கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼🎵🎶
7 Posts • 20K views
#இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! இளமை இதோ இதோ… பாடலுக்காக கமல் சிந்திய இரத்தம் Published On: 31 Dec 2024, 2:12 PM By Kumaresan M மின்னம்பலம் பதிவு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 முடிந்து, ஜனவரி 1, பிறக்கும்போது நாம் என்ன செய்தோம் என்று நினைத்துப் பார்த்து பதில் கண்டறிவது கடினம். அன்றைய தினம் என்னவெல்லாம் செய்தோம் என்பது அடுத்த நாளே மறந்து போயிருக்கும். ஆனால், அன்று நம் காதில் விழுந்த விஷயங்களில் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் வரும் ‘ஹேப்பி நியூ இயர்’ பாடலும் ஒன்று என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். வானொலி, தொலைக்காட்சி, இதர ஊடகங்கள், சமூகவலைதளங்கள் என்று எல்லா இடங்களையும் கவிஞர் வாலியால் எழுதப்பட்ட அந்த பாடலே குத்தகைக்கு எடுத்திருக்கும். ஏனென்றால், அந்தப் படம் வெளியானது முதல் இன்று வரை ஒவ்வொரு புத்தாண்டிலும் நம்மை வாழ்த்தும் குரல்களில் முதலாவதாக இருப்பது அப்பாடல் தான். அதுவும், இரவு மணி 12 மணியை நெருங்கும் வேளையில் பலரது மனதுக்குள் அந்தப் பாடலே சுற்றிச் சுழன்றாடும். பிறகு, நிஜமாகவே அந்தப் பாடலைக் கேட்க நேரும்போது ரத்தம் சூடேறும். நரம்புகள் முறுக்கேறும். மூளைக்குள் உற்சாகம் பீறிடும். அப்புறமென்ன, ‘இனி வருஷமெல்லாம் வசந்தம் தான்’ என்ற எண்ணம் மனம் முழுக்க நிறைந்து வழியும்.’எந்தப் புத்தாண்டானாலும் இந்தப் பாடலுக்குதான் முதலிடமா’ என்று பல பாடல்கள் அந்த இடத்தைப் பிடிக்கச் சண்டையிட்டாலும், மாற்றம் எதுவும் நிகழ்ந்தபாடில்லை. இளமை இதோ இதோ’வில் எஸ்.பி.பி. கொட்டிய குதூகலக் கொப்பளிப்பைக் காட்டிலும், அதன் தொடக்கத்தில் வரும் ’ஹேய் எவ்ரிபடி விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்’ என்றொலிக்கும் அவரது குரல் நம் அட்ரினல் சுரப்பியை எகிறச் செய்யும். அது ஒவ்வொரு முறையும் நிகழ்வதுதான் எஸ்.பி.பி எனும் மகாகலைஞனின் மாயாஜாலம். ‘சகலகலா வல்லவன்’ பட நினைவுகள் குறித்து சித்ரா லட்சுமணனுக்குத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அளித்த பேட்டியில், ‘அந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலுக்கு முன்னாடி அப்படி சொன்னது தற்செயலாக நிகழ்ந்தது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். பாடலை கம்போஸிங் செய்து, இளையராஜா தனது குரலில் ஒரு ட்ராக்கை பாடியிருக்கிறார். அப்பாடலைப் பாட வந்த எஸ்.பி.பி. அதனைக் கேட்டிருக்கிறார். ’தொடக்கத்தில் வருமிடம் கொஞ்சம் காலியாக இருக்கிறது. அதில் ‘புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்வதாகச் சேர்த்துக் கொள்ளலாமா’ என்று சரவணனிடம் அவர் கேட்டிருக்கிறார். இவரும் ‘சரி’ என்று சொல்லவே, ‘ஹேய் எவ்ரிபடி’ என்று உச்ச ஸ்தாயியில் ஒலித்திருக்கிறது அவரது குரல். அந்த இடத்தில் அவர் வெளிக்காட்டிய உற்சாகம், பாடல் முழுவதும் வெள்ளமாகக் கரை புரண்டு ஓடியிருக்கும். எஸ்.பி.பி பாடிய பிறகு அந்தப் பாடல் என்ன மாற்றங்களைச் செய்திருக்கும்? நிச்சயமாக, கொரியோகிராபர் புலியூர் சரோஜாவை அலற விட்டிருக்கும். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தனது ஒளிப்பதிவாளர் பாபு, படத்தொகுப்பாளர் விட்டல், கலை இயக்குனர் சலம் என்று அனைவரிடமும் இப்பாடல் குறித்து நிச்சயம் விவாதித்திருப்பார்.ஒவ்வொருவரும் ‘புத்தாண்டு பாடலாக’ இதனை மாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்திருப்பார்கள். அப்படித்தான், ஏற்கனவே ஒரு கன்னடப்படத்திற்காக இடப்பட்டிருந்த செட்டில் சிற்சில மாற்றங்களைச் செய்து ‘பைவ் ஸ்டார் ஹோட்டல்’ ஆக மாற்றியிருக்கிறார் சலம்.கமலின் ஆட்டத் திறமையை மனதில் கொண்டு கேமிரா நகர்வுகளை அமைத்திருக்கிறார் பாபு. இந்தப் பாடலில் செட், நடனம், கமலின் பாவனைகள் என அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் விட்டலின் படத்தொகுப்பு. எஸ்.பி.பி முதன்முறையாக இந்த கம்போஸிங்கை இளையராஜாவின் குரலில் கேட்டபோது கூட, ‘இது இன்னொரு டிஸ்கோ பாடல்’ என்றுதான் நினைத்திருப்பார். ஆனால், தன்னார்வத்தோடு எஸ்.பி.பி. சேர்த்த ஒரே ஒரு வாக்கியம் அதனைக் காலாகாலத்திற்குமான புத்தாண்டு கொண்டாட்டப் பாடலாக மாற்றிவிட்டது. இதன் விளைவு என்ன என்று கேட்கிறீர்களா? இன்றுவரை பல தமிழ் ரசிகர்களுக்குக் கமலின் பிற படங்கள் குறித்து தகவல் தெரியாவிட்டாலும், சகலகலா வல்லவன் குறித்து கண்டிப்பாகச் சில விஷயங்கள் தெரிந்திருக்கும். காரணம், இந்தப் பாடல் தான். இந்த பாடலில் நடனத்தின் போது, கமல்ஹாசன் உண்மையாகவே ஒரு கண்ணாடியை உடைப்பார். கமல்ஹாசன் கண்ணாடியை உடைச்சுகிட்டு வெளியே வந்தவுடன். முகத்தில் அடி பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. பின்னர், சிகிச்சை எடுத்துக் கொண்டு நடித்து கொடுத்துள்ளார். இது குறித்து நடன மாஸ்டர் புலியூர் சரோஜா கூறுகையில், சகலகலா வல்லவன் வெற்றி விழா நிகழ்ச்சியின் போது , மேடை ஏறிய என்னை கமல்ஹாசன் கையிலேயே தூக்கிட்டாரு. என்னை தூக்கிட்டாரு. மாமியாரே… கலக்கீட்டிங்க என்று மனதார பாராட்டினார் . அந்த பாடல் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த கண்ணாடி உடைக்கும் காட்சியை பற்றி படத்தின் இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கூறுகையில், கண்ணாடி உடைக்கும் காட்சியை நான் டூப் போட்டுதான் எடுக்க திட்டமிட்டிருந்தேன். எங்கிட்ட வந்து அந்த காட்சியை எப்போ எப்போனு கமல் கேட்டுட்டே இருந்தான். நான் கடைசில வச்சுக்கலாம்னு சொன்னேன். டூப்பு போடாமல் அவனே உடைச்சுட்டு வெளியே வந்தான். பார்த்தா முகத்துல காயம்பட்டு ரத்தமா இருக்குது. உடனே , என் முன்னாடி நிக்காம ஓடி போய் விஜயா மருத்துவமனைல படுத்துகிட்டான். பின்னர், முகத்தில் தையல் போடாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம் என்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார். சென்னையில் தொடர்ந்து ஆயிரம் காட்சிகள் ‘ஹவுஸ்ஃபுல்’லாக ஓடிய பெருமையைக் கொண்டது ‘சகலகலா வல்லவன்’. அப்படத்தில் ரசிகர்களை ஈர்த்த பல விஷயங்கள் இருந்தாலும், அதிலொன்றாக இப்பாடலுக்கும் இடமுண்டு என்பதை மறக்க முடியாது. ‘ ‘கமலுக்காகவே நாங்க கதை, காட்சிகள் எழுதி உருவாக்குன படம் தான் இது. அந்த டைட்டில் கூட அவருக்காகவே வச்சதுதான்’ என்று பலமுறை பேட்டியளித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். ’இளமை இதோ இதோ’ பாடலை படமாக்கும்போது அவர் என்ன நினைத்திருப்பாரோ தெரியாது. ஆனால், அவரது அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்தப் பாடல் காலத்தோடு இயைந்து கலந்திருக்கிறது. ‘ஹேப்பி நியூ இயர்’ என்று கத்திக்கொண்டு எத்தனை பாடல்கள் தமிழ் திரையுலகில் ஒலித்தாலும், ஒவ்வொரு புத்தாண்டும் ‘இளமை இதோ இதோ’ என்று எஸ்.பி.பி குரலை காற்றில் நிறைத்துக்கொண்டுதான் விடியும்..! உதய் பாடகலிங்கம். #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼🎵🎶 #😇நம்மவர் கமல்😎 தி GENIUS .
13 likes
3 comments 11 shares
#கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #கமல்ஹாசன் ஹிட்ஸ் #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼🎵🎶 #ரெங்கா! #renga-vamba! #கமல்ஹாசன் என்ற நடிகனின் உடலுக்குள் விசுவரூபம் எடுத்த பத்து கதாபாத்திரங்கள்: தமிழ் ஹிந்து நவம்பர் 15, 2019 நந்து: தீமையின் ஆற்றல் * ஆளவந்தான், மனப்பிறழ்வு, தீமை, அராஜகத்தைச் சுதந்திரமாகக் கட்டவிழ்த்துவிடும் கடவுள் மிருகம் நந்து. கமல்ஹாசன் என்ற நடிகனின் உச்சபட்ச ஆற்றல் வெளிப்பட்ட கதாபாத்திரம் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தில் உலாவந்த நந்தகுமாரன்தான். நல்லவன், தீயவன் ஆவதென்பது - காலமும் சந்தர்ப்பமும் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டுத் தேர்ந்தெடுப்பதுதான் நன்மையும் தீமையும்; சிறையின் அந்தப் பகுதியிலிருந்து நந்து, தன் தம்பி விஜயிடம் இதைச் சாதாரணமாகச் சொல்லும்போது அவனது ஒட்டுமொத்த உருவாக்கத்துக்கும் ஒரு பின்னணி கிடைத்துவிடுகிறது. ‘நந்தகுமாரா..’ என்ற கமல்ஹாசனின் அந்தக் கட்டைக் குரல் எப்போதைக்கும் கேட்டுக்கொண்டே இருக்கும். குழந்தைமையும் முரட்டுத்தனமும் * குணா ‘பராசக்தி’யில் நாயகனின் பெயர் குணசேகரன். இன்னும் அகலாத குழந்தையின் களங்கமின்மையையும் முரட்டுத்தனத்தையும் சேர்த்து வெளிப்படுத்துபவன் குணா. அவனைப் பொறுத்தவரை திருமணம் என்பது உண்மையிலேயே வானகத்தில் நடப்பது. அதைத் திட்டமிட்டுக்கொண்டு, முகச்சவரம் செய்வதற்காக அவன் போகும் சலூனில் திருமணம் என்ற ஏற்பாட்டையே கேலிசெய்யும் சந்திரபாபுவின் பாடல் ரேடியோவில் ஒலிக்கிறது. கல்யாணம் என்று தொடங்கும் அந்தப் பாடல் சந்திரபாபுவின் த்வனியிலேயே கல்யாணத்தை முழுக்கவும் கேலி செய்துவிடுகிறது. அப்போது கமல்ஹாசனின் முகத்தில் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி விரல்களால் செய்யும் நர்த்தனத்தில் கமல்ஹாசனின் குழந்தைமை வெவ்வேறு விதமாக வெளிப்படும். தோற்ற கலைஞன் * சலங்கை ஒலி ஏழைக் குடும்பத்தில் பிறந்த, குச்சிப்புடி, கதக், பரதநாட்டியம் மூன்றிலும் தேர்ச்சிகொண்ட கலைஞன் பாலகிருஷ்ணன். சந்தர்ப்பங்களாலும், சூழ்நிலைகளாலும் வெற்றியைத் தொலைத்து புகழின்மையின், புறக்கணிப்பின் இருட்டில் போதையின் மடியில் சரணடைந்து மரணமடையும் கதாபாத்திரம். ‘சலங்கை ஒலி’ படத்தின் தொடக்கத்தில் இளம் நாட்டியக் கலைஞர் சைலஜாவிடம், எப்படி நடனமாட வேண்டுமென்று ரௌத்திரம் கொண்டு ஆடி நிகழ்த்திக் காண்பிப்பது, தோற்ற கலைஞனின் அத்தனை நிராசை உணர்வுகளையும் மீறி அவனுடைய கம்பீரத்தைக் காண்பிக்கும் காட்சி. சமூகப் போராளி * சத்யா சூழ்நிலைகளின் அழுத்தம் தாளாமல் நாயகன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் கேங்க்ஸ்டர் வகைப்படங்களில் இந்திய அளவிலேயே முன்னோடிக் கதாபாத்திரம் ‘சத்யா’ படத்தில் வரும் சத்யமூர்த்தி. வீட்டுக்கு வெளியே அநீதிகளைக் கண்டு பதைபதைத்து, களத்தில் இறங்கிப் போராடுபவனாக இருந்தாலும் வீட்டில் சித்தியின் வசைகளைக் கேட்டுக் கூனிக்குறுகும் இரண்டு மனநிலைகளையும் இந்தப் படத்தில் சத்யமூர்த்தி அநாயாசமாகச் சாதித்திருப்பார். வேலையின்மை, இந்திய, தமிழக அரசியல் சூழலின் பின்னணியில் 80-களின் இறுதியில் மிஞ்சியிருந்த சமூகக் கோபத்தின் இளமைப் பிரதிநிதி சத்யா. அக்காலகட்டத்தில் இந்தியாவில் அதிகப் பயணம் செய்து கிரிக்கெட் ரசிகர்களிடையே புகழ்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திரமான விவியன் ரிச்சர்ட்ஸ், சத்யமூர்த்தியின் சற்றே முடிவளர்ந்த மொட்டைத் தலையில் இருக்கிறார். காவியத்தலைவன் * நாயகன் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் அநாயாசமாகச் சாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் வேலு நாயக்கர். இளம்பருவம் தொடங்கி முதுமை வரை, தமிழ் நினைவில் இன்னும் பலகாலம் வாழப்போகும் கதாபாத்திரம். தன்னையும் தன் நண்பரும் ஊழியருமான டெல்லி கணேஷையும் கேலிசெய்யும் குழந்தைகளைச் செல்லமாகத் துண்டால் துரத்திய அதே இடத்தில் வளர்ந்த மகள், உலகமே பயம்கொள்ளும் தன் தந்தையை அவமானப்படுத்துகிறாள். அவருடைய நண்பரையும் அவமானப்படுத்துகிறாள். அவரது குற்றப் பின்னணியை விமர்சிக்கிறாள். அப்போதும் தன் கண்ணுக்கு முன்னர் கைக்கெட்டிய தூரத்தில் அருமையாக விளையாடிக்கொண்டிருக்கும் பேரனைக் கூடக் கொஞ்ச முடியாமல் தன் அன்பையும் வெளிப்படுத்த முடியாமல் மகள் வீட்டிலிருந்து வெளியேறும் இடத்தில் ஒரு இந்திய, தமிழ் தந்தையைப் பிரமாதமாக வெளிப்படுத்திவிடுவார் வேலு நாயக்கர். ஆதித் தமிழன் * விருமாண்டி பேத்தியாள் வளர்த்த முரட்டுச் செல்லப் பிள்ளையாக, தமிழ்க் கிராமத்தின் சகல புழுதிகளிலிருந்தும் எழுந்த கதாபாத்திரம் விருமாண்டி. அன்பு, குரோதம், வன்மம் அத்தனையையும் நாகரிகமாக வெளிப்படுத்தாத தமிழ் குலதெய்வங்களின் சாயல் கொண்டவன். படத்தின் தொடக்கத்தில் அறிமுகமாகும்போதே ஜல்லிக்கட்டுக் காளையைப் போல, துள்ளிக்குதித்து அறிமுகமாகும் விருமாண்டி, தன் பாட்டியைப் புதைக்கப் போகும்போது அந்தக் குழியில் விழுந்து அழும்போது தமிழ்க் குணம் ஒன்றை ஏற்றிவிடுகிறான். சரித்திரத்தின் ரணம் * ஹேராம் நடிகனாக மட்டுமல்ல; ஒரு இயக்குநராக கமலுக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவுக்கும் மிக முக்கியமான படைப்பு ‘ஹேராம்’. இந்து-முஸ்லிம் கலவரத்தில் தனது மனைவியை இழந்த தொல்லியல் ஆய்வாளன் சாகேத ராமன், காந்தியைக் கொல்வதற்காக கோட்சேயைப் போலக் கிளம்புகிறான். பின்னர் காந்தியின் அகிம்சையைப் புரிந்துகொள்கிறான். மதக் கலவரங்களையும், தேசப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஹேராம்’ல் நண்பன், காதலன், அன்புக் கணவன், பழி தீர்ப்பவன், சமாதானம் அடைபவன் எனப் பலமுகம் காட்டுபவன் சாகேத ராமன். அழகிய கிழவி * அவ்வை சண்முகி அவ்வை சண்முகி என்ற கதாபாத்திரத்தை, காதல் மன்னன் ஜெமினிக்குச் செய்யப்பட்ட மரியாதை என்றே சொல்லிவிடலாம். அன்பான தாய், மரியாதையான மனுஷி, அத்தனை வயதிலும் கிழவர் ஜெமினி கணேசனை சண்முகி என்று உபாசிக்கத் தூண்டும் காதலி என அவ்வை சண்முகி எடுத்த அவதாரம் அரிதானது. ஜெமினி தொடங்கி மணிவண்ணன் வரைக்கும் கணக்கேயில்லாமல் ஜொள்ளுவிடும் ஆண்களிடம் அவர் வெளிப்படுத்தும் அல்லலும் தவிர்ப்பதற்குச் செய்யும் சாமர்த்தியங்களும் சிரிக்கவைத்துக் கொண்டேயிருக்கும். கைவிடப்பட்ட கோமாளி * அபூர்வ சகோதரர்கள் சாப்ளினின் ‘சர்க்கஸ்’, ‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படங்களைப் பார்க்கும்போதுதான், கோமாளியின் வலி என்னவென்பது புரியும். எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்துபவன்; ஆனால், அந்த மகிழ்ச்சிக்காக நினைவு கூரப்படாதவன் தான் கோமாளி என்பதை சாப்ளின் உணர்த்தியிருப்பார். ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில், சர்க்கஸ் குள்ளனான அப்புவிடம் வெளிப்படும் சோகம் கோமாளி யுடையதுதான். மௌனச் சித்தன் * பேசும் படம் இந்திய சினிமாவில் மௌனப்பட யுகம் முடிவடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட உரையாடலே இல்லாத முதல் முழுநீளப் படம் இது. வேலையற்ற வாய்ப்பு வசதிகளற்ற ஓர் ஒண்டுக்குடித்தன பிரம்மசாரி உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான். அதுவும் லாட்டரி போலக் கிடைக்கிறது. ஆனால், அதற்கு அவன் கொடுக்கும் விலை என்ன என்பதை அமைதியாகச் சொல்லும் படம். ஒரு கைவிரலுக்குள் நடிகர்களை அடக்கிவிடலாம். பெயரே அற்ற அந்த நாயகன் தினசரி பார்க்கும் பிச்சைக்காரன் ஒருவனுக்கு மரணம் நேர, அவன் சேர்த்து வைத்த பணம் பறக்கும் காட்சியில் கமல்ஹாசன் படத்தின் மொத்தச் செய்தியையும் தன் முகத்தில் வெளிப்படுத்திவிடுவார். அவன் வாழ்க்கையில் மந்திர ரோஜாவாக வெளிப்படும் காதல் அமலாவுடையது. சிங்கீதம் சீனிவாசராவ், கமல்ஹாசன், இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன் சேர்ந்து செய்த இந்த ரசவாதத்தை இந்தத் தலைமுறையினர் பெரும்பாலும் பார்ப்பதற்கு வாய்க்கவேயில்லை.World Actor The GENIUS ONly KAMALHASSAN
18 likes
10 shares