ஃபாலோவ்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
@jai_sree_ramm
21,750
போஸ்ட்
119,360
பின்தொடர்பவர்கள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
910 காட்சிகள்
8 மணி நேரத்துக்கு முன்
வீரபுருஷோத்தமனின் வனவாசகாலத்தில் நடந்த ஒருசம்பவம்! .............................................................................. அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்! வனக்காடுகளில் இராமலக்ஷமண குமாரன்மார்களும் சீதையும் சஞ்சரிக்கின்றார்கள்! இப்போது புனிதமான கங்காநதி தென்படுகிறது. கங்கையை கடந்துதான் அக்கரைக்கு செல்லவேண்டும் இராமலக்ஷமண குமாரர்கள். அப்போதுதான் குகன் முதல்முதலாக வீரபுருஷோத்தமனை சந்திக்கின்றார். இராமரும் முதல்முதலாக குகனை சந்திக்கின்றார்! இருந்தாலும் குகன் என்கிற ஓடத்தை ஒட்டுகின்ற ஓடக்காரனு க்கு இந்த நிலைமை வீரபுருஷோத்தமனுக்கு வந்தது ஏன்? என்பதையெல்லாம் அறிந்திருந்தான்! ஒரு கம்பீரமாக அயோத்திராஜனாக ராஜஆட்சியை நடத்திகொண்டு இருக்கவேண்டியவர்! இங்கே மரவுரி தரித்துகொண்டு நடப்பதைபார்த்து அந்த ஓடக்காரனால் அந்த கோலத்தை பார்த்து சகிக்கமுடியாமல் அழுகின்றான்! குகன் கேட்கின்றான்! அல்லயோ! மகாபிரபுவே! என்னால் ஏதாவது சிறிய உதவி செய்யமுடியுமா? தாங்களுக்கு! என்றான்! இந்த கங்காநதியை கடக்கவேண்டும்! அதற்கு ஒரு ஓடம் வேண்டும்! ஒரு ஓடக்காரனும் வேண்டும்! குகன் உடனே அருகேயிருந்த மற்றொரு ஓடக்காரன் ஆகிய கேவத் என்பவனை அழைக்கின்றார்! கேவத்! இதோ நிற்கின்றாரே! இவர்தான் அயோத்தியின் வீரபுருஷோத்தமன் அருகே இருக்கும் வனிதை அவரின் கெட்டியோளான சீதைபிராட்டி! கூடவே இருக்கின்ற யௌவனன் உடன்பிறந்தோன் இலக்ஷ்மணன்! அவர்களை அக்கரையில் சேர்க்கவேண்டும் என்றான் குகன்! உத்திரவு குகனே! சொன்னதுபோலவே செய்கின்றேன்! அதற்குமுன்னர் வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை நான் கழுவவேண்டும் என்றான் கேவத்! இல்லையில்லை! அக்கரையில் சேர்த்தபின்னர் பாதபூஜை செய்துகொள்ளலாம் என்றான் குகன்! கேவத்! மன்னிக்கவேண்டும்! என் ஓடத்தில் அவர்களின் பாதங்கள் வைப்பதற்கு முன்னே பாதங்களை கழுவித்தான் ஓடத்தில் ஏற்றமுடியும்! அவர்களின் பாதங்களில் ஒரு மண் ஒட்டியிருந்தாலும் என்னால் ஓடத்தில் அக்கரை சேர்க்கமுடியாது என்றான் கேவத்! குகனுக்கு கடும்கோபம்கொண்டான்! அவனின் கோபத்தை உணர்ந்துகொண்ட கேவத்! அவனை நோக்கி சொன்னான்! குகனே! உன்னுடை கோபத்தை உணர்ந்துகொள்கின்றேன்! இருந்தாலும்! இந்த மகாபிரபு வீரபுருஷோத்தமன் காலை வைத்தால் கல்லும் பெண்ணாகும்! அகலிகை என்கிற ஸ்த்ரீ கல்லாகிபோனாள் அதன்பிறகு இவரின் திருப்பாதங்களை கொண்டு அவள் மறுபடியும் பெண்ணானாள்! இந்த தாரீத்யஜீவிதம் நடத்திகொண்டு இருக்கும் எனக்கும் அந்த சம்பவம் அறிந்துள்ளேன்! ஒருவேளை! என்னுடைய படகும் ஏதாவது முன்ஜென்ம பாபகர்ம்மங்கள் செய்து இந்த புனிதகங்காநதியில் ஓடமாக இருக்கவேண்டும் என்று விதிக்கபட்டு இருக்கலாம்! இந்த ஓடமும் ஒரு பாபவிமோசனம் வேண்டி காத்திருக்கலாம்! இவரின் பாதங்கள் என் ஓடத்தின்மீது பட்டு பாபவிமோசனம் பெற்று ஒரு பெண்ணாக மாறிவிட்டால்! அந்த பெண்ணையும் காப்பாற்றவேண்டும்! ஏற்கனவே ஒரு கெட்டியோளோடும் ,பிள்ளைகளோடும் கூடி தாரித்யஜீவிதம் நடத்திகொண்டு இருக்கும் இவளை எவ்வாறு காப்பாற்றமுடியும்! அதுமட்டுமில்லாமல்! இந்த ஓடம்தான் என் குடும்பத்திற்கு ஜீவாதாரம்! ஒரு பாபவிமோசனம் கொண்டு இந்த ஓடத்தையும் நஷ்டப்பட்டுபோனால் ஜீவாதாரத்திற்கு என்ன செய்யமுடியும்? ஆகையினால் தான் வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை நன்றாக கழுவி துடைத்த பின்னர்தான் என்னால் ஓடத்தில் ஏற்ற முடியும்! என்றான் கேவத்! அது தனூர்மாதம்! கடும்குளிர்காலம் அதிகாலையில்! இந்த சம்பவம் நடக்கின்றது! அந்த நேரத்தில் அருகேயிருக்கும் குடிசையிலிருந்து கேவத் கெட்டியோளும் வந்துவிட்டாள்! இராமலக்ஷமண குமாரர்களும் ,சீதையும் அவனின் அக்கறை பேச்சு! பக்தி பயம் ஆகியவற்றை பார்த்து சந்தோஷிக்கின்றார்கள்! இராமரின் திருப்பாதங்களை கழுவ சம்மதிக்கின்றார்! கேவத்தும் அவனின் கெட்டியோளும் சேர்ந்துகொண்டு வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை கழுவுகின்றனர்! கங்காநதியில் நீரை எடுத்து இராம பாதங்களை நீராட்டு நடத்திவிட்டு நன்றாக அவரின் பாதங்களை துடைத்துவிட்டு அக்கரையில் சேர்க்கின்றான் கேவத்! அக்கரையில் அவனின் பயபக்தியோடு கூடிய சேவனம் கண்டு சந்தோஷித்த சீதை ஒரு மோதிரத்தை சன்மானமாக கொடுக்கின்றாள்! இருந்தாலும் கேவத் அதை ஏற்க மறுக்கின்றான்! அல்லயோ! தேவியே! நான் வீரபுருஷோத்தமன் திருப்பாதங்களை நீராட்டு நடத்தியதே முன்ஜென்ம புண்ணிய பாக்கியம்! அதற்காக சன்மானம் கொடுத்துவிட்டால் அந்த புண்ணியபாக்கியத்தை சக்தி குறைந்துவிடும் என்றான் கேவத்! சீதை சொன்னாள்! அப்படியென்றால் தாங்கள் எங்களையெல்லாம் ஓடத்தில் ஏற்றிகொண்டதற்கு கூலியாக வாங்கிகொள்ளுங்கள் என்றாள்! அதற்கும் மறுத்துவிடுகின்றான் கேவத்! அவனின் பேச்சு அனைவரையும் புரியாத சூழ்நிலை ஆகின்றது! அதை உணர்ந்துகொண்ட கேவத்! அல்லயோ! மகாபிரபுவே! ஒரு வண்ணான் இன்னொரு வண்ணானின் அழுக்கு வஸ்திரங்களை துவைப்பதற்கு கூலி வாங்கமாட்டான்! அதேபோல்தான் ஒரு நாவிதர் இன்னொறு நாவிதருக்கு சவரம் செய்துவிட்டாலும் கூலி வாங்கமாட்டான்! அதேபோல்தான்! ஒரு ஓடக்காரன் இன்னொரு ஓடக்காரனை யாத்தை செய்துவித்தால் அதற்கும் கூலி வாங்கமாட்டான்! அது தொழில் தர்ம்மம்! மகாபிரபுவே! தாங்களும் என்னைபோலவே ஓடக்காரன் தான்! உங்களின் ஓடம் பெரியது! என்னிடம் சிறியது! நான் இந்த ஓடத்தைகொண்டு கரையை கடக்க உதவிசெய்கின்றேன்! அதற்கு கூலியும் வாங்குகின்றேன்! தாங்களோ! மனுஷ்யன்மார்கள் செய்கின்ற பாபகர்ம்மங்கள் அவர்களின் பாபகர்ம்மங்களில் இருந்து கரையை கடக்க தாங்களின் இராமநாமம் உதவி செய்கின்றது! ஜென்மஜென்மாந்திரம் செய்த பாபகர்ம்மங்கள் விமோசனம் ஆகின்றது! தாங்களின் நாமம் ஜெபிக்கின்றோர்களுக்கு! ஆகவே மனுஷ்யன்மார்கள் செய்கின்ற பாபகர்ம்மங்களிலிருந்து விமோசனம் நல்கி புண்ணிய அக்கரைக்கு கொண்டு செல்கின்ற நீங்களும் என்னைபோலவே தாங்களும் ஒரு ஓடக்காரன் தானே! ஆகவே ஓரு ஓடக்காரன் மற்றொரு ஓடக்காரனிடம் கூலி வாங்குவது, நியதி அல்லவே! என்று சொல்லி வீரபுருஷோத்தமனை இரு கரம்கூப்பி நமஸ்கரிக்கின்றான் . அந்த ஓடக்காரன் இராமதாசன் கேவத்! இராமஜெயம்! என்று சொல்கின்றவர்களுக்கு ஏது பயம்! இராம்! இராம்! இராம்! இவன் ஸ்னேகம்கூடிய அஜய்குமார் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏ஜெய் ஆஞ்சநேயா
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
774 காட்சிகள்
11 மணி நேரத்துக்கு முன்
மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா? பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார். சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள். அந்த வரிசையில், மதுரையில் மீனாட்சி அம்மன் மொத்தம் 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள். சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும். ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள். முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம். பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல அதிசயங்கள் உள்ளது. மதுரையில் மீனாட்சி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு. அவை .. திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி ப்ராத சந்தியில் – பாலா 6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி 12 – 15 நாழிகை வரையில் – கெளரி மத்யானத்தில் – சியாமளா சாயரக்ஷையில் – மாதங்கி அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும். காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும். *ஒரேநாளில் புவனேஷ்வரி, கௌரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்* *வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டிய அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை*! எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு அர்த்த ஜாமத்தில் மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும். இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது. உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவர். அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம். மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது. (மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்) இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார். அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சியாகும் பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது. குறிப்பாக திருமணமாகாதவர்கள் தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் உடனே மனம் போல திருமணம் நடப்பது உறுதி. *மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்* குழந்தை பாக்கியம் இல்லாதோர், பிள்ளை வரம் வேண்டுவோர் கட்டாயம் காண வேண்டிய அன்னை மீனாட்சியின் தரிசனம்! குழந்தை பாக்கியம் இல்லாதோர்‌. பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சின்னஞ்சிறு சிறுமி அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை சந்தான பாக்கிய பலனை கட்டாயம் தருவாள் . வியாபாரத்தில் நஷ்டம் தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் காண வேண்டிய தரிசனம். வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முக்கிய இடமுண்டு… இவையெல்லாவற்றையும் விட புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே அன்னை ஸ்ரீமீனாட்சியை *புவனேஷ்வரி*,*கௌரி*, *சியாமளா*, *மாதங்கி*, *பஞ்சதசி* என எல்லா அலங்காரத்திலும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மீனாட்சி அன்னையின் பாதம் பணியுங்கள்!!வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்!!! நன்றி🙏🙏🙏 #✨கடவுள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🔍ஜோதிட உலகம் 🌍 #📸பக்தி படம் #✡️தோஷ பரிகாரங்கள்
⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
825 காட்சிகள்
12 மணி நேரத்துக்கு முன்
#தெரிந்த_புராணம்... #தெரியாத_கதை... ஸ்ரீகிருஷ்ணன் கூறியபடி, அவரை துணியில் சுற்றி, கூடை ஒன்றில் வைத்து, தலையில் சுமந்து கோகுலம் நோக்கிச் சென்றார் வசுதேவர். திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. வசுதேவர் யமுனை நதியைக் கடந்துதான் அக்கரையிலுள்ள கோகுலம் அடைய முடியும். அடைமழையால் யமுனையில் வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. எந்தத் தடையையும் கண்டு அஞ்சாமல் வசுதேவர் யமுனையில் காலெடுத்து வைத்தார். அப்போது ஐந்து தலை நாகம் ஒன்று படமெடுத்து, கூடைக்கு மேல் குடையாகி வசுதேவரைப் பின்தொடர்ந்தது. யமுனையாற்றில் வசுதேவர் நடக்க ஆரம்பித்ததும், ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர ஆரம்பித்தது. ‘கட்டளையிட்ட கடவுள் காப்பாற்றுவான்’ என்ற நம்பிக்கையில் வசுதேவர் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். திடீரென நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மழையின் வேகமும் குறைந்தது. யமுனை இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் நடந்துசெல்ல வழிவிட்டது. அனைவருக்கும் #தெரிந்த_புராண வரலாறுதான் இது. இதில் பலருக்குத் #தெரியாத_கதை_எது என்று இனி பார்ப்போம்… ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பொதுவாக இந்த மாதத்தில், பாரதத்தின் வடக்குப் பகுதியில் பெருமழை பெய்யும் பருவநிலை கிடையாது. வசுதேவர் குழந்தைக் கிருஷ்ணனைச் சுமந்து சென்ற போது, ஏன் இந்த மழை பெய்ய வேண்டும்? யமுனையில் ஏன் வெள்ளம் வர வேண்டும்? வசுதேவருக்கு ஏன் இந்தச் சோதனை ஏற்பட வேண்டும்? இதற்கெல்லாம் ஓர் அற்புதமான காரணம் இருந்தது. #ரூபகோஸ்வாமி எழுதிய ‘#பிருந்தாவன_கீதை’ எனும் நூலில் இதற்கான விளக்கங்களை அறிய முடிகிறது. ஒருமுறை, #கந்தர்வன் ஒருவன், ஒரு முனிவரின் சாபத்தால் காளிங்கன் என்ற பெயருடைய ஐந்து தலை நாகமாக மாறினான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் புனிதப் பாதங்கள் அவன் சிரசில் படும்போது அவன் சாபம் நீங்கும் என்று முனிவர் கூறியிருந்தார். பகவான் விஷ்ணுவின் அவதாரத்துக்காகக் காத்திருந்தான் காளிங்கன். பகவான் விஷ்ணுவின் மற்றொரு பக்தை #யமுனை. இவள் சூரியபகவானின் புத்திரி. கங்காதேவியைப் போல விஷ்ணு பாதத்தைத் தொட்டுச் சரணடைய வேண்டுமெனக் கடும் தவம் புரிந்தாள். விஷ்ணு அவள் முன் தோன்றி, தனது கிருஷ்ணாவதார காலத்தில் அவள் விருப்பம் நிறைவேறுமென வாக்களித்தார். அன்றுமுதல், யமுனையாக ஓடிக்கொண்டிருக்கும் சூரிய புத்திரியும், கிருஷ்ணாவதாரம் எப்போது நிகழுமென எதிர்பார்த்துக் காத்திருந்தாள். யமுனையின் தவத்துக்குப் பலன் தரவே, ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததும் அதிசயமாக மழை பெய்து, யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கூடையில் குழந்தை கிருஷ்ணனைச் சுமந்துகொண்டு வசுதேவர் யமுனைக் கரைக்கு வந்ததுமே, இரண்டு பக்தர்கள் அவர் திருவடி தங்கள் மீது படாதா என ஏங்கினர். ஒருவன் காளிங்கன் எனும் நாகம்; மற்றவள் யமுனை. ஆனால், காளிங்கன் சாபம் பெறுவதற்கு முன்பே தவத்தைத் தொடங்கிய யமுனைக்கே முதலில் அருள்தர நினைத்தார் பகவான். ஆற்றில் வசுதேவர் இறங்கி நடந்து செல்கையில், கூடையிலுள்ள கிருஷ்ணனின் பாதங்கள் மேல் நோக்கி உயர்ந்திருந்தால் காளிங்கன் சாப விமோசனம் பெற்றிருப்பான். ஆனால், கிருஷ்ணன் வேறுவிதமாக லீலை புரிந்தார். யமுனையில் இறங்கி நடந்த வசுதேவரின் வைராக்கியத்தை முதலில் தெரிந்துகொள்ள விரும்பினார். கடும் மழையாலும், வெள்ளத்தாலும் யமுனையில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. இடுப்புவரை இருந்த வெள்ளநீர் கழுத்துவரை வந்தபோதும்கூட, கவலைப்படாமல் தன் கடமையைச் செய்துகொண்டிருந்த வசுதேவரின் சிரத்தா பக்தியை எண்ணி வியந்தார் ஸ்ரீகிருஷ்ணன். நீர்மட்டம் வசுதேவரின் மூக்கைத் தொடும் நிலை வந்த போது, கண்ணன் கருணை பொழிந்தார். தன் கால்களைக் கூடைக்கு வெளியே போட்டார். அவர் பாதங்கள் யமுனையைத் தொட்டன. இதன்மூலம் யமுனையின் தவம் நிறைவேறியது. தனக்குக் கருணை புரிந்த கிருஷ்ணனின் சங்கல்பம் நிறைவேற யமுனை தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டாள். அதனாலேயே நீர்மட்டம் குறைந்தது. அவள் இரண்டாகப் பிரிந்து, வசுதேவர் செல்ல வழியமைத்துத் தந்தாள். காளிங்கன் ஏமாற்றம் அடைந்தாலும், நம்பிக்கையைக் கைவிடவில்லை. பிருந்தாவனத்தில் இருந்த பொய்கையில் வாழ ஆரம்பித்தான். அவன் விடும் மூச்சுக் காற்றாலும், கக்கும் விஷத்தாலும் மாசடைந்தது பொய்கை. அதனால், ‘காளிங்கன் பொய்கை’ என அதை அழைத்து, அதன் அருகில் செல்லாமல் ஒதுங்கி இருந்தனர் மக்கள். ஆனால், ஸ்ரீகிருஷ்ணன் காளிங்கனை மறக்கவில்லை. ஒருநாள் கோபாலர்களுடன் மாடு மேய்க்கச் சென்ற அவர், யார் தடுத்தும் கேளாமல் அந்தப் பொய்கையில் குதித்தார். காளிங்கன் தன் படத்தைத் தூக்கி, கிருஷ்ணனை தாங்கிக் கொண்டான். ஸ்ரீகிருஷ்ணன் அதன்மீது நர்த்தனம் செய்தார். காளிங்கன் சாபம் நீங்கியது. ‘எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்று சொல்வார்கள். இது மனிதர்களுக்கு! ஆனால், இறைவன் மனித வடிவில் அவதாரம் செய்யும்போது, அவர் பாதங்களே பிரதானம். ராமாவதாரத்தில் கங்கைக்கரை வேடன் குஹன் ராமனின் திருவடிகளுக்குப் பூஜை செய்கின்றான். தனக்குத் தன் தாய் கைகேயி வாங்கித் தந்த நாட்டை வேண்டாமெனக் கூறி ராமன் திருவடிகளின் அம்சமான அவனது பாதுகைகளையே பதினான்கு வருடம் பூஜிக்கிறான் பரதன். அதுபோல, கிருஷ்ணாவதாரத்திலும் கிருஷ்ணனின் பாதங்களின் பெருமை பல இடங்களில் புகழப்படுகிறது. கிருஷ்ண ஜயந்தி அன்று வீடுகளில் கிருஷ்ணனின் பாதத்தை மாக்கோலமாகப் போட்டு, கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு நம் நாட்டில் இருந்துவருகிறது. இதுவும் பகவானின் பாத மகிமையைப் போற்றுவதற்காக அமைந்த ஒரு வழிபாட்டு முறைதான். இப்படி, இறைவன் திருவடியின் மகிமை எத்தனையோ புராண இதிகாசங்களில் கூறப்பட்டிருந்தாலும், #திருவள்ளுவப் பெருமானின் கீழ்க்காணும் திருக்குறளில் உள்ள ஆழமான கருத்தை வேறெங்கும் காணமுடியாது. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு ‘பற்றை- அதாவது, ஆசாபாசங்களை உதறுவதற்கு, பற்றேதும் இல்லாத பரம்பொருளான இறைவனின் திருப்பாதங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் அந்தப் பிடியை விட்டுவிடாதீர்கள்’ என்பது இதன் பொருள். நாமெல்லாம் துன்பம் வரும்போது இறைவனை வேண்டுவது வழக்கம். அந்தத் துன்பம் நீங்கிய பின், அதனை மறந்து விடுவதும் இயல்பு. இந்த முறையை மாற்றி, எப்போதும் இறைவனின் திருவடியையே பற்றி நம்பிக்கையோடு வாழுங்கள் என்பதே வள்ளுவர் காட்டும் வழி.fb share #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
See other profiles for amazing content