𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
572 views • 1 days ago
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
எண்ணிய முடிதல் வேண்டும்!
நல்லவே எண்ணல் வேண்டும்!
திண்ணிய நெஞ்சம் வேண்டும்!
தெளிந்த நல்லறிவு வேண்டும்!
சுப்பிரமணிய பாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாரதியார், 1882 ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னஸ்வாமி ஐயருக்கும், லஷ்மி அம்மாளுக்கும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார்.
பாரதி (சுப்பையா என்று அழைக்கப்பட்டார்) தனது 11 ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
1897 ம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
அவரது புரட்சிகரமான கருத்துக்களில் சில...
நம்மை நாம் கவனிக்குமிடத்து எத்தனை விதமான மிருகங்களாக இருக்கிறோம் என்பது தெரியும்.
வஞ்சனையாலும், சூழ்ச்சிகளாலும் சமயத்திற்கேற்ப பலவித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் – நரி.
ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் - தேவாங்கு.
மறைந்திருந்து பிறருக்கு தீங்கு செய்பவன் பாம்பு.
தர்மத்திலும், புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலேயே மூழ்கிக் கிடப்பவன் - பன்றி.
சுயாதீனத்திலே இச்சையில்லாமல் பிறருக்கு பிரியமாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் - நாய்.
அறிவுத்துணிவால், பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல், முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்ப வாயினால் சொல்லிக் கொண்டிருப்பவன்.- கிளிப்பிள்ளை.
பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும், அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் - கழுதை.
தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் - கழுகு.
ஒரு நவீன உண்மை வரும்போது அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் - (வெளிச்சத்தை கண்டு அஞ்சும்) -ஆந்தை.
-- மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்ததின இந்த நல்ல நாளில் அவர் புகழை என்றும் போற்றி
வணங்குவோம்! 🙏
18 likes
11 shares