சமஸ்கிருதம் பலன்
104 Posts • 197K views
ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்-04 ( அருளியவர் ஆதிசங்கர பகவத் பாதர்) ஞானம் பெற. ஸ்லோகம்-02. ந ஜனாமி ஸப்தம் ந ஜனாமி சார்த்தம் ந ஜனாமி பத்யம் ந ஜனாமி ஸத்யம் சிதேகா ஷடஸ்யா ஹ்ருதி த்யோத்தே மே முகான்னிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம். தமிழாக்கம். ( வரகவி யு.எம். நடராஜ ஸர்மா) கவியறியேன் வசனமோ கண்டறியேன், என் செவியறியாதொலியெதையும் - -செப்பியுமறியேன்- பொருள் புவி புகழும் ஆறுமுக; உன் புனிதமுகம்- -நோக்குங்கால் தெவிட்டாத தேன் தமிழ்ச் சொல் தெளிந்து -வரும் நெஞ்சிலிருந்து. கருத்து- எதுவும் அறியாத பாமரன் நான். எனக்கு எழுத்தும் தெரியவில்லை,அதன் சப்தமும் புரியவில்லை. எனவே கவியும், காவியமும் அறியாதவன். உலகம் போற்றும் குமரனே, உன் அழகிய ஆறு திருதிருமுகத்துடன், கூடிய, ஞானச் சுடரான உருவம் ஒன்றுதான் என் மனதில் நிற்கின்றது. ஸ்வாமி நாதனாக, தந்தைக்கு உபதேசம் செய்த உன் திருமுக தரிசனத்தால், என்னிடமிருந்து தேன் மொழியாம், 🌺 தமிழ் மொழி 🌺 அருவி போல் கொட்டுகிறது. குறிப்பு- பகவத்பாதர்-ஞானத்தின் உருவாக இருந்தாலும், தன்னை எப்போதும் ஒரு பாமரன்/ கல்வியறிவு இல்லாதவன் என்றே கூறிக் கொள்கிறார். ஸௌந்தர்ய லஹரீ- ஸ்லோகம்-98. “ கதா காலே மாத: கதய கலிதாலிக் தகரஸம்”- என்று துவங்கும் ஸ்லோகத்தில் - நான் கல்வி அறிவை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவன்- என பாடியுள்ளார். 🚩🕉🪷🙏🏻 #ஶ்ரீ ஆதிசங்கரர். #மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #சமஸ்கிருதம் பலன்
16 likes
13 shares
*அமானவனை* வசியம் செய்தால் வாழும் போதும் சொர்க்கம் இறந்தபின்னும் சொர்க்கம்* இதுவரை யாரும் கூறிடாத அதிரகசிய*அமானவன்* வசியம்! '*அமானவன்*' இப்படி ஒரு பெயர் கேள்விப்பட்டதில்லையே.! இது கடவுளின் பெயரா. இல்லை ஏதாவது புராணப் பாத்திரமா.! இவனை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் இவனை இறப்புக்கு பின்னரே பார்க்க முடியும். இவனது இருப்பிடம் வைகுண்டம். அங்கு பெருமாளின் இருப்பிடத்திற்கு முன்னால் துவார பாலகர்கள் இருப்பார்கள். பெருமாள் கோயிலில் ஜெயன், விஜயன் என்ற பெயரில் சிலை வடிவாக பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு சற்று முன்னால் அமானவன் நின்றிருப்பான். சரி.இவனுக்கு அங்கு என்ன வேலை! நீங்கள் தினமும் காலையில் எழும்போதே சுவாமி படத்தின் முன் விழித்திருக்கலாம். 'ஹரி.. ஹரி., நாராயணா. கோவிந்தா.பத்மநாபா' என்றெல்லாம் பெருமாளின் பெயர்களைச் சொல்லியபடியே எழலாம். எந்நேரமும் பிறரது நலம் பற்றி சிந்தித்திருக்கலாம். என்ன கஷ்டம் வந்தாலும், "பெருமாளே! எனக்கு எல்லாம் நீயே.. இந்தக் கஷ்டத்தையும் நீ தந்த பரிசாக ஏற்கிறேன்" என்று 'பாசிட்டிவ்' ஆக நினைக்கலாம். புரட்டாசி சனி விரதம் இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட நல்லவர்கள் இறந்த பிறகு, வைகுண்ட வாசலுக்கு செல்வார்கள். அங்கே அமானவன் காத்திருப்பான். அவர்களைக் கண்டதும், கையைப் பிடித்து அழைத்துச் செல்வான். இவனுடன் வருவோரை துவார பாலகர்கள் தடுக்க மாட்டார்கள். பெருமாள் முன் நிறுத்தி மகாலட்சுமி தாயாரோடு பெருமாளைத் தரிசிக்க செய்வான். இவனுக்கு ஏன் அமானவன் என பெயர் வந்தது? '*மானவன்*' என்றால் 'மனிதன்'. '*அமானவன்*' என்றால் மனிதன் அல்லாதவன். அதாவது தேவபுருஷன். புண்ணியம் செய்தவர்களை பெருமாளிடம் அழைத்துச் செல்வது இவனது புண்ணிய பணி. 'அமானவன் கரத்தாலே தீண்டல் கடன்' என்கிறார் வைணவ ஆச்சாரியார் மணவாள மாமுனிகள். அதாவது, 'அமானவன் என்னை கைப்பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' என்கிறார். மன்னுயிர் காளிங்கே மணவாள மாமுனிவன் பொன்னடியாஞ் செங்கமலப் போதுகளை- உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன். - உபதேச ரத்னமாலையின் கடைசி பாட்டு. அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன். நம் கைகளையும்*அமானவன்* பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க இன்றிலிருந்தே நல்ல விசயங்களை செய்யத் தொடங்குவோம். இதுவரை யாரும் கூறிடாத இந்த*அமானவனை* வசியம் செய்வதற்கு உரிய அதிரகசிய மந்திரம் மற்றும் வழிமுறைகளைப்பற்றி தெரிந்து கொள்ள கீழ்கண்ட👇👇 காணொளிக்காட்சியை தவறாது பாருங்கள்! 🚩🕉🪷🙏🏻 #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #சமஸ்கிருதம் பலன் #மந்திரம் #மந்திரங்கள்
14 likes
10 shares
*தந்தை மந்திரம்* *பெற்றோர் ஆசி* குழந்தை மன பலத்துடன் திறமையாகவும், பலத்துடன் உடல் ஆரோக்யமாகவும் வளர உதவும் பெற்றோர் ஆசீர்வாத சுலோகம் குழந்தை பிறந்ததும் தந்தை தன் முதல் தரிசனத்தில், குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது. தந்தையானவர் தினசரி குளித்து முடித்ததும் இறைவழிபாடு முடித்து, [ முடிந்தால் தாயின் மடியில் குழந்தையை படுக்க அல்லது அமர வைத்து ] குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது. ஓம்பர மேஸ்வரன் உந்தன் உயிராய் ஓம்பர மேஸ்வரி உந்தன் விதியாய் ஓம்கண நாதன் உன்மனம் திறனாய் ஓம்வடி வேலன் உன்னுடல் பலமாய் உயிர்ஆ சைகளை விதியால் போற்றி மாதா பிதா குலம்குரு தெய்வம் மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று சாஸ்திரம் அறிவாய் உயர்வாய் இறையே ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி இதை குழந்தைக்கு மூன்றரை வயது ஆகும் வரை சொல்லவேண்டும். முடிந்தவரை இடைவிடாது தினசரி சொல்வது நல்லது. குழந்தை பேசத்துவங்கிவிட்டால் தந்தை ஒவ்வொரு வரியாக சொல்ல, குழந்தை இப்படி திருப்பிச் சொல்லவேண்டும். ஓம்பர மேஸ்வரன் உந்தன் உயிராய் ஓம்பர மேஸ்வரன் எந்தன் உயிராய் ஓம்பர மேஸ்வரி உந்தன் விதியாய் ஓம்பர மேஸ்வரி எந்தன் விதியாய் ஓம்கண நாதன் உன்மனம் திறனாய் ஓம்கண நாதன் என்மனம் திறனாய் ஓம்வடி வேலன் உன்னுடல் பலமாய் ஓம்வடி வேலன் என்னுடல் பலமாய் உயிர் ஆசைகளை விதியால் போற்றி உயிர் ஆசைகளை விதியால் போற்றி மாதா பிதா குலம்குரு தெய்வம் மாதா பிதா குலம்குரு தெய்வம் மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று சாஸ்திரம் அறிவாய் உயர்வாய் இறையே சாஸ்திரம் அறிவேன் உயர்வேன் இறையே ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஹி தேவைப்பட்டால் இந்த ஸ்லோகத்தை திருப்பிச்சொல்ல தாயார் உதவி செய்யலாம். குழந்தையின் பதிமூன்று வயதிற்கு பிறகு வழிபாட்டு சமயத்தில் குழந்தை தானே கீழ்கண்டவாறு சொல்லிக்கொள்ள வேண்டும். ஓம்பர மேஸ்வரன் எந்தன் உயிராய் ஓம்பர மேஸ்வரி எந்தன் விதியாய் ஓம்கண நாதன் என்மனம் திறனாய் ஓம்வடி வேலன் என்னுடல் பலமாய் உயிர்ஆ சைகளை விதியால் போற்றி மாதா பிதா குலம்குரு தெய்வம் மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று சாஸ்திரம் அறிவேன் உயர்வேன் இறையே ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி இந்த ஸ்லோகம் கால யந்திரத் தந்திர மந்திர பலம் பொருத்தப்பட்டது. இந்த ஸ்லோகத்தை எவ்வளவு தடவை சொல்லுகிறோமோ அந்த அளவு நல்ல பலன்களை வாழ்க்கையில் ஏற்படுத்தும். இந்த ஸ்லோகத்தை ஒரு ஆலயத்தில் உள்ள அர்ச்சகரை குருவாக கொண்டு அவர மூலம் மந்திர தீக்ஷை பெற்றுக்கொண்டு, குருதக்ஷிணை அளித்து, பிறகு பயன்படுத்துவதும்,சொல்வதும் முழுமையான நல்ல பலனைத் தரும். இந்த பதிவை பகிர்வது நன்மை – புண்ணியம் கிடைக்கும். 🚩🕉🪷🙏🏻 #👶குழந்தை பராமரிப்பு #👪என் பெற்றோர் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #சமஸ்கிருதம் பலன் #சுலோகம் மற்றும் மந்திரங்கள்
43 likes
23 shares
*இறைவனை உணரச்செய்யும்* *அற்புத மந்திரம்*! கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. இறைவனை இதுவரை உணராதவர்களும், உணர்ந்தவர்கள் மேலும் உணரவும் வழி செய்யும் ஒரு அற்புத மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மந்திரம் ந தத்ர ஸூர்யோ பாதி சந்த்ர தாரகம் ந இமோ வித்யுதோ பாந்தி குதோய மக்னி: தமேவ பாந்தமனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி இந்த மந்திரம் சமஸ்கிருத மொழியில் இருப்பதால் இதை பாராயணம் செய்வது கடினம் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள தாயுமானவரின் பாடலை பாராயணம் செய்யலாம் கண்முதற் புலன்கள் அந்தக்கரணங்கள் விளங்குமெத்தால் தண்மதியருக்கனங்கி தாரகை விளங்குமெத்தால் விண்முதற் பூதமியாவும் விளங்குமெத்தால் – அந்த உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழி. இந்த அற்புத பாடலை தினமும் பாராயணம் செய்தால், இறைவனை உணர்ந்து அவர் அருள் மழையில் நனைந்து சிறப்பாக வாழலாம். 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #சிவனுடைய மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #சமஸ்கிருதம் பலன் #சுலோகம் மற்றும் மந்திரங்கள்
14 likes
6 shares