ஃபாலோவ்
sa.su.zainudeen
@188044698
126
போஸ்ட்
140
பின்தொடர்பவர்கள்
sa.su.zainudeen
581 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! சகோதரிகளே சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் மேலே படத்தில் உள்ள நபர் சற்று மனநலம் பாதித்தவராக இருக்கிறார் இவரது பெயர் ஹம்ருதீன் தந்தை பெயர் முஹம்மது இப்ராஹிம் திண்டிவனம் அண்ணா நகர் தெருவில் வசித்து வருவதாக தகவல் வந்துள்ளது தகவல் தெரிவிப்பவர் பெயர் பாஸ்டர் விக்டர் மானூர் கைப்பேசி எண்7200044272 இவர்தான் திருச்சி பெரம்பூரில் வேதா கருணை இல்லத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார் எனவே இவரை தெரிந்தவர்கள் மேற்படி பாஸ்டர் அவர்களை தொடர்பு கொண்டால் தகவல் சொல்லுவார் என்றும் மக்கள் பணியில் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் முஸ்லிம் மக்கள் கழகம் திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் 9445778387
sa.su.zainudeen
632 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! மஸ்ஜிதே ரஹ்மானியாவில் மாணவர்–பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் வளாகத்தில் 07.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான மாதாந்திர இஸ்லாமிய கல்வி மற்றும் உலகக் கல்வி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெறப்பட்டது. கூட்டத்துக்கு மௌலானா மௌலவி ஹா. முஹம்மது ஜாவிது பெற்றோர்கள், மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி ஏ. கே. எம். காதர் மைதீன், பொருளாளர் ஹாஜி கே. ஏ. மைதீன் பாட்ஷா, நிர்வாகிகள் ஜே. எம். எஸ். காஜா, ஜே. எம். எஸ். முஹம்மது ரஃபீக் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக புது பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ். ஏ. ஷேக் தாவூத், முஸ்லிம் மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன், நவாப் பள்ளிவாசல் மேலாளர் யாசின் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். மாணவர்களின் மதக் கல்வி, சாதாரண கல்வி மற்றும் பெற்றோர் பொறுப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட இக்கூட்டத்தில் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
sa.su.zainudeen
668 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
12 2025 ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசலில் 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் மாதாந்திர மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இஸ்லாமிய பாடத்திட்டங்கள் மற்றும் உலகக் கல்வி பாடத்திட்டங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மௌலானா மௌலவி ஹ. முஹம்மது ஜாவிது பெற்றோர்கள் மற்றும் ஹாஜி ஏ. கே. எம். காதர் மைதீன் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் செயலாளர், ஹாஜி கே. ஏ. மைதீன் பாட்ஷா மஸ்ஜிதே ரஹ்மானிய பள்ளிவாசல் பொருளாளர். ஜே. எம். எஸ் காஜா, ஜே எம் எஸ் முஹம்மது ரஃபீக் ராஜா, மற்றும் அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக புது பள்ளிவாசல் இமாம் மௌலானா மௌலவி எஸ். ஏ. ஷேக் தாவூத் ,முஸ்லிம் மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன், நவாப் பள்ளிவாசல் மேலாளர் யாசின். மற்றும் மஸ்ஜிதே ரஹ்மானியா பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். #நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!!
sa.su.zainudeen
631 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! தீப விவகாரம் : நீதிமன்ற தீர்ப்புக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் கடும் கண்டனம் திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து, முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு முதல், உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் அமைதியாக நடைமுறையில் இருந்து வந்த தீப ஏற்றும் பழக்கத்தை மாற்றி, பழைய தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு, “தமிழக இஸ்லாமிய சமூகத்தின் நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைத்துள்ளது” என அவர் குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் தீபத்தூண் இடையிலான 15–50 மீட்டர் பௌதிகத் தொலைவை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், ஆனால் இந்த அவசர உத்தரவால் “இஸ்லாமியர்–இந்துக்கள் இடையிலான மனதளவிலான தொலைவு விரிவடைந்துவிட்டது” என அவர் தெரிவித்தார். பல நூற்றாண்டுகளாக எந்த சர்ச்சையும் இன்றி இருந்து வந்த தீப ஏற்றும் நடைமுறையை நீதிமன்ற அதிகாரம் கொண்டு மாற்றுவது சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுவதாக முனைவர் ச.சு ஜைனுதீன் கூறினார். இது நீதித்துறையின் நடுநிலைத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளதையும் அவர் கவலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் பிரச்சனையில் மட்டுமல்லாது பல்வேறு பிரச்சினைகளிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக தனது பதவியை தவறாக பயன்படுத்து வருகிறார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மேலும், மாநில அரசு மற்றும் அறநிலையத்துறை முன்வைத்த ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டது, CISF பாதுகாப்பு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பது போன்றவை “சமூக உணர்வுகளை பாதிக்கும் வகையில் உள்ளது” என்றார். தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இருந்த மத நல்லிணக்கத்தை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும், சமூக ஒற்றுமையை சீர்கோழிக்கவும் காலம் காலமாக ஒரு தொப்புள் கொடி பிள்ளைகளாக இருந்து வரும் சூழலில் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது கூறினார்.
sa.su.zainudeen
536 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! முஸ்லிம் மக்கள் கழகம் ஆலோசனைக் கூட்டம் – எஸ்.ஐ.ஆர் ரத்து செய்ய வலியுறுத்தி மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம் விழுப்புரம் நவ-28 :  ஒன்றிய அரசின் எஸ்.ஐ.ஆர் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை அன்று  விழுப்புரம் தனியார் திருமண மண்டப மினி ஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி தலைவர் வி.விக்ரம் தலைமையேற்றார். வரவேற்புரையை விழுப்புரம் நகர செயலாளர் சி. சுஹைல் முஹம்மது வழங்கினார். அ. மதினா, ஜை. ஆயிஷா பேகம், தேவகி, சு. அமிதா, பா. ஷாகிரா பானு, சு. பாத்திமா, இ. ஆயிஷா, இ. ஷர்மீளா உள்ளிட்டோர் முன்னிலையில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக முஸ்லிம் மக்கள் கழகத்தின் தலைவர் முனைவர் ச. சு. ஜைனுதீன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜா. ஷோகத் அலி, திராவிட கழக ச. பழனிவேல், மு. ஆரியசாமி, செஞ்சி தொகுதி பிரபு, முஸ்லிம் மக்கள் கழகத்தின் பா. அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்ட நிறைவில் காணை ஒன்றிய தலைவர் ஆ. மணிகண்டன் நன்றி கூறினார். மேலும் இக்கூட்டத்தில் மூன்று திருமணங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தீர்மானம் – 1 தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடைமுறை வாக்காளர் பட்டியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது என்ற கருத்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தொடரும் வழக்கை ஆதரிப்பதாகவும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஏற்படும் குற்றப்பரம்பரைகளை கண்டிப்பதாகவும் முஸ்லிம் மக்கள் கழகம் தெரிவித்தது. தீர்மானம் – 2 எஸ்.ஐ.ஆர் நடைமுறை பொதுமக்களுக்கு தேவையற்ற அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது எனவும், தேர்தல் ஆணையம் அலட்சியமாக நடந்து கொள்கிறது எனவும் குற்றம்சாட்டப்பட்டு, எஸ்.ஐ.ஆர்-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென கூட்டம் தீர்மானித்தது. தீர்மானம் – 3 திண்டிவனத்தில் உள்ள ஆதார் மையங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. புதிய ஆதார் பதிவு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே திண்டிவனத்தில் ஒரு ஒருங்கிணைந்த ஆதார் மையம் அமைக்க மாநில, ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
sa.su.zainudeen
682 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
#நல்லதே நினை நல்லதே ! நல்லதே பேசு!! நல்லதே செய்!!! எஸ்.ஐ.ஆர். ரத்து செய்ய வேண்டும் – முஸ்லிம் மக்கள் கழக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் விழுப்புரம் : விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஒன்றிய பாஜக அரசுக்கு துணைபோகும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்து, எஸ்.ஐ.ஆர். (S.I.R) நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி தலைவர் வி. விக்ரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விழுப்புரம் நகர செயலாளர் சுஹைல் முகம்மது வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மதினா, ஆயிஷா பேகம், தேவேகி, அமிதா, சாகிரா பானு, பாத்திமா பி., ஆயிஷா பி., ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், முஸ்லிம் மக்கள் கழகநிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ஷோக்கத் அலி, பழனிவேல், ஏழுமலை, , அலாவுதீன், , செல்வம், பிரபு, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் இறுதியில் காணை ஒன்றிய தலைவர் மணிகண்டன் நன்றி உரையாற்றினார். எஸ்.ஐ.ஆர் என்ற பேரில் இந்தியாவில் உள்ள வாக்காளர்களை அலறவிடும் ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு துணை போகின்ற தேர்தல் ஆணையத்தின் அலட்சிய போக்கினால் வாக்காள பெருமக்கள் பெரும் அதிர்ப்தியிலும் குழப்பத்திலும் இருந்து வருகிறார்கள் இதனை முஸ்லீம் மக்கள் கழகம் தேர்தல் ஆணையத்தை வன்மையாக கண்டித்து மேலும் குலுருபடியான எஸ்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்தை முஸ்லீம் மக்கள் கழகம் சார்பில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
See other profiles for amazing content