அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏
14K Posts • 4M views
ARCHANA 💙😻💃
4K views 1 months ago
புரட்டாசி ஸ்பெஷல் 07🌲 ********************************* 🌹நாலாயிர திவ்ய பிரபந்தம் *********************************** 🚩சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக் கிறைவன் தலைபத்து உதிர வோட்டிஓர் வெங்கணை யுய்த்தவ னோத வண்ணன் மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் திருவயிற் றுதரபந் தனமென் னுள்ளத்துள்நின் றுலாகின்றதே 🌹விளக்கம்: 🔸சதுரம் என்றால் நான்குபக்கம் என்று மட்டுமல்ல சாமர்த்தியம், திறமை, நேர்த்தி என்ற இன்னொரு பொருளும் உண்டு. சதுர மா மதிள் = சாமார்த்தியமாகக் கட்டப்பட்ட சிறந்த மதில்கள். 🔸சதுரமான வடிவில் உயர்ந்த மதில்களா ல் சூழப்பட்ட இலங்கை நகரம்; அதன் தலை வனாக (இறைவன் என்பார்கள் அரசனை கம்பன் பலமுறை இச்சொல்லை பயன் படுத்தி இருப்பான்) திகழ்ந்த ராவணன்; 🔸அவன் வீரனாக இருந்தாலும் அதர்ம செயல்களில் ஈடுபட்டதால் ராமனின் கோபத்திற்கு ஆளானான். 🔸யுத்தத்தில் ராமன் ராவணனை ஓடவிட்டுத் தொலைத்தான். வீரனான அந்த ராமன் காண்பதற்கு அழகிய கடல் வண்ணன். 🔸இந்த அரங்க நகருள் பெரிய அல்லது சிறந்தவண்டுகள் இனிமையாகப் பாடுகின்றன. சிறந்த மயில்கள் அந்தப் பாட்டிற்கு ஏற்றார் போல ஆடுகின்றன. 🔸இன்று அந்த அரங்கனின் (ராமனின் கம்பீரமான) அழகு என் நெஞ்சத்தில் நிலையாக நின்று, மெல்ல அழகாக பவனி வருகின்றது. 🔸இந்த அரங்கனின் திருவயிற்றைச் சுற்றி உள்ள உதர பந்தம் எனில் தாமோ தரனான (யசோதை கயிற்றினால்; வயிற் றில் கட்டியபோது உண்டான தழும்பு) அவன் வயிற்றுத்தழும்பு எனவும் கொள்ளலாம். 🔸இன்றும் அரங்கனின் திருமஞ்சனத்தி ன் ப்போது இதைக்கண்டு சேவிக்கலாம். அது அப்படியே என் உள்ளத்தில் உலாவுகின்றது. 🌹 ஶ்ரீரங்கா.. ஶ்ரீரங்கா.... 🌹ஜெய ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதாராம்... #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #🙏பெருமாள்
21 likes
1 comment 37 shares
ARCHANA 💙😻💃
2K views 1 months ago
புரட்டாசி ஸ்பெஷல் 06🌲 ********************************* 🌹நாலாயிர திவ்ய பிரபந்தம் *********************************** 🚩மைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவீ விண்ண ப்பம் ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட அத்தகுசீ ரயோத்தியர்கோன் அடையாள மிவை மொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே 🌹விளக்கம்: 🔹மைபோல் கருத்த நிறத்தை உடைய சிறந்த மலர்களை அணிவத ற்கு உரிய கூந்தலையுடையவளே! 🔹பிராட்டியே அடியேன் பணிவுடன் கூறுவது என்னவென்றா ல் பெருமாளோடு இன்பத் துன்பங்களை ஒத்தி ருக்கப் பெற்றவன் என்ற கீர்த்தியையுடைய 🔹வானரஅரசன் சுக்ரீவன், இராமபிரானோடு கூட அமர்ந்து உங்களைத் தேடும்படி நாலா புறமும் வானர படை வீரர்களை அனுப்ப, 🔹உங்களை பிரிந்தபின் உணவும் உறக்கமும் கொள்ளாமலும், அமர்ந்திருக்கு ம் போது ஏதாவது தன்னைக் கடித்தாலும் தன் மேல் ஊர்ந்து போனாலும் அதை உணராமலு ம், தனக்கு விருப்பமான எந்த பொருளைப் பார்த்தாலும் உங்களையே நினைத்துக் கொ ண்டும் அந்த நிலைக்குத் தக்க உங்கள்மேல் அன்பென்னும் குணத்தையுடைய 🔹அயோத்தி மக்களுக்கு அரசனான பெருமாள் அடையாளங்கள் இவை இவை என்று அடியேனிடத்தில் சொல்லியருளினான் #🙏பெருமாள் #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏ஆன்மீகம் #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் 🔹இப்படியாக இவை எனக்கு தெரிய வந்தன. (இதற்கு மேலும்) அடையாளம் இந்த இராம பிரானுடைய திருக்கையில் அணிந்து கொள்ளும் மோதிரமாகும். 🌹ஜெய ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதாராம்...
10 likes
1 comment 27 shares
ARCHANA 💙😻💃
17K views 1 months ago
🪔 🌲புpரட்டாசி ஸ்பெஷல் 05🌲 ******************************** ♦️♦️நாலாயிர திவ்ய பிரபந்தம் ************************************** 🚩வாரா வருவாய் வருமென் மாயா! மாயா மூர்த்தியாய்! ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய், தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? 🌹பதவுரை 🔹வாரா அரு ஆய் வரும் என் மாயா= திருவுருவ த்தோடு வாராமல் அரூபியாய் உள்ளே வந்து தோன்றுகின்ற என் மாயவனே! 🔹மாயாமூர்த்தியாய் ஆராஅமுது ஆய்அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் = ஒரு நாளும் அழியாத தெய்வீக மங்கள உருவை உடையவ னே, எவ்வளவு அனுப வித்தாலும் தெவிட்டாத அமுதமாய், என் உள்ளுக்குள்ளே தித்தித்திருப்பவனே! 🔹தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திரு குடந்தை ஊரா = தொலையாத பாவ ங்களும் தொலையும்படியாக அடியேனை ஆண்டருளி னவனே திருக்குடந்தைப் பதியோனே! 🔹அடியேன் உனக்கு ஆள்பட்டும் இன்னம் உழல் வேனோ =அடியேன் உனக்கு அடிமைப் பட்டும் இன்னமும் மனக் கிலேப்படுவேனோ. 🌹விளக்கம்: 🔺இப்பாசுரத்தில் எம்பெருமான் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றி அரூபியாய் உள்ளே வந்து தோன்றியதை கூறுகிறார். 🔺அதோடு தன் பாவங்களை இல்லாமல் செய்த தையும் கூறுகிறார். திருவுருவத் தோடு வாரா மல், அரூபியாய் வந்து தோ ன்றுகின்ற, அடியே னுடைய மாயவனே! 🔺ஒருநாளும் அழியாத(மாயாத) தெய்வீக மங்கள உருவை உடையவனே.(முதல் அடியில், முதலில் வரும் “மாயா” என்ற சொல் “மாயவ னே” என்றும் அடுத்து வரும் அதே சொல் “மாயாத” என்றும் பொருள்படும்). 🔺எவ்வளவு அனுபவித்தாலும் தெவிட்டாத அமுத மாய் என் உள்ளே தித்தித்திருப்பவ னே! தொலையாத பாவங்களும் தொலை யும்படியா க அடியேனை ஆண்டருளினவ னே, திருக்குட ந்தைப்பதியோனே! 🔺அடியேன் உனக்கு அடிமைப்பட்டும் இன்னமும் மனக் கிலேப்படுவேனோ. 🌹ஓம் நமோ நாராயணாய... #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏பெருமாள் #🙏ஆன்மீகம் #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
57 likes
2 comments 148 shares
ARCHANA 💙😻💃
1K views 1 months ago
புரட்டாசி ஸ்பெஷல் 04🌲 ********************************* 🌹நாலாயிர திவ்ய பிரபந்தம் *********************************** 🌹ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்றுள் ஆயுமாய் ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே? 🌹விளக்கம்: 🚩ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி = 1. ஐந்து - பஞ்ச பூதங்கள், ஆகாசம், வாயு, அக்னி, நீர், பூமி. 2. ஐந்து - ஞான இந்திரியங்கள் - செவி, கண், வாய், மூக்கு, உடல். 3. ஐந்து - கருமேந்திரியங்கள் - வாக்கு, கையசைவு, நடை, கழிவு, கலவி. 🚩அல்லவற்றுள் ஆயுமாய் = இல்லாத, காண முடியாத விஷயங்களில் கூட உள்ளவனாக 🚩ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி = ஐந்தும் - மேற்சொன்ன பஞ்ச பூதங்களா ன, ஆகாச, வாயு, நெருப்பு, நீர் மற்றும் பூமிக்கான அணு மாத்திரைகளான விதைகளாகவும், ஏனெனில் பிரளயத்தில் இவை அழிந்து போனாலும் மீண்டும் உருவாக்கிட, மூன்றும்- இயற்கை (ப்ரக்ருதி) அகண்டத்தவம் (மஹாக்) என்று எல்லைகளற்ற வ்யாபிதம், மற்றும் இதனால் உண்டான அகந்தை (அஹங்காரம்) ஆகவும். ஒன்றுமாகி- மேற்சொன்ன எல்லாவற்றின் 23 விஷயங்க ளின் கலவை ஆன 'மனது' என்ற ஓன்று ஆகவும். 🚩ஆகி = மேற் சொன்ன 5+5+5+5+3+1 = 24 எண்ணிக்கை கொண்ட ஜீவன்களின் வாழ்க் கைத் தத்துவங்களாகவும், 🚩ஆதி தேவனே = இந்த ப்ரபஞ்சத்திற்கும் முன்னான தேவனே. 🚩ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி= 1.ஐந்து - இயற்கையில் காண முடியாத பஞ்ச பூதங்களின் உயிர் நாடியான சக்திகள், 2. ஐந்து - எம்பெருமானின் திவ்ய மங்கள விக்ரஹங்களில் உள்ள பஞ்ச லோகங்களின் (இரும்பு, செம்பு, வெங்கலம், பொன், வெள்ளி) கலவை, 3. ஐந்து - பஞ்ச சத்தியங்களைக் குறித்திடும் வேத மயமான ஸ்வரூபமும், 🚩அந்தரத்து அணைந்து நின்று = எங்கு தேடினா லும் காணாது ஆனால் எல்லாவற்றிலும் நிறைந்து, ஆகாயம் போல 🚩ஐந்தும் ஐந்தும் ஆய= 1. ஐந்து - மேற்சொன்ன ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களை இயக்கிடும் ஐந்து சக்திகள். 2. ஐந்து - சேதனா சேதனர்களின் இருப்பிட மான பூமி , தேவர்கள் வாழ்ந்திடும் தேவ லோகம், முமுக்ஷுக்கள் என்னும் மோக்ஷத்தை விரும்பி அடைந்தவர்க ள் வாழும் இடம், எம்பெருமானின் நிவாசமான பரம பத ஸ்ரீ வைகுண்டம், எங்கும் நிறைந்த ஆனால் காண முடியாத வான் வெளி அல்லது ஆகாயம் - பரம ஆகாயம். 🚩நின்னை யாவர் காண வல்லரே = முதல் வரியில் சொன்ன சொன்ன 15 + இரண்டாம் வரியில் சொன்ன 9 + மூன்றாம் வரியில் சொன்ன 15 + நான்காம் வரியில் சொன்ன 10 = 49 + இவை அத்தனையின் மொத்த ஸ்வரூபனான 1 = 50, என்னும் அகண்ட அரூப, ஸ்வரூபனான நீ, அவ்வளவு எளிதாக எவர் கண்ணுக்கும் புலப்படுவாயோ?.. 🌹ஓம் நமோ நாராயணாய.... #அர்ச்சனா ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் 💝🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏பெருமாள்
8 likes
12 shares