#தனிப்பட்ட வாழ்க்கையில்
தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர்
சிக்கனமா?
செலவழியா?
கோபமா?
சாந்தமா?
சைவமா?
அசைவமா?
என்பது பிரச்சனை இல்லை.
சம்மதத்துடன் ஆண், பெண் சகவாசம் கூட இருந்து தொலைக்கட்டும். அதனால் பொதுமக்களுக்கு கேடு இல்லை கேடு இல்லை.
ஆனால்,
மது நுண்ணறிவை கெடுக்கும். அது கூடாது. தன்னைவிட ஒருவர் கீழ் அல்லது மேல் என்று பிறப்பு அடிப்படையில் கற்பிக்கக் கூடாது.
ஒரு இனம் இன்னொரு இனத்தை ஏமாற்றி ஆதிக்கம் செய்வதற்கு,கருத்தால், செயலால் துணை போகக்கூடாது.
தொண்டு செய்ய வந்த இடத்தில் பொதுப்பணத்தை திருடக்கூடாது.தொழில், வாரிசு முறை செய்யக்கூடாது.
இவைதான் நல் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.
#நம் செயல்
நாம் என்ன செய்கின்றோம் என்பதை விட,
எதற்காக செய்கிறோம் என்பதே முக்கியம்.
நம் செயல்கள் சிலருக்கு கோபத்தையும், சிலருக்கு அன்பையும், சிலருக்குமரியாதையையும் தரக்கூடும்
நம்மை நேசிப்பவர்ளுக்காக வாழ்வதை விட.
நம்மை நேசிப்பவர்ளுக்காக வாழ்ந்து விட்டு போவோம்.
What matters more than what we do, is why we do it.Our actions might bring anger to some, love to some, and respect to others.
Instead of living for those who love us, let's live and leave for those who love us.
Happy evening greetings.....மகிழ்வான மாலை வணக்கங்களுடன்.
#செம்பருத்தி பூ டீ... #செம்பருத்தி பூ டீ
திங்கள் – செம்பருத்தி
அகத்தையும், புறத்தையும் அழகுற செய்யும் மலர்களில் செம்பருத்தி பூவும் ஒன்று. காலை வேளைகளில் வெறும் வயிற்றில் இரண்டு செம்பருத்தி பூ இதழ்களை இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
ஆரோக்கிய பலன்கள்
இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு இவ்விரண்டுக்கும் செம்பருத்தி சாறு உதவும்.
தலை முதல் அடிவரை பளபளப்பாகும், குறிப்பாக முகம் பொலிவு பெறுவதுடன், கேசம் நன்கு நீளமாக வளரும்.
இதயம் சம்பந்தமான நோய் போன்றவை நீங்கிவிடும்
பெண்களுக்கு மிகவும் ஏற்ற சாறு. இது மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, கர்ப்பப்பை கோளாறு போன்றவையாவும் சரியாகும்.
#அருமை
உங்கள் அருமை புரியாதவர்களுக்கு, நீங்கள் கவலைப் பட்டு உங்கள மதிப்பையும் சுய மரியாதையையும் இழந்து விடாதீர்கள்.
யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை*
யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை*
யாரும் உங்களை வலிகளை பார்ப்பதில்லை*
ஆனால்
எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்*
இனிய திங்கட்கிழமை காலை வணக்கம்
இன்றைய நாள் இனியதாக அமையட்டும்.
#புயல் பற்றி தெரிந்துக்கொள்வோம்
புயல் என்றால் என்ன என்றும், அது எவ்வாறு உருவாகிறது என்றும் நம் அறிவியலாய்வர்கள் கூறியிருப்பதை நாம் முழுவதுமாகத் தெரிந்து
கொள்வோம்.
Cyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தையாம்.
பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் (Equator), வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது.
இதனால் ஆவியாகும் நீர், கடலின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள காற்றுடன் கலக்கிறது. இந்த சூடான ஈரக்காற்று, செங்குத்தாக நேர் மேலே செல்கிறது. கடலின் மேற்பரப்பில் இருந்த பெரும்பாலான காற்று மேலே சென்று விடுவதால், அந்த இடத்தில் குறைவான காற்றே மீதம் உள்ளது. இதனால், அந்த வளிமண்டலப் பகுதியில், காற்றழுத்தம் குறைகிறது.
இந்தக் குறை அழுத்தத்தை நிரப்ப, அதன் சுற்றுப் பகுதியில் உள்ள வளி மண்டலக் காற்று சுழன்று விரைகிறது.
இவ்வாறு, மேலே சென்று தங்கும் சூடான ஈரக் காற்று, குளிர்ந்து, நீர்த்திவலைகள் உறைந்த மேகமாகிறது . இந்த மேகமானது, காற்றுடன் சேர்ந்து சுழல்கிறது.
மேலே உள்ள படிப்படியான நிகழ்வுகள் 1 முதல் 4 வரை, மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது.
இப்படித் தொடர்ந்து, ஏற்படும் நீராவிப்போக்கால் அந்தப் பகுதியை மையமாகக் கொண்டு பெரிய அளவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. அதற்கேற்றபடி, இந்தக் குறை அழுத்தப் பகுதியை நிரப்ப, வலிமையான காற்று தேவைப்படுகிறது. இந்தக் காற்று, குறை அழுத்த மையப் பகுதியைச் சுற்றிச் சுழன்று அதி வேகத்துடன் சென்று, அந்தப் பகுதியை நிரப்ப முயலுகிறது.
காற்றின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அது புயலாக மாறுகிறது. இதனால் தான் இந்த சுழலும் மேகக்கூட்டங்கள், செயற்கைக் கோள் படத்தில் வட்டமான துளை கொண்ட மையப் பகுதியை உடைய மேகச் சுருள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வட்டமான மையப் பகுதிக்கு கண் என்று பெயர்.
செயற்கைக் கோள் படத்தில் உள்ள சுழலும் மேகச்சுருளின் வேகத்தையும், அடர்த்தியையும், பரப்பளவையும் பொருத்து அதன் வலிமையைப் புரிந்து கொள்ள இயலும். இந்தச் சுழலும் மேகக் கூட்டத்தை உள்ளடக்கிய காற்று, நகர்ந்து கரையை அடையும் போது, நிலப் பகுதியை சூறாவளிப் புயலுடன் கூடிய மழையாகத் தாக்குகிறது. நிலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் போது இந்தப் புயல் காற்று வலுவிழக்கிறது.
தண்ணீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாய்வது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம்.
ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை.
காற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை காற்று வீசினால் அதற்கு அழுத்தம் என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் . 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் .அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 முதல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).
புயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் ‘சிக்னல்’தான் இந்தக் கூண்டுகள்.
இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு.
இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன. நிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.
#சூயஸ் கால்வாய்(Suez Canal) திறக்கப்பட தினம் இன்று
நவம்பர் 17, 1869*
சூயஸ் கால்வாய்
(Suez Canal) திறக்கப்பட்டது.
இது மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் ஒரு செயற்கைக் கால்வாய் ஆகும்.
இதன் மூலம் ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து மிக எளிதாகிறது.
இந்தக் கால்வாயின் திறப்பு, கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டிய தேவையை நீக்கியது.
இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய வழியாக அமைந்தது.
2015 ம் ஆண்டில், கால்வாயின் விரிவாக்கம் செய்யப்பட்டது. இது கப்பல்களின் போக்குவரத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் நவம்பர் 17 #தேசிய வலிப்பு நோய் தினம்.*
*தேசிய வலிப்பு நோய் தினம்.*
வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இது மூளையின் ஒழுங்கற்ற செயல்பாட்டால் ஏற்படும் ஒரு நரம்பியல் நிலையாகும்.
இந்த நாளில், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வு திட்டங்களை நடத்துகின்றன.
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
நவம்பர் 17,
*உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம்.*
உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் நவம்பர் 17ம் தேதியான இன்று கடைபிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன.
அதாவது 10ல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும்.
எனவே, அந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
நவம்பர் 17,
*சி.இலக்குவனார்*
சிறந்த தமிழ் அறிஞரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் 1909ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி, நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில், வாய்மேடு கிராமத்தில் பிறந்தார்.
இவர் தமிழ் வளர்ச்சிக்காக 1962ம் ஆண்டு தமிழ் காப்புக்கழகத்தை தொடங்கினார். தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் தமிழ் மன்றங்களை நிறுவினார்.
முத்தமிழ் காவலர், செந்தமிழ் மாமணி, தமிழர் தளபதி, இலக்கணச் செம்மல் போன்ற ஏராளமான பட்டங்களை பெற்றுள்ளார். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார் 63வது வயதில் (1973) மறைந்தார்.
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
நவம்பர் 17, 1970*
ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டக்ளஸ் ஏங்கல்பர்ட் (Douglas Engelbart) என்பவர் கணினியின் சுட்டியை (cursor) நினைத்த வண்ணம் நகர்த்துவதற்கும், இயக்குவதற்கும் பயன்படுகின்ற மவுஸ்ஸைக்
கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை பெற்ற நாள்.













