AI தொழில் நுட்பம்
5 Posts • 522 views
*வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்க AI கூடாது* #AI தொழில் நுட்பம் வழக்குகளில் முடிவுகளை எட்டவோ, உத்தரவு பிறப்பிக்கவோ, தீர்ப்பு அளிக்கவோ AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் - கேரள உயர் நீதிமன்றம். #ரெங்கா! #renga-vamba!
13 likes
11 shares
*தப்பிக்கவே முடியாது போல..* செயற்கை நுண்ணறிவால் வரி ஏய்ப்பு வெளியாகியது சொத்துகளை விற்பனை செய்வதில் கிடைக்கும் லாபம் “மூலதன ஆதாயம்” எனப்படும். உதாரணமாக, ஒருவரால் 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்ட வீடு, தற்போது ரூ.80 லட்சத்திற்கு விற்கப்படின், ரூ.50 லட்சம் லாபமாக கருதப்படுகிறது. இந்த லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும். ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர், 2002-ஆம் ஆண்டு குறைந்த விலையில் வாங்கிய வீடொன்றை தற்போது ரூ.1.4 கோடிக்கு விற்றார். மூலதன ஆதாய வரியைத் தவிர்க்கும் நோக்கில், வருமான வரி கணக்கில் தவறான தகவல்களும் போலி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. , ரூ.68.7 லட்சம் வீட்டு மேம்பாட்டு செலவாக காட்டி, வெறும் ₹24,774 மட்டுமே லாபமாகத் தெரிவித்திருந்தார். அவரது ஆவணங்களை வருமான வரித்துறை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்தபோது, 2002-ஆம் ஆண்டு தேதியிட்ட ஓர் ஆவணத்தில் “Calibri” எனும் எழுத்துரு ( font) பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த எழுத்துரு 2006-ம் ஆண்டுக்கு பிறகே அறிமுகமானது. எனவே, 2002-ஆம் ஆண்டு அந்த எழுத்துரு பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை என AI உறுதியாக சுட்டிக்காட்டியது. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உரிய ஆவணங்களை வழங்க முடியாத அந்த நபர், புதிய வருமான வரி கணக்கை தாக்கல் செய்து, உடனே மூலதன ஆதாய வரியை செலுத்தினார். இந்த சம்பவம், செயற்கை நுண்ணறிவின் மூலம் வரி ஏய்ப்புகளை வெகுவாக கண்டறிய முடியும் என்பதற்கான முக்கிய உதாரணமாக விளங்குகிறது. #renga-vamba! #ரெங்கா! #AI தொழில் நுட்பம்
17 likes
10 shares