தெரிந்து கொள்வோமா 🤔
1K Posts • 29K views
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 கொடி காத்த திருப்பூர் குமரன் அவர்கள் பிறந்த இந் நன்னாளில் அவரது புகழை போற்றி வணங்குவோம் 🙏 திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran; 4 அக்டோபர் 1904 – 11 ஜனவரி 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஜனவரி 10 ம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜனவரி 11ல் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4 ம் தேதி, செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகக் குமரன் பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி முதலியார் ஆகும். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923 ல் ராமாயியை என்பாரைத் திருமணம் முடித்தார். கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார். 1932 ஜனவரி 10 அன்று நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளானார். கீழே விழுந்த நிலையிலும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட தேசிய கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் "கொடிகாத்த குமரன்" என்று அறியப்படுகிறார். ஜனவரி 10 ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் ஜனவரி 11 ல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கில் கொள்ளி வைத்தனர். குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார். இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 ல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
11 likes
14 shares
#சிரிப்புக்காக #தெரிந்து கொள்வோமா 🤔 #😄சிரிப்போ சிரிப்பு😅 #சிந்தனை முத்து #சிரிக்கலாம் வாங்க என்ன சின்ன புள்ள தனமா இருக்கு ராஸ்கல்...!! 😎 யாருகிட்ட வந்து விளையாட்டு காட்டிக்கிட்டு இருக்க...!! 😉 அடியே அந்த பால்புட்டி என்னுது... 👌 உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா...!! 💪 இருடி உன்ன... சண்டன்னா சண்டதான்... 💪 எதிர்ல யார்ன்னு எல்லாம் பாக்க மாட்டோம்... 😂😂😂
64 likes
2 comments 26 shares
#சிரிப்புக்காக #தெரிந்து கொள்வோமா 🤔 #😄சிரிப்போ சிரிப்பு😅 #நலம் வாழ #சிரிக்கலாம் வாங்க நாங்க மாறுனா நீங்க தாங்க மாட்டீங்க - ஆண்கள்…!! 😎😉😃 டேஞ்சரஸ் பெலோ... இவன கேர்புல்லா தான் ஹேண்டில் பண்ணனும்!! 😜😝🤪😂🤣
5140 likes
50 comments 2061 shares
#சிரிப்புக்காக #நலம் வாழ #😄சிரிப்போ சிரிப்பு😅 #தெரிந்து கொள்வோமா 🤔 #சிரிக்கலாம் வாங்க அம்மாவுக்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி குடுத்தா மட்டும் போதாது...!! அத எப்படி ஆப்பரேட் பண்ணணும்னு பொறுமையா சொல்லிக் குடுக்கணும்...!!
2801 likes
37 comments 2919 shares