✍️மே17 இயக்கக் குரல்
1K Posts • 273K views
Rationalist
562 views 7 days ago
பீகார் தேர்தல் எவ்வளவு நேர்மையாக நடைபெற்றிருக்கிறது என்பதற்கு ஒரு சில உதாரணங்களை ஆல்ட் நீயூஸ் வெளியிட்டிருக்கிறது. https://www.altnews.in/alt-news-report-bjp-leaders-got-caught-voting-from-two-different-states-bihar-and-uttrakhand/ வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த பிஜேபியினர் பீகார் தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த வாக்காளர் சிறப்பு திருத்தமெல்லாம் வேலை செய்யவில்லை போலும். தேர்தலுக்கு முன்பு 65லட்சம் பேரின் வாக்குகளை பறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு பிஜேபி பிராடுகள் மட்டும் எப்படி பாடாமல் போனார்களோ தெரியவில்லை. எல்லாம் மோடிக்கே வெளிச்சம். எஸ்.ஐ.ஆர் என்பதும் தேர்தல் ஆணையம் என்பதும் பித்தலாட்டமென்று இராகுல் காந்தி கத்தி கதறிப்பார்த்தார், அந்த கட்சியின் மூத்த தலைவரான கபில்சிபில் பீகார் தேர்தலுக்காக ஹரியானாவிலிருந்து 6000பேர் தொடர்வண்டியில் டிக்கெட் எடுக்காமல் வந்தார்கள் என்று சொன்னார். இது எதுவும் பொது சமூகத்தில் விவாதமாகவும் இல்லை. காங்கிரஸால் அதை விவாத பொருளாக மாற்றவும் முடியவில்லை. விளைவு படுமோசமான ஒரு தோல்வியை சந்தித்திருக்கின்றது எதிர்க்கட்சிகள். இப்பொழுதும் (காங்கிரஸ்) நீங்கள் ஸைலைட் போட்டு தேர்தல் ஆணையம் இப்படி செய்துவிட்டது மோடி அப்படி செய்துவிட்டார் என்று பாடம் காட்டிக் கொண்டிருந்தால் இதைவிட பெரிய பின்னடைவு உங்களுக்கு ஏற்படும். போராட்டத்தை வீதியில் நடத்தாமல் பாசிஸ்ட்டுகளை வெல்ல முடியாது. அதை காங்கிரசால் ஒருநாளும் இனி செய்யமுடியாது. மாநில கட்சிகளின் ஒன்றிணைவும் இயக்கங்களின் களசெயல்பாடுகளும் தான் பாசிச மோடி கும்பலை வீழ்த்தும். #🚨கற்றது அரசியல் ✌️ #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #பீகார் #✍️மே17 இயக்கக் குரல்
9 likes
12 shares