Failed to fetch language order
தவம் #குண்டலினி யோகம்
33 Posts • 8K views
*குண்டலினி சக்தி என்றால் என்ன*? *குண்டலினியை விழிப்படைய செய்யும் மந்திரம்* *குண்டலினி முத்திரை* குண்டலினி என்பது மனிதன் இறை நிலையை அடைவதற்காக 20000 ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் பூலோகத்திற்கு வந்து சீடர்களுக்கு கற்பித்ததாக கூறப்படுகிறது. குண்டலினி சக்திநிலையை அடைந்த மனிதர்களுக்கு குண்டலினியை எழுப்பஉவதால் ஆழ்நிலை தியானம், அறிவொளி,பேரின்பம் எளிதில் விளைகிறது. குண்டலினி சக்தி நிலையை அடைவதற்கு பல கட்டுபாடுகள் உண்டு. அவை பெண் மேல் மோகம் இருத்தல் கூடாது. எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபட கூடாது. ஆண்கள் இந்நிலையை அடைய தவ வாழ்கை மேற்கொள்ள வேண்டும். குண்டலினி சக்தியானது நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கே என்ன? உள்ளது என்று பார்த்தால் வெண்பாஸ்பரஸ் என்ற தனிமமே உள்ளது! இந்த வெண்பாஸ்பரஸ் தனிமம் காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடலில் உளநாக்கிற்கு மேலேயும் அடிவயிற்றுக்கு கீழேயும் காற்று செல்வதில்லை. இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலே எழுகின்றது. இதுவே யோகமுறையில் குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம் உடலின் வெப்பத்தை உண்மையில் மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே எழுகின்றது. அடுத்து அந்த அனல் மேலே எழும்பி சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. சுவாதிஷ்தானத்தில் உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மூலாதாரத்திலிருந்து மேலே எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்ப டுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது. இதனால் அனல் மேலும் மேலே எழுந்து மணிபூரகத்தை அடைகின்றது. மணிபூரகத்தில் உள்ள வினைபுரியும் தனிமத்தின் பெயர் ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை குணமே வெடிப்பதாகும். எனவே வெப்பநிலை மேலும் அதிகரித்து அனாகதத்தை அடைகின்றது. அனாகதத்தில் உள்ள தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம்சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன் எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும். எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து விசுத்தியை அடைகின்றது. ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள தனிமத்தின் பெயராகும். இங்கேயும் வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும் நிகழ்ந்து மேலேறுகின்றது. அடுத்ததாக உள்ள சக்கரத்தின் பெயர் ஆக்கினை. அங்கே சுத்த நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே எழுப்பிய அனல் நைட்ரஜன் என்ற தனிமத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும், அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும், சொல்லப்படுகிறது. எனவே ஒரு குருவின் பெருமைகளை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள் அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும் என்றும் கூறப்படுகிறது. "சிரம் முட்டும் பொழுதில் வரம் தட்டும் குருவே தரம் பார்த்து என்னை பரம் ஆக்கிடுவான்" ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல் திறத்தலே வெற்றிட பூஜ்ஜிய பிரம நிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக சக்கரம் விழிப்படைதலே காரணம். பக்திநிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும், முக்தி நிலைக்கு சகஸ்ராரம் விழிப்படைதலும், யோக நிலைக்கு சுவாதிஷ்டானம் விழிப்படைதலும், ஞானத்தேடலுக்கு மூலாதாரம் விழிப்படைதலும் காரணமாகும். நாதத்தின் மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு விசுத்தி விழிப்படைதலே காரணமாகும். மேலும் நாம் தியானத்தில் அமரும் போது குண்டலினியானது புருவமத்தி அல்லது சகஸ்ராரத்திலும், தூங்கும் போது விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும் விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது விசுத்திதான் உறைவிடம் (உறையும் இடம்). குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய் விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக அடையாளமாக காண்பது விந்தின் வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ளமூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து வெம்மையானது நெருப்பாறாக மாறி வரிவரியாக தடம் இருக்கும். மேலும் உடலில் நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ் விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U" நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில் உடல் விடும் வரை இருக்கும். கை விரலால் தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத் தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக நெருப்பாற்றின் தடம் இருப்பதையும் உணரலாம். சகஸ்ரஹாரத்தில் இருந்து நெருப்பாற்று தடத்தின் வழியாக அமிர்தமானது பிறை வடிவ நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன் வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழியாக விசுத்தி சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும் பொன்னை உரசினாற் போல் மேனியுடைய தேமலானது உடலில் அதிகம் காணலாம். அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும் வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம். உடல் அடையாளமாக சாதாரணமாகவே உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும்,மற்றும் புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும், மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில் ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு உருண்டையாக இருந்துகொண்டு எதையும் நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு உறுத்தல் ஏற்படும். 41 மணி நேரத்தில் குண்டலினயை ஏற்றும் மந்திரம்! குண்டலினி பல முறைகளில் ஏற்றப்படுகிறது. அவை பிராணயாமம், ஆசனம் மற்றும் மந்திரம் இவை மூலம் குண்டலினியை எழுப்ப செய்யலாம். குண்டலினியை எழுப்ப செய்யும் மந்திரம்: "ஓம் ஏம் ஹிரம் ஹிரம் ஹரம் ஹிரீம் ஹிரம் ஹரா: குல்-குண்டலினி ஜகன்மத் சித்திம் தேஹி தேஹி சுவாஹா" மந்திரம்சொல்லும் முறை: தினமும் அதிகாலை 4:30-6:00 மணி நேரத்திற்குள் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் 48நிமிடங்கள் மனதிற்குள் மந்திர ஜெபம் செய்யுங்கள். தொடர்ந்து 41 நாட்களில் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரத்திற்கு மந்திர ஜெபம் செய்யுங்கள். இந்த 41நாட்களும் சமநிலையில் இருங்கள். அதே நேரத்தில் தினமும் குண்டலினி மந்திரசக்தியால் உங்கள் முதுகில் அதிர்வுகளை உணர்வீர்கள். குண்டலினி சக்தியை தவறான செயல்களுக்கு பயன்படுத்த வேண்டாம். குண்டலினி முத்திரை: இந்த முத்திரை குண்டலினி முத்திரை(அல்லது) ஆண்மை அதிகரிக்கும் முத்திரை என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பலத்தை பெருக்கும் முத்திரை. ஆண்மையை பெருக்க இது தான் சிறந்தவழி. உடலில் உள் ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசனவாய் சுருங்கும் இடத்தில் வந்து குவிகின்றன. அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட்டு உடல் சக்தி பெருகுகிறது. இனிமையான தாம்பத்தியத்திற்கான இரண்டாவது முக்கியமான முத்திரை இது. தந்திராவில் முக்கியமாக கருதப்படுவது செக்ஸ் மூலம் தியானம் ஆகும். புத்தமதத் தந்திராவில் வஜ்ராயனத்தில் பெரிதும் இதைப் போற்றுகின்றனர். ஒரு பெண்ணும் ஆணும் புணர்வதை சக்தி-சிவத்தின் இணைப்பாகவே தந்திர யோகம் உருவகப்படுத்துகிறது. குண்டலினி முத்திரை செய்யும் முறை: இரண்டு கைகளையும் தளர்வாக மூடுங்கள். இடதுகை முஷ்டி கீழாக இருக்க, அதன் மேல் வலதுகை முஷ்டியை வையுங்கள். இடது ஆள்காட்டி விரலை நீட்டி,வலது கைவிரல்களின் உள்ளே விடுங்கள். வலதுகை விரல்களால் இடதுகை ஆள்காட் டி விரலை இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள். வலதுகை கட்டைவிரலை இடதுகை ஆள்காட்டி விரலின் நுனியில் மெதுவாகப்பதியச் செய்யுங்கள். இதுவே குண்டலினி முத்திரை ஆகும். (குண்டலினி முத்திரை படம் கீழே!) அமரும் முறை: பத்மாசனம் (அல்லது) வஜ்ராசனத்தில் அமர்ந்து குண்டலினி முத்திரையை செய்யலாம். முடியாதவர்கள் கால்கள் இரண்டையும் சம்மணமிட்டு அமர்ந்து செய்யலாம். அல்லது நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். சுவாசம் சீராக இருப்பது அவசியம். நேரம் 15-45 நிமிடங்கள் வரை செய்யலாம். பலன்கள்: குண்டலினி சக்தி தூண்டப்படும். பாலியல் உணர்வு அதிகரிக்கும். உடலில் புதிய உற்சாகம் பெருகும். உயிர் சக்தி பலமடையும். ஆன்மிக வளர்ச்சி உண்டாகும். மதனநீர் சுரப்பு குறைதல் போன்ற பிரச்சனைகள் தீரும். 🚩🕉🪷🙏🏻 #யோகா #யோக முத்திரை #தினமும் ஒரு யோக முத்திரை #தவம் #குண்டலினி யோகம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️
12 likes
17 shares
_______________________________
4K views 6 days ago
‼🥺 प्रेम का सबसे सुन्दर रूप है इंतजार,,,,,,,‼🥺𝐑𝐚𝐝𝐡𝐚 𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚 ❤️‍🩹🥺🥺 ,,,,𝐒𝐭𝐨𝐫𝐲,.............🥺💘‼ #❤️‍🔥♡𝑫ⅈȴӄ𝙞𝖆Ꮗ𝒶ž♡❤️‍🔥 #💞Heart touching शायरी✍️ #🖋कहानी: टूटे दिल की💔 #💔 हार्ट ब्रेक स्टेटस #❤️सैड व्हाट्सएप स्टेटस
77 likes
82 shares