#DyCMUdhay48
விஜயபாஸ்கரை வீழ்த்துவதற்கு விராலிமலை தொகுதி மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை நிரூபிக்கும் கூட்டம்!
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் அன்னவாசல் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு மலைக்குடிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் கழக கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் சிறப்புரையில் தொகுதி பார்வையாளரும் தஞ்சாவூர் துணை மேயருமான டாக்டர் அஞ்சகம் பூபதி, கழக இளம் பேச்சாளர் சொ.தமிழினியன் ஆகியோர் வாழ்த்துரையில் அன்னவாசல் மேற்கு ஒன்றிய செயலாளர் தென்னலூர் M.பழனியப்பன் தெற்கு ஒன்றிய செயலாளர் KS.சந்திரன் ஆகியோர் வரவேற்பில் நடைபெற்றது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இலக்கிய அணி துணை தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சு.சண்முகம், அன்னவாசல் கிழக்கு ஒன்றிய செயலாளர் M.கோவிந்தராஜ், விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் அ.இளங்குமரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் MPM.சத்தியசீலன், மத்திய ஒன்றிய செயலாளர் KP.அய்யப்பன், கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன், இலுப்பூர் பேரூர் செயலாளர் வை.விஜயக்குமார், உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் RRS.மாரிமுத்து நன்றி கூறினார்.


