திரைபாரதி
1K views • 11 days ago
பாக் - சவுதி கூட்டணி பரிதாபங்கள்!
சேரிடம் அறிந்து சேர்.
கூடா நட்பு கேடாய் முடியும்.
இந்தப் பழமொழிகள் இன்றைய சூழ்நிலையில், பாகிஸ்தானுடன் பாதுகாப்புக்கான ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்ட சவுதி அரேபியாவிற்கு 'கன' பொருத்தமாக உள்ளது.
உலக அரங்கில் தேவையே இல்லாமல் இந்தியாவை எதிர்ப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் விளைநிலம் எனலாம். கத்தார் நாட்டில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலை அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால், தனது பாதுகாப்புக்கு இனிமேல் அமெரிக்காவை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு சவுதி வந்தது.
மேற்கண்ட சூழலில் ஒரு அணு ஆயுத நாடான பாகிஸ்தானுடன் தனது பாதுகாப்பு கருதி சவுதி Strategic Mutual Defence Agreement (SMDA) என்று ஓர் ஒப்பந்தம் போட்டது. அதுதான் அரேபியா செய்த இமாலயத் தவறு. அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான ஷரத்து என்ன?
"Under this pact, both countries have pledged that any act of aggression against one will be treated as an act against both." அதாவது இந்த இரண்டு நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடந்தாலும் அது இரண்டு நாடுகளுக்கும் எதிரான நடவடிக்கையாகக் கருதப்படும். இது ஒரு வெளிப்படையான இரட்டை நோக்கத்துடன் கூடிய ஏற்பாடாகும். பாகிஸ்தான் இந்தியாவை நினைத்தும் சவுதி இஸ்ரேலை நினைத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில், எப்போதும் இல்லாத வகையில், சவுதி ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்பட்டுவிட்டது.
பாகிஸ்தானுக்கு இருக்கும் உள்நாட்டுப் பிரச்சினைகள் போதாது என இன்று அந்த நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடை போர் மூண்டுள்ளது. அந்தோ பரிதாபம்! இப்போது பாகிஸ்தானுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னணியில், இந்தப் போரில் சவுதியின் நிலை என்ன?
ஏற்கனவே, மதரீதியாக ஈரானும் சவுதியும் இணக்கமாகச் செயல்படுவது சாத்தியமில்லை என்பது வரலாறு. பாகிஸ்தானுடன் சவுதிக்கு உருவான இந்த நெருக்கம், தனது அணு ஆயுதக் கனவுகள் கலைந்து விட்ட நிலையில் கடுப்பாக இருக்கும் ஈரானுக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா? இந்த இரு நாடுகளின் உறவு மேலும் கெடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.
சவுதி எப்போதுமே வெகு நிதானமாக முடிவெடுக்கக்கூடிய நாடு. ஆனால் தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக பாகிஸ்தான் சவுதியை சர்வதேச அரசியல் சிக்கலில் வசமாக மாட்டி விட்டது. வேலியில் போன ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டு, சவுதி புதுப்புது பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது!
முடிவாக, பாக்-சவுதி கூட்டணி என்பது ஒரு பரிதாபமான மூலோபாய தவறாகும். சவுதி அரேபியா, நிலையற்ற தன்மை மற்றும் சர்வதேச பயங்கரவாதம் ஆகியவற்றின் வலையில் சிக்கியுள்ள ஒரு நாட்டுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. குறுகிய கால பாதுகாப்பு கவலைகள், நீண்ட கால அபாயங்களைக் கருத்தில் கொள்ளாதபோது இத்தகைய விளைவுகளே ஏற்படும்.
"கூடா நட்பு"வின் விளைவுகளை அனுபவிப்பதற்கு சவுதி தயாராக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் ஒரு பாதுகாப்புக்கான கருவியாக அமையாமல், ஒரு விரும்பத்தகாத சர்வதேச அரசியல் ஆவணமாக வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
திரைபாரதியின்
"உயிர்பெற்ற அடையாளம்"
திரைக்கதையை படித்துவிட்டீர்களா?
https://www.amazon.in/dp/B0CJY129RT
#✍🏻புது கவிதைகள்📝 #நாட்டுநடப்பு #அரசியல் #✍️ கதைகள்
11 likes
24 shares