ஆஷூரா
25 Posts • 6K views
Islamic Way ❤️ Of Life
586 views 2 months ago
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.' அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். *ஸஹீஹ் புகாரி : 1294.* *🗓️ முஹர்ரம் 10 (ஆஷூரா தினம்) 🗓️* "இந்த தினத்தில் கொண்டாட்டங்களுக்கோ அல்லது துக்கம் என்ற பெயரில் தன்னைத் தானே வேதனை செய்து கொள்வதற்கோ இஸ்லாத்தில் எந்த அனுமதியும் இந்த தினத்தில் நபி ﷺ நோன்பு நோற்றார்கள் நம்மையும் நோன்பு நோற்கும் படி ஏவினார்களே தவிர வேறு எந்த சிறப்பும் இந்த நாளுக்கு இல்லை‼️ "இஸ்லாத்தில் கொண்டாட்டத்திற்குரிய இரண்டு நாட்கள் நோன்புப் பெருநாள் ✨💐 மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே ‼️ "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ❤️ இந்த சமூகத்தை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பானாக எப்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உதவி செய்தானோ அதேபோல் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு முஃமின்களுக்கும் உதவி செய்வானாக 😥 அல்லாஹ்வின் மீது வலுவான உறுதியான நம்பிக்கை கொண்ட கூட்டமாகவும் வெற்றி பெறக் கூடிய கூட்டமாகவும் அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் ❤️ உங்களையும் என்னையும் உண்மை முஃமின்களையும் ஆக்கி அருள் புரிவானாக... இன் ஷா அல்லாஹ் ❤️ ஆமீன் ஆமீன் ஆமீன் ❤️ யா ரப்புல் ஆலமீன் ❤️✨💐🤲🏻... #ஆஷூரா #முஹர்ரம் #HalalPost #islam #Islamic Way Of Life Official
11 likes
8 shares
Islamic Way ❤️ Of Life
979 views 2 months ago
"ஏன்ூரா தினத்தில் நோன்பு வைக்க வேண்டும்⁉️ "இந்த ஆஷூரா தினம் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு படிப்பினை தரும் தினம் அல்லாஹ் ஒருவன் தான் வணங்கத் தகுதியானவன் என்ற கட்டளையை மக்களிடம் எடுத்து கூறியதன் காரணமாக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் பலவிதமான துன்பங்களை சந்தித்தார்கள் 😥 அப்போது இறுதியாக ஃபிர்அவ்னும் அவனுடைய படைகளும் மூஸா நபியை துரத்திக்கொண்டு பின்னால் வரும்போது மூஸா நபியுடன் சென்ற மக்கள் அவ்வளவு தான் அவர்கள் நம்மை நெருங்கி விட்டார்கள் என்று கூறினார்கள் அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களுடன் சென்றவர்கள் இடையில் நடந்த உரையாடலை அல்லாஹ் தெளிவாக தன் புத்தகம் அல்குர்ஆனிலே கூறுகிறான்: (அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ❤️ தன் மீது நம்பிக்கை கொண்டவர்களை ஒருபோதும் கைவிட மாட்டான் என்பதற்கு அழகிய உதாரணம் ✨❤️ சுப்ஹானல்லாஹ்) சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர் அவ்னின் கூட்டத்தாராகிய) அவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர். இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது “நிச்சயமாக நாம் (அவர்களால்) பிடிபட்டுவிடுபவர்கள்தாம்” என்று மூஸாவுடைய தோழர்கள் கூறினார்கள். (அதற்கு) “ஒருபோதும் இல்லை! நிச்சயமாக என்னுடன், என்னுடைய இரட்சகன் இருக்கின்றான், (இதிலிருந்து ஈடேறும்) வழியை நிச்சயமாக எனக்கு அவன் காட்டுவான்” என்று (மூஸாவாகிய) அவர் கூறினார். (அப்போது) “நீர் உம்முடைய (கைத்) தடியினால் கடலை அடிப்பீராக” என மூஸாவின்பால் வஹீ அறிவித்தோம், (அவர் அடிக்கவே) அது பிளந்துவிட்டது, ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. (பின் தொடாந்த) மற்றவர்களையும் அந்த இடத்தை நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடனிருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். பின்னர், (அவர்களைப் பின்தொடர்ந்த) மற்றவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது, (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்வோராக இருக்கவுமில்லை. ❤️ (அல்குர்ஆன் : 26:60-67) ❤️ "அல்லாஹ்வின் மீதே முழுமையான நம்பிக்கை வைப்போம் இன் ஷா அல்லாஹ் ❤️ அவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பாதுகாத்தது போன்று நம்மையும் பாதுகாப்பான் அவன் முஃமின்களை ஒருபோதும் கைவிட மாட்டான் அவன் இதுவரை முஃமின்களை கைவிட்டாதாக எந்த வரலாறும் இல்லை இனிமேலும் அவன் கைவிடப்போவதும் இல்லை இன் ஷா அல்லாஹ் ‼️ #முஹர்ரம் #islam #HalalPost #Miracle #ஆஷூரா
12 likes
14 shares