#🙏🏻புரட்டாசி மாதம்✨ #பத்தி #நவராத்ரி பூஜை #நவராத்ரி ஸ்பெஷல் மாதம் 06ம் நாள்* 22-செப்டம்பர்-25 சோமவாரம்- திங்கள் கிழமை* நவராத்திரி பூஜை தினம்
புனிதமான வடிவங்களில் துக்கத்தைப் போக்குபவளாக துர்க்கை, செல்வத்தைப் பொழிபவளாக லட்சுமி.
புனித ஞானத்தை நல்குபவளாக சரஸ்வதி, இந்த மூன்று சக்திகளின் ஸ்வரூபமாக அம்பிகையை பணிவோம்
சூரியன் கன்னி ராசியில் தோன்றும் புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து தசமி திதியில் நிறைவு பெரும் விழா
வீடுகள் தோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா சாரதா நவராத்திரி பூஜிப்போம்
இயற்கை மாறுபாட்டால் பலவிதநோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்க இறையருளை நாடிடுவோம் வாரீர்
ஆணவம் அழிந்த நாள், மூர்க்கம் முடக்கப்பட்ட நாள், பெண்மை வென்ற நாள் என போற்றி பாடிடுவோம் வாரீர்
சக்தி ஸ்வரூபிணி அம்பிகை ஸ்ரீ துர்க்கா, லக்ஷ்மி , சரஸ்வதி எனும் முப்பெரும் சக்தியாக தோன்றினாள் போற்றி
மகேஸ்வரி, கௌமாரி, வராகி , மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி போற்றி
அம்பிகையை ஒன்பது வடிவங்களில் தியானித்து, பூஜித்து, பாடி சுண்டல் சித்ரான்னம், பழங்கள் நிவேதனம் செய்து
நம் துன்பங்கள் நீங்கி குறைவற்ற செல்வ சௌபாக்கியங்கள் பெற்று முக்தி ஞானத்தை அடைந்திடுவோம் போற்றி