திரைப்படம் : என் ராசாவின் மனசிலே ( 1991 )
இசை : இளையராஜா
பாடகர் : ஸ்வர்ணலதா
பாடலாசிரியர் : வைரமுத்து
பெண் : அத்தை மகன்
கொண்டாட பித்து மனம்
திண்டாட அன்பை எண்ணி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ
பெண் : புத்தம் புது செண்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி
கொடுப்பேன் ஓஹோ
பெண் : மன்னவனும்
போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ
மெத்தை விரிப்பேன்
பெண் : உத்தரவு போடும்
நேரமே முத்து நகை
பெட்டகத்தை முந்தி
திறப்பேன்
பெண் : மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு அது
வாசல் தேடுதே
பெண் : கீதம் பாடுதே
வாசல் தேடுதே
பெண் : குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே #s
திரைப்படம் : வெள்ளை ரோஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் / எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசை : இளையராஜா
பெண் : சந்தனக் காடு
நானுன் செந்தமிழ் ஏடு
ஆண் : மான் விழி மாது
நீயோ மன்மதன் தூது
பெண் : மேகத்துக்குள் மின்னல் போலே
நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய்
நானும் வந்தேனே
ஆண் : தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே
நீயும் வந்தாயே
தாவிப் பாயும் மீனைப் போலே
நானும் ஆனேனே
பெண் : விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கே கண்டேனே
ஆண் : கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே
பெண் : லலலல லலலல லலலல லலலல #s
ஒரு கவிதையை எழுத
ஒரு அழகான
காதல் தேவைப்படுகின்றது
அந்த காதலின் ஆழத்தை எழுத
நிறைய காயங்கள்
தேவைப்படுகின்றது.!!
அந்த காயங்களில் வெளி வரும்
வார்த்தைகளை மெருகூட்ட
சில தேன் தடவிய பொய்கள்
தேவையாக இருக்கின்றது...!!
இத்தனையும் சேர்த்து
சுமந்து அதிலிருந்து
மீண்டு வெளியே வருவதற்கு
ஒரு இரும்பாலான இதயம்
தேவை படுகின்றது... !!
ஆனால் அந்த இரும்பாலான
இதயமும் கூட
துருப்பிடித்த நினைவுகளால்
இறுதியில் சிதைந்தே போய் விடுகிறது..!!
சுனில்....!! #s
Movie : Poo Poova Poothirukku ( 1987 )
Singers : P. Jayachandran
Music : T. Rajendar
Writer : T. Rajendar
ஆண் : சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லி கொள்ள வழியே இல்ல
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லி கொள்ள வழியே இல்ல
ஆண் : ஏதோ……உள்ளம் போராடுதே
அதில் விழிகள் நீராடுதே
உயிரில் கலந்த உறவு
இன்று ஊமையான பிறகு
உயிரில் கலந்த உறவு
இன்று ஊமையான பிறகு
ஆண் : பூப் பூத்த செடியக் காணோம்
வெதப் போட்ட நானோ பாவம் #s
படம் : சலங்கை ஒலி
குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
இசை : இளையராஜா
பாடல் : வைரமுத்து
பெண் : இவளின் மனதில்
இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர்
காயும் நேரமோ
ஆண் : பாதை தேடியே
பாதம் போகுமோ பாதை
தேடியே பாதம் போகுமோ
பெண் : ஆடலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
ஆண் : தனிமையோடு பேசுமோ
ஆண் : மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில்
மௌனங்கள் மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள் ஏன்
என்று கேளுங்கள் #s
படம் : செம்பருத்தி
பாடகர்கள் : மனோ,எஸ். ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : தென்றல் தேரில் நாம் தான்
போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூத்தூவி
பாடும் நல்ல வாழ்த்து
பெண் : கண்கள் மூடி நான் தூங்க
திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே
கங்கை வந்து நீராட்டும்
ஆண் : நினைத்தால் இது போல்
ஆகாததேது
பெண் : அணைத்தால் உனைத்தான்
நீங்காது பூமாது
ஆண் : நெடுநாள் திருத்தோள்
எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
பெண் : நிலா காயும் நேரம் சரணம்
ஆண் : உலா போக நீயும் வரணும் #s
திரைப்படம் : சின்னதம்பி
இசை : இளையராஜா
பாடல் வரிகள் : கங்கை அமரன்
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மான்விழி ஒரு தேன்மொழி
நல்ல மகிழம்பூவு அதரம்
பூநிறம் அவ பொன்னிறம்
அவ சிரிக்க நினைப்பு சிதறும்
ஏலப்பூவு கோலம் போடும் நாசிதா..ன்
பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதா..ன்
மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ...
அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே #s
படம் : செந்தூரப்பூவே
பாடல் : சோதனை தீரவில்லை
இசை : மனோஜ் கியான்
பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து
ஆண்குரல் : பி.ஜெயச்சந்திரன்
ஆண்1 : சொந்தம் இங்கே யாரோ யாரோ...
வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ...
முத்தெடுக்கப் போனேன் நானே...
மூச்சடைச்சுப் போனேன் மானே...
பாசம் ஒரு வேஷம் தானே...
நம்புவது மோசம் தானே...
ஆண்/குழு : சொல்லுங்க சொல்லுங்க...
அழுத்திச் சொல்லுங்க...
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்லை...
பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும் இங்கே...
நம்பிக் கிடப்பதில் அர்த்தமில்லை...
ஆண்1 : சோதனை தீரவில்லை...
சொல்லி அழ யாருமில்லை...
முன்னப்பின்ன அழுததில்லை...
சொல்லித்தர ஆளுமில்லை...
ஆண்2 : ரோசாப்பூவூ எங்கே எங்கே...
அது ராசா மார்பில் ஆடும் அங்கே...
புத்திக் கெட்டுப் போனேன் தாயே...
பொட்டு வச்சு வாழ்க நீயே...
பூப்பறிச்ச பாவி நானே...
பூ முடிச்சு வாழ்க மானே...
ஆண்2:நந்தவன ஒன்னு வெந்துவிடுமின்னு...
தண்ணி கொண்டு வந்து காத்திருந்தேன்...
அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு...
வந்து கலப்பதுப் பார்த்திருந்தேன்...
ஆண்2 : சோதனை தீரவில்லை... #s
திரைப்படம் : ஆண்களை நம்பாதே
பாடகர்கள் : K.J. யேசுதாஸ்
இசை : இளையராஜா
ஆக்கம் : ஜெயவேல் கோபால்சாமி
வானம் அதுவொன்று தான்
வானில் நிலவொன்று தான்
காதல் கலைந்தாலும் மனதில்
என் நினைவொன்றுதான்
தாளம் இல்லாமலே பாடல் நான் சொல்கிறேன்
தெய்வம் இல்லாமலே பூஜை நான் செய்கிறேன்
உண்மை காதல் என்றும் கட்சிமாறிப் போகாதடா
காதலின் வேதனை என்றும் தீராதடா..
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களேன்
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களேன் #s
படம் : நீ தானா அந்தக் குயில்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகர் : கங்கை அமரன்
பாடகி : சித்ரா
ஆ : பாவாடை கட்டயில பார்த்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
பெ : நோகாம பார்த்துப்புட்ட
வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
ஆ : அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
பெ : துள்ளிப் போகும் புள்ளி மான
மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சைக் கேட்டு
வேப்பங்குச்சி இனிக்குது
ஆ : பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பார்த்தது... #s