ஃபாலோவ்
நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
@muthukumar973
27,687
போஸ்ட்
20,712
பின்தொடர்பவர்கள்
நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
510 காட்சிகள்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் 🙏 #KamalHassan #goodmorning ⛅ #MakkalNeethiMaiam #Indian3 #KH237 #66YearsOfKamalism #KamalHaasan_MP #கமல்ஹாசன்_எனும்_நான்
நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
568 காட்சிகள்
#Ulaganayagan_Kamal update only 🎯 44 years of #வாழ்வே_மாயம் 26, ஜனவரி. 1982 கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியாவின் ‘வாழ்வே மாயம்’ - கங்கை அமரன் இசையில் பாட்டெல்லாம் ஹிட்டு! இந்து தமிழ் திசை 26_01_2020 எத்தனை வருடங்கள் கடந்தாலும், சில படங்கள் தலைமுறை கடந்தும் மக்களால் மறக்கமுடியாத படங்களாக அமைந்துவிடும். அது குடும்பப் படமாக இருக்கலாம். ஆக்‌ஷன் படமாக இருக்கலாம். மாயாஜாலப் படமாக இருக்கலாம். காதலை உணர்த்தும் படமாகவும் இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படியொரு காதல் உணர்வை தியாகம் கலந்து உணர்வுபூர்வமாகச் சொன்னதில் இன்றைக்கும் தனியிடம் பிடித்து, தனித்துவமாகத் திகழ்கிறது ‘வாழ்வே மாயம்’. ரீமேக் படங்களின் ஹீரோ என்று போற்றப்படுபவர் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி. இவரின் மூலம் ஏராளமான வேறு மாநிலப் படங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. அந்தப் படங்களை தமிழுக்குத் தகுந்தது போல் கொடுப்பதில் அசகாயசூரர் இவர். அந்தக் காலத்திலேயே சிவாஜியை வைத்து பல ரீமேக் படங்கள் எடுத்து ஹிட்டடித்திருக்கிறார். அதேபோ, ரஜினியை வைத்து இவர் எடுத்த ‘பில்லா’, ‘தீ’, ‘விடுதலை’ முதலான படங்கள் ரீமேக் படங்கள்தான். கமலை வைத்தும் ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார் கே.பாலாஜி. இதில் முக்கியமான படம்... காலத்தால் அழியாத படம்... காதல் காவியம் என்று போற்றப்பட்ட படம்... ‘வாழ்வே மாயம்’. ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். படம் முடிந்து ரசிகர்கள் கனத்த இதயத்துடன் எழுந்து வந்தார்கள். ராஜாவாக கமல். தேவியாக ஸ்ரீதேவி. ராதாவாக ஸ்ரீப்ரியா. பேபியாக மனோரமா. அண்ணனாக ஜெய்சங்கர். அவரின் நண்பராக பிரதாப். டாக்டராக கே.பாலாஜி. மிகக்குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு காதல் காவியமே படைத்திருப்பார்கள். கமல், ஸ்ரீதேவியின் அழகும் நடிப்பும் கனக்கச்சிதம். அப்படியொரு பாந்தமான ஜோடி என்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீப்ரியாவின் நடிப்பு மிரட்டல். அவரின் பாடி லாங்வேஜும் வசன உச்சரிப்பும் மிகத்தெளிவான பெண் என்பதைக் காட்டும் வகையில் இருந்தன. மனோரமாவின் நடிப்பு வழக்கம்போல் மனதைத் தொட்டது. அம்பிகாவும் மிகச்சிறிய கதாபாத்திரத்தில், ஆனால் மனதில் நிற்கும் கேரக்டரில் நடித்திருப்பார். தாசரி நாராயணராவின் கதைக்கு ஏ.எல்.நாராயணன் வசனம். மனிதர், பல இடங்களில் புகுந்து விளையாடியிருப்பார், தன் பேனாவால்! வழக்கமாகவே அழகனான கமல், இந்தப் படத்தில் பேரழகனாகக் காட்சி தருவார். பின்னாளில், இவர் கேன்ஸரால் உருக்குலைந்து அழகு மறைந்து போவதைக் காட்டவேண்டும் என்பதற்காகவே அப்படியொரு அழகில், முன்பாதியில் வந்தாரோ என்னவோ! ‘தேவி ஸ்ரீதேவி’, ‘ஏ ராதாவே’, ‘நீலவான ஓடையில்’, ‘மழைக்கால மேகம்’, ‘வந்தனம்’, ‘வாழ்வே மாயம்’ என்று எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. இன்றைக்கும் இரவு வேளையில் தமிழ் இசை ரசிகர்களுடன் உறவாடிக் கொண்டிருக்கின்றன. அப்போதெல்ல்லாம், இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பார்த்து, இளையராஜாதான் இசை என்று பந்தயம் கட்டியவர்களெல்லாம் உண்டு. ஆனால் படத்துக்கு இசை கங்கை அமரன். அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் கங்கை அமரன். ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘சட்டம்’, ஒருவிடுகதை ஒருதொடர்கதை’ போல் இந்தப்படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து வெற்றிபெற்றன. பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர் கங்கை அமரன், இசையமைப்பாளர் கங்கை அமரன் என அவரின் பல முகங்களில், பல திறமைகளில்... இசையமைப்பாளர் என கொடி நாட்டிய படம் என ‘வாழ்வே மாயம்’ அமைந்தது. ‘வாழ்வே மாயம்’ திரைப்படமும் ஏ,பி.சி என மூன்று சென்டர்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1982ம் ஆண்டு வெளியானது ‘வாழ்வே மாயம்’. கே.பாலாஜியின் திருமண நாள் ஜனவரி 26. இந்தநாளில், தன் படங்களை ரிலீஸ் செய்வது அவர் வழக்கம். ‘வாழ்வே மாயம்’ படமும் ஜனவரி 26ம் தேதிதான் வெளியானது. அவர் படத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு வரும் ராஜா, ராதா பெயர்கள், இந்தப் படத்தில் கமலுக்கு ராஜா என்றும் ஸ்ரீப்ரியாவுக்கு ராதா என்றும் சூட்டப்பட்டிருக்கும். படம் வெளியாகி, 44 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் ‘நீலவான ஓடையில்’ நீந்திக்கொண்டே இருக்கிறது வெண்ணிலா .
நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
623 காட்சிகள்
#👦🏻 நம்மவர் கமல் ஹாசன் Just our @ikamalhaasan sir being super pookie coded 😀 💚 ஆண்டவருடன் காதலும் கவிதையும் ❤️ #KamalHaasan @kavingarsnekan @kannikasnekan #Ulaganayagan_Kamal #maiamoffcial
நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
452 காட்சிகள்
#👦🏻 நம்மவர் கமல் ஹாசன் எங்கு ஆரம்பிப்பது என்ற குழப்பம் என்னுள்..மறக்க முடியாத நாள் இன்று..இத்திரைத் துறைக்குள் வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாக மிக முக்கிய காரணமாக அமைந்த ஒரு மாபெரும் மனிதர்.. "உலகநாயகனோடு" ஒரு மிக முக்கிய சந்திப்பு நல்ல முறையில் நடந்ததை எண்ணிப் பெருமை கொள்கிறேன்❤️ -- @iamleosivakumar 💙 #KamalHaasan MakkalNeedhiMaiam #KamalHaasan MakkalNeedhiMaiam #maiamoffcial #Ulaganayagan_Kamal
நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
562 காட்சிகள்
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial மநீம தலைவருடன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு. இன்று மக்கள் நீதி கட்சித் தலைமை அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களை, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சண்முகம் @Shanmugamcpim அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. கனகராஜ் அவர்களும், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் அவர்களும், திரைப்பட இயக்குநர் திரு. ராஜு முருகன் அவர்களும் நேரில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Retd) @MouryaMNM அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்களும் உடனிருந்தனர். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNElection2026
நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
635 காட்சிகள்
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial மநீம தலைவருடன், மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் சந்திப்பு. இன்று மக்கள் நீதி கட்சித் தலைமை அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் @mp_saminathan அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Retd) @MouryaMNM அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்களும் உடனிருந்தனர். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
582 காட்சிகள்
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம் "As long as the constitution lives in our conduct, the Republic remains strong" President of Makkal Needhi Maiam and Rajya Sabha MP, Mr. Kamal Haasan @ikamalhaasan, wishes all his fellow citizens a very Happy #Republic Day. #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
See other profiles for amazing content