ஃபாலோவ்
꧁☆★ 𝒮𝓉𝑜𝓇𝓂 𝒟𝒽𝒶𝓇𝓂𝒶 ★☆꧂
@cennai
1,631
போஸ்ட்
16,557
பின்தொடர்பவர்கள்
꧁☆★ 𝒮𝓉𝑜𝓇𝓂 𝒟𝒽𝒶𝓇𝓂𝒶 ★☆꧂
633 காட்சிகள்
13 நாட்களுக்கு முன்
கணவர் தன்னிடம் பிரியமாக இல்லை எனப் புலம்பிய மனைவி, ஒரு சாமியாரைப் பார்க்கச் சென்றாள். கணவர் பிரியமாக இருக்க ஏதாவது தாயத்து செய்துத் தாருங்கள் எனக் கேட்க அந்த சாமியாரும், “ஒரு தாயத்து செய்துத் தருகிறேன், அதற்கு ஒரு கரடி நகம் வேண்டும். நீ கொண்டு வந்தால் நான் மந்தரித்து தாயத்து செய்துத் தருகிறேன். அதனை அவனுக்கு கட்டி விட்டால் உன்னையே சுற்றிச் சுற்றி வருவான்” என்றார். சரி என்றுக் கிளம்பிய அவள் காட்டுக்குச் சென்று, ஒரு கரடியைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் அன்பாகப் பழகி, சாப்பிட உணவு எல்லாம் அடிக்கடி கொடுத்து நட்பாக்கிக் கொண்டாள். ஒரு கட்டத்தில் இவள் சொல்வதையெல்லாம் கேட்கும் அளவுக்கு கரடி மாறிவிட்டது. அப்படியே நகத்தை வெட்டி எடுக்க சம்மதித்தது. நகத்தை எடுத்துக் கொண்டு சாமியாரிடம் கொடுத்தாள். அப்பொழுது அந்த சாமியார், 'ஒரு மாதமாக நீ அந்த முரட்டுக் கரடியிடம் காட்டிய அன்பை, அட்லீஸ்ட் ஒரு நாள் உன் அப்பாவி கணவரிடம் காட்டினால் போதும். இந்த தாயத்து இல்லாமலே அவன் உன்னைச் சுற்றி வருவான். இதை நீ புரிந்துக் கொள்ளத் தான் தாயத்து செய்ய நகம் வேண்டும் என கரடியிடம் அனுப்பினேன்' என்றார். அவள் புரிந்துக் கொண்டு சாமியாருக்கு நன்றி சொன்னாள். திருமணத்துக்குப் பின்பு கணவர்கள் மிகவும் பக்குவமாகிவிடுகின்றனர். குழந்தைப் பருவத்தில் அப்பா, பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், கல்லூரியில் பிரின்சிபால், ஆபீசில் மேனேஜர். இவர்களையெல்லாம் பயங்கரமானவர்களாக நினைத்துப் பயந்தது தப்பு. இவர்களை விட கண்டிப்பானவர்கள் உண்டு என ஆண்களுக்கு தங்கள் திருமணத்துக்குப் பின்பு தான் தெரிய வருகிறது. அதையும் சமாளித்து வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி விடுகிறார்கள். கதையின் நீதி :- கணவனை அதிகம் நேசியுங்கள்... அ"ன்பானவன் எதற்கும் ஆ"சைப் படாதவன், துன்பத்திலும் இ"ன்பம் தருபவன், மனதில் ஈ" கோ இல்லாதவன் எப்போதும், உ"ண்மையானவன் என்றும், ஊ" ரில் வாழ்ந்தாலும் எ" ப்போதும் யாரையும் ஏ" மாற்றத் தெரியாதவன், ஐ" ஸ்வர்யம் இவன் கூடவே வரும், ஒ" வ்வொரு உறவையும் மதிப்பவன், ஓ" டிச் சென்று உதவி செய்பவன், ஔ" வையார் போல் தன்னுடைய ஆசைகளைத் துறந்து பிறருக்காக வாழ்பவன் தான் ஒவ்வொரு ஆண்களும்... எல்லா உறவுகளைக் காட்டிலும் இறுதி வரையிலும் உங்கள் கூடவே வரும் ஒரே உறவு கணவன் மட்டும் தான்... இருபாலருக்கும் பொதுவானது இந்த கதை #💑என் முதல் காதல்😊 #👨‍👩‍👧‍👦என் குடும்பம்: என் உலகம்😍 #💑கணவன் - மனைவி #💪ஊக்குவிக்கும் கதைகள் #🙏நமது கலாச்சாரம்
꧁☆★ 𝒮𝓉𝑜𝓇𝓂 𝒟𝒽𝒶𝓇𝓂𝒶 ★☆꧂
922 காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்.... காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ.... என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். நான் இறக்கவில்லை., இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை. அய்யோ என்ன செய்வேன் நான்? எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்? நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா? என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும். இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன். "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் " என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை. உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை. "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்! திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி. ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். .. என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக. முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி. நண்பர்களே...... இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள். ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!! பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். #💑கணவன் - மனைவி #👨‍👩‍👧‍👦என் குடும்பம்: என் உலகம்😍 #💖நீயே என் சந்தோசம்🥰 #👩‍❤️‍👨Long Distance Relationship #💑என் முதல் காதல்😊
꧁☆★ 𝒮𝓉𝑜𝓇𝓂 𝒟𝒽𝒶𝓇𝓂𝒶 ★☆꧂
700 காட்சிகள்
18 நாட்களுக்கு முன்
🔰 கவனமாகப் படியுங்கள்…❗❓ ✅ உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும்……… இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். ✅நம் குழந்தைகளைக்காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும். குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி❗ சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது❓ ⭕#முக்கியமான_5_கட்டளைகள்❓❗ ▶மார்பகம், ▶பிறப்புறுப்பு, ▶மாதவிடாய், ▶நாப்கின், ▶ஆணுறை, ▶சுய இன்பம், ▶உடலுறவு, ▶கற்பு, ▶பலாத்காரம், ▶காதல், ▶குழந்தைப் பிறப்பு... ✅இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். 🇨🇭ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள். ❌ வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். ❌கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். ❌குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ❌ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள். 🈵பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்து தான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். 🈵சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். 🈵ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள். 🈵பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள். 🔯சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். 🔯தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். 🔯அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள் பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். 🔯குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். 🔯கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். 🔯புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். 🔯நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். 🔴 #குழந்தைக்கு #சிறுவயதிலேயே #கற்றுக்கொடுக்க_வேண்டியவைகள்❓ 👫 பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 👫 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். 👫 குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. 👫 குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். 👫 உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள். 👫 வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும். 👫 தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது. 👫 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது 👫 குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள். 👆 மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும் அது…… நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி❗ #🙏நமது கலாச்சாரம் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👉வாழ்க்கை பாடங்கள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை
See other profiles for amazing content