30 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்… லைக்காவுக்கு அடித்த லக்… தரமான சம்பவமா இருக்கப்போகுது!! - CineReporters
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. “ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. இத்தகவல் வெளிவந்த சில நாட்களிலேயே தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்திலும் ரஜினி நடிப்பதாக செய்திகள் வந்தன. இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க