ஶ்ரீ ஆதிசங்கரர்.
90 Posts • 58K views
ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்-04 ( அருளியவர் ஆதிசங்கர பகவத் பாதர்) ஞானம் பெற. ஸ்லோகம்-02. ந ஜனாமி ஸப்தம் ந ஜனாமி சார்த்தம் ந ஜனாமி பத்யம் ந ஜனாமி ஸத்யம் சிதேகா ஷடஸ்யா ஹ்ருதி த்யோத்தே மே முகான்னிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம். தமிழாக்கம். ( வரகவி யு.எம். நடராஜ ஸர்மா) கவியறியேன் வசனமோ கண்டறியேன், என் செவியறியாதொலியெதையும் - -செப்பியுமறியேன்- பொருள் புவி புகழும் ஆறுமுக; உன் புனிதமுகம்- -நோக்குங்கால் தெவிட்டாத தேன் தமிழ்ச் சொல் தெளிந்து -வரும் நெஞ்சிலிருந்து. கருத்து- எதுவும் அறியாத பாமரன் நான். எனக்கு எழுத்தும் தெரியவில்லை,அதன் சப்தமும் புரியவில்லை. எனவே கவியும், காவியமும் அறியாதவன். உலகம் போற்றும் குமரனே, உன் அழகிய ஆறு திருதிருமுகத்துடன், கூடிய, ஞானச் சுடரான உருவம் ஒன்றுதான் என் மனதில் நிற்கின்றது. ஸ்வாமி நாதனாக, தந்தைக்கு உபதேசம் செய்த உன் திருமுக தரிசனத்தால், என்னிடமிருந்து தேன் மொழியாம், 🌺 தமிழ் மொழி 🌺 அருவி போல் கொட்டுகிறது. குறிப்பு- பகவத்பாதர்-ஞானத்தின் உருவாக இருந்தாலும், தன்னை எப்போதும் ஒரு பாமரன்/ கல்வியறிவு இல்லாதவன் என்றே கூறிக் கொள்கிறார். ஸௌந்தர்ய லஹரீ- ஸ்லோகம்-98. “ கதா காலே மாத: கதய கலிதாலிக் தகரஸம்”- என்று துவங்கும் ஸ்லோகத்தில் - நான் கல்வி அறிவை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவன்- என பாடியுள்ளார். 🚩🕉🪷🙏🏻 #ஶ்ரீ ஆதிசங்கரர். #மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #சமஸ்கிருதம் பலன்
16 likes
13 shares
ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய ஶ்ரீ சுப்ரமணிய புஜங்கம் -01 விநாயகர் துதி. எங்கும் நிறைந்தவரும் அன்பர்களுக்கேற்ற வடிவம் ஏற்பவரும் வெண்மையான ஆடை உடுத்தியவரும் நிலவு போன்று குளிர்ந்த ஓளிமிக்கரும் நான்கு கைகளுள்ளவரும் ஆனந்தம் பொங்கும் முகத்தை உடையவரும் ஆகிய விநாயகனே எல்லா இடையூறுகளையும் நீக்க வேண்டும். @@@@@@. உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குஹனே்//. முன்னுரை. ஸுப்ரஹ்மண்ய புஜங்கத்தை அருளியவர் ஆதிசங்கர பகவத் பாதர். ஸுப்ரஹ்மண்ய புஜங்கம் என்ற ஸ்லோகங்களைப் பாராயணம் செய்தால் குஷ்டம்,குன்ம ரோகம்,க்ஷய ரோகம், வலிப்பு மற்றும் பல தீராத நோய்கள் குனணமாகும். மேலும் பேய், பிசாசுகள், ஏவல் பில்லி சூன்யம் போன்ற செய்வினைகள் பாராயணம் செய்பவர்கள் உள்ள திசைக்கே நெருங்காது இந்த புஜங்கத்தை பகவத் பாதர் தன்னுடைய குன்ம நோயை ( தீராத வயிற்று வலியை) குணப்படுத்திக் கொள்ள- 🦚திருச்செந்தூரில் ஶ்ரீ ஸுப்ரஹ்மண்யர்🦚 சன்னதியில் பாடினார். நோய் குணமாகியது. ஒரு சமயம் பகவத்பாதர், கோகர்ண, க்ஷேத்ரத்தில், தல யாத்திரையாக சென்றிருந்தபோது,குன்ம நோயினால் பாதிக்கப் பட்டு அதன் தீவிரம் தாங்காமல் பரமசிவனிடம் முறையிட்டார். கோகர்னேஸ்வரர்-என்ற நாமத்துடன் அங்கு எழுந்தருள் புரியும் இறைவன் சிவபெருமான் நந்தி வாஹனத்தில், சங்கரின் கனவில் எழுந்தருள காட்சி தந்தார். அப்போது “ ஶ்ரீ ஜயந்திபுரம்”(தற்போது திருச்செந்தூர்) என்ற புண்ணிய தலத்தில், சூரபதுமனை வதம் செய்துவிட்டு, வெற்றி வீரனாக எனது இரண்டாவது மகன் ஷண்முகன் கோவில் கொண்டுள்ளான். “ சங்கரா” நீ அங்கு சென்று குமரனை தரிசித்து வா; உன் குன்ம நோய் முற்றிலும் குணமடைந்துவிடும், என அருளாசி வழங்கினார். மறுநாள் தன் யோக சக்தியால், திருச்செந்தூர் வந்து சேர்ந்தார். அங்கு ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமியை,தரிசனம் செய்யும் போது, பாமபுகளின் அரசர்,என சொல்ப்படும்” ஆதிசேஷன்” முருகப் பெருமானை பூஜிப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அந்தக் காரணத்தால்-ஸர்பம்- என்ற அர்தத்தினால் சிறப்புற்ற புஜங்கம் என்ற வார்த்தையை முதன்மையாகக் கொண்டு, ( பாம்பு நெளிவதைப் போன்ற) சரளமான வார்த்தைகளை உபயோகித்து, இந்தப் பாமாலையை பாடி சுப்ரமண்ய ஸ்வாமிக்கு சமர்ப்பித்தார். பகவத் பாதரால் இயற்றப் பட்ட மூல ஸ்லோகங்களும், வரகவி யு.எம். நடராஜ சர்மா அவர்கள் செய்த தமிழாக்க பாசுரங்களும், கருத்துரையுடன் கொடுக்கப் படுகிறது. ( நாளை முதல் ஸ்லோகங்களும், கருத்தும்) 🚩🕉🪷🙏🏻 #🕉️ஓம் முருகா #🙏🏼முருகப்பெருமான் பாடல்கள்🎵 #ஶ்ரீ ஆதிசங்கரர். #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள்
12 likes
10 shares