடும் பயிற்சிகளால் வரகூடிய பலன் இங்கு தானாக கிடைக்கும், அன்னை இந்த வரத்தை அருள்வாள்
இதுதான் ஞானத்தின் தொடக்கமாகவும் அமையும் , இது சரியாக அமையாவிட்டால் அடிவயிறு சார்ந்த பிரச்சினையாகும் அப்படியே மனம்சார்ந்த பாதிப்பும் உண்டு
இப்படியான நிலையில் உடலாலும் மனதாலும் ஒருவன் பாதிக்கபட்டால் அவனால் தன் கர்மாவினை உணரமுடியாது, செய்யமுடியாது, அவன் பிறப்பின் நோக்கமே பாழ்பட்டு போகும்
இதனை தங்கள் யோக சக்தியால் சரிசெய்து இந்த பாதிப்பில் இருந்து தப்பி தாங்கள் யார் தங்கள் கர்மா எது என உணர்ந்து தெளிந்து இறைபாதையில் சென்றவர்கள் சித்தர்கள் ஞானியர்
அந்த ஆலயம் சென்று பணிந்தால் மூலாதாரம் துலங்கும் , உங்கள் கர்மா எது என புரியும் உடல்சார்ந்த மனம்சார்ந்த சிக்கெல்லாம் தீரும்
நீங்கள் யாராகவும் இருங்கள், எந்நிலையிலும் இருங்கள், உடலாலும் மனதாலும் மிக மிக மோசமான நிலையில் இருங்கள் அல்லது குழப்பமான் நிலையில் உள்ளவராக இருங்கள் இந்த சன்னதியில் வணங்கினால் உங்கள் மூலாதார சக்கரம் துலங்கும்
அன்னையின் அருள் அதை தரும்
அன்னையின் சன்னதியில் விழுந்து வணங்கினால் உங்கள் உடல் தரையில் தண்டனிட்டு வணங்கினால் மூலாதாரத்தில் அந்த பகவானின் கருணை விழும், அங்கு சூழ்ந்திருக்கும் பெரும் சக்தி ஈர்த்து குவிக்கபட்ட சகதி உங்கள் மூலாதார சக்கரத்தையும் தொடும்
அந்த நொடிமுதல் உங்கள் வாழ்வு மாறும்
அந்த ஆலயம் உங்கள் கர்மாவினை உணரவைக்கும் , பிறப்பின் நோக்கத்தை அறியவைக்கும், செய்யும் காரியமெல்லாம் துலங்க வைக்கும், இன்னும் மனதளவில் நல்ல தெளிவும் செயலில் சுத்தமும் உடலில் ஆரோக்கியமும் மேம்படுத்தி கொடுக்கும்
அக்காலத்தில் எப்படி மக்கள் அவ்வளவு ஞானமாக வாழ்ந்தார்கள், கொடிய நோயற்று வாழ்ந்தார்கள், பெரும் பெரும் சாதனைகளை எளிதாக செய்து வாழ்ந்தார்கள் என்றால் இப்படித்தான் ஆலயங்களில் தெளிவடைந்தார்கள்
ஆலயங்கள் எக்காலமும் சக்திமையங்கள், அந்த ஆலயங்கள் அன்னியபடையெடுப்பிலும் ஆட்சியிலும் பராமரிப்பின்றி போனதே இந்த சமூகத்தின் வீழ்ச்சிக்கு பெரும் காரணம்
மறுபடி அதன் சிறப்புக்களை அறிந்து சரியான முறையான நம்பிக்கையுடன் அங்கே முன்னோர்கள் காட்டிய வழியில் பெறவேண்டிய பிரபஞ்ச சக்திகளை பெற்றுகொண்டால் வாழ்வு செழிக்கும், உடலும் நலமும் பரிபூரணமாகும்
முக்தி அடைய யோக சித்தி வேண்டும், யோகம் சித்தியாக சக்கரங்கள் துலங்க வேண்டும், அதற்கு மூல ஆதாரம் முதலில் துலங்க வேண்டும்
அதை துலக்கி தரும் ஆலயம் இந்த ஆலயம், அதுதான் மார்கண்டேயர் முதல் எல்லா ஞானியருக்கும் அச்சக்கரத்தை துலங்க செய்தது, அபிராமி பட்டருக்கு மூல சக்கரத்தை துலங்க வைத்த ஆலயமும் அதுவே
நாகபட்டினம் , காரைக்கால் பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தை காண தவறாதீர்கள், திருகடையூர் ஆலயம் செல்லுமுன் செல்லவேண்டிய முதல் தலமும் இதுதான், அங்கு சென்று வணங்குங்கள் அன்னை எல்லா வரங்களையும் அருளி மூலாதாரத்தையும் துலக்கி தருவாள்
ராஜ கோபுரத்தை கடந்தால் அங்கு உள்ளே நுழைந்ததும் விநாயகரை வணங்குகிறோம். பலிபீடம், கொடிக்கம்பம், நந்தி ஆகியவையும் அமைந்துள்ளன. குரு தட்சிணாமூர்த்தி, சரவண சுப்பிரமணியர், கெஜலட்சுமி, பிரம்மதேவர், துர்க்கையம்மன், சண்டிகேசுவரர், நவகிரக மூர்த்திகள், கால பைரவர் ஆகியோர் இங்கு உண்டு
அடுத்து வசந்த மண்டபத்தின் இடதுபுறம் நர்த்தன விநாயகர். வலது புறம் சனீஸ்வரர். உள்புறம் ஸ்ரீராஜசோளீஸ்வரர், ஸ்ரீ அபிராமி அம்மனும் அருள் புரிகிறார்கள். இவர்களுடன் நடராஜர், சிவகாமி, தியாகராஜ சுவாமி, வள்ளி}தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணிய சுவாமி, பிச்சாண்டவர் உள்ளிட்ட பரிகார தெய்வங்களும் உண்டு, அவர்களை நம்பி வழிபட்டு நில்லுங்கள்
இன்னும் 63 நாயன்மார் சன்னதிகளும் அவர்களுக்கான குருபூஜைகளும் இங்கு விஷேஷம்
இங்கு பல விநாயகர் சன்னதிகளும் ஆலயத்தை சுற்றி உண்டு, விநாயகர் மூலாதாரத்தின் தெய்வம் என்பதால் இங்கு அவருக்கான வழிபாடுகள் அதிகம்
அப்படியே அந்த ஆயிரம்காளி அன்னையினையும் வணங்கி ஆயிரம் காணிக்கை வைத்து வணங்கி வாருங்கள் எல்லா வேண்டுதலும் கைகூடும்
நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் இவ்வாலயம் தரும், கண் சம்பந்தமான நோய்கள் எல்லாம் தீரும் தலம், தம்பதியர் நீண்ட வாழ்வை வாழ வரம் தரும் ஆலயமும் இதுதான், இங்கும் அறுபதாம் கல்யாணங்கள் அதிகம் நடப்பதை இப்போதும் காண்பதும் வழமை
சுந்தர பெருமான் வழிபட்டதால் இது தேவார வைப்பு தலமாயிற்று, ஆட்டுகிடா மேல் அமர்ந்து முருகபெருமான் போரிடும் கந்த சஷ்டி இங்கு விஷேஷம்
சிவராத்திரி அன்று அதிகாலை நடக்கும் சுவாமி ஊர்வலம் இங்கு விஷேஷம், அபிராமி அன்னையின் தை மாத வழிபாடு இன்னும் மகா விஷேஷம்
அபிராமி பட்டரின் வம்சத்தில் வந்த குழந்தை ஒன்றுக்கு கண் தெரியா நிலை வந்தபோது அவள் தன் தீர்த்த துளியால் அக்குழந்தைக்கு பார்வை கொடுத்தாள், இது கண்பார்வை தரும் தலம்
அன்னை ஆயிரம்காளி என்பவள் நிறைவை தருவாள், முழு நிம்மதி தருவாள், எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்து முழுமை தருவாள், நிம்மதி எனும் முக்தியினை தருவாள்
மறக்காமல் திருமலைராயன் பட்டணம் சென்று வாருங்கள் அவள் எல்லா ஐஸ்வர்யமும் வரமும் தருவாள், ஆயிரம் மடங்கு நிம்மதியும் தருவாள் இது சத்தியம் #🙏ஆன்மீகம்
🔥🙏🏾🙇🏽♂️ #சாஸ்திரத்தில்_சொல்லப்பட்ட 5 வகை குளியல்கள்...👍🏾
🙏🏾 #நன்னெறிக்_கருத்துக்கள்
1 . #வாருணம் – குளம் ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தல் வாருணம் ஆகும். இதில் கழுத்து மற்றும் இடுப்பு வரை குளித்தலுக்கு கௌணம் என்று பெயர்
2. #பஸ்மோத்தூளனம் – விபூதி பூசிக் கொள்வது. விபூதி குளியல் என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி சம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் வெப்பத்தால் கிடைக்கும் சாம்பலை பூசிக் கொள்வது.
3. #வாயவ்யம் – பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது அதன் கால் குளம்பு மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணன் இந்தப் பசுக்களின் கால் குளம்பு பட்ட மண்ணை சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி இருப்பாராம். இதனால் அவருக்கு கோதளி தூஸரிதன் என்ற பெயர் ஏற்பட்டது. காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம் எனப் பெயர்.
4. #திவ்யம் – திவ்யம் என்ற சொல்லுக்கு மேன்மைய்யானது தெய்வீகத் தன்மை கொண்டது என்று பொருள். பகலில் சில நேரங்களில் வெய்யில் அடிக்கும் போதே மழையும் பொழியும். இவ்வாறான மழை நீர் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்பதால் திவ்யக் குளியல் என்று பெயர்.
5. #ப்ராஹ்ம ஸ்நானம் – ப்ரம்ஹம் என்றால் வேதம் மற்றம் வேத மந்திரம் என்று ஒரு பொருள். கலச நீர் வைத்து மந்திரம் சொல்லி யாகம் செய்தபின் அந்த கலசத்தில் உள்ள மந்திர நீரை தெளிப்பார்கள். வேத மந்திரத்தால் புனிதப் படுத்தப்பட்ட தீர்த்த நீரை தெளித்துக் கொள்ளுதலுக்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர்.
சிவாய நம 🔥 #🙏ஆன்மீகம்
அருமையான இரண்டு
ஆன்மீக தகவல்கள் : 02
தேய்பிறை அஷ்டமி காலபைரவர்
வழிபாடு பற்றிய தகவல்கள்...
அமாவாசைக்கு முன்னர் வரும் எட்டாவது திதி தேய்பிறை அஷ்டமி ஆகும். இந்த திதி காலபைரவருக்கே உரிய மிகச் சிறப்பு நாள் என சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.
தேய்பிறை அஷ்டமி, ஆண்டு முழுவதிலும் மிகுந்த சக்தி கொண்ட நாளாக மதிக்கப்படுகிறது.
மார்கழி – தெய்வீக அதிர்வு அதிகம்
தேய்பிறை – தோஷ நிவாரணம், பாவ நாசம்
அஷ்டமி – காலபைரவரின் பரிபூரண சக்தி
இந்த மூன்றும் சேரும் நாளில் செய்யும் வழிபாடு சனி தோஷம், கால தோஷம், பயம், எதிரி தொல்லை, தடை அனைத்தையும் நீக்கும்.
காலபைரவர் – சுருக்கமான தத்துவம்
சிவபெருமானின் கோப அவதாரம்
காலத்தின் (நேரத்தின்) அதிபதி
காசி நகர காவலன்
நாயை வாகனமாக கொண்டவர்
பாவ நாசகர் & ரட்சகர்
மார்கழி தேய்பிறை அஷ்டமி – வழிபாட்டு நேரம்
பிரம்ம முகூர்த்தம் – காலை 4.00 முதல் 6.00 வரை
ராகு காலம் முடிந்த பின் மாலை 6.00 – 8.00 (மிகச் சிறப்பு)
வழிபாட்டுக்கு முன் தயாரிப்பு
எண்ணெய் குளியல் (எள் எண்ணெய் சிறப்பு)
சுத்தமான கருப்பு / நீல / சிவப்பு ஆடை
வீடு மற்றும் பூஜை இடம் சுத்தம்
மனதில் கோபம், பயம் இல்லாமல் வழிபாடு
கிருஷ்ண பக்ஷ ஏகாதசி என்றால் என்ன?
கிருஷ்ண பக்ஷம் – தேய்பிறை காலம்
ஏகாதசி – சந்திர மாதத்தின் 11-ஆம் திதி
இந்த நாளில் ஸ்ரீமன் நாராயணன் / மகாவிஷ்ணு வழிபாடு மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.
ஏகாதசி விரதத்தின் ஆன்மிக முக்கியத்துவம்
பாவங்கள் நீங்க
மன அமைதி கிடைக்க
கர்ம பந்தனங்களில் இருந்து விடுபட
விஷ்ணு பக்தி மேம்பட இந்த விரதம் உதவுகிறது.
கிருஷ்ண பக்ஷ ஏகாதசி விரத முறை
1. முன்னேற்பாடு
தசமி நாளில் சாத்வீக உணவு
அரிசி, பருப்பு, புளி தவிர்த்தல்
கோபம், பொய், தீய எண்ணங்கள் தவிர்த்தல்
2. ஏகாதசி நாளில்
அதிகாலை எழுந்து நீராடுதல்
வீட்டை சுத்தம் செய்தல்
ஸ்ரீமன் நாராயணன் படத்திற்கு தீபம் ஏற்றி பூஜை
3. பூஜை முறைகள்
துளசி மாலை, துளசி தளம் அர்ப்பணம்
விஷ்ணு சகஸ்ரநாமம்.
மார்கழி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி மிகவும் புனிதமான விரத நாளாகக் கருதப்படுகிறது.
தேய்பிறை ஏகாதசி என்பதால், பாப நிவாரணம், மனத் தூய்மை, ஆன்மிக முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இந்த விரதம் சிறப்பு பெற்றதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
மார்கழி மாதத்தின் சிறப்பு
மார்கழி மாதம் (தனுர் மாதம்) தேவர்கள் பூஜை செய்யும் காலமாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடு, தானம், ஜபம், தியானம் அனைத்தும் பல மடங்கு பலனை தரும் என்பதே ஐதீகம். #🙏ஆன்மீகம்
சாத்தூர் வன்னி விநாயகர் கோவில்
வன்னிமரத்தினை மேற்கூரையாகக் கொண்டு இருக்கும் விநாயகர்
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தலம்
சாத்தூர்-கன்னியாகுமரி நெஞ்சலைச்சாலையில், சாத்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வன்னிவிநாயகர் கோவில். 400 ஆண்டுகள் பழமையானது இக்கோவில். இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அடுத்து ஸ்ரீ வன்னி விநாயகர் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தலம் ஆகும்.
வன்னிமரத்தினை மேற்கூரையாக கொண்டு விநாயகர் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்க் கொண்ட போது தங்கள் ஆயுதம் மற்றும் கவச உடைகளை வன்னிமரத்தின் பொந்தில் பாதுகாப்பாக வைத்து விட்டு, வன வாசம் காலம் முடிந்த பின்னர் அவற்றை எடுத்து போரிட, வெற்றி பெற்றதாக புராணம் கூறுகிறது.
வன்னி என்றால் வெற்றி என பொருள். வன்னிமரம் வலம் வந்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் வெற்றிபெறும், திருமணத்தடை நீங்கும், குழந்தைபேறு கிடைக்கும், வியாபாரம் செழிக்கும்,நவக்கிரகதோஷம் நீங்கி வளம் பெருகி, நலம் உண்டாகும். இதன் இலை, காய், சிறிய கிளையை பயணத்தின் விபத்து ஏற்படாமல் காக்கும் கவசமாக இருக்கும் என்றும் கிராம பகுதியில் நம்பிக்கை உள்ளது.நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதால் ஏராளமான பக்தர்கள் இந்த விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தவறாமல் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். மாதம் தோறும் வரும் சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, தை முதல் நாள், ஆங்கில புத்தாண்டு தினங்களில் பக்தர்கள் அலைஅலையாக வந்து தரிசனம் செய்வர். #🙏ஆன்மீகம்
🔥🙏🏾🕉️ #தினம்_ஒரு_திருமந்திரம்
#பாடல் #1355:
#நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
தாளதி னுள்ளே சமைந்தமு தேச்சுரி
காலது கொண்டு கருத்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமுங் கேடில்லைக் காணுமே.
🙏🏾 #விளக்கம்:
பாடல் #1354 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தின் நடுவிலும் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகளே சக்கரத்திற்குள் சக்தியூட்டமாக மாறி இருக்கின்ற பீஜ மந்திர எழுத்துக்களான அமிழ்தத்திற்கும் தலைவியாக அந்த இறைவியே இருக்கிறாள். அவளது அருளால் சக்தியூட்டம் பெற்ற பீஜ மந்திர எழுத்துக்களை மூச்சுக் காற்றின் மூலம் அனைத்தும் நன்மை பெற வேண்டும் என்கிற எண்ணத்தையும் சேர்ந்து அனைவருக்கும் பயன்படும் படி அதிர்வலைகளாக சாதகரைச் சுற்றி அனுப்பும் போது அந்த அதிர்வலைகளால் தினந்தோறும் பல விதமான புதுமையான நன்மைகள் தம்மைச் சுற்றி நடப்பதை சாதகர்கள் காணுவார்கள். அதனால் பயனடைந்தவர்கள் சொல்லுகின்ற புகழ்ச்சிகளையும் கேட்டு அந்த அதிர்வலைகளைப் பெற்றவர்களின் உடலுக்கும் எந்தவிதமான கெடுதல்களும் இல்லாமல் நன்றாக இருப்பதை சாதகர்களால் காண முடியும்.
ஓம் நமசிவாய சிவாய ஓம் 🔥 #🙏ஆன்மீகம்
சிவவாக்கியம்🙏
பாடல் எண்: 107
பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்
நித்தமும் நினைந்திட நினைத்தவண்ண மாயிடும்
பச்சைமண் ணிடிந்துபோய் பறந்ததும்பி யாயிடும்
பித்தர்கா ளறிந்துகொள் பிரானிருந்த கோலமே. -சிவவாக்கியர்
விளக்கம்:
தும்பியான குளவியானது ஈரமான மண்ணைக் கொண்டு அழகிய கூடுகட்டி உணர்வுள்ள புழுவை வேட்டையாடி கொண்டு வந்து அடைக்கும். பின் எந்நேரமும் தன்னைப் போல் மாற்றுவதற்கு ரீங்கார ஓசையுடன் கொட்டிக்கொண்டே இருக்கும். இப்படி ஒரே நினைவோடு செய்யும் அதன் செயலால் அப்புழுவானது குளவி நினைத்தவாறே குளவியாக மாறிவிடும். அற்ப உயிராக இருந்த புழு குளவியாகி அக்கூட்டை உடைத்துக்கொண்டு தும்பியாக பறந்து செல்லும். இதனை அறிந்து கொண்டு ஒரே நினைவோடு பிராணனை இறைவனோடு இணைக்க தியானம் செய்யுங்கள். ஈசன் நடத்தும் நாடகமே எல்லாம் என்பதை உணருங்கள்.
🙏சிவ சிவ #🙏ஆன்மீகம்
*விநாயகனே*
*வெல்வினையை*
*வேர் அறுக்க வல்லான்*
*விநாயகனே வேட்கை தணிவிப்பான்*
*விநாயகனே*
*விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்*
*தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!* #🙏ஆன்மீகம்













