சுற்றுச்சூழல் அரசியல்
130 Posts • 22K views
Rationalist
894 views 4 months ago
காற்று மாசுபாடுக்கு பச்சைக்கொடி; மக்களை வதைக்க அனல் மின் நிலையங்களுக்கு மோடி அரசு அனுமதி. முழு விவரம் 👇🏾 https://poovulagu.org/statements/centre-relaxes-air-pollution-norms/ #airpollution #centralrelaxesairpollutionnorms #ModiGovernment #powerplant #காற்று மாசு #சுற்றுச்சூழல் அரசியல் #பூவுலகின் நண்பர்கள்
13 likes
8 shares
Rationalist
764 views 4 months ago
மூழ்கிக்கொண்டிருக்கும் நாடும், காலநிலை விசாவும் (Climate visa) : சற்று யோசித்துப் பாருங்கள், உலக வரைபடத்திலிருந்து ஒரு தேசமே காணாமல் போய்க்கொண்டிருப்பதை, இது ஒன்றும் அறிவியல் புனைவு (Science fiction) அல்ல. பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் ஒரு மிகச்சிறிய தீவு நாடு “துவாலு”. 10,000 மக்கள் மட்டுமே வாழக்கூடிய இத்தீவு நாடுதான் உலகத்திற்கு ஒரு முன்மாதிரியாக மாறவிருக்கிறது. எதற்கான முன்மாதிரியாக? போர் காரணமாக மக்கள் இடம்பெயராமல், காலநிலை மாற்றத்தால் இடம்பெயரக்கூடிய மக்களை எப்படி கையாள்வது என்பதற்கு உதாரணமாக, முன்மாதிரியாக மாறவிருக்கிறது துவாலு. சுமார் ஒன்பது சிறிய தீவுகளைக் கொண்ட உலகின் மிகச்சிறிய தேசம்தான் இப்போது “இருத்தலியலுக்கான அச்சுறுத்தல்” கொண்ட நாடாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உயரும் கடல்மட்டம், நிலப்பகுதிகளை முழுங்கி, வாழ வழியில்காத முதல் தேசமாக துவாலு மாறிவருகிறது. கடல்மட்ட உயர்வு ஏற்கனவே பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. கடல் நீர், அதாவது உப்பு தண்ணீர், குடிநீர் ஆதாரங்களை அழிக்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் சில பத்தாண்டுகளுக்குள், தினமும் வரும் உயர் அலைகளால் (High tides) துவாலுவின் தலைநகரமான ஃபுனாஃபுட்டி முழுவதுமாக மூழ்கிவிடும். இதனைப் புரிந்துகொண்ட ஆஸ்திரேலிய நாடு துவாலு குடிமக்களுக்கான “காலநிலை விசா” அறிமுகப்படுத்தியுள்ளது, இது falipeli ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படுகிறது, அதன் நோக்கம், “கண்ணியமான இடம்பெயர்தலை” உறுதிப்படுத்துவது. இதன் கீழ் ஒரு வருடத்திற்கு 280 துவாலியன்களுக்கு இலவசமாக குடியமர்வு அனுமதி வழங்கப்படுகிறது. இதே அளவில் தொடர்ந்தால், அனைத்து மக்களும் இடமபெயர்வதற்கு இன்னும் நாற்பது ஆண்டுகளாகும். துவாலுவும் சும்மா இல்லை, அதன் துயரத்தை உலக அரங்கில், காலநிலை மாற்றத்திற்கான செயல்பாட்டிற்கான பிரச்சாரமாக பயன்படுத்துகிறது. துவாலுவின் மேனாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர், சிமோன் கோப, கழிமுகப்பகுதில் இடுப்பளவில் நனைத்துக்கொண்டே பேசியது, காலநிலை மாற்றத்தால் அந்த நாடு அடையும் துயரத்தை உரைத்தது. உலகளவிலான “புதைப்படிம எரிபொருள் பயன்பாட்டிற்கு எதிரான” ஒப்பந்தத்தைக் கோருகிறது அந்த நாடு. காலநிலை விசா என்னும் இந்த மாதிரி உலகளவில், ஒரு சோதனை செயல், காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் இடப்பெயர்வுகளை எப்படி உலகம் கையாளப்போகிறது என்பதற்கான முன்னோட்டம் இது. #tuvalu #காலநிலை மாற்றம் #பூவுலகின் நண்பர்கள் #சுற்றுச்சூழல் அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️
13 likes
15 shares