#நியூஸ் அப்டேட் #நியூஸ் அப்டேட்👇👇👇 *கேரள நர்சுக்கு மரண தண்டனை*
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கேரளாவைச் சேர்ந்த 37 வயதான நிமிஷா பிரியா, ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹ்தியின் கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமனில் வெளிநாட்டினருக்கான சட்டப்பூர்வ தேவையாக இருந்த ஒரு மருத்துவமனையைத் திறக்க பிரியா தலாலுடன் கூட்டு சேர்ந்தார்.
இப்போது தலால் பறிமுதல் செய்த தனது பாஸ்போர்ட்டை மீட்க அவருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். அந்த மருந்து அளவுக்கு அதிகமாக தான் தலால் உயிரிழந்தார்
பின்னர் பிரியாவும் அவரது சக ஊழியரான மற்றொரு யேமன் நாட்டவரான ஹனானும் சேர்ந்து தலலின் உடலை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் இல் தலாலின் கொலையில் அவர் குற்றவாளி என்று விசாரணை நீதிமன்றம் கடந்த 2017 ஜுலையில் தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து, ஏமனின் உச்ச நீதி மன்றம் 2024 ல் அந்த தீர்ப்பை உறுதி செய்து அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஏமனின் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமியும் இந்த தீர்ப்பை அங்கீகரித்தார்.
பிரியா, தற்போது ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், வரும் 16ஆம் தேதி அவர் தூக்கிலிடப்படுவார். renga-vamba!
#ரெங்கா!