ShareChat
click to see wallet page
search
#DyCMUdhay48 மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் பெருங்களுர் பிடாரியம்மன் திடலில் திராவிட பொங்கல் விழா மற்றும் கலை பண்பாட்டு திருவிழா மாண்புமிகு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இலக்கிய அணி துணை தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சரஸ்வதி சுவாமிகள், புதுக்கோட்டை ஜமாத் தலைவரும் துணை மேயருமான ஹாஜி M.லியாகத் அலி, புதுக்கோட்டை தூய மரியன்னை பள்ளி தாளாளர் அருட்தந்தை இருதயராஜ் ஆகியோருடன் அனைத்து மதங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று ஒரே இடத்தில் அடுப்புகளை வைத்து பொங்கலிட்டு திராவிட பொங்கலை கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து கலைமாமணி காரை சேனா வழங்கும் திரைப்பட பின்னணி பாடகர் செந்தில் தாஸ், ஜீ தமிழ் டிவி புகழ் யோகஸ்ரீ, புதுக்கோட்டை மகா, நண்டு பாலா ஆகியோர் பங்கேற்ற மிக பிரம்மாண்டமான கலைப் பண்பாட்டு இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கீரனூர் சேதுபதி சிலம்ப பாசறை சார்பில் கோலாட்டம், மரக்காலாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், தற்காப்பு கலைகளான ஒற்றைக்கம்பு, வேல்கம்பு, சுருள்வால் வீச்சு, தீப்பந்தங்கள் இடம்பெற்றன. ஒன்றிய செயலாளர் RR.சாமிநாதன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் VNM.பாலமுருகன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் VGR.மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாமிய்யா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய பேரூர் வட்ட கிளை கழக நிர்வாகிகள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
DyCMUdhay48 - வடக்கு மாவட்டதிமா புதுக்கோட்டை [ வடக்கு மாவட்டதிமா புதுக்கோட்டை [ - ShareChat