Islamic Way Of Life Official
36 Posts • 1K views
Islamic Way ❤️ Of Life
632 views 2 months ago
*" சோதனைகள்!!❤‍🩹* முஃமின்களுக்கு ஏற்படும் சோதனைகள் தண்டனை அல்ல அது ஆலமீன் நிஃமத் அருட்கொடை அதை அவன் நாடியவர்களுக்கு அதிகமதிகம் வழங்கி அவர்களின் ரப்புல் ஆலமீனின் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்வான் அந்த சோதனைகள் மூலம் அவன் அவர்களோடு உரையாடுவான் ஸுப்ஹானல்லாஹ்❤‍🩹🪄✨!! "இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4 என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 5645. அறிஞர் ஃபுதைல் பின் இயாழ் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : அல்லாஹ் ஒருவரின் மீது நேசம் பாராட்டினால் அவருக்கு அதிக சோகத்தை தருவான். ஆனால், ஒருவரை வெறுத்தால் அவருக்கு உலக வாழ்க்கையை விசாலம் ஆக்கிவிடுவான். *நூல் : ஸியரு அஃலாமின் நுபலா 338/4* இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.3 இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸஹீஹ் புகாரி : 5643. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள். ஸஹீஹ் புகாரி : 5641 5642. #Miracle #HalalPost #islam #Islamic Way Of Life Official #islamicposts
16 likes
11 shares
Islamic Way ❤️ Of Life
818 views 2 months ago
👑தாடி👑 "ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுத்த அருட்கொடை தாடியை அல்லாஹ்வுடைய தூதர் கண்ணியப்படுத்தினார்கள் அந்த முகத்தில் தாடி இருந்தது இறுதி மூச்சு வரை அந்த ஸுன்னாவை முஃமின்கள் உயிர்பிப்பார்கள் உயிர்ப்பிக்க வேண்டும் இன் ஷா அல்லாஹ்!! "இமாம்களின் ஃபத்வாக்கள் 📌✨ 1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி) 2. இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “தாடியை வழிப்பது ஹராமாகும். ஆண்களில் உள்ள அரவாணிகளைத் தவிர வேறு எவரும் இதனைச் செய்ய மாட்டார்கள்.” (அத்தம்ஹீத்) 3. இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “தாடியை வழிப்பதை உடனடியாக விட்டுவிடுவதே தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தாகும்.” (ஷர்ஹ் முஸ்லிம்) 4. இமாம் அல்குர்துபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “தாடியை வழிப்பதோ பிடுங்குவதோ குறைப்பதோ கூடாது.” (தஹ்ரீமு ஹல்கில் லிஹா) 5. இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “மேலும், தாடியை வழிப்பது ஹராமாகும்.” (அல்இஹ்தியாராதுல் இல்மிய்யா) 6. அல்ஹாபிழ் அல்இராகி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: “தாடியை அதன் நிலையிலேயே விட்டுவிடுவதற்கும் அதில் இருந்து எதனையும் துண்டிக்காமல் இருப்பது மேலானது என்பதற்கும் பெரும்பான்மையான அறிஞர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள். இன்னும் இது இமாம் ஷாபி மற்றும் அவர்களுடை தோழர்களின் கருத்துமாகும்.” (தர்ஹுத் தஸ் ரீப்) 7. அல்லாமா அஷ்ஷங்கீதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “எனது தாயின் மகனே நீ என்னுடைய தாடியையும் தலையையும் பிடிக்காதே!” என்ற வசனம் தொடர்பாக விளக்கமளிக்கையில்: “இச்சங்கை மிக்க வசனம் தாடியை நீளமாக வளரவிடுவதைப் பேணுவது பற்றி அறிவிக்கின்றது. எனவே, இது ஒரு தாடியை வளரவிடுதல் தொடர்பாகவும் அதனை வழிக்காமல் இருப்பது தொடர்பாகவும் பேசக்கூடிய குர்ஆனிய ஆதாரமாகும்” என்கிறார்கள். (அழ்வாஉல் பயான்) 8. அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “தாடியை வளரவிடுவது வாஜிபாகும். மேலும், அதனை வழிப்பது ஹராமாகும்.” (ஆதாபுஸ் ஸிபாப்) குறிப்பு: தாடியை வழித்தல் ஹராம் என்பதை உரத்துக் கூறும் அதிகமான இவரது பேச்சுக்கள் இவருடைய புத்தகங்களிலும் ஒலிப்பதிவு நாடாக்களிலும் காணப்படுகின்றன. 9. அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்ட இந்த வார்த்தை தாடியை நீளமாக வளரவிடுவது வாஜிப் என்பதையும் அதனை வழிப்பது மற்றும் குறைப்பது ஹராம் என்பதையும் வேண்டி நிற்கின்றது. மேலும் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியைப் பரிபாலிப்பதும் அதனை அடர்த்தியாக வளரவிடுவதும் மேலும், அதனை தொங்கும் அமைப்பில் நீளமாக வளரவிடுவதும் விட்டுவிட முடியாத பர்ளாகும்.” இன்னும் கூறுகிறார்கள்: “இன்னும், இவ்வாறே தாடியை வழிப்பதும் அதனைக் குறைப்பதும் ஈமானைக் குறைக்கக்கூடிய மேலும், அதனை பலவீனப்படுத்தக்கூடிய பாவங்களில் மற்றும் மாறு செய்தலில் உள்ளடங்குகின்றன. இன்னும், இதன் காரணமாக அல்லாஹ்வுடைய கோபம் மற்றும் அவனுடைய தண்டனை உண்டாகும் என்றும் அச்சம் கொள்ளப்படும்.” (வுஜூபு இஃபாஇல் லிஹ்யா) 10. இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “தாடியை வழித்தல் ஹராமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அது அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தலாகும். நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: ‘தாடியை வளரவிடுங்கள்! மீசையைக் கத்தரியுங்கள்!’ மேலும், அது ரஸூல்மார்களின் வழிமுறையை விட்டு நெருப்பு வணங்கிகள் மற்றும் இணைவைப்பாளர்களின் வழிமுறையை நோக்கி வெளியேறுதலுமாகும்.” (முஜ்மூஉல் பதாவா இப்னி உஸைமீன்) 11. அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஸஹீஹான ஹதீஸ்கள் தாடியை வழிப்பது ஹராம் என்பதை அறிவிக்கக்கூடியனவாக இருக்கின்றன.” (அல்பயான்) #Islamic Way Of Life Official #islam #HalalPost #islamicposts #Miracle
10 likes
20 shares
Islamic Way ❤️ Of Life
586 views 2 months ago
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.' அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். *ஸஹீஹ் புகாரி : 1294.* *🗓️ முஹர்ரம் 10 (ஆஷூரா தினம்) 🗓️* "இந்த தினத்தில் கொண்டாட்டங்களுக்கோ அல்லது துக்கம் என்ற பெயரில் தன்னைத் தானே வேதனை செய்து கொள்வதற்கோ இஸ்லாத்தில் எந்த அனுமதியும் இந்த தினத்தில் நபி ﷺ நோன்பு நோற்றார்கள் நம்மையும் நோன்பு நோற்கும் படி ஏவினார்களே தவிர வேறு எந்த சிறப்பும் இந்த நாளுக்கு இல்லை‼️ "இஸ்லாத்தில் கொண்டாட்டத்திற்குரிய இரண்டு நாட்கள் நோன்புப் பெருநாள் ✨💐 மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே ‼️ "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ❤️ இந்த சமூகத்தை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பானாக எப்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உதவி செய்தானோ அதேபோல் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு முஃமின்களுக்கும் உதவி செய்வானாக 😥 அல்லாஹ்வின் மீது வலுவான உறுதியான நம்பிக்கை கொண்ட கூட்டமாகவும் வெற்றி பெறக் கூடிய கூட்டமாகவும் அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் ❤️ உங்களையும் என்னையும் உண்மை முஃமின்களையும் ஆக்கி அருள் புரிவானாக... இன் ஷா அல்லாஹ் ❤️ ஆமீன் ஆமீன் ஆமீன் ❤️ யா ரப்புல் ஆலமீன் ❤️✨💐🤲🏻... #ஆஷூரா #முஹர்ரம் #HalalPost #islam #Islamic Way Of Life Official
11 likes
8 shares
Islamic Way ❤️ Of Life
502 views 2 months ago
"சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சந்திர நாட்காட்டியின் படி முஹர்ரம் பத்தாம் நாளில்தான் தர்மம் வாழ, கடல் வழிவிட்டது! அதர்மம் கடலில் மூழ்கி அழிந்துபோனது! எக்காலத்திலும் எல்லா ஃபிர்அவ்ன்களும் அழிந்து போக ஒரு கடல் இருக்கிறது! எக்காலத்திலும் எல்லா மூஸாக்களையும் இரட்சிக்க ஒரு இரட்சகன் இருக்கிறான்!! ஸுப்ஹானல்லாஹ் ❤‍🩹✨ #Miracle #islamicposts #HalalPost #islam #Islamic Way Of Life Official
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
11 likes
14 shares