17 வயது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை.
* கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்கள்
* இவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் ஆகிய செயல்பாடுகள் மூலம் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
* உத்தரவின்படி குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் அவர்கள் மேற்பார்வையில் இவ்வழக்குகளின் நீதிமன்ற விசாரணை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
* இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் பர்மா காலனி பகுதியை சேர்ந்த சின்னகனி நாடார் என்பவரது மகன் ராமர் (34) என்ற குற்றவாளி 17 வயது பெண்ணை அப்பெண்ணின் வீட்டிலிருந்து கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததற்காக....
* அனைத்து மகளிர் காவல் நிலையம் கன்னியாகுமரி குற்ற எண் 07/ 2018 U/S 366(A) IPC, 5(l), 6 of POCSO Act இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
* இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது
* இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள்.
* நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த...
* வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை முறையாக கண்காணித்த கன்னியாகுமரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கிய வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை.
* கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் ஆகிய செயல்பாடுகள் மூலம் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
* உத்தரவின்படி குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் அவர்கள் மேற்பார்வையில் இவ்வழக்குகளின் நீதிமன்ற விசாரணை கண்காணிகக்கப்பட்டு வருகிறது.
* இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு தெரு குழாயில் இருந்து தண்ணீர் எடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த 51 வயது பெண்ணை,
* அவரது வீட்டுக்குள் மறைந்திருந்த அன்பு நகர், புத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன் சந்தோஷ் குமார் (28) என்ற குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயலும் போது அந்தப் பெண் எதிர்த்ததால் அரிவாளால் அந்தப் பெண்ணை தலை மற்றும் நெற்றியில் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதற்காக...
* வடசேரி காவல் நிலைய குற்ற எண் 452 / 2022 , 452, 354, 324, 506(ii) IPC & 4 of TNPWH Act @ 142/2022 U/s 307, 376, 452, 511 IPC and 4 of TNPHW Act இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது
* இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள்
* நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த...
* வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை முறையாக கண்காணித்த நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
ஆறுகாணி பகுதியில் ஞாயிற்றுகிழமை நாட்களில் இயங்காத பேருந்து நடைகள்: நடைகளை இயக்க மக்கள் கோரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியில் இயங்கி வரும் 311M/A பேருந்தின் காலை நேர சேவை இயங்கி வருகிறது. ஆனால் மாலை 5.30 மணி சேவை ஞாயிற்றுகிழமை நாட்களில் இயங்குவதில்லை. மேலும் ஆறுகாணி பகுதியில் அருமனை வழியாக இயங்கும் 311M/B பேருந்தின் 3 நேர நடைகள் இயங்குகின்றன. ஆனால் மாலை 4.20 மணிக்கு இயங்க வேண்டிய பேருந்தின் சேவை தற்போது சில காலங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மதியம் 1.20 மணி கழித்தால் அருமனை வழியாக செல்ல மாலை 6.45 மணிக்கு தான் அடுத்த பேருந்து உண்டு. இப்பேருந்தின் சேவை இல்லாத காரணத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த இருப்பேருந்துகளின் நடைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
நாகர்கோவில்
கே.பி ரோடு டிஸ்டிக் கிளப் அருகே உள்ள
அடுத்த -அடுத்த சாலையோரத்தில்
பாதாள குழி தோண்டி
எந்த வித விதமான பாதுகாப்பு கட்டுமைப்பு வசதிகளை எற்படுத்தாமல் குழியை தோண்டி விட்டு சென்று உள்ளனர்
முக்கிய சாலையான இந்த பகுதியில் ஏராளமான. இரு சக்கர வாகனம் போக்குவரத்து வாகனங்கள் செல்லும் பகுதியாகும் இரவு நேரங்களில்
விபத்துக்கள் ஏற்பட்டால்
யார்? பொறுப்பு ஏற்பது மாவட்ட ஆட்சியர அல்லது மாநகராட்சி ஆணையரா தொடர்ச்சியாக மாநகராங்களில் பணிக்காக தோண்டிய குழியை முடமால் காரணத்தால் பல விபத்துகள் எற்பட்டு உயிரிழப்பு எற்பட்டுள்ளன உடனடியாக
விசாரணை செய்து இச்செயலுக்கு காரணமான துறை அதிகாரிள் மீதும்
குழியை தோண்டியவர் மிது தகுந்த நடிவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என. உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
*🚨போலி சமூக வலைத்தள பக்கத்தில் பெண்களின் புகைப்படங்களை காட்டி உல்லாசமாக இருக்க பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைது... சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை*
ஜனவரி 23 2026,
⏺️ facebook ID பயன்படுத்தி ஆபாச சாட்டிங் மற்றும் வயதிற்கு ஏற்ற பெண்கள் தனித்தனியாக ரேட் எனக் குறிப்பிட்டு ஆபாச உரையாடலுக்கும், உடலுறவுக்கும் அழைப்பு விடுத்து வாட்ஸ்அப் எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும்
⏺️அந்த எண்ணில் பேசும் பெண் ஒருவர் நீங்கள் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் ஆபாச வீடியோ கால் மற்றும் ஆபாச சேட்டிங் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி பலரும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
⏺ இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின் IPS* அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
⏺ உத்தரவின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்து குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போலி Facebook ID மூலம்
உல்லாசமாக இருக்கலாம் பணம் பறித்து ஏமாற்றிய ராமநாதபுரம் பரமக்குடி பகுதியை சேர்ந்த முகமது ஷாஜகான் என்பவரது மகள் நபிலா பேகம் (27) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
⏺ சமூக வலைதளங்கள் மூலம் பெண்களின் படங்களைக் காட்டி பணம் வாங்கி, தொலைபேசி அழைப்புகளை புறக்கணிப்பது போன்ற ஆன்லைன் தொழில்முறை மோசடி நடந்து வருகிறது. இதனை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
நாகர்கோவில் லாரி உரிமையாளர் மீது தாக்குதல், எஸ்ஜ
மீது லாரி உரிமையாளர் சங்கத்தினர் எஸ்பியிடம் புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் லாரிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கன்னியாகுமர் மாவட்டம் அருமனை புண்ணியம் காராலிவிளை பகுதியில் ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்த இன்னோவா கார் மின்கம்பத்தில் மோதி விபத்து ,
ஓட்டுனர் முகத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
பேருந்தின் சேவையை துவக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட கடையல் பேரூராட்சியில் அதிகப்படியான மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு நாகர்கோவில் பகுதிக்கு செல்ல பஸ் வசதி கிடையாது.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 313 E என்ற பேருந்து நாகர்கோவில் முதல் கோதையார் வழித்தடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்போது முன்று வருடமாக அந்த பேருந்து இயக்கப்படவில்லை. மேலும் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மருதங்கோடு மற்றும் இடைக்கோடு பகுதியில் தற்போது இயங்கி வரும் மார்த்தாண்டம் பணிமனை பேருந்துகள் 85 B களிக்காவிளை, இளஞ்சிறை, மும்பள்ளி கோணம், சூரங்குடி, மாங்காலை, பனிச்ச மூடு மற்றும் 83E எண் கொண்ட மேல்புறம், செம்மங்காலை, மருதங்கோடு, பனங்காலை, களியக்காவிளை, ஆகிய இரு பேருந்துகளும் தற்போது ஒரு வழித்தடத்தில் மட்டுமே இயங்கி வருகிறது.
இதனை இரு வழித்தடத்திலும் இயக்க வேண்டும் என்று மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் திரு. சிவசங்கர் அவர்களை இன்று(ஜன.21) நேரில் சந்தித்து எம்.எல்.ஏ தாரகை கோரிக்கை மனு அளித்தார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
*கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை துரத்தி பிடித்த நாகர்கோயில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ....மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு*
ஜனவரி 21,
🔸 கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.R.ஸ்டாலின் IPS* அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
🔸அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அழகிய பாண்டிபுரம் சானல்கரை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் சுமன் (26) என்பவரை சோதனை செய்ததில் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோவிற்கு மேல் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
🔸முன்னதாக நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரை பார்த்ததும் ஓடியவரை சில தூரம் துரத்தி பிடித்தது குறிப்பிடத்தக்கது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
ஊருக்கு ஒரு காவலர் திட்டம் வெற்றி நடை: மருத்துவர். இரா. ஸ்டாலின் எஸ்.பி அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளரும் ரஹ்மத் கார்டன் ஊர் ஜமாஅத் தலைவருமான ஷேக் முகமது பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஊருக்கு ஒரு காவலர்’ திட்டம் மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்தத் திட்டம், ஊர் மட்டத்தில் நேரடி கண்காணிப்பை உறுதி செய்து, குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் பெரிதும் பயனளித்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ரஹ்மத் கார்டன் பகுதியில் தனிப்பட்ட ஒரு காவலரை நியமித்ததற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட செயலாளரும் ரஹ்மத் கார்டன் ஊர் ஜமாஅத் தலைவருமான ஷேக் முகமது தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இத்திட்டம் வாயிலாக பொதுமக்கள் பாதுகாப்புடனும், அச்சமின்றியும் வாழும் சூழல் உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற மக்கள் நலக் காவல் திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், காவல் துறையின் இந்த முயற்சி சமூக அமைதிக்கு வலுவூட்டுவதாகவும் பாராட்டினார்.
மாவட்ட அளவில் காவல் துறையின் இந்த முன்முயற்சி, பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகரித்து, சட்டம்-ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
இது போன்ற சிறப்பான திட்டங்களை தமிழ் நாடு முழுவதும் நடைமுறை படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்







![📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - UD 8 pls] 9528 9 UD 8 pls] 9528 9 - ShareChat 📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - UD 8 pls] 9528 9 UD 8 pls] 9528 9 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_46836_270be9e8_1769148045269_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=269_sc.jpg)




