ஞானிகள் பேசுகிறோம்
1K Posts • 223K views
கச்சியப்பரைக் காப்பாற்றிய கந்த வேள் தமிழில் “கந்தபுராணம்’ செய்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். அவருக்கு “திகடச் சக்கர’ என அடியெடுத்துக் கொடுத்து அருளினார் முருகன். தினமும் தான் எழுதும் பாடல்களை, காஞ்சி குமரக் கோட்டம் கந்தன் சந்நிதியில் வைத்து விடுவார் கச்சியப்பர். காலையில் அவற்றை எடுத்துப் பார்க்கும்போது முருகப் பெருமான் சில திருத்தங்கள் செய்திருப்பாராம். இவ்வாறாக கந்தபுராணம் எழுதி நிறைவடைந்ததும், அதை ஆலய மண்டபத்தில் கூடியிருந்த புலவர் சபையில் அரங்கேற்றம் செய்ய முனைந்தார் கச்சியப்பர். முதல் பாடலான- “திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான் சகடச் சக்கர தாமரை நாயகன் அகடச் சக்கர விண்மணி யாவுறை விகடச் சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்’ என்னும் விநாயகர் துதியை கச்சியப்பர் பாடியதும், அவையிலிருந்த புலவர் ஒருவர், “திகடச் சக்கர’ என்பது இலக்கணப்பிழை என்றார். அதிர்ச்சியடைந்த கச்சியப்பர் மறுநாள் விளக்கம் தருவதாகக் கூறி இல்லம் திரும்பினார். “முருகா! நீ எடுத்துக் கொடுத்த முதலடியையே இலக்கணப் பிழையென்கிறார்களே… நான் என் செய்வேன்…’ என்று மனமுருகினார். கந்தன் “யாமிருக்கப் பயமேன்’ என்றான். மறுநாள் சபைக்குச் சென்றார் கச்சியப்பர். அப்போது ஒரு முதிய புலவர் வடிவில் அங்கு வந்த முருகப்பெருமான், வீரசோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரம் காட்டி “திகடச்சக்கர’ என்பது இலக்கணப் பிழையல்ல என்பதை நிரூபித்து கச்சியப்பருக்கு தன் திருக்கோலம் காட்டியருளினார். “திகடச்சக்கர’ என்பது “திகழ் தசக் கர’ என்பதாகும். அதாவது பத்து கரங்களுடையவன். ஹேரம்ப கணபதிக்கு ஐந்து தலை, பத்து கரங்கள். ஹேரம்ப கணபதிக்கு முருகப்பெருமான் வழங்கிய தமிழ்ப்பெயரே திகடச்சக்கரன் 🚩🕉🪷🙏🏻 #சித்தர்கள் #ஞானிகள் பேசுகிறோம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏 #🤔 ஆன்மீக சிந்தனைகள்
20 likes
10 shares
*அரைகுறை ஞானம்தான் எப்போதும் பதறிக் கொண்டு, பயப்பட்டு கொண்டே இருக்கும்;* சித்தர் ஒருவர் பாம்பு வளர்த்தார். எங்கு போனாலும் தன் வளர்ப்புப் பாம்போடுதான் வெளியே செல்வார். ஒரு நாள் வெளியூருக்குப் போய்க்கொண்டிருந்த சித்தர், நல்ல வெயில் நேரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார். அருகே அவரது பாம்புக்கூடை, அமைதியான பாம்பு ஏனோ அன்று அந்தக் கூடையிலிருந்து தப்பிவிட்டது. பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது. அங்கே ஒரு இரண்டு வயதுக் குழந்தை. தத்தக்கா புத்தக்கா என்று நடந்துவந்தது. இந்தப் பாம்பைப் பார்த்ததும், "ஐ பொம்மை!" என்று பாய்ந்து பிடித்துவிட்டது. அந்த நேரம் பார்த்து அந்தக் குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தார். குழந்தை கையில் பாம்பைப் பார்த்துவிட்டு அலறினார். அதைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள். ஆனால் அவர்களில் யாருக்கும் பாம்பை நெருங்கத் தைரியம் இல்லை. பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி "கண்ணு, அந்தப் பாம்பைக் கீழே போடு" என்று அலறினார்கள். "கடவுளே, எங்க குழந்தையைக் காப்பாத்து" என்று பிரார்த்தனை செய்தார்கள்.... இந்தச் சத்தம் கேட்டு சித்தர் எழுந்துகொண்டார். பரபரப்பாக குழந்தை கையில் பாம்பைப் பார்த்ததும், பதறாமல் அருகே சென்று அதைப் பிடித்துக் கூடையில் போட்டார். "ஐயா, உங்களுக்கு பயமே இல்லையா?" கூட்டத்தில் ஒருவர் கேட்டார். "எதுக்கு பயம்? அந்தப் பாம்புக்குதான் ஏற்கெனவே பல் பிடுங்கியாச்சே!" பாம்புக்குப் பல் பிடுங்கிவிட்டது என்பது தெரிந்த சித்தருக்கும் பயம் இல்லை..... பாம்புக்கு விஷப்பல் உண்டு என்பதே தெரியாத பச்சைக் குழந்தைக்கும் பயம் இல்லை..... இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்கள்தான் அரைகுறை ஞானத்தால் பயந்து பதறி அவதிப்படுவது..... உண்மையான ஆன்மீகமும் அப்படித்தான்... உங்களுக்குள் சரியான தெளிவு வராததனால் தான் இத்தனை போராட்டங்கள்... 🚩🕉🪷🙏🏻 #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏 #ஞானிகள் பேசுகிறோம்
15 likes
15 shares