🎵Dad's Princess💖🎵
1K views • 1 months ago
என் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த வெள்ளை பூசணிக்காய் ..….
என் வீட்டில் காய்கறிகளின் தோல் விதைகள் மற்றும் வெங்காயத் தோல்
போன்றவற்றை என் வீட்டு தோட்டத்துச் செடிகளுக்கு உரமாக பயன்படுத்துவது வழக்கம் நான் எந்த வித பூச்சி கொல்லி மருந்துகளோ உரங்களோ எதுவும் பயன்படுத்துவதில்லை இயற்கையான காய்கறிகள் பழங்களின் தோல் மற்றும் தண்ணீர் மட்டுமே பாய்ச்சுவது வழக்கம் அப்படி நான் காய்கறிகளின் தேவையற்ற பகுதிகளை செடிகளுக்கு உரமாக இடுவதன் மூலம் முளைத்த செடிகளா அல்லது இங்கு பல விதமான பறவைகள் தினமும் வரும் அவர்கள் கொண்டு வந்து இட்ட விதைகளா என்று தெரியவில்லை எப்படியோ தானாகவே முளைத்து விட்டது இந்த வெள்ளை பூசணி மற்றும் மஞ்சள் பூசணி செடிகள் .....
இந்தச் செடிகள் வந்ததும் எனக்குத் தெரிந்தாற் போல கயிறு மற்றும் பலகைகளை கொண்டு படர்த்திவிட்டேன் ஓரிரு வாரங்கள் மட்டுமே நீற்பாய்ச்சினேன் அதற்குள் மழை ஆரம்பித்து விட்டது அதன் பிறகு நான் நீர் பாய்ச்சுவதையும் நிறுத்தி விட்டேன் ஆரம்பத்தில் 50க்கும் மேற்பட்ட பூக்களோடு கூடிய காய்கள் ஒரு தக்காளி பருவத்தில் வந்ததும் தானாகவே உதிர்ந்து விழுந்து விடும் இப்படியே ஒரு மூன்று வாரம் தொடர்ந்தது ஒரு காய் கூட வளரவில்லை சரி இது வளராது போல இருக்கிறது ஏனெனில் நான் விவசாயத் தோட்டங்களில் பயன்படுத்துவது போல பூச்சிக்கொல்லி மருந்துகளோ உரங்களோ எதையும் நான் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் வளர்ந்ததால் அதற்கு இந்த பூச்சி தொல்லைகளை தாங்கும் சக்தி இல்லாமல் உதிர்ந்திருக்கலாம் என்று நினைத்தேன் எல்லோரும் என்னிடம் அது காய்க்காது உனக்கு பைத்தியம் அதை அப்படியே அப்புறப்படுத்தி விடு எதற்கு இப்படி குப்பை போல படத்திவிட்டு இருக்கிறாய் என்று கூறினார்கள் , சரி இந்த கொடிகளை அப்புறப்படுத்தி விடலாம் என்று நினைத்து அப்புறப்படுத்தலாம் என்று மெதுவாக அந்த கொடியில் கை வைத்ததும் என் கண்ணில் தென்பட்ட சிறிய சிறிய மஞ்சள் மற்றும் வெள்ளை பூசணிக்காய்....
ஆப்பிள் அளவிற்கு ஒரு பூசணிக்காயை கண்டேன் அருகிலேயே வெள்ளைப் பூசணிக்காய் மற்றும் 3 மஞ்சள் பூசணிக்காய் காய்த்திருந்தது சரி வளரும் போல தோன்றுகிறது சற்று தக்காளியை விட வளர்ந்து ஒரு ஆப்பிள் அளவிற்கு இருந்தது சரி இன்னும் வளருமா என்று பார்க்கலாம் என்று கவனித்த போது தான் அவைகள் வளரத் தொடங்கினர் ஓரிரு வாரத்தில் வளர்ந்து பெரிதாகி விட்டது இன்னும் வளரும் போல இருக்கிறது நான் அதை இன்று படம் பிடித்தேன் எந்தவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளோ உரங்களோ பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் வளர்ந்த எனது மஞ்சள் பூசணிக்காய் மற்றும் வெள்ளை பூசணிக்காய் அதுவும் தினமும் மழையில் குளித்து சுத்தமாக பளிச்சென்று இருப்பதை பாருங்கள் 🤣
ஓரிரு நாட்களில் வளர்ந்த காய்களை பறித்து முதலில் சாமிக்கு படைத்து பிறகு அக்கம் பக்கத்து வீட்டாருக்கு கொடுக்க வேண்டும்
எங்கள் ஊரில் மஞ்சள் பூசணிக்காயை மத்தன் என்றும் வெள்ளை பூசணிக்காயை கும்பளங்க என்றும் கூறுவர் மூன்று மத்தனும் ஒரு வெள்ளை பூசணிக்காய் மற்றும் அதனோடு ஒட்டியவாறு ஒரு சிறு வெள்ளை பூசணிக்காயும் காய்த்திருக்கிறது பாருங்கள் !🌱🥰
என் வீட்டு தோட்டத்தில் காய்த்த பூசணிக்காய் 🌱🥰
#என் வீட்டுத் தோட்டத்தில்
#என் வீட்டுத் தோட்டத்தில் !!
#பூசணிக்காய்
#காய்கறிகள்
#தோட்டம் காடு செய்வோம்
18 likes
10 shares