#DyCMUdhay48
மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை செயலாளருமான டாக்டர் வை.முத்துராஜா அவர்கள் ஏற்பாட்டில் புதுக்கோட்டை நியூ மோடி பேட்மிட்டன் கிளப் (NMBC) நடைபெற்ற மாபெரும் மாநில அளவிலான இறகு பந்து போட்டியின் முதல் ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்களும் மாண்புமிகு கனிம வளத்துறை அமைச்சர் S.ரகுபதி அவர்களும் தொடங்கி வைத்தார்.
கழக அயலக அணி செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான MM.அப்துல்லா, புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, மாநில தொண்டரணி துணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சுப.சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான சு.சண்முகம், ஒன்றிய செயலாளர் முக.ராமகிருஷ்ணன், மாநகர அவைத்தலைவர் அ.ரெத்தினம், அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


