ஃபாலோவ்
RamaswamyAnnamali
@swamy_6943
9,486
போஸ்ட்
38,579
பின்தொடர்பவர்கள்
RamaswamyAnnamali
670 காட்சிகள்
#பத்தி #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😍குட்டி கதை📜 அம்மன் உருவான கதை* காட்டேரி அம்மன் பார்வதி தேவியின் வடிவமாகக் கருதப்படுகிறார். அவர் நகரத்தின் காவல் தெய்வமாக இருக்கிறார். காட்டேரி அம்மன் உருவான கதையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம். ஒரு சமயம் பரமசிவனும், பார்வதி தேவியும் தூங்கச் சென்றனர். பரமசிவன் நன்றாகத் தூங்கிவிட்டார். அவர் தூங்கிய பிறகு எப்போதும் கிளம்புவது போல பார்வதி தேவி கிளம்பி சென்று விட்டார். அன்று மட்டும் தற்செயலாக பரமசிவன் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டார். பரமசிவன் சுற்றும் முற்றும் பார்த்தார், பார்வதி தேவியை காணவில்லை. அவரைத் தேடிப்பார்த்துவிட்டு பரமசிவன் மீண்டும் தூங்கிப்போனார். தனது வேலையை முடித்துக்கொண்ட பார்வதி தேவி ஒன்றும் தெரியாதது போல பரமசிவன் அருகில் வந்து படுத்துக்கொண்டார். 'இரவு எங்கே சென்றாய்?' என்று பரமசிவன் பார்வதி தேவியிடம் கேட்க, 'எனக்குத் தூக்கம் வரவில்லை. அதனால் உலாவி விட்டு வந்தேன்' என்றார். அதற்கு மேல் பரமசிவன் எதுவும் கேட்கவில்லை. மறுநாள் இரவு பரமசிவனுக்கு தூக்கம் வரவில்லை. நடு இரவில் பார்வதி தேவி வழக்கம் போல் கிளம்பினாள். அவளுக்குத் தெரியாமல் பரமசிவன் அவளைப் பின்தொடர்ந்து சென்றார். பார்வதி தேவி சுடுகாட்டிற்குச் சென்று விகாரமான உருவம் எடுத்து, அங்கிருக்கும் பிணங்களை எடுத்துச் சாப்பிட்டாள். இதைப் பார்த்த சிவபெருமான் அதிர்ச்சியடைந்தார். இதற்காகத்தான் பார்வதி தேவி தினமும் வருகிறார் என்பதை உறுதி செய்துக்கொண்டு வீடு திரும்பினார். பார்வதி தேவியின் இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு திட்டம் போட்டார் சிவபெருமான். பார்வதி தேவி செல்லும் சுடுகாட்டு வழியில் அகலமாகவும், ஆழமாகவும் ஒரு குழியைத் தோண்டினார். அதன் மீது தழைகளைப் போட்டு மூடிவிட்டு வந்தார். அன்றைய தினமும் நள்ளிரவு வந்தது. பார்வதி தேவி சுடுகாட்டிற்குப் புறப்பட்டார். சிவபெருமானும் அவரைப் பின்தொடர்ந்தார். மிகவும் ஆர்வமாக சென்ற பார்வதி தேவி அங்கிருந்த குழியில் விழுந்தார். பின்னாடியே சிவபெருமான் வந்து நிற்பதை பார்த்த பார்வதி தேவி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு சிவபெருமான், 'உன்னை என்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. உன்னில் இருக்கும் ராட்சஸ குணத்தை விட்டுவிட்டு வந்தால் மட்டுமே உன்னை ஏற்றுக்கொள்வேன்' என்று கூறினார். 'அப்படியே செய்கிறேன். இந்தக் குழியிலேயே அந்த ராட்சஸ குணத்தை விட்டு வருகிறேன். என்னை வணங்குபவருக்கு நான் நல்லதே செய்வேன்' என்றார் பார்வதி தேவி. குழியில் இருந்து வெளியே வந்ததும் அந்தக் குழியை மூடினார் சிவபெருமான். இன்றும் புதையுண்ட பார்வதி தேவியின் சக்தி பூமிக்கடியில் உள்ளதாக நம்பப்படுகிறது. அந்தக் காட்டேரியம்மனே காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிபடப்படுகிறார்.🍀
RamaswamyAnnamali
661 காட்சிகள்
#ஆன்மீக #👉வாழ்க்கை பாடங்கள் #🚹உளவியல் சிந்தனை ஒருவர் *புதிதாக ஒரு ஆலமரக்கன்றை *தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.* அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது. இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, "இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்" என ஏளனம் செய்தது. ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது. அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , "இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க, இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி. தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது. நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில ஒழுக்க கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்....? ❣️❣️❣️ - சித்தர்களின் குரல்.
RamaswamyAnnamali
513 காட்சிகள்
#ஆன்மீக #பத்தி #தெரிந்து கொள்வோம் #ஹரே கிருஷ்ணாநடமாட்டமே இல்லாத மர்மக் காடு: நிதிவனம்* *ராதாகிருஷ்ணர் கோயில் ரகசியம்!*🌹 ‘நிதிவனம்’ என்றால் புனிதமான காடு (Nidhivanam Radhakrishnan Temple) என்று பொருள். இது பிருந்தாவனத்தில் ஒரு புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. நிதிவனம் உத்திரபிரதேசம், மதுராவில் உள்ளது. இன்றும் இரவில் ஸ்ரீகிருஷ்ணர் நிதிவனத்திற்கு வந்து ராதா மற்றும் கோபியருடன் நடனம் ஆடுவதாகக் கூறப் படுகிறது. காட்டின் புனிதத்தைப் பாதுகாக்க இரவில் தடுப்புகள் போடப்பட்டு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிதிவனத்தில் நிறைய துளசிகள் இருப்பதைக் காணலாம். இவை இரண்டு இரண்டாகவே ஜோடியாகக் காணப்படுவது ஆச்சர்யம். அது மட்டுமில்லாமல், அதன் கிளைகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டிருப் பதையும் காணலாம். நிதிவனம் காடு இன்று வரை மர்மமானதாகவே கருதப்படுகிறது. இங்கே இருக்கும் துளசி செடிகள் வைணவர்களால் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. இந்தக் காட்டில் உள்ள நிலங்கள் வறண்டு இருந்தாலும், இங்கு இருக்கும் துளசி செடிகள் பச்சைப்பசேலென்றே இருப்பது அதிசயமாக இருக்கிறது என்று மக்களால் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இங்குள்ள துளசி செடிகள் எல்லாம் வித்தியாசமான முறையில் வளைந்தும் நெளிந்தும் காணப்படுவதற்கான காரணம். அவை எல்லாம் கோபியர்கள் என்றும் பகலில் மீண்டும் செடியாக உருமாறுவதால் செடிகளின் கிளைகள் தினமும் மாறுபட்டு காணப்படும் என்றும் கூறுகின்றனர். ரங் மஹால் என்றால் வண்ணமயமான அரண்மனை என்று பொருள். தினமும் இரவில் ஆடி களைத்த பிறகு ராதாவும் ஸ்ரீகிருஷ்ணரும் இவ்விடத்தில் வந்து வாசம் செய்வார்கள் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலில் சந்தனத்தால் ஆன படுக்கை இருக்கிறது. தினமும் நடை சாத்துவதற்கு முன்பு கோயில் பூசாரி நகைகள், இனிப்பு வகை, தண்ணீர், புடவை, வளையல், துளசி மற்றும் வேப்பங்குச்சிகளை வைத்து விட்டுச் செல்வாராம். மாலை ஆரத்தி காட்டி கோயிலை பூட்டி விட்டால் அடுத்த நாள் காலையில்தான் கோயில் திறக்கப்படும். ஆனால், காலையில் வந்து பார்க்கும் பொழுது படுக்கையில் யாரோ உறங்கியது போலவும், துணிகளை பயன்படுத்தியது போலவும் இனிப்புகளை உண்டது போலவும் எல்லாம் கலைந்து கிடக்கும் என்று கூறுகிறார்கள். நடை சாத்தப்பட்ட பிறகு கோயிலுக்குள் யாருக்குமே அனுமதி கிடையாது. ஏனெனில், இரவில் ராதாவும் கிருஷ்ணரும் இக்கோயிலுக்கு வருகை தருவார்கள் என்று நம்பப்படுகிறது. யாரேனும் கோயிலில் நடப்பதை பார்க்க வேண்டும் என்று முயற்சித்தால் அவர்களுக்கு புத்தி பேதலித்துவிடும் என்றும் கூறப்படுகிறது. கோயிலை ஒட்டி இருக்கும் வீடுகளில் இருக்கும் ஜன்னல்களையும் ஆரத்தி காட்டிய பிறகு மூடி விடுவார்களாம். அவர்கள் சொல்வது என்னவென்றால் இரவில் நிதி வனத்திலிருந்து கொலுசு சத்தம் கேட்பதாகவும் கூறுகிறார்கள். சுவாமி ஹரிதாஸின் பக்தியை மெச்சி அவர் முன்பு ராதாவும் ஸ்ரீகிருஷ்ணரும் தோன்றினர் என்றும், பின்பு பங்கே பிஹாரி சிலையை அங்கே உருவாக்கி ஹாரிதாஸுடன் கோயில் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாங்கே பிஹாரி சிலை நிதி வனத்தில் இருந்து மாற்றப்பட்டு தற்போது அதற்கென தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் தினமும் மாலை ஐந்து மூடப்பட்டு விடும். எனவே, இக்கோயிலின் அதிசயத்தையும், ராதா கிருஷ்ணரின் அழகையும் ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வாருங்கள்.🍀
RamaswamyAnnamali
676 காட்சிகள்
#ஆன்மீக #பத்தி #தெரிந்து கொள்வோம் *மனதுக்கு_நிம்மதி_தைரியம்_தரும்*. ஸ்ரீ சீதா ராம லக்ஷ்மண பரத சத்ருக்ண அனுமத் சமேதா சரணம் வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66 சர்க்கங்களை உடையது. இதை தினமும் பாராயணம் செய்வது என்பது சிரமம். எனவே, சுந்தரகாண்ட பாராயணத்தை எளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள். சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர். சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்கு கிறோம் என்று அர்த்தம். சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்த மாக படித்து வந்தால் வாழ்க்கை யில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும். சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள். சுந்தரகாண்ட பாராயணம் மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் உரிய பலன் கிடைக்கும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபட லாம். சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும். ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணெய் வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம். சுந்தரகாண்டம் ஸ்ரீ ராம ஜெயம் சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான் இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி இராஜகம்பீரத்தோடு இராமதூதன் சென்றான். அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும் அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே! வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள் வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே! மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான். இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான் அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான். சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும் சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான் ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க ! கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான். பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர் பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான் வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான். ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான் அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான். ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம் ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான். வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான். மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான். ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான். அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான். அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார் அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு. (எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே உனை பணிகின்றோம் பலமுறை) ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்னமாவார் என்பது ஐதிகம்.🌹
See other profiles for amazing content