ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
768 views
1 months ago
திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியை சேர்ந்த சிவன்பாண்டி என்பவரது மகன் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். 30 வயதான ஸ்ரீபிரியாவிற்கும் அவரது கணவர் பாலமுருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீபிரியா கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து உள்ளார். காந்திபுரம் 100 அடி சாலை இரண்டாவது வீதி பகுதியில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்த நிலையில் பாலமுருகனின் உறவினர் இசக்கிராஜா என்பவருடன் ஸ்ரீபிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீபிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பாலமுருகனின் உறவினர் இசக்கி ராஜா whatsapp மூலம் பாலமுருகனுக்கு அனுப்பி உள்ளார். இதற்கு உட்ந்தையாக ஸ்ரீபிரியாவும் இருந்துள்ளார். அதை கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று நேற்று முன் தினம் திருநெல்வேலியில் இருந்து கிளம்பிய பாலமுருகன் நேற்று காலை கோவை வந்துள்ளார். பின்னர் ஸ்ரீபிரியா வேலை செய்யும் டவுன்ஹால் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு சென்று உள்ளார். அப்போது ஸ்ரீபிரியா பாலமுருகனிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சியதால் அவரை அங்கே விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீபிரியா மீண்டும் இரவு பாலமுருகனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இசக்கியுடன்தான் இருப்பேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற பாலமுருகன் இன்று காலை தனது ஊருக்கு செல்வதாக கூறி ஸ்ரீபிரியாவின் தாய்மாமா உடன் ஸ்ரீபிரியா தங்கிருந்த மகளிர் விடுதிக்கு தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மனைவி ஸ்ரீபிரியா காலை உணவருந்துவதற்காக வந்த போது அவரை கண்ட பாலமுருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஸ்ரீபிரியாவின் தலை முடியை மடக்கி பிடித்து கழுத்து பகுதியில் ஐந்து இடங்களில் சரமாரியாக மகளிர் விடுதி வளாகத்திலேயே வெட்டி கொலை செய்து உள்ளார். மேலும் கொலை செய்து விட்டு , காவல் துறையினர் வரும் வரை அங்கிருந்த ஒரு இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்த பாலமுருகன், அதை புகைப்படமாகவும் எடுத்து 'துரோகத்தின் சம்பளம் மரணம்' என தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸ் ஆக வைத்து உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பிரியா தங்கியிருந்த விடுதிக்கு வந்துள்ளனர். பின்னர் விடுதியில் இருந்த சக பெண்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற ரத்தினபுரி காவல் நிலைய போலீசார் ஸ்ரீபிரியாவின் சடலத்தை கைப்பற்றியதுடன் அங்கிருந்த சிசிடிவி காட்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அறிவாலுடன் அமர்ந்திருந்த பாலமுருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலமுருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மனைவி ஸ்ரீ பிரியா விற்கும் அவரது உறவினரான இசக்கி ராஜாவிற்கும் தொடர்பு இருந்ததும் அதனை தட்டிக் கேட்டது போதுதான் கணவன் மீது கோபப்பட்டு ஸ்ரீபிரியா கோவைக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும் நேற்று காலை கோவைக்கு வந்த பாலமுருகன் நேற்றைய தினமே ஸ்ரீ பிரியாவை கொல்ல திட்டமிட்டு இருந்ததும் டவுன்ஹால் பகுதியில் சந்தித்த பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது அந்த பகுதியில் ஆட்கள் அதிகமாக இருந்ததால் கொலை செய்யாமல் விட்டு விட்டு இன்று காலையிலேயே மது அருந்திவிட்டு விடுதிக்கு வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது #📺நவம்பர் 30 முக்கிய தகவல் 📢 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔