சுலோகம் மற்றும் மந்திரங்கள்
173 Posts • 201K views
*தே³வீ நாராயணீயம் - த³ஶகம் 11* *ப்³ரஹ்மநாரத³ ஸம்வாத³ம் - ஸ்லோகம் 11* ந மே குருஸ்த்வச்,சரிதஸ்ய வக்தா; ந மே மதிஸ்த்வத்ஸ் மரணை க ஸக்தா; அ வா ச்யவக்தா, ஹ ம கார்ய கர்தா; நமாமி மாதச்,சரணா ம்புஜம் தே *நாரதருக்கு இதைத் தெரிந்து கொள்ள குருவாக ப்ரம்மா இருந்தார். வ்யாஸருக்கு நாரதர் குருவாகக் கிடைத்தார். ஆனால் எனக்கு குருவும் இல்லை. என்னால் தேவியைத் த்யானம் செய்யவும் முடியவில்லை. மனதை அதில் ஈடுபடுத்த முடியவில்லை. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். நல்லதைச் செய்யா விட்டாலும் தீயவைகளையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை. செய்யக்கூடாததைச் செய்கிறேன். பேசக் கூடாததைப் பேசுகிறேன். இவைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற உன் கருணை வேண்டும் என்று இந்த கவி தேவியை நமஸ்கரிக்கிறார்.* பதினொன்றாம் தசகம் முடிந்தது 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள்
13 likes
10 shares
*தேவீ நாராயணீயம்* *தசகம்-4* புதிய தொடர் பதிவு! 41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது. நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. *மது கைடப வதம்* 11)அஸ்த்வேவ' மித்யா, த்ருதவாங் முதாஹரிஹி ஸ்வோரௌ ப்ருதாவுன்னமிதே ஜலோபரி க்ருத்வாரிணா தச், சிரஸி ததாசினது ஸ்வச்சந்தம்ருத்யு, தவ மாயயா ஹதௌ பொருள்: விஷ்ணு விஸ்வரூபம் எடுத்துத் துடைகளை விசாலமாக்கி பூமியாகக் காண்பித்து அதில் அஸுரர்களின் தலையை வைக்கச் சொன்னார். சக்ராயுதத்தால் கொன்றார். அஸுரர்கள் பரலோகம் சென்றனர். 12) த்வேஷச்ச, ராகச்ச, ஸதா, மமாம்பிகே! தைத்யௌ ஹ்ருதி ஸ்தோ; த்ர விவேகமாதவஹ ஆப்யாம் கரோத்யேவ ரணம், ஜயத்வயம்; துப்யம் மஹாகாளி! நம; ப்ரஸீத மே பொருள்: இதைக் கண்டு கலி நமஸ்காரம் செய்தார். ராகத்வேஷம் தான் அஸுரர்கள். இதை வெற்றி கொள்ள விவேகம் வேண்டும். அதற்கு விஷ்ணு மனசில் வரவேண்டும். அதற்கு அன்னையின் அருள் வேண்டும். "நமஸ்தே சரண்யே சிவே சாணுகம்பே நமஸ்தே ஜகத் வ்யாபிகே விஸ்வ ரூபே நமஸ்தே சரண்யே ஜகத்வந்த்ய பாதார விநேத் நமஸ்தே பாஹிமாம் பத்ரகாளி. தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள்
9 likes
6 shares
*தே³வீ நாராயணீயம் - த³ஶகம் 11* *ப்³ரஹ்மநாரத³ ஸம்வாத³ம் - ஸ்லோகம் 9* யத் கிஞ்சித்,அஞ்ஞாயி மயா மஹத்வம் தேவ்யா ஸ்த,துக்தம், தவ ஸம்க்ரஹேண ஸர்வத்ர தத், வரணய வஸ்தரேண விதத்ஸ்வ பக்திம், ஹ்ருதயே ஜனானாம் *இந்த உலகத்திற்குக் கர்த்தா யார் என்ற நாரதரின் கேள்விக்கு, ப்ரம்மா தேவிதான் என்ற பதிலைக் கூறினார். இந்த உண்மையை நீ உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று சொன்னார். நாரதர் த்ரிலோக சஞ்சாரி அல்லவா? அவரைவிட வேறு யார் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்?* 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள்
16 likes
12 shares
*தேவீ நாராயணீயம்* *தசகம்-4* புதிய தொடர் பதிவு! 41 தசகங்களை கொண்ட இந்த தேவி நாராயணீயம் பலேலி நாராயணன் நம்பூதிரியால் இயற்றப்பட்டது. நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத கதைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது போல, இது தேவி பாகவதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. *மதுகைடப வதம்* 9)தாவூசதுர் "வித்தி ஹரே! ந யாசகௌ ஆவாம் ததாவஸ்தவ, வாஞ்சிதம் வரம் நா ஸத்யவாசௌ ஸ்வ" இதீரிதோ ஹரிஹி ஸ்த்வாம் ஸம்ஸ்மரன், சத்ரு, ஜிகீஷ்யா ப்ரவீது பொருள்: தேவி நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வரம் வாங்கினால் தாழ்ந்தவராகி விடுவோம் என்று " விஷ்ணுவே! எங்களை யாசர்கர்கள் என்று நினைத்தாயா? எங்கள் இனத்தவரிடம் நீ யாசகம் பெற்றதை மறந்தாயா? உனக்கு வேண்டிய வரத்தை நாங்கள் தருகிறோம். வேண்டியதைக் கேள் என்றனர். 10)"மஹ்யம் வரம் யச்சத,மத்ய மே யதோ வத்யௌ யுவாம் ஸ்யாதம்" இதீரிதாவுபௌ த்ருஷ்ட்வாப்ஸு லீனம், ஸகலம் ஸமூசதுஹு ஸ்த்வம் ஸத்யவாங் நௌ, ஜஹி நிர்ஜலே ஸ்தலே பொருள்: உடனே விஷ்ணு நல்ல காலம் பிறந்தது என மகிழ்ந்து, உங்களுக்குக் கொடுக்கும் திறமும், என் யுத்தத்தில் மகிழ்ச்சியும் இருந்தால் இந்த யுத்தத்தில் என் கையால் நீங்கள் மரணம் அடைய விரும்ப வேண்டும் என்ற வரம் கேட்டார். "ஆகா! இவன் நம்மை வஞ்சித்து விட்டானே. இவனுக்கு வரத்தைக் கொடுத்துவிட்டு மோஹினியுடன் வாழலாம் என நினைத்தோமே. மோசம் போனோமே என்று வருந்தி, ஜலமில்லாமல் விசாலமான இடத்தில் எங்களைக் கொல்வாயாக!" என்று சொன்னார்கள். தொடரும்... 🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #அம்பாளின் மந்திரங்கள். #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #🔯 மகத்தான மந்திரங்கள்📿 #மந்திரங்கள்
12 likes