S. Ramachandran
565 views • 15 days ago
உலகின் அதிவேக புல்லட் ரயில்
ஜப்பான் சாதனையை முறியடித்து சீனா புதிய சாதனை!
புதிய ரயில்
சீனா உருவாக்கியுள்ள இந்த அதிவேக ரயில் 'சி.ஆர். - 450' (CR-450) என்று பெயரிடப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியான வேகம்
ரயில்வே பாதுகாப்பு மற்றும் பொறியியல் ஆய்வுகள் நிறைவடைந்த பின், வணிக ரீதியாக இந்த ரயில் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இயக்கப்படும் வழித்தடம்
இந்த புதிய ரயில் சேவை சீனாவின், ஷாங்காய் - செங்டு வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.
தொழில்நுட்ப மாற்றங்கள்:
சி.ஆர். - 450' புல்லட் ரயில், முந்தைய மாடலை விட (CR-400) பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏரோடைனமிக் வடிவமைப்பு: ரயிலின் என்ஜின் முனைப் பகுதி பருந்து அலகு போன்ற 45 அடி நீளமுள்ள ஏரோடைனமிக் வடிவத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
காற்று எதிர்ப்பு குறைப்பு: இதன் ஒட்டுமொத்த காற்று எதிர்ப்பானது 22 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
எடை மற்றும் உயரம்:
முந்தைய மாடலை விட இது 55 டன்கள் எடை குறைவானதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது, மேலும் ரயிலின் மேற்கூரையின் உயரமும் 20 சென்டிமீட்டர் குறைக்கப்பட்டுள்ளது.
துரித வேகம்:
இந்த ரயில் வெறும் 4 நிமிடங்கள் 40 வினாடிகளில் 350 கி.மீ. வேகத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் ஆய்வு மற்றும் பாதுகாப்பு அனுமதி இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், விரைவில் 'சி.ஆர். - 450' ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#சாதனை #தெரிந்து கொள்வோம் #ரயில் #உலகம்
9 likes
17 shares