பன்னிரு திருமுறை
516 Posts • 395K views
A Mohan Raj
1K views 9 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது*. *திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம், இது சைவ சமயத்தின் பல்வேறு மார்க்கங்களைப் பற்றியும், குறிப்பாக அக வழிபாட்டு முறைகளைப் பற்றியும் பேசுகிறது. இது "உட் சமயம்" (அக வழிபாடு) மூலம் இறைவனை அடையும் வழிமுறைகள், யோகம், சன்மார்க்கம் போன்றவற்றை விளக்குகிறது*... *"சன்மார்க்கம்" என்பது உண்மை மற்றும் இறைவனைப் பற்றிய தத்துவத்தை உணரும் உண்மையான பாதையாகும். இந்த நெறியை நந்திதேவர் உலக மக்களுக்கு அருளியுள்ளார். இது சிவபெருமானின் அருள் வழி, இறைவனையும், தன்னை அறிவதையும் குறிக்கிறது, மேலும் குருபக்தி மூலம் முக்தி அடைய உதவுகிறது*. பாடல் வரிகள் : *9. சன்மார்க்கம்* 1477 சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே. 1 1478 சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே. 2 1479 தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத் தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே. 3 1480 தெளிவறி யாதார் சிவனை யறியார் தெளிவறி யாதார் சீவனு மாகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. 4 1481 தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந் தாவை னாயுறலானசன் மார்க்கமே. 5 1482 சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ் சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ் சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம் எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ. 6 1483 சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார் சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே. 7 1484 சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப் பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால் நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே. 8 1485 அன்னிய பாசமும் ஆகுங் கருமமும் முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந் தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே. 9 1486 பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப் கசியாத நெஞ்சங் கசியக் கசிவித் தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற் றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே. 10 1487 மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர் மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே. 11 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
30 likes
12 shares
A Mohan Raj
1K views 16 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் -*ஐந்தாம் தந்திரம்* - *3. மார்க்க சைவம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது*. *திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம், இது சைவ சமயத்தின் பல்வேறு மார்க்கங்களைப் பற்றியும், குறிப்பாக அக வழிபாட்டு முறைகளைப் பற்றியும் பேசுகிறது. இது "உட் சமயம்" (அக வழிபாடு) மூலம் இறைவனை அடையும் வழிமுறைகள், யோகம், சன்மார்க்கம் போன்றவற்றை விளக்குகிறது*... *"மார்க்க சைவம்" என்பது திருமூலரின் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள சைவத்தின் நான்கு நெறிகளில் ஒன்று. இது இறைவனை அடைவதற்கான வழிமுறைகளில் மூன்றாவது நிலையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. "மார்க்கம்" என்பது வழி அல்லது பாதை என்பதைக் குறிக்கிறது, எனவே மார்க்க சைவம் என்பது இறைவனை அடையும் வழியைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது*. *நான்கு பாதைகள் : சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பாதைகள் உள்ளன*. *மார்க்க சைவம் : இந்த நான்கு பாதைகளில் உள்ள "சரியை", "கிரியை", "யோகம்" ஆகிய மூன்று பாதைகளையும் உள்ளடக்கியது அல்லது ஒன்றிணைந்த பாதையாகக் கருதப்படலாம். மேலும், இது "மார்க்க சாதனம்" என்றும் குறிப்பிடப்படுகிறது*. அமைவிடம் : பொது பாடல் வரிகள் : 3. மார்க்க சைவம் 1427 பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம் நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந் துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ் சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே. 1 1428 கேடறு ஞானி கிளர்ஞான பூபதி பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின் ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன் பாடுறு சத்தசை வப்பத்த நித்தனே. 2 1429 ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மேயொன் றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே. 3 1430 சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ் சத்தும் அசத்துந் தணந்த பராபரை உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே. 4 1431 சத்தும் அசுத்துந் தணந்தவர் தானாகிச் சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய் முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார் சித்தியு மங்கே சிறந்துள தானே. 5 1432 தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே. 6 1433 பூரணம் தன்னிலே வைத்தற்ற வப்போதே மாரண மந்த மதித்தானந் தத்தோடு நேரென ஈராறு நீதி நெடும் போகங் காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே. 7 1434 மாறாத ஞான மதிப்பற மாயோகந் தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப் பேறான பாவனை பேணி நெறிநிற்றல் கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே. 8 1435 வேதாந்தங் கண்டோர் பிரமமித் தியாதரர் நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள் வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர் சாதா ரணமன்ன சைவர் உபாயமே. 9 1436 விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள் கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள் எண்ணினைச் சென்றணு காம லெணப்படும் அண்ணலைச் சென்றணு காபசு பாசமே. 10 1437 ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகார நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே. 11 திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
20 likes
19 shares
A Mohan Raj
627 views 10 hours ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஐந்தாம் தந்திரம் - 20. உட்சமயம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது*. *திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம், இது சைவ சமயத்தின் பல்வேறு மார்க்கங்களைப் பற்றியும், குறிப்பாக அக வழிபாட்டு முறைகளைப் பற்றியும் பேசுகிறது. இது "உட் சமயம்" (அக வழிபாடு) மூலம் இறைவனை அடையும் வழிமுறைகள், யோகம், சன்மார்க்கம் போன்றவற்றை விளக்குகிறது*... *ஐந்தாம் தந்திரத்தில் 'உட்சமயம்' என்பது 20-வது பாடலைக் குறிக்கிறது. இது அகவழிபாட்டின் மூலம் இறைவனை அடையும் வழிகளை விளக்குகிறது. புறச்சமயங்களைப் புறந்தள்ளி, அகத்தில் இறைவனை உணரும் வழிமுறைகளைக் கூறுவதே இதன் முக்கிய நோக்கமாகும்* பாடல் வரிகள் : *20. உட்சமயம்* 1557 இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்தவன் ஆதி புராணன் சமயங்க ளாறும்தன் றாளிணை நாட அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே. 1 1558 ஒன்றது பேரூர் வழியா றதற்கு என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. 2 1559 சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய் வையத் தலைவனை வந்தடைந் துயமினே. 2 1560 சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற் பவனவன் வைத்த பழிவழி நாடி இவனவன் என்ப தறியவல் லார்கட் கவனவ னங்குள தாங்கட னாமே. 3 1561 ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப் போமாறு தானில்லை புண்ணிய மல்லதங் காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும் போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே. 4 1562 அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ் சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும் உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந் தரநெறி நின்ற தனிச்சுடர் தானே. 5 1563 தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி போந்து புனைந்து புணர்நெறி யாமே. 6 1564 ஈரு மனத்தை யிரண்டற வீசுமின் ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே வாரு மரநெறி மன்னியே முன்னியத் தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே 7 1565 மினற்குறி யாளனை வேதியர் வேதத் தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி னயக்குறி காணில் அரநெறி யாமே. 8 1566 ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே. 9 1567 சைவ சமயத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத் துளார்க்குவகுத்துவைத் தானே. 10 1568 இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும் பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. 11 1569 ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர் ஆமே பிரானுக் கதோமுக மாறுள தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும் நாமே பிரானுக்கு நரரியல் பாமே. 12 1570 ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன் ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும் பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே. 13 1571 ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர் ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே. 14 1572 அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை அறியவொண் ணாத அறுவகை யாக்கி அறியவொண் ணாத அறுவகைக் கோசத் தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே. 15 *ஐந்தாம் தந்திரம் முற்றிற்று*. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
8 likes
7 shares
A Mohan Raj
566 views 1 days ago
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக #திருமுறை #பன்னிரு திருமுறை *"திருமுறை ஓதாய் திருமுறையே தாய்"* தினம் ஒரு திருமுறை அறிவோம் 🙏 பத்தாம் திருமுறையில் இருந்து திருமூலர் அருளிய திருமந்திரம் - *ஐந்தாம் தந்திரம் - 19. நிராசாரம்* இறைவனின் திருநாமம் - சிவபெருமான் இறைவி - உமையம்மை அமைவிடம் : பொது பதிகம் பற்றிய சுருக்கமான விளக்கம் : *திருமூலர் இயற்றிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களை (இயல்களை)க் கொண்டது. மூவாயிரம் பாடல்களை உடையது. வேதம், ஆகமம் ஆகிய இரண்டிற்கும் இத்திருமந்திரம் அரிய விளக்கமாய்ப் பொலிந்து விளங்குகின்றது. மேலும் இந்நூல் சைவ ஆகமம் எனறு போற்றப்படும் பெருமையினை உடையது. திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம், சித்தி - முக்தி, யாகம் - யோகம் ஆகியவற்றிற்கு விளக்கம் அளிக்கிறது*. *திருமந்திரத்தின் ஐந்தாம் தந்திரம், இது சைவ சமயத்தின் பல்வேறு மார்க்கங்களைப் பற்றியும், குறிப்பாக அக வழிபாட்டு முறைகளைப் பற்றியும் பேசுகிறது. இது "உட் சமயம்" (அக வழிபாடு) மூலம் இறைவனை அடையும் வழிமுறைகள், யோகம், சன்மார்க்கம் போன்றவற்றை விளக்குகிறது*... *"நிராசாரம்" என்பது, தீய செயல்களிலிருந்து விலகி, வினையின் தளைகளை அறுத்து, அருவமான இறை உணர்வோடு கலக்கும் ஆன்மீக நிலையைக் குறிக்கிறது. இங்கு "நிராசாரம்" என்பது "அல் ஒழுக்கம்" என்றும், "நிராகாரம்" என்பது "வடிவின்மை" என்றும் பொருள்படும். இதன் மூலம், வடிவம் இல்லாத இறைவனின் உணர்வை அருவமான உயிர் உணர்வில் கலப்பது விவரிக்கப்படுகிறது*. பாடல் வரிகள் : *19. நிராசாரம்* 1550 இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1 1551 பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே. 2 1552 இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும் அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. 3 1553 தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர் பாரறி வாளர் படுபயன் றானுண்பர் காரறி வாளர் கலந்து பிறப்பர்கள் நீரறி வார்நெடு மாமுகி லாமே. 4 1554 அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங் குறியது கண்டுங் கொடுவினை யாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே. 5 1555 மன்னும் ஒருவன் மருவு மனோமயன் என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள் துன்னி மனமே தொழுமின் துணையிலி தன்னையும் அங்கே தலைப்பட லாமே. 6 1556 ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. திருச்சிற்றம்பலம் 🕉️🙏 திருமூலர் சுவாமிகள் திருவடிகள் போற்றி 🕉️🙏 ஓம் நமசிவாயம் 🕉️🙏 சிவாய நம ஓம் 🕉️🙏 நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே🕉️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
13 likes
17 shares