வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
My Mind Voice🙏❤️🧿
தானம் தானம்ன்னு சொல்றோம் ஆனா நம்ம பண்றதுக்கு பேர் தானமா? நிறைய பேர் இல்லாதவன் கிட்ட வாங்கி இன்னொரு இல்லாதவனுக்கு கொடுக்குறாங்க அதுக்கு பேரு தானம் ன்னு வேற சொல்லிக்குறாங்க, இப்போ நீங்க ஒரு healer ன்னு வச்சிக்கோங்க, நீங்க healing பண்றதுக்கு ஒரு தொகை வாங்குறீங்க, 5000 வாங்குறீங்கன்னு வச்சிக்கோங்க அதை 500 அல்லது 1000 க்கு அதே healing இன்னும் நிறைய பேருக்கு செய்யலாமே,அதாவது நீங்க சம்பாரிக்கணும்ன்னு நினைக்குற தொகையை அதிக பேருக்கு குறைவான விலையில் healing பண்ணலாம் அதே சமயம் உங்களுக்குரிய தொகையும் கிடைச்சிரும்,சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவர்கள் அதிகமா வாங்குறாங்கன்னு சொல்லி சொல்லி இவங்களும் வியாபாரி ஆகிட்டாங்க,விவசாயம், மருத்துவம், கல்வி, ஆடை, இடம் போன்ற தொழில் சேவை செய்வதற்கே காசு சம்பாரிக்குறதுக்கு கிடையாது,அடிப்படை தேவை தொழில் செய்றவங்க காசு அதிகமா எதிர்பார்க்க கூடாது, அப்படி காசு தான் முக்கியம் என்றால் இந்த மாறி படிப்பு இந்த மாறி தொழில் செய்யாதீர்கள், மருத்துவர்கள் வியாபாரி சம்பாரிப்பது எல்லாமே பாவத்தை தான் அவர்கள் பரம்பரைக்கு சேர்த்து வைக்குறார்கள், தானம் என்பது நம்மால் முடிந்ததை பிறருக்கு கொடுப்பது, தொழிலதிபர் அவன் தொழிலாளிக்கு ஒழுங்கா ஊதியம் கொடுக்காம போய் தானம் செஞ்சா எப்படி அது தானம் ஆகும்? எப்பவுமே முதல்ல உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு என்ன தேவைன்னு பாருங்க, பெத்த அப்பா அம்மாக்கு செய்யாம அடுத்தவன் அப்பா அம்மாக்கு செஞ்சா என்ன பிரயோஜனம் இருக்கு? அரசியல் வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சிட்டு, போய் கோயிலுக்கு செலவாழிச்சாலோ அல்லது தானம் செஞ்சாலோ பாவம்லாம் போய்டுமா என்ன?நீங்க தனிப்பட்ட விதமா தான் தானம் செய்யணும்னு கிடையாது, நீங்க ஒருத்தவங்க கிட்ட சிறு தொகை வாங்கி அவங்களுக்கு வேண்டியதை பண்ணி கொடுத்தாவே போதும்,அதுனால கொடுக்குறவங்க மனமார சந்தோசமா கொடுப்பாங்க,ஒரு விவசாயி கிட்ட கம்மியா காசு கொடுத்து வாங்கி அதிகமான விலைக்கு கொடுக்குற வியாபாரிகளின் குடும்பம் எப்படி விளங்கும், நீங்க அடுத்தவன் வயித்துல அடிச்சு வாங்குற ஒவ்வொரு காசுக்கும் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை நினைவுல வச்சிக்கோங்க, ஒரு ரூபாய்க்கு நீங்க ஏமாத்தினா அப்புறம் நீங்க 1000 ரூபாய்க்கு ஏமாந்துருவீங்க இதான் இயற்கை,
freeya சொல்லி கொடுத்தா அதன் அருமை தெரியாதுன்னு சொல்லிட்டு அதிகமா காசு வாங்குறது சரியா? நீ காசு வாங்கணும்னு முடிவு பண்ணிட்ட அப்புறம் என்ன சாக்கு போக்கு?எல்லாரும் ஒரே மாதிரியான சாக்கு தான் சொல்ராங்க,என் கிட்ட காசு இல்லன்னு சொல்லிட்டு வேற இடத்துக்கு மட்டும் காசு கொடுக்குறாங்கன்னு, ஒருத்தர் உன்ன ஏமாத்தினாங்கன்னா எல்லாரும் அப்படி ஏமாத்த போறாங்களா என்ன? 100 பேர்ல பத்து பேருக்கு உன் value தெரியலைன்னா என்ன மீதி 90 பேருக்கு உன் value தெரியுதுல,தேவைக்காக மட்டுமே காசு சம்பாரிங்க, காசு ஆசை வந்தா மனித நேயம் இல்லாமல் போய்விடும் அப்புறம் தானம் இருக்காது தனம் மட்டுமே இருக்கும் 🙏❤️🧿
#My mind voice🙄🤔🙄 #my mind voice #My Mind Voice🙏 #my mind #my mind