innraya SINTHANAY
486 Posts • 69K views
saravanan.
534 views 2 days ago
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹 *இன்றைய சிந்தனை* ( 27.09.2025) ........................................................... *‘’ஆர்வம் என்னும் உந்து சக்தி...!’’* ................................................. உலகில் எவரலும் செய்ய முடியாது என்று கைவிட்ட செயல்களை சிலர் நிறைவேற்றிக் காட்டியது, அவர்கள் அந்த செயலின் மீது உள்ள தனியாத ''ஆர்வம்''தான்... எடுத்த செயலில் ஒருவனிடம் ''ஆர்வம்'' இருந்து விட்டால், ஒவ்வொரு நாளும் அவனது குறிக்கோளை நெருங்கிக் கொண்டிருப்பான் என்பது திண்ணம்... வாழ்வின் வெற்றி என்பது, ஒருவரின் செயலில் காட்டும் முயற்சி மட்டும் போதாது. அதன் மீது மிகுந்த ஆர்வத்தைப் பொறுத்தது... பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரெலி ஒரு நாவல் ஆசிரியரும் கூட. அவர் அறுபத்தேழு நாவல்களை எழுதியுள்ளார்... ஒருமுறை செய்தியாளர்கள் அவரிடம்,’’ எழுத்தில் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் எப்படி ஏற்பட்டது...? என்று வினவினார்கள்... அதற்கு அவர் கூறியதாவது... '’எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. படிப்பதற்கு புத்தகம் ஏதும் கிடைக்காவிட்டால் அதற்காகாவே நானே நாவல் எழுதிப் படிக்க ஆரம்பித்து விடுவேன். அப்படியே எழுதி எழுதி எழுத்தாளராகி விட்டேன் என்றார் பெஞ்சமின் டிஸ்ரெலி... குருதியில் உறுதியும், நெருப்பும் கொண்டு, சிந்தனை வேகமும் ஆர்வமுள்ள மனிதர்கள் தான் உலக ஓட்டத்திற்குக் காரணமாக இருக்கின்றார்கள்... அரை மனமுள்ளவர்கள், குறிக்கோள் அற்றவர்கள் வாழ்க்கையென்னும் கடலிலே அடித்துச் செல்லப்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்... *ஆம் நண்பர்களே...!* புவி அச்சிலிருந்து வெளியேறி வளிமண்டலம் செல்ல ஒரு ஏவூர்திக்கு அதிக 'உந்துசக்தி' தேவைப்படுகிறது, அதிக 'உந்துசக்தி' இருந்தால் மட்டுமே ஏவூர்தி தனது இலக்கை அடைய முடியும்...! (ஏவூர்தி- ராக்கெட்)* அதுபோலத்தான்!, ஒரு செயலைத் தொடங்குகையில் நம் மனதிற்கு அபாரமான உந்துசக்தி தேவைப்படுகிறது , அது இல்லாமல் தான், நம்மில் பலரும் முதல் நிலையிலேயே இருந்து விடுகிறோம்...!! அந்த ஆரம்ப உந்துசக்தி கிடைத்து, ஒரு செயலை நாம் தொடங்கி விட்டால்,எதிரே என்ன தடை வந்தாலும் நொறுக்குவதற்கு நம்மால் முடியும். எந்த செயலிலும் ஆர்வம் என்னும் உந்துசக்தி இருந்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்...!!! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹🌹💐💐💐 🙏🏻 💐🌹🌹
10 likes
11 shares
saravanan.
377 views 3 days ago
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹 *இன்றைய சிந்தனை* ( 26.09.2025 ) …………………………………………………........ *இவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது...!* ..................................................................................... மிருகத்திடம் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை...!" .......................................... சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறினையும், நாம் கற்றுகு கொள்ள வேண்டும்...! 1. சிங்கம் ...................... சிங்கம் எந்த ஒரு செயலையும் உடனடியாகச் செய்யாது. நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாகச் செயல்படும்... 2. கொக்கு ....................... கொக்கு தன் இரையான மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு செயலை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வார்கள்... 3. கழுதை ...................... கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையைத் தொடர்ந்து செய்யும்..வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்.. தன் முதலாளிக்கு எப்போதும் கட்டுப்பட்டிருக்கும் . ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை... 4. சேவல் ..................... சேவல் நாம் படுக்கையில் இருந்து எழும் முன்பே அதிகாலையிலேயே எழும். மற்ற மிருகங்களிடம் தன் குஞ்சுகளைக் காக்க துணிவாக சண்டையிடும்.... தன் குஞ்சுகளுக்குத் தேவையானவற்றை சேகரித்துப் பிரித்துக் கொடுக்கும்... தனக்குத் தேவையானவற்றை தானே உழைத்துத் தேடிக் கொள்ளும்... இந்த நான்கும் சேவலிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை... 5. காகம் ................... இரவில் தன் குடும்பத்துடன் சேர்ந்திருக்கும். தேவையான பொருள்களை முன் கூட்டியே சேமித்து வைக்கும். யாரையும் எளிதில் நம்பாது, துணிவு, எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கை யிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை... 6. நாய் ................. நாய் கிடைப்பதை உண்டு மனநிறைவு கொள்ளும். உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினியாக இருக்கும். நன்றாகப் பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருக்கும்... நல்ல உறக்கத்தில் இருந்தாலும் சிறிய சலசலப்புக் கேட்டாலும் உடனடியாக எழுந்து விடும். தன் முதலாளிக்கு இறுதிவரை விசுவாசமாக இருக்கும்... தன்னை விடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் துணிவுடன் எதிர்க்கும்... இந்த ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்... எவரொருவர் மேலே கூறப்படும் இந்த ஆறு வழிமுறைகளைக் கடைபிடிக்கிறாரோ, அவர் எதிலும் வெற்றியடைவார். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியும் பெறுவார்...! *ஆம் நண்பர்களே...!* ''அன்பு, பாசம், பணிவு, நன்றி, பொறுமை, சுறுசுறுப்பு, கடும் உழைப்பு, ஈகை குணம், மன உறுதி, ஆரோக்கியம், இருப்பதில் மனநிறைவு, இவைகள் ஒருசார பெற்றிருப்பவர்கள் வாழ்வில் எப்போதும் சாதனை படைப்பார்கள்...! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹🌹💐💐💐 🙏🏻 💐💐💐🌹
9 likes
14 shares
saravanan.
783 views 4 days ago
#innraya SINTHANAY 🙏🏻 💐🌹🌹 *இன்றைய சிந்தனை ( 25.09.2025)* …………………………………… *''எளிமை என்பது ஏழ்மை அல்ல...!"* ....................................... ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமை தான்...! அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான்... எளிமை என்ற சொல்லுக்குப் பல பொருட்களுண்டு. எளிமை தான் எத்தனை வகை...? பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி எளிமை, உணவு எளிமை என்று பலவகை எளிமைகள் இருக்கின்றன... *பொருள் எளிமை (Material Simplicity)* : ...................................... ஒருவர் பெருஞ்செல்வந்தராக இருப்பார். ஆனால்!, தன்னுடைய செல்வப் பகட்டை வெளிப்படுத்தவில்லை என்றால் அவர் தான் எளிமைக்குச் சொந்தக்காரர்... அவர் சாதாரண தட்டில் தான் சாப்பிடுவார். அவருக்குத் தெரியும், வெள்ளித் தட்டில் சாப்பிட்டாலும், சாதாரணத் தட்டில் சாப்பிட்டாலும் உண்பது உணவைத் தானே தவிர, தட்டையல்ல...! அவர் உடையிலும் எளிமை தெரியும். பயன்படுத்தும் பொருட்களிலும் எளிமைத் தெரியும்... *நடத்தையில் எளிமை (Behavioural Simplicity):* ...................................... நடத்தை எளிமை என்பது எவரிடமும் எளிமையாகப் பழகுவது, சாதாரண மனிதராக சமுதாயத்தில் கருதப்படுபவரையும், தன்னுடன் பழக அனுமதி அளிப்பது... பாகுபாடு இன்றி அனைவரையும் அன்புடன் மரியாதையுடன் நடத்துவது, எப்போதும், எங்கேயும் பொறுமை காட்டுவது... *செயல்முறையில் எளிமை (Procedural Simplicity) :* ...................................... செயல்முறை எளிமை என்பது தன் அலுவலகத்திலும் மற்றும் எந்தச் செயலிலும் எளிமையைக் கடைபிடிப்பது, செயல்திட்டங்களை எளிமைப்படுத்துவது... எதையும், எவரும் எளிதாகப் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் தகவல்களைத் தருவது. சட்டங்கள் மற்றும் நியதிகளை எளிமையாக்குவது. எந்தச் செயலைச் செய்தாலும் அவற்றை எளிய முறையில் செய்தல்... *உணவில் எளிமை (Food Simplicity) :* ...................................... உடலும் உள்ளமும் நலம் பெறுவகையிலான எளிய உணவினை உண்ணுதல். நான்கு அங்குல நாவின் சுவை பசிக்காக ஆறடி உடலைப் பாழடிக்காமல் எளிமை உணவு உண்பது... *மொழியில் எளிமை ((Dress Simplicity):* ...................................... இறுதியாக, ஆனால்!, மிக முக்கியமாக மொழியில் எளிமை கடைபிடிப்பது... மொழி எளிமை என்பது, நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகள் அனைத்தும், அனைவருக்கும் குறிப்பாக அந்த தகவல்களைப் பெறுபவர்களில் மிகச் சாதாரண அறிவுடைய மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது... *ஆம் நண்பர்களே...!* எளிமை என்பது ஏழ்மை அல்ல. அற்புதமான வாழ்க்கைக்கு வேர்...! எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, நோயற்ற உடல், நிறைந்த செல்வம், போட்டி - பொறாமையற்ற சமுதாயத்தை உருவாக்கலாம்...!! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹🌹💐💐💐 🙏🏻 💐💐🌹
7 likes
9 shares
saravanan.
593 views 5 days ago
#innraya SINTHANAY 🙏🏻 💐🌹🌹 *இன்றைய சிந்தனை* ( 24.09.2025) …………………………………………….................. *'’போட்டிகள் நிறைந்த உலகம்...!"* .............................................................. இன்றைய போட்டி உலகில் வெற்றி மீது நமக்குப் பெரிய விருப்பம் இருக்கிறது. வாழ்க்கையில் வெற்றியையே முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறோம்... இதைத் தவிர்க்க முடியாது தான். சூறாவளியாகச் சுழன்று ஓடும் நீரோட்டம் போன்ற இந்த வாழ்க்கைப் பயணத்தில், மற்றவர்களை விட நாம் ஓரிரு படிகளாவது கூடுதலாக முன்னேற வேண்டியது அவசியமாகும்... ஒரு ஜப்பானியரும் ஒரு அமெரிக்கரும் காட்டிற்குச் சென்று வேட்டையாட விரும்பினார்கள், அதற்காக அவ்விருவரும் அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்குள் சென்றனர்... அந்த அடர்ந்த காட்டில் அவர்களிருவரும் சிறுசிறு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்த போது, அவர்களுடைய துப்பாக்கியில் இருந்த தோட்டாக்கள் தீர்ந்து விட்டதை உணர்ந்தார்கள்... அந்த சூழலில் சட்டென அவர்களுக்கு அருகில் சிங்கம் ஒன்று கர்ஜிக்கும் ஒலியைக் கேட்டனர். அதனைத் தொடர்ந்து இந்நிலையில் தங்களால் அந்த சிங்கத்தை எதிர்கொள்ள இயலாது எனத் தெரிந்து கொண்டார்கள். உடன் இருவரும் அந்த அடர்ந்த காட்டினை விட்டு வெளியேறுவதற்காக வேகமாக ஓட ஆரம்பித்தனர்... ஆனால்!, அவ்விருவரில் ஜப்பானியர் மட்டும் தன் ஓட்டத்தை நிறுத்தி அவரது காலில் அணிந்திருந்த முழுக் காலணிகளை கழற்றி கைகளில் எடுத்துக் கொண்டார்... இதனைக் கண்ட அமெரிக்கர், "நீங்கள் என்ன இப்போது செய்கிறீர்கள்...? சீக்கிரம் வாருங்கள், நாமிருவரும் இந்தக் காட்டினை விட்டு வெளியேறி நம்முடைய மகிழுந்து இருக்குமிடத்திற்கு விரைவாக ஓடி விடுவோம்" எனக் கூறினார்... அதற்கு ஜப்பானியர், இந்த முழுக் காலணிகளானவை வேகமாக ஓடுவதற்கு இடைஞ்சலாக இருக்கின்றன, அதனால் இந்த முழுக் காலணிகளை கழற்றி விட்டேன். இப்போது பாருங்கள் நம்மில் யார் முதலில் மகிழுந்திற்குச் செல்கின்றோம் என்பதை. எனக்கூறிக் கொண்டு மகிழ்வுந்து இருக்கும் இடம் நோக்கி பறந்தோடி முதலில் சென்றார்... ஆம்!, நமது இலக்கை நாம் அடைந்து விடுவோம் என்று எப்போதும் நேர்மறையாகச் சிந்திப்பவர்கள் உறுதியாக அந்த இலக்கை அடைந்து விடுவர்... ஏனெனில், அவர்களது நேர்மறை எண்ணம் அவர்களுக்கு அளிக்கும் உந்துதலும், ஆற்றலும், இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும். நம்மால் முடியாது என்ற எதிர்மறையாக எண்ணும் போது அந்த எண்ணமே நம்மை வீழ்த்தி விடும்... *ஆம் நண்பர்களே...!* இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய வாழ்க்கைப் பயணமானது மிகவும் கடுமையானது...! வெற்றி என்பது குருட்டு நம்பிக்கையால் அமையாது. அது கடும் உழைப்பால் தான் சாத்தியப்படும்...!! வெற்றி பெற வேண்டும் என்னும் தாகம் உங்கள் மனத்தில் இருந்து கொண்டே இருக்க்க வேண்டும்...!!! -உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹🌹💐💐💐 🙏🏻 💐🌹🌹
10 likes
8 shares