ஃபாலோவ்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
@3454dsm
30,909
போஸ்ட்
25,783
பின்தொடர்பவர்கள்
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
531 காட்சிகள்
2⃣9⃣ 👏👏👏👏👏👏👏👏👏 புன்னகை எனும் வாள் கொண்டு வீழ்த்திடுவோம், உளைச்சல் தரும் சோகங்களை. மகிழ்ச்சி எனும் திரை போர்த்தி அணுகிடுவோம், காலம் தரும் கஷ்டங்களை. நம்பிக்கை எனும் கரம் கொண்டு துடைத்திடுவோம், தோல்விகள் தந்த கண்ணீர் துளிகளை.. முயற்சி எனும் கேடயம் கொண்டு தகர்த்திடுவோம், தோல்விகளை தந்த அணுகுமுறைகளை. பொறுமை எனும் உரம் இட்டு வளர்த்தால்... 👏👏👏👏👏👏👏👏👏 *வெற்றி நிச்சயம்!* 👏👏👏👏👏👏👏👏👏 உற்சாகமான காலை வணக்கம்💐🙏 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
548 காட்சிகள்
நாம் அனைவருமே வெற்றி, மகிழ்ச்சி ஆகிய இரண்டு விஷயங்களைத்தான் விரும்புகிறோம். நாம் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. வெற்றி குறித்த உங்களது என்னுடைய கருத்திலிருந்து வேறுபட்டிருக்கக்கூடும். ஆனால் நாம் வெற்றிகரமாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்க விரும்பினால், நாம் அனைவரும் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் உள்ளது. நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் சரி, அல்லது மருத்துவராக, தொழிலதிபராக, விற்பனையாளராக, பெற்றோராக , குடும்பத் தலைவியாக, அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, அந்த முக்கியமான அம்சம் அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். அனைத்து வெற்றிக்கும் மகிழ்ச்சிக்குமான ஒரு பொதுக் காரணி பிற மனிதர்கள்தான்..... மற்றவர்களை எவ்வாறு கையாள்வது என்பதை நீங்கள் கற்றுக் கொண்டால், எந்தவொரு வியாபாரத்திலும், வேலையிலும் வெற்றிக்கான பாதையில் நீங்கள் 85% சதவீத தூரம் பயணித்திருப்பீர்கள். தனிப்பட்ட மகிழ்ச்சிக்கான பாதையில் 99% சதவீத தூரம் பயணித்திருப்பீர்கள் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உங்கள் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்குமான திறவுகோல்? ...... ஞாபகங்களை கையாளும்..... வெறுமனே மற்றவர்களோடு ஒத்துப்போவது பலனளிப்பதில்லை. வெறுமனே மற்றவர்களோடு எவ்வாறு ஒத்துப்போவது என்பதைக் கற்றுக்கொள்வது வெற்றி அல்லது மகிழ்ச்சிக்கான உத்திரவாதத்தை அளிக்காது. பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக மற்றவர்களோடு ஒத்துப் போவதற்கான இரண்டு வழிகளை மக்கள் கையாள்கின்றனர். பயந்த சுபாவம் கொண்ட , மிதியடி போல் நடந்து கொள்கின்ற வகையைச் சேர்ந்த மக்கள் வெறுமனே மற்றவர்கள் தங்கள்மீது ஏறிச் செல்லும்படி விட்டு விடுகின்றனர். இது முதலாவது வழிமுறை. அதே சமயத்தில், ஓர் சர்வாதிகார மனப்பான்மையக் கொண்ட மக்கள், தன்னை எதிர்ப்பவர்களை அடக்கி ஒடுக்கி அவர்களை மிதியடி போல் நடத்தி, அவர்கள் மீது ஏறிச் செல்கின்றனர். இது இரண்டாவது வழிமுறை. மக்களுடன் எவ்வாறு ஒத்துப் போவது என்பதைப் பற்றிக் கற்றுக் கொள்வதற்கு நமக்கு எந்தப் புத்தகமும் தேவையில்லை. ஏனெனில் , நாம் ஒவ்வொருவரும் நமக்கென்று ஒரு வழியை ஏற்கனவே கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். மற்றவர்களை கையாள்வதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிப்பதுதான் இங்கு முக்கியம். அது நமக்குத் தனிப்பட்டத் திருப்தியைக் கொடுக்கும். அதே சமயத்தில், நாம் எதிர்கொண்டுள்ள நபர்களின் தன்மானத்திற்கு அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது. மனித உறவுகள் என்பது, மற்றவர்களுடைய தன்மானமும், நம்முடைய தன்மானமும் எப்போதும் கட்டுக்கோப்பாக இருக்கும் விதத்தில் மக்களைக் கையாள்கின்ற அறிவியலாகும். மக்களுடன் ஒத்துப் போவதில் உண்மையான வெற்றியை அல்லது உண்மையான திருப்தியைக் கொண்டு வரக்கூடிய ஒரே வழிமுறை இதுதான். 😊😊😊 #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
474 காட்சிகள்
புறக்கணியுங்கள்! இந்த உலகத்தில் நீங்கள் யாரோ ஒருவராக இருக்கலாம். ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். வாழ்க்கையில் பிறரால் புறக்கணிக்கப்படும் போதெல்லாம் இந்த வரிகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் பிறர் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே நமக்கான போராட்டங்கள் ஆரம்பமாகிறது. நம்பிக்கை கொடுக்கவும் நம்பி கை கொடுக்கவும் யாரேனும் இருக்க மாட்டார்களா எனும் ஆதங்கம் பெரும்பான்மையான மனிதர்களிடம் மேலோங்கி வருகிறது. இத்தகைய எண்ணப் போராட்டங்களே மனப் பூசல்களையும், விரக்தியையையும் சோர்வையும் தருகிறது. வாழ்வில் வெற்றி பெற அவமானங்களும், புறக்கணிப்பும் அவசியம் தேவை தான். அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சேகரித்து வையுங்கள். பின்னாளில் நமக்கான வெற்றி விழாவில் சொல்வதற்கு உதவும். சக மனிதன் வளர்ந்து விடக்கூடாதே என்ற எண்ணங்கள் தான் இந்த புறக்கணிப்பிற்கான காரணமாகும்.பின்னாடி பேசுபவர்களுக்கு காது கொடுத்தால் நாம் முன்னாடி போக முடியாது. இந்தப் புறக்கணிப்பு கூட ஒரு உந்துதல் சக்தி தான். மண்ணிற்குள் புதைத்து வைத்த விதைகள் முட்டி மோதி வெளியே வருவது போல இவற்றையெல்லாம் புறம் தள்ளி வெளியே வாருங்கள். மனத் தடைகளைத் தாண்டி, புறத் தடைகளைத் தாண்டி வருவது தான் வாழ்விற்கான வெற்றியாகும். வேலை கேட்டுச் சென்ற முதியவரிடம் அந்த நிறுவன முதலாளி 61 வயதில் உங்களால் என்ன செய்து விட முடியும் என்று கேட்டதற்கு, இனிக்கும் 16 வயது இளமையும், அதனுடன் 45 வருட கடினமான அனுபவமும் சேர்ந்து 61 வயது இளைஞன் நான் என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்த அந்த முதியவரை, நிர்வாக ஆலோசனை தலைவர் பதவியில் அமர்த்தினாராம் முதலாளி. இப்படித் தான் எதிர்பாராத சூழலையும் எதிர்நோக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். உளிபடாத கல் சிலையாவதில்லை. வலி இல்லாத வாழ்க்கையும் வெற்றி பெறுவதில்லை. எல்லாமே இலகுவாக கிடைத்து விட்டால் வாழ்வில் சுவாராசியமேது? மிகப் பெரிய அவமானங்களைக் கடந்து வந்தவர்களே இன்று வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். இன்பமும் துன்பமும்: எதுவரினும் மனம் தளராத தன்மை, பரந்த ஆகாயம் போன்ற விசாலப் பார்வை, இதுவும் கடந்து போகும் என்ற மனப் பாங்கு, எந்த சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வலிமை, பாறை போன்ற மன உறுதி இவை அனைத்தும் இருந்தாலே போதும் எந்த புறக்கணிப்புகளும், அவமானங்களும் நம்மை ஒன்றும் செய்யாது. எதிர்மறை எண்ணங்களைப் புறக்கணிக்கலாம். எதிர்மறை மனிதர்களைப் புறக்கணிக்கலாம். வேண்டாத ஆசைகளைப் புறக்கணிக்கலாம். தீய சிந்தனைகளையும், தீய மனிதர்களையும் புறக்கணிக்கலாம். அதே சமயம் நாம், பிறர் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என நினைக்கிறோமோ, அதை நாமும் மற்றவருக்கு செய்யக் கூடாது என்பதில் கவனம் வைப்போம். மனதாலும், சொல்லாலும், செயலாலும் பிறரைக் காயப்படுத்தக் கூடாது. வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. சொற்களால் அவமானப்பட்டு பிரிந்த உறவுகள் அதிகம். அதனால் தான் நாவினால் சுட்ட வடு என்று வான் மறை கூறுகிறது. ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். வெல்லும் சொற்களாக நமது சொற்கள் இருக்கட்டும். அவமானப்படுத்தும் சொற்களைத் தவிர்த்து ஆக்கப்பூர்வ சொற்களைப் பயன்படுத்தலாம். உணர்வுப்பூர்வ மனிதர்களை நல்ல உணர்வுகளால் இணைப்பது நல்ல வார்த்தைகளே. சகமனிதனை நேசிக்க ஆரம்பித்தாலே போதும். புறக்கணிப்புகளும், அவமானங்களும் என்ற வார்த்தைகளே நம் கலைக் களஞ்சியத்தில் இல்லாமல் போய் விடும்.அங்கீகரிப்போம் எளிய மனிதர்களையும். அரவணைப்போம் அகிலத்தையும். புறக்கணிப்புகளைப் புறம் தள்ளுவோம். அவமானங்களை அடித்து நொறுக்குவோம். வாழ்தல் இனிது. வாழ்க்கையும் இனிது. 😊😊😊 #பொழுது போக்கு #உற்சாக பானம் #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #👪 cute family members 👪
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
539 காட்சிகள்
🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (29.01.2026)* ....................................................................... *''கிடைக்கும் வாய்ப்பை...!"* ............................................................. எல்லோருக்கும் எல்லாம் அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஆனால்!, அவர்கள் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்கள்... ஒபாமா தனது நாற்பத்து நான்காவது வயதில் அமெரிக்காவின் அதிபர் ஆனார். ஆனால்!, டொனால்ட் டிரம்ப் தனது எழுபதாவது வயதில்தான் அதிபர் ஆகிறார்... பில்கேட்ஸ் தனது முப்பதுகளிலேயே உலகின் பெரிய செல்வந்தரானார். ஆனால்!, நிறுவனத்தை தனது ஐம்பதாவது வயதில்தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா எண்பது வயதில்தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தரானார்... ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது. இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை... இருபத்தி இரண்டு வயதில் தனது வியாபாரம் தொழிலில் செல்வந்தரான ஒருவர் நாற்பது வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார். ஒருவர் நாற்பது வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் அனைத்து விரயங்களை அனுபவித்து ஐம்பதாவது வயதில் செல்வந்தராகிறார்... சர்ச்சில் தனது எண்பத்து இரண்டாவது வயதில் 'History of English Speaking People' என்ற புத்தகத்தை எழுதினார். பெர்னாட்ஷா தனது தொண்ணுற்று மூன்றாவது வயதில் 'Pertouched Pepler' என்ற நாவலை எழுதினார். டால்ஸ்டாய் தனது எண்பத்து இரண்டாவது வயதில் ''I Cannot Be Silent'' என்றார். வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது ஐம்பதாவது வயதை தாண்டிய பிறகே முப்பத்து ஏழு நாடகங்களை இயற்றினார்... *ஆம் நண்பர்களே...!* 🟡 *உங்களுக்கு ஒன்று கிடைத்துவிட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். யார் கண்டது...?அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!* 🔴 *இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது. இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ!, அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்...!!* ⚫ *அடுத்த நொடி உறுதியாக அழகாய் மலரும். தேவைகளை உறுதியாக நிறைவு செய்துகொள்ள முடியும். வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும், இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே மகிழ்வாக வாழ்கிறார்கள்...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹 #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்#
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
591 காட்சிகள்
என்பதை நன்றாகப் பிடித்துக் கொள்..* ஏனென்றால் நாளை என்பது விதியின் கைக்குள் இருக்கிறது!!!. #👪 cute family members 👪 #உற்சாக பானம் #பொழுது போக்கு
🎯乃口口尺丹S📚 🗡⃟𝄟.⃝🐓🌽🥀❥⃟✬ᵛ͢ᵎᵖ🗡️
534 காட்சிகள்
எதிர்பார்ப்பு இல்லா அன்பு காற்றில் பறப்பது போல சந்தோஷமானது... ஆனால் கிடைப்பது *கடலில்* *முத்தெடுப்பது போல* *கடினமானது..* #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்# #உற்சாக பானம்
See other profiles for amazing content