யாருக்கும் நம்மால் சிறு தீங்கு கூட நேரக்கூடாது என்பதால் வெகு தொலைவில் நானாகவே மறைந்து செல்கிறேன்........
எங்கிருந்தாலும் நலமோடு இருந்தால் அதுவே போதும்.......
நாம் வெகு தொலைவில் செல்லும்போது நம்மை மறந்து விடுவார்கள் என்று நாம் நினைப்பது தவறு நாம் விலகிச் செல்லச் செல்ல அவர்கள் மனதில் நெருக்கம் நெருங்கி நெருங்கி வருகிறது என்பதை நான் அறிந்தேன்........
உண்மைதான் நானும் நட்சத்திரங்களைப் போல வெகு தூரம் தொலைவில் சென்று விட்டது போல் காட்டிக் கொண்டாலும் உன் மனதில் இருக்கும் அதே மனநிலை தான் எனக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்றால் நான் மனதை பக்குவப்படுத்த பழகிக் கொண்டு விட்டேன் இப்பொழுதெல்லாம்....
நிறைய வலியும் வேதனையும் தவிப்பும் வெளியில் சொல்ல முடியாத யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத சில விஷயங்கள் மனதை ஆட்டிப் படைத்தாலும் இன்று உன் குரல் கேட்டதில் நான் நெகிழ்ந்து போனேன் என் அத்துனை கவலைகளையும் மறந்து போனேன் நன்றி 🙏
சில நேரங்களில் வாடியும்
சில நேரங்களில் வாழ்ந்தும்
சில நேரங்களில் தவித்தும்
போனாலும் கூட அவ்வப்போது இதுபோன்ற சில மகிழ்ச்சியான தருணங்களை நான் கொண்டாடி மகிழ்கிறேன் இது போதும் இன்னும் சில நாட்களுக்கு என் மனது மகிழ்ச்சியுடன் இருக்க
மறந்தெல்லாம் போகவில்லை
மறந்து போகின்ற நினைவுகளா நமக்குள் அது பல பிறவிகளைக் கடந்தாலும் நம்மை தொடர்ந்து வரும் ஏதாவது ஒரு பிறவியில் உன் கரம் பிடிப்பேன் அத்தனை ஆசைகளையும் அத்துணை காதலையும் சுமந்தபடி நாம் நினைத்ததை காட்டிலும் கனவு கண்டதை காட்டிலும் பல மடங்கு மகிழ்ச்சியாக வாழும் ஒரு பிறவியில் நாம் கரம் சேருவோம் அது வரையில் இந்த ஆத்மாக்கள் எங்கே எல்லாம் சுற்றி திரிந்தாலும் கரம் பற்றும் வரை பசுமையான அந்த நொடிகளை பதித்து வைத்திருக்கும் ஆத்மாவினுள்
நீ சொன்னது போல இறுகப் பற்றிய
கைகளும் காதல் ரேகைகளும்
ஒரு நாள் கரம் சேரும் அன்று மடி சாய்ந்தும் தலை கோதியும்
மணிக்கணக்காக பேசுவோம்
#கவிதையின் காதலி
#என் இதய உணர்வுகள்
#📜கவிதையின் காதலர்கள்
#கவிதையின் காதலி...💞
#💕 கவிதையின் காதலி 💕