பாலிவுட்
62 Posts • 27K views
இந்தியாவிலேயே முதன்முதலில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை மாலா சின்ஹா என்று சொல்லலாம்.. ஆண் நடிகர்களுக்கு இணையாக, அல்லது அவர்களை விடவும் அதிகமாக சம்பளம் வாங்கிய "லேடி சூப்பர் ஸ்டார்".. அந்த இடத்தை இன்னும் யாருமே பிடிக்கவில்லை என்பதே உண்மை. வைஜெயந்தி மாலா காலகட்டம் அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவர்.. அந்தவகையில் சீனியர் ஆர்டிஸ்ட்.. அதாவது 1950-கள் முதல் 1970-கள் வரையிலான காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தவர் மாலா சின்ஹா. அன்றைய அனைத்து பெரிய நடிகர்களுடன் நடித்தவர். பாத்ரூமில் மூட்டை மூட்டை பணம் ஓவர்நைட்டில் மாலா சின்ஹா திரைத்துறை வாழ்க்கையே தலைகீழாக போய்விட்டது.. அவர் சொன்ன ஒரு பொய்தான் அதற்கெல்லாம் காரணம்.. அதாவது, வருமானத்துக்கு அதிகமாக சம்பாதித்த பணத்திற்கு கணக்கு காட்ட பயந்தார்.. இதற்காக தன்னுடைய வீட்டுக்குள்ளேயே ஒரு சுவரை எழுப்பி, முக்கியமாக பாத்ரூமில் அதற்குள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்தார் மாலா சின்ஹா. ஆனால் இந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்துவிட்டது.. மொத்தமாக மார்க்கெட் காலி யார் இந்த தகவலை கசிய விட்டார்கள் என்று தெரியவில்லை.. காரணம், அன்று இந்த நடிகை வாங்கிய சம்பவளம், அன்றைய உச்ச நடிகர்களின் கண்ணை உறுத்தி கொண்டிருந்தது. இந்த நடிகை மீது அப்போதே கிசுகிசுக்களும் அதிகரித்து கொண்டேயிருந்தது.. அதனால் எப்போது இந்த நடிகை சிக்குவார் என்று பலரும் காத்து கொண்டிருந்தனர். அதேபோல மாலா சின்ஹாவிடம் கஞ்சத்தனம் இருந்ததாக சொல்கிறார்கள்.. வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குகூட சம்பள விஷயத்தில் கறாராக இருப்பாராம்.. ஒருநாள் லீவு போட்டாலும் அதற்கு சம்பளம் பிடித்து கொள்வாராம். கறார்தனம் - கஞ்சத்தனம் அதேபோல தான் சினிமாவில் நடிக்கும்போது, அதற்குரிய பணத்தை கறாராக கேட்டு வாங்கிவிடுவாராம்.. அதாவது கஞ்சத்தனத்தாலும், கறார்தனத்தாலும் பணத்தை சேர்த்து கொண்டே வந்தார் மாலா சின்ஹா. இப்படியான அதிருப்திகள் நடிகை மீது அதிகரித்து வந்த நிலையில்தான், பாத்ரூமில் பணத்தை பதுக்கி வைத்த விஷயம் கசிந்துவிட்டது. இதையடுத்து, 1974ம் ஆண்டு, மாலா சின்ஹாவுக்கு எதிராக ரெய்டு நடத்தப்பட்டது.. அப்போது அவரது வீட்டின் பாத்ரூம் சுவரை உடைத்து, கட்டுக் கட்டாகப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். பாலியல் தொழில் இதுகுறித்த விசாரணையும் நடைபெற்றது.. அப்போது, இவ்வளவு மிதமிஞ்சிய கோடிக்கணக்கான பணத்தை எப்படி சம்பாதித்தீர்கள்? என்று அதிகாரிகள் கேட்டார்கள்.. அதற்கு மாலா சின்ஹா, தான் பாலியல் தொழில் செய்து சம்பாதித்ததாக சொன்னாராம்.. அதாவது இப்படியொரு பதிலை அதிகாரிகளிடம் சொன்னால், பணத்தை திருப்பி தந்துவிடுவார்கள், அல்லது அனுதாபம் ஏற்பட்டுவிடும் என்று யாரோ, மாலா சின்ஹாவுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. அதன்படியே மாலா சின்ஹாவும் வாக்குமூலம் தந்தார்.. ஆனால், பணமும் கிடைக்கவில்லை.. அனுதாபமும் கிடைக்கவில்லை.. ஓவர்நைட்டில் முடிந்த சினிமா வாழ்வு அவர் அன்று அதிகாரிகளிடம் சொன்ன பொய், மாலா சின்ஹாவின் சினிமா சான்ஸே மொத்தமாக காலி செய்துவிட்டது.. ஒரு கதாநாயகி இப்படி பகிரங்கமாக அறிவிக்கவும், அவரது நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.. குடும்பப் பாங்கான படங்களில் நடித்து வந்த அவரால், அதன் பிறகு தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இந்த ஒரு வார்த்தையால் அவரது ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் ஒரே இரவில் முடிந்துபோனது. இதற்கு பிறகுதான், பல நடிகைகள், வருமான வரி சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, தங்களது சொத்துக்களை தங்கள் பெயரில் வைக்காமல், மேனேஜர்கள், அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பினாமியாக போட்டு பாதுகாக்க தொடங்கினர் என்றெல்லாம் தெரிவித்துள்ளார். #💏 நான் கடந்து வந்த பாதை 👣 #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢 #பாலிவுட்
11 likes
3 shares