ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views • 2 months ago
*இறைவனின் வடிவம்* *திருமுறைகள்*!
இறைவன் மந்திர வடிவமாக உள்ளான்.
திருமுறையில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது.
திருமுறைகள் மந்திரங்களே என்னும் உண்மையைத் திருமுறைகண்ட புராணத்தில்
மந்திரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்
அந்தமுறை நான்கினொடு முறைபதினொன்று ஆக்கினார்
என்று உமாபதி சிவம் தெளிவுறுத்துகின்றார்.
திருக்கோவில்களில் உள்ள கற்படிமங்களிலும் செப்புப் படிமங்களிலும் மந்திர நியாசனத்தின் அடிப்படையிலேயே
இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளான்.
நியாசம் = வைப்பு,
பிரதிட்டை = நிலை பெறுத்துவித்தல்.
திருமுறைகளைப் படனம் செய்பவர்கள் வாக்கிலும் சிவபெருமான் மந்திர
வடிவில் எழுந்தருளியுள்ளான்.
இவ்வுண்மைகளை,
சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!
கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே
என்று ஒரு பழம்பாடல் எடுத்தியம்புகின்றது.
ஆகவே, மந்திரமாகிய திருமுறைகளை தினமும் ஓதுவோம்.
நன்மையே என்றும் நம்மைச் சேரும்.
திருச்சிற்றம்பலம். 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #சிவனுடைய மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #திருமுறை #பன்னிரு திருமுறை
6 likes
14 shares