
⍣⃝𓄂☞coffee day ⍣⃝𓄂☞
@coffeeday
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
*அக்டோபர் 15,*
*உலக மாணவர்கள் தினம்*
இந்திய இளைஞர்கள், மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த தினமான அக். 15 உலக மாணவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உடலால் மறைந்தாலும் இவரது கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஆற்றிய பங்கு, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததன் மூலம் அனைவரது மனதிலும் வாழ்கிறார்.
1931 அக்., 15ல் ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து, ராக்கெட், அணு ஆயுத, ஏவுகணை விஞ்ஞானி, நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தார். 2015ல் உயிர் பிரியும் வரை இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையால் இது அதிகாரப்பூர்வமாக "உலக மாணவர் தினம்" என்று அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
🦉இதே அக்டோபர் 14
*உலகத்தர நிர்ணய தினம் (World Standards Day)*
உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. அதைநினைவூட்டும் வகையில் உலகத் தர நிர்ணய தினம் 1970ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என தர நிர்ணய அமைப்பு கூறுகிறது.
விரிவாக சொல்வதானால் தரம் என்பது கடைபிடித்தே தீர வேண்டிய பொது நெறிமுறை என்பதை ஒவ்வொரு உற்பத்தியாளரும் உணரும் விதத்திலும், தரமான உணவினை பெறுதல், அதற்கான தொகையினை செலுத்தும் நுகர்வோரின் உரிமை என்பதையும் உணரும் வகையிலும் உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கடந்த 1946ம் ஆண்டு, லண்டனில் 25 கூடி ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்குப்பின்னர், சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவானது. ஜெனீவாவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் 130 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. மின் மற்றும் மின்னணு இன்ஜினியரிங் துறைக்கு ஐ.இ.சி., தொலைதொடர்பு துறைக்கு ஐ.டி.யூ., , பிற அனைத்து துறைகளுக்குமான சர்வதேச தர நெறிமுறைகளை ஐ.எஸ்.ஓ., என வகுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே சீரான தர முறைகளை வகுப்பதிலும் சான்றளிப்பதிலும் இந்திய தர நிர்ணய அமைப்பு(Bureau of Indian standards)இருக்கிறது. இது ISOவில் அங்கம் வகிக்கிறது. 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பி.ஐ.எஸ் சட்டம் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய இந்திய தர அமைப்புச் சட்டம் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
தொழிலின் தரத்தையும், வளத்தையும் உயர்த்த உதவும் ஐஎஸ்ஓ சான்றிதழ் உலகத்தில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் அங்கு தயராக்கப்படும் பொருளுக்கு தரம் மிக அவசியமாக உள்ளது. இந்த சர்டிபிகேட் இருந்தால் தான் வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பதோடு, லாபத்தை பெற முடியும் என்ற நிலைக்கு வியாபார நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது. தரத்தை உயர்த்தினால் ஐ.எஸ்.ஓ. எனும் உலகத்தர அங்கீகாரம் கிடைக்கின்றது. அதனால் மூலம் உற்பத்தியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என்ற கொள்கையில் துவங்கப்பட்ட சர்வதேச தர நிர்ணய அமைப்பு தினம் 1969ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
🦉சி.பி.முத்தம்மா காலமான தினமின்று🐾😢
🎓இன்று ஐ ஏ எஸ் அல்லது ஐ பி எஸ் என்ற சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத ஆசைப்படும் பல இளம் பெண்கள் இந்தப் பெயரை கேள்விப்பட்டிருக்கக் கூடுமா என்பது டவுட்தான். ஆனால் மூடத்தனத்தினால் எழுப்பப்பட்ட ஒரு மதில் சுவரை தனி ஒருவராக உடைத்து அடுத்தடுத்து வந்துக் கொண்டிருக்கும் தலைமுறைக்கு வழி அமைத்தவர் அவர்.👀
நம்ம மெட்ராஸ் விமன் கிறிஸ்டியன் காலேஜிலும், மாநிலக் கல்லூரியிலும் படித்த சி. பி. முத்தம்மா (கொனெரி பெல்லியப்பா முத்தம்மா), கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில்தான் பிறந்தார். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண்.
இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949-இல் பணியில் சேர்ந்தவர்.
இவர் டூட்டியில் சேரும்போது வெளியுறவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான பணி விதிகளின்படி, அந்தத் துறையில் பணிபுரியும் பெண் மேரேஜ் செய்றதுக்கு முன்னாடி கவர்மெண்டிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று சொல்லின. அது மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள், வெளியுறவுத்துறையில் அவரது பணிக்குத் தடையாக இருக்கிறதென்று அரசு கருதினால், அந்தப் பெண் ராஜினாமா செய்ய வேண்டுமென அரசு நிர்பந்திக்கும் என்றும் அந்த விதிகள் சொல்லின.
இதைப் போன்ற விதி ஆண்களுக்குக் கிடையாது. இந்தத் துறையின் இன்னொரு விதி, திருமணமான எந்தப் பெண்ணும் இந்தப் பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்றது. சுருக்கமாகச் சொன்னால், இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பும் உரிமையும் ஆண்களுக்கு மாத்திரமே உரியது.
25 வயதில் முத்தம்மா பணியில் சேரும்போது பணி நியமனக் குழுவின் தலைவர், ‘இந்த விதிகளை எடுத்துச் சொல்லி, வெளியுறவுத் துறையில்தான் நீ சேர வேண்டுமா?’ எனக் கேட்டபோது, ‘ஆமாம்’ எனப் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். அவரை அந்தப் பணியில் சேர இயலாமல் செய்யும் நோக்கத்துடன், அந்த அதிகாரி அவருக்கு நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் அளித்தார். ஆனாலும் அவரது மற்ற மதிப்பெண்கள், அவர் நினைத்த வண்ணமே வெளியுறவுத் துறையில் சேர வாய்ப்பளித்தன.
ஆனால் அவரது பிரச்சினை அத்துடன் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்குப் பின்னர்தான் ஆரம்பம் ஆயிற்று. ஏனெனில் அதன் பின் ஒவ்வொரு கட்டத்திலும் பலவிதமான பாலியல் பாகுபாடுகளுக்கு அவர் ஆளாக நேர்ந்தது.தொடர்ந்து முப்பது வருஷமா இத்தகைய பாகுபாட்டை எதிர்கொண்ட அவர் 1979-ம் வருஷம் , பணி ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னாடி அரசின் இந்த விதியே பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கிறதென்றும் பெண் என்பதாலேயே பணியில் அமர்வதற்கான உரிமை பாதிக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதென்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த வி ஆர் கிருஷ்ணயரிடம் அரசு இந்த விதிகள் நீக்கப்படும் என உறுதி அளித்தது.
ஆக அரசு விதிகளில் இருந்த ஆணாதிக்கக் கருத்துக்களைத் தனது மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் உடைத்தெறிந்த முத்தம்மா. இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த அவர் டெல்லியில் தனக்குகு இருந்த 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் அறப்பணி அமைப்பிற்கு அளித்தார். இப்போது அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது.❤
அப்பேர்பட்ட ரியல் அம்மணி தனது 85 வது வயதில் 2009ம் ஆண்டு இதேஅக்டோபர் 14ம் தேதி காலமானார். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
🦉இதே அக்டோபர் 14
சுந்தர ராமசாமி காலமான நாளின்று , 😢
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர்.
பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்.
(சாம்பிள் :நம்பிக்கை
தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்).
நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள். 50களின் இறுதியில் எழுத ஆரம்பித்த ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலை 1966-ல் எழுதி முடித்தார்.
அடுத்து ஜே ஜே சில குறிப்புகள் வெளிவந்த காலத்தில் இன்று பாகுபலி போல தமிழ் நாடு முழுக்க பிரம்மாண்டமாக பேசப்பட்டவர். 82 முதல் 92 வரையிலான பத்தாண்டு காலத்தில் ஜே ஜெ மிகப்பெரிய பாதிப்பை தமிழ் சூழலில் நிகழ்த்தியிருந்தான். ஜே ஜேவை படித்து விட்டு பலரும் ஜே ஜேவாக தங்களை கற்பனை செய்துகொண்டு பிதற்றிய காலம் அவை..
1988-ல் ‘காலச்சுவடு’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். உயர் தரமான படைப்புகளும், புதிய சிந்தனைகளும் இதில் வெளிவந்தன. தற்போதும் இது மாத இதழாக வெளிவருகிறது #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥
1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ ‘சரோஜா நினைவு நாளின்று😢
தமிழ் சினிமா பிதாமகர் இயக்குனர் கே சுப்ரமண்யத்தின் சகோதரர் கே விஸ்வநாதனின் மகள் பேபி சரோஜா. ஜனவரி 28, 1931ம் ஆண்டு பிறந்த சரோஜா, 1930களில் வெளிவந்த பல சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கினார். பால யோகினி (1937), தியாகபூமி (1938), காமதேனு (1939) உள்ளிட்ட பல படங்களில் நடிச்சு புகழ்பெற்றார். குடும்பத்தில் மொத்தம் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவரான பேபி சரோஜாவை, அவரது தாய் அலமேலு விஸ்வநாதன், சரோஜாவின் மாமாவும் பிரபல இயக்குனரிடம் மகளை அறிமுகம் செய்யச் சொன்னார்.
பாலயோகினி படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்தாய்ங்க. அப்படத்தில் பட்டு கவுன் பறக்க அழகான சுருட்டைத் தலைமயிருடன் கண்கள் விரியப் புன்னகைத்தவாறு பேபி சரோஜா பாடிய ‘கண்ணே பாப்பா’ பாடல் பெரும் ஹிட்டடித்தது. அந்த படம் வெளியான பிறகு,அன்றைய ஹாலிவுட் பட உலகின் உலகப்புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர் ஷர்லி டெம்பிள் ஆவார். பேபி சரோஜாவை அனைவரும் இந்தியாவின் ஷர்லி டெம்பிள் என்று அழைத்தனர்.
அந்த படம் வெளியான பின்பு பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்றே பெயர் வைச்சாய்ங்க.சரோஜா மை, சரோஜா பவுடர், சரோஜா சாந்து, சரோஜா வளையல் என்ற எட்டு திக்கும் சரோஜா பெயரே பேசப்பட்டது.
தியாகபூமி படத்தில் பாபநாசம் சிவன் எழுதிய ‘கிருஷ்ணா நீ பேகனே பரோ’ பாடலுக்கு பேபி சரோஜா ஆட அவரது அம்மா அலமேலு பாடினார்.நடிப்பது மட்டுமின்றி இசையில் பேபி சரோஜா புகழ்பெற்று விளங்கினார். காரைக்குடி சாம்பசிவ ஐயரின் சிஷ்யையாக வீணை கற்றுக் கொண்டவர் சரோஜா என்பது கூடுதல் தகவல். பேபி சரோஜா ஜப்பான் வரை பிரபலமானாராக்கும்.
அந்த காலத்திலேயே பேபி சரோஜாவின் முகம் அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகள் அங்கு பிரபலமாயிருந்தனவாம். சரோஜாவை ‘செர்லி டெம்பிள் ஆஃப் தமிழ் சினிமா’ என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.அதாவது இவரின் படம் வெளியானதும், அப்போது குழந்தைகள் பயன்படுத்தும் சோப்பு முதல் நோட்டுப் புத்தகங்கள் வரை அனைத்திலும் பேபி சரோஜாவின் படத்தைப் பதித்து விளம்பரத்தின் வாயிலாக லாபத்தை அள்ளி இருக்காய்ங்க .
அதே சமயம் அப்போ மிகவும் பிரபலமாக இருந்த காதர் இஸ்மாயில் அண்ட் கம்பெனி வெளிநாடுகளில் இருந்து சோப்பு இறக்குமதி செய்து அதில் பேபி சரோஜா படத்தினை வைத்து லாபம் அதிகம் பெற முயற்சித்தது. ஆனால் அது இந்திய விடுதலைப் போராட்ட காலம் என்பதால் அந்நியப்பொருட்களை வாங்குவதில்லை என்று மக்கள் புறக்கணித்தனர். பேபி சரோஜாவும் புறக்கணித்து, தனது எதிர்ப்பையும் வலுவாகப் பதிவு செய்தார்.
இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரான பேபி சரோஜா,வுக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் நினைவஞ்சலி செய்கிறது #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
பொய்யான அன்பு...!!
பொழுதுபோக்கானப் பேச்சு...!!!
தேவைப்படும் போது தேடல்...!!!!
இதுதான் இங்கே
பலரது வாழ்க்கை....!!! #😔தனிமை வாழ்க்கை 😓 #💘Love Quotes & Videos
#✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🎵Lyrical Status
*அக்டோபர் 14, 1887*
டாக்டர் ஆற்காடு லட்சுமணசுவாமி முதலியார் பிறந்த தினம்.
இவர் தமிழகத்தின் புகழ்பெற்ற கல்வியாளர் ஆவார்.
இவர் எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆற்காடு ராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள்.
இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்) மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர். உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ம் ஆண்டுகளில் செயல்பட்டார்.
எட்டாவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 ம் ஆண்டிலும் 14 வது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 ம் ஆண்டிலும் செயற்பட்டார்.
கிராமப்புற மருத்துவ சேவை வரலாற்றில் 1959 ம் ஆண்டில் முதலியார் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் குறிப்பிடத்தக்கவை.
இந்திய அரசு இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺