ஃபாலோவ்
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
@mahicbe
20,114
போஸ்ட்
17,077
பின்தொடர்பவர்கள்
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
452 காட்சிகள்
6 மணி நேரத்துக்கு முன்
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ வானவெளியில் இயங்குகின்ற ஞாயிறு, திங்கள் மற்றும் நல்ல தேவர்கள் எல்லோரும் அச்ச மேலீட்டினால் உன்னைப் பரம் பொருள் என்று தம் சித்தம் தெளியாதவராயுள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே, சாம வேதம் பாடி மகிழ்பவனே, காமனைக் காய்ந்தவனே, எவ்வாறு உன்னைத் தெளிவது என்று யானும் மயங்குகின்றேன். வந்து அருள்புரிவாயாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
552 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱 வலிவலத்தில் மேவி விளங்கும் ஈசனே ! உலகப் பொருள்களின்மேல் பற்றுக் கொண்டு பரபரப்பு எய்தி, மனமானது வேகத்தில் இயங்குவதைச் சாந்தப் படுமாறு செய்து, நின்பால் ஒன்றிப் பொருந்தி இருக்குமாறு நல்கிடுவாய். வஞ்சனை அற்றி நிலையும் பிறரிடம் கொடிய உரைகளை நவிலாதவாறும் தூய்மைப்படுத்திச் சுயவிருப்பின்மேல் செய்யப்படும் செயல்களை அகற்றுக. உன்னுடைய திருநாமத்தை எந்த நெறியில் நவில வேண்டுமோ அநத நன்னெறியில் நவிலுமாறு அருள்புரிவாய். என்னுடைய தரத்தின் அளவினை அறிந்து, எவ்வழியில் உரை செய்தால் யான் ஈடேற முடியுமோ அந்த நிலையை அறிந்து எனக்கு நல்கி அருள்புரிக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
See other profiles for amazing content